எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, May 6, 2011

இதுக்குப் போயி பயப்படலாமா?
குழந்தைகள் அதிலும் ஆண் குழந்தைகள் என்றால் அதுகள் செய்யும் விஷமங்களுக்குக் கேட்கவே வேண்டாம்!  செய்வதையும் செய்து விட்டு ஒன்றுமே தெரியாத அப்பாவி போல இருப்பதில் சமர்த்தர்களாக இருப்பார்கள்.  நானும் அப்படி இருந்திருக்கிறேனே...

தீபாவளி சமயத்தில் ஒரு நாள்.

நானும் என் நண்பரும் தில்லியின் கரோல் பாக் பகுதியில் காலாற நடந்து கொண்டிருந்தோம் .  அந்த குறுகிய வீதியில் வெறும் வீடுகள் தான், கடைகள் இல்லை.  தமிழில் பேசியபடி சென்று கொண்டிருந்த எங்களைப் பார்த்து சிறிது தொலைவிலிருந்த ஒரு சிறுவன் புன்முறுவல் பூத்தான்.  அது ஸ்னேகப் பார்வை இல்லை என்பது பின்னர்  தானே எங்களுக்குப் புரிந்தது

பேச்சு ஸ்வாரஸ்யத்தில் எங்களைப் பார்த்துப் புன்னகைக்கும் முன் அவன் என்ன செய்து கொண்டிருந்தான் என்பது எங்களுக்குத் தெரியாது. நாங்கள் சற்றும் எதிர்பாராத  நேரத்தில் எங்கள் முழங்கால்களைக் குறி வைத்து ஒரு ராக்கெட் ஏவுகணை போல வருகிறது.  கண் சிமிட்டும் நேரத்தில் நண்பரின் கணுக்காலை குறி வைத்து அந்த ஸ்கட் மிசைல் தாக்க அவரும் நானும் அலறியபடி பெயர் தெரியா நடனம் ஆட, இன்னும் மருந்து இருந்த அந்த ஏவுகணை இன்னும் எங்கே தாக்கலாம் என்று எங்கள் உடம்பின் மற்ற பகுதிகளைப் பார்க்க ஒரே கூத்து தான் போங்க.

நாங்கள் போட்ட நடனத்தைக் கண்டு முகத்தினை பரிதாபமாய் வைத்துக் கொண்டு, எங்களைப் பார்த்து கேட்டானே ஒரு கேள்வி – “ என்ன அங்கிள், இவ்வளவு பெரீசா வளர்ந்து இருக்கீங்க, ஒரு சாதாரண ராக்கெட்டைப் பார்த்து இப்படி பயப்படறீங்களே! ” 

அவன் இப்படிக் கேட்கவும் பெரிய மனதுடன் சிரித்தபடியே வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்நண்பரின் கணுக்காலில் தீப்புண் காயத்தோடு

மீண்டும் சந்திப்போம்!

வெங்கட்.


19 comments:

 1. பதிவுக்குத் தகுந்தாற்போல
  எப்படி குசும்புப் பார்வை பார்க்கும் பையன் படத்தை
  மிகச் சரியாக தேர்ந்தெடுத்தீர்கள்
  பதிவும் ப்டமும் இத்தனை சரியாகப்
  பொருந்திப்போவதுஆச்சரியந்தான்
  நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. //கண் சிமிட்டும் நேரத்தில் நண்பரின் கணுக்காலை குறி வைத்து அந்த ஸ்கட் மிசைல் தாக்க அவரும் நானும் அலறியபடி பெயர் தெரியா நடனம் ஆட, இன்னும் மருந்து இருந்த அந்த ஏவுகணை இன்னும் எங்கே தாக்கலாம் என்று எங்கள் உடம்பின் மற்ற பகுதிகளைப் பார்க்க ஒரே கூத்து தான் போங்க.//

  நீங்கள் காலாற நடந்து செல்லும் போது நம் தமிழ்நாட்டு ஆசாமிகள் போல வேட்டியை மடித்துக்கட்டியிருந்தால், கணுக்காலில் மோதிய அது தன் டைரக்‌ஷனை சற்றே மேல் நோக்கித்திருப்பியிருந்தால் என்னாவது என்று நினைத்தாலே சர்வங்கமும் நடுங்கிறது, ஸ்வாமி.

  [ Voted 3 to 4 in INDLI ]

  ReplyDelete
 3. பையனின் குறும்பைப்போல டெம்ப்ளேட்டும் அழகு வெங்கட்.

  ReplyDelete
 4. ஆண் குழந்தைகளுக்கு லொள்ளு ஜாஸ்தி தான்.

  ReplyDelete
 5. இந்தக் காலத்துப் பசங்க கிட்ட ஜாக்கிரதையாகத்தான் இருக்கணும்!(அந்தக்காலத்துல மட்டும்?அடுத்த வீட்டு மாமா காலடியில் சரத்தைக் கொளுத்திப் போட்டு அடி வாங்கியது யார்!)

  ReplyDelete
 6. எனக்குத் தெரிஞ்சு இப்ப பசங்களை விட பெண் குழந்தைகள் குறும்பு ஜாஸ்தி ஆய்டுச்சு

  ReplyDelete
 7. new template kannukku ithamaa irukku

  ReplyDelete
 8. அட.. இவ்ளோதானா..
  நா என்னவோ பெரிசா எதிர்பாத்தேன்.

  -- :-)

  ReplyDelete
 9. புது டெம்ப்ளேட் ரொம்ப நாள்ல இருக்கு....

  ReplyDelete
 10. எழுத்துப் பிழைக்கு மன்னிக்கவும். புது டெம்ப்ளேட் ரொம்ப நல்லா இருக்கு...

  ReplyDelete
 11. நல்லா பொருத்தமா இருக்கு பையனின் சிரிப்பு..

  தோய்ப்பு நடனம் மாதிரி இது ராக்கெட் நடனமா? :))

  ReplyDelete
 12. செய்வதையும் செய்து விட்டு ஒன்றுமே தெரியாத அப்பாவி போல இருப்பதில் சமர்த்தர்களாக இருப்பார்கள். //
  படமும் பதிவும் அருமை.

  ReplyDelete
 13. புது வடிவமைப்பு அழகோ அழகு..
  ராக்கட் ராஜாவின் குறும்பும்!

  ReplyDelete
 14. நல்லாகுறும்புதான்.

  ReplyDelete
 15. அடப் பாவமே...! பிறருக்கு ஆபத்து விளைவிக்கும் குறும்புகளை செய்வதிலிருந்து அவன் மீள, அவனது பெற்றோர் அக்கறை எடுக்க வேண்டும்.

  ReplyDelete
 16. ஹா ஹா சரி குசும்பு

  ReplyDelete
 17. குறும்புகார கண்ணனின் படம் அழகு.

  தீராத விளையாட்டு பிள்ளை அழ அழ வைத்து சிரிப்பானாம்,இவன் நடனம் ஆட வைத்து சிரிக்கிறான்.

  ReplyDelete
 18. நன்றாக நினைவு படுத்திப் பாருங்கள். நெய்வேலியில் நீங்கள் சின்ன வயதில் யார் யாரை டான்ஸ் ஆட விட்டீர்களோ!

  ReplyDelete
 19. அமர்க்களமான பதிவு
  அசத்துரிங்க வெங்கட்

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....