[மனச் சுரங்கத்திலிருந்து]
நெய்வேலியில் இப்போ இருக்கிறவர்களில் பெரும்பாலானவங்க நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்காங்க. நகரின் முக்கிய வியாபார ஸ்தலமான மெயின் பஜார் பகுதியில் வாகனங்களை நிறுத்த “பார்க்கிங்” ஏரியா கூட இப்போது அமைத்திருக்கிறார்களாம். நெய்வேலி ரொம்பத் தான் முன்னேறி விட்டது போலும்.
நான் நெய்வேலியில் படித்துக்கொண்டிருந்தபோது எல்லா வீடுகளிலும் சைக்கிள் தான் பிரதான வாகனம். ஒவ்வோர் வீட்டிலும் குறைந்தது இரண்டு சைக்கிளாவது இருக்கும். என் வீட்டில் கூட மூன்று சைக்கிள் இருந்தது. வீட்டில் இருந்த அனைவரும் உயரம் என்பதால் சைக்கிளும் 24 – 26 இன்ச் தான் வாங்கினார் அப்பா.
நான்காவது படிக்கும்போதே சைக்கிள் ஓட்டத் துவங்கி விட்டேன். யாரும் கற்றுக் கொடுக்காமல் நானாகவே கற்றுக்கொண்டேன். குரங்குப் பெடலெல்லாம் இல்லாமல் நேராகவே சீட்டில் உட்கார்ந்து ஓட்டி விட்டேன்.
வகுப்பு ஆசிரியை எஸ்தர் வீட்டிலிருந்து ஏதோ எடுத்து வரச் சொல்லி என்னை ஏவ, பூட்டப்படாமல் இருந்த ராபர்ட் என்ற சகமாணவனின் சைக்கிளின் மேலே ஏறி உட்கார்ந்து உயரமான ரோட்டிலிருந்து இறக்கத்திலிருந்த மைதானத்திற்கு வந்து விட்டேன். சிறிது தூரத்தில் இருக்கும் எஸ்தர் டீச்சர் வீட்டுக்குச் செல்வதற்குள் நான்கு முறை கீழே விழுந்து எழுந்தேன் என்பதை இதுவரைக்கும் யாருக்கும் சொல்லவில்லை.
ஒரு வழியாக விழுந்து எழுந்து கற்றுக்கொண்டபின், அப்பாவை அரித்துப் பிடுங்க, அவர் ஒரு புது சைக்கிள் வாங்கினார். அதை அவர் வைத்துக்கொண்டு எனக்கு பழைய சைக்கிளை கொடுத்தார். அதன் பிறகு நெய்வேலியில் இருக்கும் ஒரு தெரு விடாமல் அத்தனை தெருக்களின் நீள அகலங்களை அளந்து சுற்றியது தனிக்கதை.
அதுவும் நான்கைந்து நண்பர்களோடு சைக்கிளில் மந்தாரக்குப்பம், வடலூர் என தொலை தூர இடங்களுக்குச் சென்று திரும்பியது சுவாரசியமான அனுபவங்கள். அப்போது எங்கு செல்வதென்றாலும் சைக்கிள்தான். நடப்பது என்பதே இல்லை. இப்போதோ தில்லியில் சைக்கிள் ஓட்டுவது கடினம்.
என்னதான் மோட்டார் வாகனங்களில் வேகமாகச் செல்ல முடிகிறது என்றாலும் சைக்கிளில் வேகமாய்ச் சென்று, இரண்டு கைகளையும் விட்டுவிட்டு வித்தை காண்பித்தபடி செல்லும் ஆனந்தம் வர மறுக்கிறது.
சைக்கிளை எடுத்துக்கொண்டு திருச்சியின் காவேரிக் கரை ஓரமாய் வழியெங்கும் இருக்கும் வாழைத்தோப்புகளை பார்த்தபடி, காவேரியில் இருந்து வரும் காற்றினை ரசித்தபடி ஒரு நெடும் பயணம் போக வேண்டும். அந்த நாளுக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.
வேறு ஒரு பதிவுடன் மீண்டும் சந்திக்கிறேன்.
வெங்கட்.
சுவையான பதிவு வெங்கட். யாருடைய துணையும் இல்லாமல் தானே சைக்கிள் கற்றுகொண்டீர்களா? ஆச்சர்யம் தான்.
பதிலளிநீக்குசைக்கிள் பயணம் என்பது அதுவும் சிறுவயதில் ஒரு தனி இன்பம் தான்.
பதிலளிநீக்குநல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
கொசுவர்த்தி சுத்த வைக்கறீங்களே வெங்கட். சேலம் முழுவதும் சுற்றி இருக்கிறேன் .கை விட்டு ஓட்டுவது என்பது ஹீரோயிசம்
பதிலளிநீக்குகீழே விழுந்து விழுப்புண்கள் பெறாமல் கற்றுக் கொள்வது என்பது பெரிய விஷ்யம். அதுவும் தானே கற்றுக் கொள்வது ஆச்சிரியம் தான்.
பதிலளிநீக்குஞாபகம் வருதே...சைக்கிளுக்காக ஏங்கியது....நண்பர்களுடன் சுற்றியது....ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே...
பதிலளிநீக்குசைக்கிளின் அருமையை சொல்லிக்கொண்டே போகலாம். பெட்ரோல் செலவில்லை. இலவச புகையில்லை. உடலுக்கும் உறுதி. நீங்கள் சொல்வது போல் இரு சக்கர வாகனங்கள் பெருத்ததில் பெரும்பாலான பிள்ளைகளும் பெருத்து விட்டனர்.(உடற் பருமன்) என்னவர் கூட, மந்தாரக்குப்பத்திலிருந்து டவுன்ஷிப்போ, வடலூரோ வேண்டிய போதெல்லாம் நண்பர்களுடன் சென்ற சைக்கிள் பயணங்களை சிலாகித்து சொல்லியதுண்டு. கேளாச் செவியாகிடும் எம்மக்களுக்கு அப்போதெல்லாம். இப்போதும் 5 பிளாக்-லிருந்து MMC வரை வேலைக்கு சைக்கிளில் வரும் வயதானவர் (ஓய்வு பெறும் நிலையிலிருப்பவர்) இருக்கிறார் சகோ... ருசியறிந்தவர்களால் தொடரப் படுகின்றன ஒருசில...
பதிலளிநீக்கு//நகரின் முக்கிய வியாபார ஸ்தலமான மெயின் பஜார் பகுதியில் வாகனங்களை நிறுத்த “பார்க்கிங்” ஏரியா கூட இப்போது அமைத்திருக்கிறார்களாம். நெய்வேலி ரொம்பத் தான் முன்னேறி விட்டது போலும்.//
பதிலளிநீக்குஎல்லாம் அலவன்ஸ் படுத்திய பாடு!
நெய்வேலியில் வாழ்ந்தபோது தோண்டப்பெற்ற மனச் சுரங்கத்திலிருந்து அவ்வப்போது எமது வாழ்வு மெய்பட தங்கள் இனிய நினைவுகளைப்பகிர்ந்து கொண்டிருக்கும் திரு வெங்கட் அவர்களுக்கு ,
பதிலளிநீக்குஎன்னதான் வங்கியின் தூண்டுதலால் கடன்பெற்று இரண்டு மற்றும் நான்கு சக்கர ஊர்திகள் வாங்கி நிம்மதியை தொலைத்து வாழ்ந்தாலும் சொந்த காசில் சைக்கிள் வாங்கி அதை, கற்கும் ஆவலில் கைகளை விட்டு ஒட்டி சாகசங்கள் பல செய்து, ஆசான் அல்லது பெற்றோர் அல்லது உற்ராருக்காக பல இடங்கள் வீதி உலா வந்த சுகமான அனுபவங்கள் கோடி கோடியாக கொட்டிக்கொடுத்தாலும் கிடைத்தற்கு அறியவேயாகும். அந்தநாள் நெஞ்சிலே ஞாபகம் வந்ததே நண்பனே, நண்பனே, இந்த நாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே, அது ஏன் ஏன், நண்பனே?!!
மந்தவெளி நடராஜன்.
முன்பெல்லாம் ஆண் என்றால் நிச்சயம்
பதிலளிநீக்குநீச்சல் தெரிந்திருக்க வேண்டும்
சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்
இல்லையென்றால் இரண்டும் தெரியாதவனை
நாங்கள் கேவலமாகப் பேசுவோம்
சைக்கிள் அப்போது பழகுவதும் ஓட்டுவதும்
உண்மையில் ஹீரோயிஸ்ம்தான்
நல்ல பழைய நினைவுகளை தூண்டிச் சென்ற பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நல்ல நினைவலைகள்..
பதிலளிநீக்குசைக்கிள் ஒரு சுகம் தான். இப்பொழுதும் எங்க மாமியார் வீட்டில் சைக்கிள் வாங்கி வச்சிருக்கேன். ஊருக்கு போனதும் ரவுண்ட் அடிக்க.:)
நினைவில் நிஜமாய் நிறைந்திருக்கும்
பதிலளிநீக்குஉள்ளத்தில் உயரமாய் உறைந்திருக்கும்
மனதில் மகிழ்வாய் மறைந்திருக்கும்
மிதிவண்டி கற்ற கற்கண்டு அனுபவங்கள்
எல்லோராலும் எப்போதும் உணரமுடிகின்ற உன்னத பகிர்வு ............ உற்சாகம்
உங்கள் நெய்வேலிக்கு 1995 இல் என் நண்பனின் திருமணத்திற்கு வந்திருக்கிறேன். அமைதியான ஊர். NLC இல் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள் என்று நினைத்ததுண்டு .
பதிலளிநீக்குசைக்கிளை எடுத்துக்கொண்டு திருச்சியின் காவேரிக் கரை ஓரமாய் வழியெங்கும் இருக்கும் வாழைத்தோப்புகளை பார்த்தபடி, காவேரியில் இருந்து வரும் காற்றினை ரசித்தபடி ஒரு நெடும் பயணம் போக வேண்டும்.
பதிலளிநீக்கு....sounds great and lovely. :-)
குரங்கு பெடல் போகாமல் நேராக பெரிய சைக்கிள் கற்று கொண்டீர்களா..ஆச்சர்யம்.. இருந்தாலும் அந்த குரங்கு பெடல் சுகத்தை மிஸ்பண்ணிட்டீங்க.. ’’குரங்கு பெடல் பேலன்ஸ் பண்ணிவிட்டு ஒரு திரு நாளில் கால் பார் தாண்டி போட்ட சுகமே தனி..
பதிலளிநீக்கு