எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, April 21, 2011

பொம்மை


நம்ம ஊர் ஆசாமி ஒருத்தர்நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்என்று பாடிக்கொண்டே நியூயார்க் நகரத்தினைச் சுற்றிக் கொண்டு இருந்தாராம்.  அங்கே  ஒரு பெரிய அருங்காட்சியகம் இருக்க அதைச் சுற்றிப் பார்க்க உள்ளே நுழைந்து இருக்கிறார்காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்த பொருட்களையெல்லாம் ஒவ்வொன்றாய் ரசித்துப் பார்த்தபடி வந்தார்

அப்படி வரும்போது அவர்  ஒரு பொம்மையைப் பார்த்ததும் ரொம்பவே  லயிச்சுப் போய் அந்தப் பொம்மையையே பார்த்துக்கொண்டு இருப்பதைப் பார்த்த விற்பனையாளர் அவரிடம் வந்துஇந்த பொம்மையோட விலை 20 டாலர்.  இந்தப் பொம்மையோட கதை உங்களுக்குச் சொல்லுவதற்கு 100 டாலர்என்று சொன்னாராம். ”என் கதையே பெரிய கதை, இதுல எனக்கு எதுக்கு பொம்மைக்  கதை!” என்று டயலாக் சொல்லி அவர் அந்த பொம்மையை வாங்கிக் கொண்டு வெளியே வந்தார்.   அது  வெண்கலத்தில் செய்யப்பட்ட ஒரு எலியோட பொம்மை

அருங்காட்சியகத்திலிருந்து வெளியே வந்து அந்த தெருவிலிருந்து வெளியேறி நடக்க ஆரம்பிக்க பின்னாடியே ஒரு சத்தம் அவரைத் தொடரவே, திரும்பிப் பார்த்தா, அந்த தெருவிலிருக்கும் எல்லா எலியும் அவர் பின்னாடியே வந்துட்டு இருக்காம்.  சரின்னு கொஞ்சம் வேகமா நடக்க ஆரம்பிக்க கொஞ்ச நேரத்துல அவர் போற வழியெல்லாம் ஒரே ட்ராஃபிக் ஜாம்!  பின்ன ஊர்ல இருக்கிற எல்லா எலியும் அவர் பின்னாடி வந்தா!  என்ன பண்றதுன்னு தெரியாம, நேரே கடற்கரைக்குப் போக அவர் பின்னாடியே அந்த எண்ணிலடங்கா எலிகளும் கடற்கரைக்கு நடைப்பயணம் வருதாம்!!! 

என்னடா இது, இந்த வெண்கல எலிய வாங்கினது பெரிய தொல்லையாப் போச்சேன்னு அதை கடலுக்குள்ள வீசி எறிஞ்சிட்டாராம்!  எறிஞ்சதுதான் தாமதம், பின் தொடர்ந்த எல்லா எலிகளும் கடலுக்குள்ள பாய்ந்து  ஜலசமாதி ஆயிடுச்சாம்

உடனே நம்ம ஆசாமி கடற்கரையிலிருந்து ஓடறார்!  ஓடிப்போனது எங்கேன்னு கேட்கறீங்களா! அந்த அருங்காட்சியகத்துக்குத் தான்.  அவரைப் பார்த்த உடனே, அந்த விற்பனையாளர், “நீ இங்க வருவேன்னு எனக்குத் தெரியும்பா!” என்பது மாதிரி பார்த்து, ”கதை சொல்லவா?  நூறு டாலர் குடு…”ன்னு  சொல்ல, அவர்கிட்ட நம்ம ஆசாமி, “கதையெல்லாம் எனக்கு வேணாம்பா! எனக்கு வேண்டியதெல்லாம் அந்த எலி பொம்மை மாதிரியே இந்திய அரசியல்வாதி பொம்மை தான்?”ன்னு கேட்டாராம்!!!

டிஸ்கி:  இது எனக்கு ஆங்கிலத்தில் வந்த மின்னஞ்சலின் மொழிபெயர்ப்பு.

7 comments:

 1. நம்ம அரசியல்வாதிங்க மக்களை ரொம்பத்தான் காயப்படுத்தியிருக்காங்க...

  அந்த எலிகதையும் சொல்லுங்க...

  ReplyDelete
 2. கண்மூடி ஓரு ஓரம் நான் சாய்கின்றேன்
  கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கின்றேன்

  http://tamilpaatu.blogspot.com/2011/04/blog-post_21.html

  ReplyDelete
 3. //“கதையெல்லாம் எனக்கு வேணாம்பா! எனக்கு வேண்டியதெல்லாம் அந்த எலி பொம்மை மாதிரியே இந்திய அரசியல்வாதி பொம்மை தான்?”ன்னு கேட்டாராம்!!!//

  சூப்பர் கற்பனை. நினைப்பதெல்லாம் ....நடந்துவிட்டால்......?

  ReplyDelete
 4. அப்படி ஒன்னு இருந்தா அரசியல்வாதிகளில் ஒருவரே விலைக்கு வாங்கிடுவார். அப்புறம் நம்ம நிலை.....

  ReplyDelete
 5. ** பாட்டு ரசிகன்: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.

  ** முத்துலெட்சுமி: :)))) நன்றி சகோ.

  ** வை. கோபாலகிருஷ்ணன்: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ** கே.பி.ஜனா: நன்றி சார்.

  ** கலாநேசன்: ஓ அதுனால தான் அவருக்குக் கிடைக்கல போல! வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  இப்பதிவினைப் படித்து, இண்ட்லி மற்றும் தமிழ்மணம் தளங்களில் வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....