எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, February 27, 2012

கதை வழி நடந்தேன் - எஸ் ராமகிருஷ்ணன் உரையாடல்


[பட உதவி:  உயிர்மை பதிப்பகம் இணைய தளம்]

நேற்று [26.02.2012] மாலை 05.30 மணிக்கு தில்லி தமிழ் சங்கத்தில், பிரபல எழுத்தாளர் திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுடைய “கதை வழி நடந்தேன்” நிகழ்ச்சி இருந்தது.    சரியாக 05.30 மணிக்கு விழா துவங்கியது. சங்கச் செயலரின் வரவேற்பு உரைக்குப்பின் திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் உரையாற்றினார்.


பல சமயங்களில் தில்லிக்கு இவர் வந்திருந்தாலும், இவரின் நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டது இதுவே முதன் முறை.  கதைகள் எவ்வளவு முக்கியம், அவைகள் நமக்குக் கற்றுக் கொடுப்பது எத்தனை எத்தனை விஷயங்கள் என்பதையெல்லாம் சொன்னார்.  தன்னை அவர் ஒரு எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்வதை விட ”கதை சொல்லி”, என்றுதான் சொல்லிக்கொள்ள  விரும்புவதாகத் தெரிவித்தார்.

அவர் பேசியதிலிருந்து சில துளிகள் உங்களோடு பகிர்கிறேன்.

·         விழித்துக் கொண்டே கனவு காண்பது தான் கதை…  [இது எத்தனை உண்மை!].
·         ஒரு வரிக் கதைகளில் மிகப் பிரசித்தி பெற்ற ஒரு கதை “ஒரு ஊர்ல ஒரு நரி, அதோட அது கதை சரி!”
·        கடவுளாகவே இருந்தாலும், அவர் மற்றவர்கள் வீட்டிற்குச் செல்லும்போது ஏதாவது வாங்கிக் கொண்டு செல்ல  வேண்டும்.
·         இப்போதெல்லாம் யாராவது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தால் அவரைப்  பார்க்க யாரும் செல்வதில்லை – ஒரு குறுஞ்செய்தி அனுப்பி விடுகிறார்கள்...
·         கதைகளில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நாம் தினம் தினம் சந்திக்கும் நபர்களில் இருக்கிறார்கள்...
·         தில்லிக்கு வந்தபின் தானே நமது தமிழின் அருமை நமக்குப் புரிகிறது [சரியாகச் சொன்னார்!].
·         நம்மில் பலர் சாப்பிடும் உணவின் பெயர் கூடத் தெரியாமல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.
·         இன்றைய இளைஞர்கள் அரிசி வாங்கக் கூட தெரியாதவர்களாக, “இருப்பதிலேயே விலை உயர்ந்த அரிசி தான் நல்ல அரிசி” என எண்ணுபவர்களாக இருக்கிறார்கள்!

நிறைய குட்டிக் குட்டிக் கதைகள் சொல்லி தனது உரையினை அழகாய் நகர்த்திச் சென்றார்.  அவர் சொன்னதில் சில கதைகளை அடுத்த பகிர்வுகளில் சொல்கிறேன் [இன்னும் சில பதிவுகள் தேற்றுகிறேன் என எண்ண வேண்டாம், பதிவின் நீளம் கருதியே இந்த முடிவு]. 

விழா சரியான நேரத்தில் ஆரம்பித்தாலும், 06.00 மணிக்கு மேல் தான் அரங்கம் நிரம்ப ஆரம்பித்தது.  அதுவரை நிரம்பாத அரங்கத்திற்குக் காரணம் உண்டு – 06.30 மணிக்குத்தான் இந்த வார சிறப்புப் படமாக “மௌன குரு”  திரையிடுவதாக இருந்திருக்கிறார்கள்…  அதற்குத்தான் மக்கள் வர ஆரம்பித்தார்கள் 06.15-லிருந்தே எங்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்தவர்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள்… “ஆறரைக்குப் படம்னு சொன்னாங்க! இன்னும் இவரு பேசிட்டு இருக்காரு…  இவரு எப்ப முடிக்கிறது, படம் எப்பப் போடறது...”


[திரு எஸ். ரா அவர்களுடன் நானும், சக தில்லி பதிவர்கள் முத்துலெட்சுமி மற்றும் ஜிஜி அவர்களும்] 

திரு ராமகிருஷ்ணன் அவர்களும் சரியாக 06.45 மணி அளவில் அவரது உரையை முடித்துக் கொண்டார்.  நன்றியுரையுடன் விழா இனிதே முடிந்தது. தில்லி வலைப்பூ நண்பர்கள், திரு எஸ்.ரா அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.  நேற்று காலை வலைப்பூ நண்பர்களுடன் தில்லியில் நடக்கும் உலகப் புத்தகக் கண்காட்சிக்கும் சென்று வந்தோம்…  இனிதே கழிந்தது இந்நாள்.  புத்தகக் கண்காட்சி அனுபவங்கள் பற்றி பிறகு எழுதுகிறேன்.

மீண்டும் சந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

58 comments:

 1. ஆமால்ல..சுவாரசியமா இருந்தது பேச்சு.. சினிமாவுக்கு நடுவில் கொஞ்ச நேரமாப்போச்சு இல்லன்னா இன்னும் பேசி இருப்பார்..

  ReplyDelete
 2. எஸ் ரா அவர்களின் பேச்ச்சுக்கு நாங்க எல்லோரும் (நானும் கோபாலும்தான்) ரசிகர்கள். அதுவும் சுவாரசியமான பேச்சு நடக்கும்போதே அவருடைய கைகள் ஒரு தேர்ந்த பரதக்கலைஞர்போல் அபிநயிக்கும் விந்தையை அடுத்த முறை கவனிச்சுப்பாருங்க.

  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 3. My friend Devakumar had also come for this function. In fact S. Raa had dinner at his house on Saturday night. Deva was there for this program also.

  Many of the points that you mentioned are relevant and good.

  ReplyDelete
 4. ஆஹா பிரபல எழுத்தாளருடன் சந்திப்பா. நல்லாவே சொல்லி இருக்கிங்க

  ReplyDelete
 5. //கடவுளாகவே இருந்தாலும், அவர் மற்றவர்கள் வீட்டிற்குச் செல்லும்போது ஏதாவது வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும்.//

  அதுவும் குழந்தைகள் உள்ள வீட்டிற்கு!

  எஸ் ரா வின் பேச்சைக் கேட்ட பொழுது கதை சொல்லும் ஆவலும், கதை கேட்கும் ஆவலும் வந்ததென்னவோ உண்மை.

  இதுபோல் நல்ல நிகழ்வுகளைத் தரும் பாராட்டுவோம்.

  ReplyDelete
 6. 5.30க்கு விழான்னா 5,30க்கே ஆரம்பிச்சாங்களா... இங்கல்லாம் புத்தக வெளியீட்டு விழா மற்றும் எழுத்தாளர்கள் கலந்துக்கற விழான்னா 5 மணிக்கு பங்ஷன்னா, 6க்குதான் ஆரம்பிக்கும் வெங்கட் ஸார்! விழாவை அழகாத் தொகுத்து தந்திருக்கீங்க. எஸ்.ரா. சொன்ன கதைகளுக்காக வெயிட்டிங்...

  ReplyDelete
 7. உங்கள் மேற்கோள்களை பார்க்கையில் அவரின் உரை மிக நன்றாக இருந்திருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது.

  ReplyDelete
 8. நல்ல சுவாரஸ்யமான பதிவு. பகிர்வுக்கு நன்றிகள்.
  தொடருங்கள். ஆவலுடன் காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 9. நீங்கள் ரசித்த எஸ்.ரா அவரிகளின் பேச்சை நாங்களும் ரசிக்கும்வண்ணம் பகிர்ந்ததற்கு,நன்றி வெங்கட்.

  //சில கதைகளை அடுத்த பகிர்வுகளில் சொல்கிறேன் // படிக்க காத்திருக்கிறோம்.உலக புத்தகண்காட்சி பற்றிய பதிவினையும் எதிபார்க்கிறோம்.

  ReplyDelete
 10. அருமையான கதை சொல்லியின் பகிர்வு.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 11. நல்லா அருமையா நடந்துருக்கும் போலிருக்கே.. போனஸா பதிவர் சந்திப்பும் நடந்துருக்குதே.. ஜூப்பர்தான் :-)

  ReplyDelete
 12. சுருக்கமாகச் சொன்ன விஷயங்கள் அருமை
  அடுத்த பதிவுகளை நீளம் கருதி சுருக்கவேண்டாம்
  அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 13. அருமையாக பகிர்ந்திருக்கீங்க,எனக்கும் எஸ் ராவின் எழுத்துக்கள் பிடிக்கும்,அவர் தேர்ந்த பேச்சாளரும் கூட டிவி நிகழ்ச்சியொன்றில் அவ்ர் பேசி கேட்டிருக்கிறேன்.கதை சொல்லி சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.நன்றி சகோ.

  ReplyDelete
 14. திரைப்படத்துக்கு முன்னால் பொருத்தமில்லாமல் என்ன பேச்சு வேண்டியிருக்கிறது?

  இப்படித்தான் இருக்கிறது நன்கு பேசுபவர்களுக்கு முன்னே உதிரும் உரையாடல்களின் தொனி.

  மௌனகுரு பொருத்தமான தலைப்பு.

  ReplyDelete
 15. அருமையான பகிர்வு. தொடரக் காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 16. @ முத்துலெட்சுமி: தங்களது உடனடி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  இன்னும் சற்று நேரம் பேச ஏதுவாக சினிமாவினை தள்ளிப் போட்டிருக்கலாம் - அடுத்த வாரத்திற்கு!

  ReplyDelete
 17. "மௌன குரு" படம் பற்றி ஒன்றும் எழுதவேயில்லையே!

  ReplyDelete
 18. @ அனானி: அப்ப “ஆறரைக்குப் படம்னு சொன்னாங்க! இன்னும் இவரு பேசிட்டு இருக்காரு..”ன்னு பின்புறத்திலிருந்து சொன்னதில் நீங்களும் ஒருவரா?

  ReplyDelete
 19. @ துளசி கோபால்: அட... ஆமாம் டீச்சர்... நீங்க அபிநயம்-னு சொன்னதை நான் லேப்டாப்-பில் விரல்கள் நடனமாடுவதாக நினைத்துக் கொண்டேன்...

  தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து, கருத்துரையிட்டமைக்கும் மிக்க நன்றி டீச்சர்....

  ReplyDelete
 20. @ முத்துலெட்சுமி: நீங்க கூட அங்கேயே சொன்னீங்க....

  தங்களது இரண்டாவது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 21. @ மோகன்குமார்: ஓ.... முன்பே தெரியாததால் உங்கள் நண்பர் ரகுவினை சந்திக்க முடியாது போய்விட்டது....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மனமார்ந்த நன்றி மோகன்...

  ReplyDelete
 22. @ மோகன்குமார்: நண்பரின் பெயரை தவறாக ரகு என எழுதி விட்டேன்.... :(

  தேவாவின் தில்லி எண் மின்னஞ்சலில் அனுப்புங்கள்.... நானும் தொடர்பு கொள்கிறேன்..

  ReplyDelete
 23. @ லக்ஷ்மி: தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்திட்டமைக்கும் மிக்க நன்றிம்மா....

  ReplyDelete
 24. @ ஈஸ்வரன்: //அதுவும் குழந்தைகள் உள்ள வீட்டிற்கு!// அதான்.... நான் எழுத மறந்ததை நினைவூட்டியதற்கு நன்றி அண்ணாச்சி....

  ReplyDelete
 25. @ கணேஷ்: எஸ். ரா சொன்ன கதைகளை விரைவில் பகிர்கிறேன் நண்பரே...

  சரியான நேரத்தில் ஆரம்பித்ததற்கான காரணம் பதிவிலேயே இருக்கிறது..

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி திரு கணேஷ்....

  ReplyDelete
 26. @ கே.பி. ஜனா: ஆமாம் சார். விழாவில் திரு எஸ். ரா. அவர்களுடைய பேச்சு மிகவும் ரசிக்கும்படித்தான் இருந்தது....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 27. @ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி சார்....

  ReplyDelete
 28. @ ராம்வி: நிச்சயம்... அடுத்த பதிவுகளில் அவர் சொன்ன சில கதைகளை எழுதிவிடுகிறேன்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமா ரவி....

  ReplyDelete
 29. @ இராஜராஜேஸ்வரி: பதிவினை ரசித்து கருத்திட்டதற்கு மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 30. @ அமைதிச்சாரல்: ஆமாம். விழா இனிதே நடந்தது... இரண்டு இடங்களில் பதிவர் சந்திப்பும் நடந்தது மகிழ்ச்சியாக இருந்தது....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

  ReplyDelete
 31. @ ரமணி: நிச்சயம் சுருக்காமல் பதிவிட முயற்சிக்கிறேன்.... தங்களது வருகைக்கும், கருத்திற்கும் தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி...

  ReplyDelete
 32. @ ஆசியா உமர்: நிறைய பேருக்குப் பிடித்த எழுத்தாளர் எஸ். ரா.... உங்களுக்கும் பிடிக்கும் என அறிந்து மகிழ்ச்சி....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ..

  ReplyDelete
 33. @ சுந்தர்ஜி: //இப்படித்தான் இருக்கிறது நன்கு பேசுபவர்களுக்கு முன்னே உதிரும் உரையாடல்களின் தொனி.// உண்மை ஜி!

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

  ReplyDelete
 34. @ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆச்சி...

  ReplyDelete
 35. @ ராமலக்ஷ்மி: நிச்சயம் தொடர்வேன்....

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 36. எனக்கும் எஸ் ராவின் எழுத்து பிடிக்கும்..சுவாரஸ்யமான பதிவு...

  ReplyDelete
 37. @ ரெவெரி: மிக்க நன்றி நண்பரே...

  ReplyDelete
 38. எல்லோரும் கதை எழுதும் பொழுது, கதையின் கதை எழுதுவார் எஸ்.ரா.. எனக்கும் மிக பிடித்த எழுத்தாளர்.. விகடனில் தொடர்ந்து வந்த அவரது தொடர்களின் வாசகன்...துணையெழுத்து போன்றவை..
  நல்ல பகிர்வு வெங்கட்ஜி....

  ReplyDelete
 39. திரு.ராமகிருஷ்ணன் அவர்களுடைய கருத்துக்களில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து பகிர்ந்த விதம் அருமை!!

  ReplyDelete
 40. @ பத்மநாபன்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்துஜி!

  உண்மை....

  ReplyDelete
 41. @ மனோ சாமிநாதன்: பதிவினை ரசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி....

  ReplyDelete
 42. இப்போதெல்லாம் இலக்கியக் கூட்டங்களுக்கு எழுத்தாளர்களே பலர் வருவதில்லை!
  இது வருந்தத் தக்க செய்தி!
  அன்று சென்னையில் நடந்த என் புத்தக வெளியீட்டு
  விழாவிலே கூட சென்னை வாசிகளே பலர் கலந்து
  கொள்ளாதது வருத்தமே!
  சா இராமாநுசம்

  ReplyDelete
 43. @ புலவர் சா இராமாநுசம்: நிஜம் ஐயா... இலக்கியக் கூட்டத்திற்கு வரும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது...

  வருத்தம் தரும் விஷயம் தான்..

  தங்களது வருகைக்கும் பகிர்ந்த கருத்துரைக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 44. பகிர்வுக்கு நன்றி வெங்கட்

  ReplyDelete
 45. @ சென்னை பித்தன்: மிக்க நன்றி ஐயா....

  ReplyDelete
 46. அடாடா.. இந்தப் பதிவ.. நா உங்க வீட்டுக்கு வர்றதுக்கு முன்னால போட்ருந்தா.. நா ஏதாவது வாங்கிட்டாவது வந்திருப்பேனே..!!
  மிஸ் பண்ணிட்டீங்களே..

  :-)
  Just kiding.

  Nice/useful points.. he said.. Thanks for sharing.

  ReplyDelete
 47. @ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: அட நீங்க வாங்கிட்டுதானே வந்தீங்க!

  உங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி மாதவன்....

  ReplyDelete
 48. எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் எஸ். ராதாகிருஷ்னனும் ஒருவர். அவர் பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 49. 'இன்னும் பேசிட்டிருக்காரு' கமெந்ட் ரொம்ப யதார்த்தம். சிரித்தேன். கூட்டம் சேர்க்க சினிமா தான் கருவி. தமிழர்களுக்கு ஐம்பது ஆண்டுகளாகத் தெரிந்த உத்தியாச்சே?

  ReplyDelete
 50. எஸ்.ரா.வின் எழுத்தும் பேச்சும் எல்லோரையும் ஈர்க்கும் வ‌சீக‌ர‌ம்! த‌ங்க‌ள் வ‌ழி தில்லி ச‌ந்திப்பு எங்க‌ளுக்குமான‌தாய் அமைந்த‌து. தொட‌ர்ந்து வ‌ரும் குட்டிக்க‌தைக‌ளுக்கு ஆவ‌லுட‌ன் நாங்க‌ள்!

  நிக‌ழ்ச்சி அமைப்பாள‌ர்க‌ள் இது போன்ற‌ முக்கிய‌ நிக‌ழ்வுக‌ளுக்கு அதிக‌ முக்கிய‌த்துவ‌ம‌ளித்து பொழுது போக்கு நிக‌ழ்ச்சிக‌ளை த‌விர்த்தால் ந‌ன்றாயிருக்கும். ஒரே க‌ல்லில் எத்த‌னை மாங்காய்க்கு குறி வைப்ப‌து?

  ReplyDelete
 51. @ ராஜி: நிறைய பேருக்குப் பிடித்த எழுத்தாளர்... நீங்களும் அவர் எழுத்தினை ரசிப்பதில் மகிழ்ச்சி...

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ..

  ReplyDelete
 52. @ அப்பாதுரை: சினிமா தானே எல்லோருக்கும் பிடித்தது... அதையே வைத்து மற்றதற்கும் அழைக்க வேண்டியிருக்கிறது... :(

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 53. @ நிலாமகள்: //ஒரே க‌ல்லில் எத்த‌னை மாங்காய்க்கு குறி வைப்ப‌து?// இப்போதெல்லாம் இப்படித்தான்.... என்ன செய்வது....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 54. உங்களையும் தில்லி வாழ் பிற சக பதிவர்களையும் எஸ் ரா உரைக்குப்பிறகு சந்திக்க கிடைத்ததில் மகிழ்ச்சி. தொடர்பில் இருப்போம் வெங்கட்.
  அன்புடன்
  கணேஷ்

  ReplyDelete
 55. @ HEMGAN [கணேஷ்]: தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

  நிச்சயம் தொடர்பில் இருப்போம்....

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....