புதன், 18 மே, 2011

தீர்க்க சுமங்கலிகள்மோகன்ஜி "வடு" என்று ஒரு கதை எழுதி இருக்கிறார். நீங்களும் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். படிக்கவில்லையெனில் படித்து விடுங்களேன். அற்புதமான கதை. தனக்குப் பிரியமான ஒன்றினைப் பிரிய நேரும்போது நம்மில் பொங்கும் உணர்ச்சிகளின் கொந்தளிப்பினை அழகாய் சொல்லிப் போகும் கதை.

அதை படித்து கருத்தினை எழுதும்போது ”//ஸ்டிக்கர் பொட்டு பற்றிய என்னுடைய நினைவுகள் வேறு மாதிரி! முடிந்தால் தனியே பகிர்கிறேன். :)// என்று எழுதி இருந்தேன். இதோ அதை பகிர்ந்து விட்டேன்.

நம் எல்லோருக்குமே ஸ்டிக்கர் பொட்டு பரிச்சயம்தான். இப்போதெல்லாம் அது இல்லாத வீடு எது? என் அம்மா காலத்தில் நெற்றியில் வைத்துக் கொள்ளும் குங்குமம், மை போன்றவற்றை வீட்டிலேயே செய்து விடுவார்களாம். பிறகு சாந்து. இப்போது உங்களுக்கு தெரிந்த பெண்களிடம் அதைப் பற்றி கேட்டீர்களேயானால் "இதுக்கெல்லாம் வீணா எதுக்கு கஷ்டப் படணும்? அட்டையிலிருந்து எடுத்தமா, நெத்தியில ஒட்டினோமா, போனோமான்னு இருக்கணும்" என்பார்கள்.

நல்ல வசதிதான். ஆனால் சிலருக்கு இந்த பொட்டின் பின்புறம் இருக்கும் பிசின் ஒத்துக் கொள்வதில்லை – அரிப்பு வந்து வெள்ளையாக, சிலருக்கு தழும்பாகவும் மாறி விடுகிறது என்பதும் உண்மை.

அதில் இருக்கிற இன்னொரு பிரச்சனை, பல வீடுகளில் நெற்றியிலிருந்து எடுத்த ஸ்டிக்கர் பொட்டினை கைக்கெட்டும் இடங்களில் எல்லாம் ஒட்டி விடுவது தான். பல நாட்களானாலும் அதை எடுப்பதில்லை. மேலும் மேலும் ஒட்டிக் கொண்டிருப்பார்கள். எனக்குத் தெரிந்த நண்பரின் வீட்டில் குளியலறைச் சுவர் முழுவதும் விதவிதமான வண்ணங்களில், பலவித வடிவங்களில் ஸ்டிக்கர் பொட்டுகள். சுவர் நிரம்பியதும் கதவின் பின்புறம். பொட்டு வைத்து அலங்காரம்!

நான் கூட சில சமயம் இனி பொட்டு ஒட்ட இடமில்லையெனில் என்ன செய்வாரோ என்று நினைத்திருக்கிறேன். நல்ல வேளை அப்படி ஒரு நிலை வரவில்லை. திருந்தி விட்டாரோ என்று நினைத்து விடாதீர்கள் – வேறு பெரிய வீடு வாங்கிக் கொண்டு சென்று விட்டார் – புதியதாய் ஒரு இடம் கிடைத்து விட்டதே பொட்டு ஒட்ட!

நிறைவாக கல்லூரிக் காலத்தில் படித்த, தற்போது நினைவுக்கு வந்த ஒரு கவிதை! எழுதியது சத்தியமாய் நானில்லை. எழுதிய அந்த”யாரோ”விற்கு எனது நன்றி.

”பாத்ரூம் பைப்பே…. பக்கத்து சுவரே….
படிதாண்டா என் பத்தினிக் கதவே...
படுதா அணிந்த ஜன்னலே…
பளபளக்கும் கண்ணாடியே….
பலர் அமரும் சோஃபாவே….
நீங்கள் அனைவரும்
தீர்க்க சுமங்கலிகள்…

ஸ்டிக்கர் பொட்டைக் கழற்றி
எட்டிய இடமெல்லாம் ஒட்டி
மறந்து போன
என் பெண்ணின் கை வண்ணத்தால்….”32 கருத்துகள்:

 1. நல்லவேளை கவிதை எழுதியது நானில்லை என்று முன்பே சொல்லிடீங்க.

  பதிலளிநீக்கு
 2. பாத்ரூமில் இருக்கும் முகம்பார்க்கும் கண்ணாடியை விட்டுட்டீங்களா?

  இந்த ஸ்டிக்கர் பொட்டுக்கு கம்போடியாச் சிறுசுகளுக்கிடையில் ஏக டிமாண்ட். எனக்கு எனக்குன்னு கேட்ட பசங்களுக்கெல்லாம் வச்சுவிட்டேன்:-)))))

  பதிலளிநீக்கு
 3. அட..பொட்டு ஒட்ட இடமில்லாமல்தான் வீடு மாறிட்டீங்களா...

  பதிலளிநீக்கு
 4. நெற்றி பொட்டுல அடிச்ச மாதிரி நச்சுனு ஒரு பதிவு

  பதிலளிநீக்கு
 5. கவிதை சூப்பர்.
  இன்னும் கொஞ்ச நாளில் இந்த சிடிக்கர் பொட்டும் இல்லாமல் போனாலும் போய்விடும்.

  பதிலளிநீக்கு
 6. //வேறு பெரிய வீடு வாங்கிக் கொண்டு சென்று விட்டார் – புதியதாய் ஒரு இடம் கிடைத்து விட்டதே பொட்டு ஒட்ட!//
  nice comedy!

  பதிலளிநீக்கு
 7. உங்களின் இந்தப்பதிவும், யாரோ எழுதியதாகச்சொல்லி வெளியிட்டுள்ள கவிதையும் [ரிஷபன் சார் சொல்லியுள்ளதுபோல] நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல மிகச்சிறப்பாகவே உள்ளன.

  பாராட்டுக்கள்.


  voted 4 to 5 in INDLI

  பதிலளிநீக்கு
 8. பொட்டுவைத்த கதவு! ஏ கிளாஸ்! ;-))

  பதிலளிநீக்கு
 9. கவிதை சூப்பர். அப்புறம், மேக்கப் பண்றப்ப பார்க்கும் கண்ணாடி .. அப்புறம், பீரோல ஒரு சைட் கண்ணாடி இதெல்லாம் இருக்கு

  பதிலளிநீக்கு
 10. நச்சுன்னு ஒரு பதிவு. அந்தக் கவிதையும் அருமை. எழுதின
  கவிஞனும்,அதை ரசித்து வெளியிட்ட நீங்களும்,பின்னூட்டம் போட்ட ரசிக மணிகளும் தீர்க்க சுமங்கலி/சுமங்கலர்களாய் வாழ்க வாழ்க!

  பதிலளிநீக்கு
 11. பதிவும் அதற்கேற்றகவிதையும் அருமை.. பொட்டு வைத்த வட்டநிலா..

  பதிலளிநீக்கு
 12. பொட்டுவைத்த சுமங்கலிிப் பொருட்கள்
  வித்தியாசமான சிந்தனை கொண்ட பாடலை
  எமக்கு அறிமுகம் செய்தமைக்கு நன்றி
  நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 13. பொட்டைப் பத்தி பொட்டுப் பொட்டு வெச்சுட்டீங்க வெங்கட்.

  பதிலளிநீக்கு
 14. வித்தியாசமான இடுகைங்க.... நகைச்சுவையான கவிதையை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 15. தீர்க்க சுமங்கலி என்றதும் என் நினைவில் வந்தது “மல்லிகை என் மன்னன் மயங்கும்” என்ற பாடல் தான்.

  (குங்குமக் காலங்களில் ஆண்கள் (கல்யாணமான புதிதில்தான்)பலர் குங்குமப்பதிவுடன் அலுவலகம் சென்று அசடு வழிவார்களே! இப்போது அந்தக் கவலை இல்லையல்லவா!) (அல்லது அப்படி அசடு வழிவதும் ஒரு சுகம்தானோ?)

  பதிலளிநீக்கு
 16. "பெரிய வீடு வாங்கிக் கொண்டு சென்று விட்டார் – புதியதாய் ஒரு இடம் கிடைத்து விட்டதே பொட்டு ஒட்ட!"
  :)))

  பதிலளிநீக்கு
 17. பொட்டு வைத்த மங்களமான பதிவுக்குப் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 18. சூப்பர் கவிதை.வீட்டுக் கண்ணாடிதான் என்றில்லை.ஓட்டலிலும் இதே நிலைதான்!

  பதிலளிநீக்கு
 19. //இப்போது உங்களுக்கு தெரிந்த பெண்களிடம் அதைப் பற்றி கேட்டீர்களேயானால் "இதுக்கெல்லாம் வீணா எதுக்கு கஷ்டப் படணும்? அட்டையிலிருந்து எடுத்தமா, நெத்தியில ஒட்டினோமா, போனோமான்னு இருக்கணும்" என்பார்கள்//

  இப்ப இருக்கற நெறைய பெண்கள் பொட்டே வெக்கரதில்லைங்க... இந்த கொடுமையே எங்க சொல்றது... கேட்டா பேஷனாம்... என்ன பேஷனோ என்னமோ?

  //நீங்கள் அனைவரும்
  தீர்க்க சுமங்கலிகள்//
  வாவ்...என்ன ஒரு தாட்...:))

  நல்ல பகிர்வு, நன்றி

  பதிலளிநீக்கு
 20. எண்ணியதை சொல்லி விட்டீர்கள்..அருமை
  http://zenguna.blogspot.com

  பதிலளிநீக்கு
 21. தாயை காத்த தனயன் வெங்கட் அவர்களே, இடுகை பிரியர்களின் உள்ளம் கவர்ந்த சிகாமணியே,

  "குங்குமப்பொட்டின் மங்கலம் நெஞசம் இரண்டின் சங்கமம்," திருமதி ஆதி அவர்கள் வரைந்த கண்கவர் ஓவியம் தங்கள் இடுகைக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது திரு தங்கமணி கூறியதுபோல் எவருக்கும் எதற்கும் நேரமில்லை, எல்லவற்றிலும் ஒரு அவசரம் காண முடிகிறது. பல வீடுகளில் பொட்டை எடுத்தபிறகு , முகம் காட்டும் ஆடியில் ஒரு கலைக்கப்பெறாத ஓவியம் தென்படும். சூழ்நிலைக்கு ஏற்ப , யாரோ பாடிய கவிதை ரசிக்கும்படி இருந்தது. நன்றி, தொடரட்டும் தங்கள் நற்பணி. வாழ்க, வளர்க.

  மந்தவெளி நடராஜன்.

  பதிலளிநீக்கு
 22. வேடந்தாங்கல் கருண்: வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி நண்பரே.

  உயிரோடை: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ…. கவிதை எழுத எனக்கு வராது…. அதனால் தான் வேறொருவர் கவிதையை பொருத்தமாய் இருக்கிறது என நினைத்ததால் சேர்த்தேன்.

  துளசி கோபால்: உண்மை தான். நிறைய இடங்கள் இருக்கிறது பொட்டுடன்….. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  கலாநேசன்: அட எங்க வீட்டு அம்மணி இப்படியெல்லாம் ஒட்ட மாட்டாங்க! வீடு மாறினது வேறு சவுகரியங்களுக்காக! பொட்டு ஒட்டிய அம்மணி வேறு ஒருவர்…. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சரவணன்.

  ரிஷபன்: பொட்டில் அடித்த மாதிரி இருந்ததா! இப்படி ஒரு கருத்து எழுதுவது உங்களுக்கு கைவந்த கலை! மிக்க நன்றி சார். அடுத்த தில்லி விஜயம் எப்போது!

  மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே.

  திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: நீங்கள் சொல்வது உண்மைதான். தில்லியில் பல தமிழ் பெண்கள் இப்போதே பொட்டு வைத்துக் கொள்வதில்லை… வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

  கே.பி.ஜனா: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்.

  வை.கோபாலகிருஷ்ணன்: தங்கள் இனிய கருத்திற்கு மிக்க நன்றி சார்.

  ஏ.ஆர்.ராஜகோபாலன்: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே…

  ஆர்.வி.எஸ்.: மைனரே வாரும்! உங்கள் கருத்து என்னை மகிழ்வித்தது…

  எல்.கே.: பொட்டு இவர்கள் ஒட்டாத இடமே இல்லை…. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கார்த்திக்.

  மோகன்ஜி: உங்கள் “வடு” கதையினால் எழுதிய பதிவு என்பதால் இந்த பதிவின் காரணகர்த்தா நீங்கள் தான் ஜி! படித்து கருத்துரைத்தமைக்கு நன்றி.

  பத்மநாபன்: ”பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா!” அருமையான பாடல் இல்லையா நண்பரே. கருத்து அளித்தமைக்கு நன்றி நண்பரே.

  ரமணி: உங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி அளித்தது சார். மிக்க நன்றி.

  சுந்தர்ஜி: ”பொட்டு பொட்டு வைச்சிட்டேனா! ஆகா நல்லா இருக்கே…. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜி!

  சித்ரா: உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ..

  ஈஸ்வரன்: அது எப்படி அண்ணாச்சி, நீங்க பண்ணினத எல்லாம் சரியான பதிவில வந்து இப்படி அழகா சொல்லிட்டு போறீங்க! உங்களுக்கு நிகர் நீங்கதான் போங்க!!!

  மாதேவி: ரசித்தமைக்கு நன்றி!

  இராஜராஜேஸ்வரி: மிக்க நன்றி சகோ.

  அமுதா கிருஷ்ணா: மிக்க நன்றி சகோ.

  சென்னை பித்தன்: மிக்க நன்றி சார்.

  அப்பாவி தங்கமணி: உண்மை தான் அ.த… கருத்து சொன்ன உங்களுக்கு மிக்க நன்றி.

  குணசேகரன்: உங்களது முதல் வருகைக்கு மிக்க நன்றி.

  வி.கே. நடராஜன்: உங்களது கருத்திற்கு மிக்க நன்றி.. மேலே உள்ள படம் திருமதி ஆதி வரைந்தது அல்ல! கூகிள் ஆண்டவரிடமிருந்து வேண்டிப் பெற்றது!

  பதிலளிநீக்கு
 23. சுவார‌ஸ்ய‌மாயிருந்த‌து ச‌கோ... ப‌திவும், க‌ருத்துரைக‌ளும்! என் முத‌ல் குழ‌ந்தை பிர‌ச‌வ‌ நேர‌ம்... ந‌டுஇர‌வில் ப‌ய‌முறுத்த‌, அறுவைக்கு த‌யாரானோம் அவ‌ச‌ர‌மாய். ம‌ய‌க்க‌விய‌ல் டாக்ட‌ர் நெற்றியோர‌த்தில் ஸ்டிக்க‌ர் பொட்டுட‌ன் இருந்த‌து சுய‌நினைவை இழ‌க்கும் முன் என்னை புன்ன‌கைக்க‌ச் செய்த‌து. இர‌வு இர‌ண்டும‌ணிக்கு எழுந்து வ‌ந்த‌வ‌ர் பாவ‌ம்... க‌ண்ணாடி பார்க்க‌வா நேர‌மிருக்கும்? இது ஈஸ்வ‌ர‌னின் க‌ருத்துரையால் நினைவில் எழுந்த‌து.

  பதிலளிநீக்கு
 24. கடைகளில் விதவிதமான டிஸைன்களில் ரசித்துப் பார்த்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 25. @ மாதங்கி மாலி: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ. கவிதை நான் எழுதியதல்ல... படித்ததில் பிடித்தது... :)

  @ நிலாமகள்: தங்கள் நினைவினை மீட்டி எடுத்ததோ இந்த பகிர்வு... :) நல்லது சகோ... வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ...

  @ ஹுசைனம்மா: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. எனக்கும் ரசிக்கப் பிடிக்கும் அதன் வடிவங்களை, வண்ணங்களை.....

  பதிலளிநீக்கு
 26. ஸ்டிக்கர் பொட்டோடு தங்கத்தாலிச் சரடையும் பாத் ரூமில்,ஷவர்பைப்பில் மாட்டும் தீர்க்ககசுமங்கலிகளும் இருக்கிறார்கள். ரசித்துப் படித்தேன். வணக்கம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கமலாம்மா!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....