புதன், 28 ஜூலை, 2010

ரசனைசாப்பாடு விஷயத்தில ஒரு சிலருக்குத்தான் மிகுந்த ரசனை இருக்கும். “ருசிக்கு சாப்பிடறவங்களை விட பசிக்கு சாப்பிடறவங்க”தான் பெரும்பாலோர். பசிக்கும் போது எந்த சாப்பாடு கிடைச்சாலும் நல்லாத் தானே இருக்கும்!

அந்தந்த வேளையில சாப்பிட்டு முடிச்சா ஒரு வேலை முடிஞ்சது பாருங்க! சாப்பாட்டை நல்லா ருசிச்சு சாப்பிடற அளவுக்குக் கூட இப்போதெல்லாம் நிறைய பேருக்கு நேரம் கிடைப்பதில்லை – அவ்வளவு ஓட்டமும் நடையுமா இருக்காங்க.

ஆனா இப்ப நான் சொல்லப்போறது இந்த மாதிரி ரசனை இல்லாத ஆளுங்கள பத்தி இல்லவே இல்லை. சாப்பாட்டு மேல ரசனை உள்ள – அதுவும் கொஞ்சம் அதிகமாவே ரசனை உள்ள ஒருவரைப் பத்தி.

நெய்வேலியில் நாங்க இருந்தபோது, எங்கப்பா கூட வேலை பார்த்த ஒருத்தரு எங்க வீட்டுக்கு சில சமயம் வருவாரு. அன்னிக்கு எங்க வீட்டுல அம்மா இட்லி செஞ்சிருந்தாங்கன்னா போச்சு! அவர் சாப்பிடாமல் போனதாக சரித்திரமில்லை.

சாப்பிடுங்கன்னு தட்டை வைத்ததும் அவரு சொல்வாரு – ”இரண்டு இட்லி போட்டு, அந்த இரண்டு இட்லிக்கு தகுந்த மாதிரி கொஞ்சமா இட்லி மிளகாய் பொடியும் எண்ணையும் விடுங்கன்னு”. அதை பொறுமையா ரசிச்சு சாப்பிட்ட பிறகு, அம்மாகிட்ட “இன்னும் இரண்டு இட்லியும் கொஞ்சம் சர்க்கரையும் போடுங்க!” ன்னு சொல்லி ருசிக்க ஆரம்பிச்சுடுவாரு.

சாப்பிட்டு முடிச்சப்பறம் அடுத்த இரண்டு இட்லி – பொட்டுக்கடலை போட்ட தேங்காய் சட்னியோட. அடுத்த இரண்டு இட்லியை ஒரு சின்னக் கிண்ணத்தில போட்டு அது மேல சாம்பார் விட்டு, சாம்பார் இட்லியா சாப்பிடுவார்.

வீட்டுல நானும் சகோதரிகளும் ரெண்டும் ரெண்டும் நாலு, நாலும் ரெண்டும் ஆறு, ஆறும் ரெண்டும் எட்டுன்னு காத்துலேயே கணக்கு வைச்சுட்டு இருப்போம்.

சாம்பார் இட்லி சாப்பிட்டதும், வேற ஒரு சின்னக்கிண்ணத்தில ரசம் விட்டு [அதுவும் கலங்கலா இருக்கக்கூடாது, மேலாக எடுத்து விடணும்] அதுல ரெண்டு இட்லியை போட்டு சாப்பிட ஆரம்பிப்பார். அதுக்குள்ள அம்மாவும் கொஞ்சமா வெங்காயம்-தக்காளி சட்னி தயார் செய்ய ஆரம்பிச்சிடுவாங்க.

அடுத்த ரெண்டு இட்லி, வெங்காயம்-தக்காளி சட்னியோட, இன்னும் ரெண்டு இட்லிக்கு ஊறுகாய், மேலும் இரண்டு இட்லிக்குத் தயிர் அப்படின்னு விதவிதமா கேட்டு வாங்கி அவர் சாப்பிட்டு முடிக்கும் போது, எங்களுக்கு கணக்கு சுத்தமா மறந்து போய், அம்மா கிட்ட போய் “ஏம்மா அந்த மாமா சுமாரா எவ்வளவு சாப்பிட்டு இருப்பாரு?” ன்னு கேட்போம்.

அதுக்கு அம்மா சொல்ற பதில் – இட்லி சாப்பிட்டு முடிச்ச உடனே அப்பாவின் அந்த நண்பர் விட்ட ஏப்பத்துல மறைஞ்சிடும். அதுக்கு மேல ஒரு ஃபில்டர் காப்பி குடிச்சுட்டுத்தான் அவரோட வீட்டுக்கு கிளம்புவாரு.

அவரோட இந்த சாப்பாட்டு ரசனைய இன்னிக்கு நினைச்சாலும் அதிசயமா இருக்கும். ஒருவேளை அவரோட மனைவி ஒழுங்கா இட்லி செய்யமாட்டாங்களோ?

20 கருத்துகள்:

 1. உங்க அம்மா செய்யற இட்லி தான் அவங்களக்கு ரொம்ப பிடிக்கும் போல ..எனக்கும் அதே போல சபிடனம் போல் இருக்கு..

  இப்போதெல்லாம் இந்த மாதிரி உபசாரம் பண்ணறவங்க குறைஞ்சு போச்சு நண்பா..

  பதிலளிநீக்கு
 2. அட‌டா ப‌சிக்க‌ ஆர‌ம்பிச்சிடுச்சே.

  பதிலளிநீக்கு
 3. Unga veettula ivvalavu variety side dish kidaikkumaa? Kettu vaangi thool kilappirukkaar!!

  பதிலளிநீக்கு
 4. மல்லிகைப்பூ இட்டிலி சாப்பிட மதுரை செல்லும் ஆசையைத் தூண்டி விட்டு விட்டது உங்கள் பதிவு.

  பதிலளிநீக்கு
 5. உங்கள் தாயாரின் உபசரிப்பை நினைத்து ஆச்சர்யப்படுகிறேன். இந்தக்காலத்தில் யார் இப்படி?

  பதிலளிநீக்கு
 6. இட்டிலியின் மகிமையை இனிதே நீர்சூழ் வியனுலகினுக்கு விளம்பிய வெங்கட் நாகராஜுக்கு இந்த இட்லிதாசனின் நன்றிகலந்த வணக்கங்கள்!

  பதிலளிநீக்கு
 7. வாங்க விக்னேஷ்வரி, :) வரவிற்கும் கருத்துக்கும், நன்றி

  வாங்க சந்த்யா, நீங்க சொல்றது சரிதான். உபசரிப்பதும் ஒரு கலை. தங்களது வரவிற்கும், கருத்திற்கும் நன்றி தோழி.

  வாங்க லாவண்யா [உயிரோடை], பசி எடுத்தாச்சா? இட்லி சாப்பிடுங்களேன் :) எனது இடுகையைப் படித்து கருத்துரைத்தமைக்கு நன்றி.

  வாங்க மோகன், சில சமயம் இரண்டு மூன்று சைட் டிஷ் செய்வாங்க. தங்களது வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  வாங்க சுசீலா அம்மா, மதுரைக்குப் போகும் போது என்னையும் கூப்பிடுங்க, சரியா? வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி.

  வாங்க அமைதி அப்பா, உங்களது வரவும் கருத்தும் என்னை மகிழ்வித்தது.

  வாருங்கள் இட்லிதாசரே [சேட்டைக்காரரே]:) உங்கள் கருத்தினைக் கேட்டு யாம் மகிழ்ந்தோம்! :)

  பதிலளிநீக்கு
 8. //வீட்டுல நானும் சகோதரிகளும் ரெண்டும் ரெண்டும் நாலு, நாலும் ரெண்டும் ஆறு, ஆறும் ரெண்டும் எட்டுன்னு காத்துலேயே கணக்கு வைச்சுட்டு இருப்போம்//

  இப்படி கவனமாக நீங்கள் கணக்கிட்ட போதும் கடைசியில் கோட்டை விட்டுடிங்களே..

  பதிலளிநீக்கு
 9. அருமை நண்பரே அனுபவங்களை மிகவும் அழகாக எழுதி இருக்கிறீர்கள் . பொதுவாக இதுபோல் எல்லோரிடமும் சாப்பாட்டு
  விஷயத்தில் எளிதில் கேட்டு வாங்கி சாப்பிட்டுவிட மாட்டார்கள் எல்லாம் ஒரு உரிமைதான் . பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 10. இட்லி படம் சூப்பர் நல்லா பூப்போல இருக்கு

  பதிலளிநீக்கு
 11. உங்க அம்மா நல்லா இட்லி செய்வாங்க போல..

  அப்படிய இருந்து இட்லி உப்புமாவா ரெண்டை பிதிர்த்து
  போட சொல்லமாட்டாரா.. என்ன அவர் ரசனை போங் க :)

  பதிலளிநீக்கு
 12. கடைசியில் உங்களுக்கு இட்லி கிடைச்சுதா? இல்லை உப்புமாதானா? (எங்க வீட்டுல இந்தமாதிரி சமயத்தில எங்களுக்கு அரிசி உப்புமாதான்)

  பதிலளிநீக்கு
 13. வாருங்கள் கலாநேசன், கணக்குல நான் புலி இல்லை... எலி :) வரவுக்கு நன்றி நண்பரே.

  வாருங்கள் பனித்துளி சங்கர், வரவுக்கும், தங்களது கருத்தினை தெரிவித்ததற்கும் நன்றி.

  வாருங்கள் சசிகுமார், படம் பார்த்த உடனே சாப்பிடணும்னு தோணிடுச்சு இல்லையா? : ) வரவுக்கு நன்றி நண்பரே.

  வாங்க முத்துலெட்சுமி, இட்லி மீதி இல்லை. இருந்தா அதையும் கேட்டு இருந்தாலும் இருப்பார் :)

  வாங்க பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி, அப்ப உங்க வீட்டுக்கும் இந்த மாதிரி ஒரு நண்பர் வந்து இருக்கார்னு சொல்லுங்க! :)

  பதிலளிநீக்கு
 14. இட்லியை உசிலிச்சு சாப்பிடாம விட்டுட்டாரே.. ஆஹா.. அந்த டேஸ்ட்டும் செமையா இருக்கும்..

  பதிலளிநீக்கு
 15. @ ரிஷபன்: இட்லி மீந்தா தானே உசிலிச்சு உப்புமாவா சாப்பிட. வருக்கைக்கு நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 16. ஆச்சர்யமான மனிதர்.

  அவர் அப்படி உரிமையுடன் கூச்சம் பார்க்காமல் சாப்பிடுகிறார் என்றால் எவ்வளவு அன்பாக நீங்கள் எல்லோரும் அவரிடம் பழகி இருக்க வேண்டும்? Great.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆச்சர்யமான மனிதர் தான் ஸ்ரீராம். பல வருடங்கள் ஆகிவிட்டது அவரைப் பார்த்து. இப்போது தொடர்பிலும் இல்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 17. வணக்கம் சகோதரரே

  எழுத்து நடையை ரசித்தேன். ரொம்பவும் இட்லி பிரியர் போலிருக்கிறது. (என்னைப் போல.. ஹா. ஹா. ஹா.) ஆனால் இந்தளவிற்கு ரசித்து சாப்பிடுவது மிகவும் கஸ்டம். அவர் சாப்பிட்டதை விட மிகவும் அழகாக நீங்கள் எழுதியுள்ளீர்கள். உங்கள் "ரசனையான" எழுத்தில் நாளையாவது இட்லி சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் வநது விட்டது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... நீங்களும் இட்லி ப்ரியையா? உணவினை ரசித்து ருசித்துச் சாப்பிடுவது நல்ல விஷயம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....