எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, April 22, 2011

பிறந்த நாள் இன்று பிறந்த நாள்…..

தலைப்பு பார்த்ததும் “அட உங்களுக்கான்னு” எல்லாரும் என்னை வாழ்த்த ஆரம்பிச்சுடாதீங்க!!

இலங்கை வானொலி கேட்டிருக்கிற பல நண்பர்கள் “பிறந்த நாள் இன்று பிறந்த நாள்” என்ற பாடலைக் கேட்காமல் இருந்திருக்க முடியாது. அப்படி ஒரு நல்ல பாடல். அதைப் பாட, அது பற்றி சிந்திக்க எனக்கும் இன்று ஒரு வாய்ப்பு.

இன்று காலை எனது அப்பாவும் அம்மாவும் திருச்சியிலிருந்து தில்லி வந்தார்கள். காலையிலேயே சென்று அவர்களை வீட்டுக்கு அழைத்து வந்தேன். வந்து சிறிது இளைப்பாறிய பின் குளித்து முடித்து சற்று நேரம் கழித்து “சஸ்பென்ஸாக” நேற்றே வாங்கி வைத்திருந்த கேக் எடுத்து வைத்து, அதன் மேல் ஒரு 7–ஆம் எண் மெழுகுவர்த்தியும், ஒரு 3-ஆம் எண் மெழுகுவர்த்தியும் வைத்து, அதை 73-ஆக செய்தோம்.


 
பின்னர் பிறந்த நாள் காணும் அப்பா கேக் ”கட்” செய்ய, பிறந்த நாள் கொண்டாடினோம். ”73 வயதில் இது தான் இப்படி முதல் முறையாய்  பிறந்த நாள் கொண்டாடியிருக்கிறேன்” என அவருக்கும் மகிழ்ச்சி. எங்களுக்கும் ஆனந்தம்.

இந்த நாளில் அவருக்கு நல்ல ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கொடுக்க எல்லாம் வல்லவனை பிரார்த்திக்கிறேன்.

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திக்கிறேன்.

வெங்கட்.32 comments:

 1. அப்பாவுக்கு என் வாழ்த்துகள்.....

  ReplyDelete
 2. உங்கள் தந்தைக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நூறு வருடம் வாழ பிரார்த்தனைகள்

  ReplyDelete
 3. உங்கள் தந்தைக்கு என் நமஸ்காரங்களைத் தெரிவிக்கவும்.

  மேலும் பல்லாண்டு வாழ பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 4. உங்கள் தந்தைக்கு நீண்ட ஆயுளை யும், நிறைந்த ஆரோக்கியத்தையும் அளிக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!
  happy birthday,nagaraj ji!

  ReplyDelete
 5. பிறந்த நாள்.
  இன்று பிறந்த நாள்.
  நாம் பிள்ளைகள் போலே
  தொல்லைகள் எல்லாம்
  மறந்த நாள்.
  ஹேப்பி பர்த் டே டூ யூ அப்பா.

  சரிதானே வெங்கட்!

  ReplyDelete
 6. என் உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை
  தங்கள் தந்தையாரிடம் சமர்ப்பிக்கவும்
  (கேக் பிரமாதம்)

  ReplyDelete
 7. அவருக்கு நல்ல ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கொடுக்க எல்லாம் வல்லவனை பிரார்த்திக்கிறேன்.
  உங்கள் தந்தைக்கு என் நமஸ்காரங்கள்.

  ReplyDelete
 8. ”73 வயதில் இது தான் இப்படி முதல் முறையாய் பிறந்த நாள் கொண்டாடியிருக்கிறேன்” என அவருக்கும் மகிழ்ச்சி. எங்களுக்கும் ஆனந்தம்.


  ...That is so sweet! Convey our wishes and regards to him.

  ReplyDelete
 9. அப்பாவிற்கு முதலில் வணக்கம்!
  நிறைவான இத்தகைய பிறந்த நாள்கள் பல காண எங்கள் அன்பை தெரிவியுங்கள்.
  அந்த இன்பத்தை தந்தைக்கு கொடுத்த உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்துக்கள்! உங்கள் இந்த இனிய சஸ்பென்ஸ் தொடரட்டும்...

  ReplyDelete
 10. ஆஹா..... அப்பா அடைந்த மகிழ்ச்சியை மனக்கண்ணால் பார்த்தேன்.

  73 வயது காணும் இனிய தந்தைக்கு எங்கள் அன்பான பிறந்தநாள் வாழ்த்து(க்)கள்.

  என்றும் அன்புடன்,
  துளசியும் கோபாலும்.

  ReplyDelete
 11. அப்பாவிற்கு நமஸ்காரங்கள்...

  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

  மகிழ்வு எற்படுத்திய மகனுக்கு பாராட்டுக்கள்

  ReplyDelete
 12. அப்பாவுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்...

  ReplyDelete
 13. தந்தைக்கு நல்ல
  தனயனாய் இருந்து
  தருணத்தில்
  பிறந்த நாள் இன்று பிறந்த நாள்
  என
  தந்தையை மனம் குளிர வைத்த
  தனையனே
  நீவீர் வாழ்க வாழ்க வாழ்க !!!!!

  ReplyDelete
 14. உங்கள் தந்தைக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் அளிக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!

  ReplyDelete
 15. உங்களின் தந்தைக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
  தந்தையின் மனம் குளிரச் செய்த உங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!
  கேக் விளக்கின் ஒளியில் அருமை!!

  ReplyDelete
 16. அப்பாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 17. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.. கேக் நல்லாருக்கு :-)

  ReplyDelete
 18. Blackcurrent கேக்தானே?.. எனக்கும் பிடிக்கும். ஒரு பீஸ் அனுப்பிவையுங்க :-))

  ReplyDelete
 19. தாமதமாக வந்திருக்கிறேன் வெங்கட்ஜீ! உங்கள் தந்தைக்கு நீண்ட ஆயுளும், நிறைவான ஆரோக்கியமும் அருளுமாறு இறைவனை வேண்டுகிறேன்.

  ReplyDelete
 20. உங்கள் அப்பாவிற்கு வந்தனங்கள்...பல்லாண்டு காலம் நோயற்ற வாழ்வு வாழ ப்ரார்த்திக்கிறேன்.(உங்கள் அப்பாவின் ஃபோட்டோவையும் இணைத்திருக்கலாம் என்பது அடியேனின் சிறு கருத்து)

  ReplyDelete
 21. இந்த தாமதக்காரியின் பிரார்த்தனைகளும் அப்பாவுக்கும் குடும்பத்தினர்க்கும் உரித்தாகட்டும் வெங்கட். அப்பாவின் அனுபவக் களஞ்சியத்திலிருந்து முடிந்தவரை தேடித் தேடி கேட்டுக் கேட்டு பத்திரப் படுத்திக் கொள்ளுங்கள் சகோ...

  ReplyDelete
 22. அப்பாவுக்கு வணக்கங்களுடன் என் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் சேர்த்து சொல்லிடுங்க.

  ReplyDelete
 23. அப்பாக்கள்தான் இப்படி பதிவு போடுவார்கள். பிள்ளை, அப்பாவுக்கென போடுவது.. ம்.. தனி சுகம்தான் உங்களுக்கு!!

  ReplyDelete
 24. என்னாது.. புதுசா இருக்கு...
  செமையா இருக்குதப்பா..

  ReplyDelete
 25. அப்பாவிற்கு என் வணக்கங்கள்.

  ReplyDelete
 26. இவன் தந்தை இவனை பெறுவதற்கு என்ன தவம் செய்தாரோ என்று வியக்கும் வண்ணம் வாழ்வில் நற்சாதனைகளை புரிந்தும், தன் தனயன் கல்வி கேள்விகளில் மற்றும் ஒழுக்கம் நிறைந்த பண்பாடு உடையவன் என அறிவுடையோர் மெச்சுவதை கேட்டு , ஈன்ற பொழுதில் பெரிதாக மகிழ்ச்சி அடையும் வண்ணம் தாய்க்கு தன் கடமைகளை மன சாட்சியின்படி நிறைவாக செய்தும், மற்றோருக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கிவரும் திரு வெங்கட் மற்றும் அவர்தம் குடும்பத்தாருக்கு, எல்லா நலனும் பெற்றிட, அவர்தம் பெற்றோரும் , உற்றோரும் வாழ்த்துதல் முறையேயாகும்.

  மந்தவெளி நடராஜன்.

  ReplyDelete
 27. அப்பாவிற்கு நமஸ்காரங்கள்

  ReplyDelete
 28. முதல் முறைய பிறந்த நாள் கொண்டாட வைத்து சந்தோஷம் படுத்தி இருக்கீங்க
  வாழ்த்துக்கள்.
  அவர் மனம் மிகவும் சந்தோஷம் பட்டிருக்கும் இல்லையா?
  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  கேக்கும் சூப்பர்

  ReplyDelete
 29. உங்கள் அப்பா அவர்களுக்கு வணக்கம். நல்ல ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை
  பிரார்த்திக்கிறேன்.

  வாழக வளமுடன் ! வாழ்க நலமுடன்!

  தங்கள் தாத்தாவிற்கு இப்படித்தான் இன்ப அதிர்ச்சி கொடுத்து கேக் வெட்ட செய்வார்கள் என் மகன், மகள் மற்ற பேரன் ,பேத்திகளும். அவர்கள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள்.

  நம் நலனுக்காக வாழ்ந்தவர்களுக்கு இப்படி செய்வது நமக்கு மகிழ்ச்சி.

  ReplyDelete
 30. இப்பதிவை எப்படியோ வாசிக்க விட்டுவிட்டேன்.

  அப்பாவிற்கு வாழ்த்துக்கள்.
  கேக் அழகா இருக்கு.

  ReplyDelete
 31. எனது இந்த பகிர்வினைப் படித்த அனைத்து நண்பர்களுக்கும் வணக்கங்கள். என் அப்பாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன அனைவருக்கும் எனது நன்றி. இண்ட்லி மற்றும் தமிழ்மணத்தில் வாக்களித்த அனைத்து நட்புகளுக்கும் நன்றி.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....