எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, August 26, 2012

ஜெய்பூர் - புகைப்படச் சுற்றுலா


ஆமேர் கோட்டையின் ஒரு பகுதிஏரிக்குள் மஹால் - ஜல்மஹால்....


ராஜஸ்தானிய நடனம்...
[நம்மால சாதாரணமா நடக்கவே முடியல, இவங்க நாலு டம்ளர் வைச்சு அதுமேலே நிக்கறாங்க!]முதலைய யாராவது காப்பாத்துங்க....  :)
ஹவா மஹால்....

உள்ள போனா “வெறும் காத்து தாங்க வருது!”அரண்மணையின் ஒரு பகுதி...
வெள்ளியால் செய்த பெரிய பாத்திரம்.  இதுல தான் ராஜா இங்கிலாந்து போகும்போது தண்ணீர் எடுத்துட்டுப் போனாராம்.  ”எங்க ஊர் தண்ணியதான் குடிப்பேன். அதுல தான் குளிப்பேன்”னு ஒரு அடம்... இருக்கறவங்க என்ன வேணாலும் செய்யலாம்...  :)

அரண்மணைச் சுவற்றில் துப்பாக்கி அலங்காரம்!


என்ன ஜெய்பூர் சுத்திப் பார்த்தீங்களா?  மீண்டும் அடுத்த வாரம் வேறு சில புகைப்படங்களோடு சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

டிஸ்கி: டாஷ்போர்டில் அப்டேட் ஆகாத என்னுடைய முந்தைய பதிவு - ஃப்ரூட் சாலட் - 9 - சிறையிலும் படிக்கலாம், ராஜா காது கழுதை காது. படிக்காதவர்கள் படித்து விடுங்களேன் ப்ளீஸ்... :)


60 comments:

 1. படங்கள் பிரமாதம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஜனா ஜி!

   Delete
 2. Replies
  1. தங்களது வருகைக்கும் ஆச்சரியத்திற்கும்! மிக்க நன்றி சீனி.

   Delete
 3. நண்பருக்கு வணக்கம்! தண்ணீர் விளக்கம் அருமை!மனம் கவர்ந்த பதிவு!நன்றி!
  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி ஜி.

   Delete
 4. துப்பாக்கி வளையம் அட்டகாசம்.....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி கார்த்திக்.

   Delete
 5. படங்கள் அனைத்தும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களிடமிருந்து பாராட்டு... மிக்க மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

   Delete
 6. படங்கள் சொன்ன கதைகள் அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 7. ஜெய்பூர் சுத்திப் பார்த்து அளித்த படங்கள் அருமை.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 8. ஜெய்ப்பூரைச் சுற்றிக் காட்டியதற்கு நன்றி. அழகான புகைப்படங்கள்.

  ஸ்ரீ....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீ.

   Delete
 9. துப்பாக்கி அலங்காரம் அட்டகாசமா இருக்கு.

  'வெள்ளிக்குடம்'... கூந்தல் உள்ள மகராசி அள்ளி முடியறா :-))

  ReplyDelete
  Replies
  1. //'வெள்ளிக்குடம்'... கூந்தல் உள்ள மகராசி அள்ளி முடியறா :-))//

   அதானே.... ஆனாலும் கொஞ்சம் ஓவரா முடியறதுதான் கஷ்டம்....

   தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 10. முதலைய காப்பாத்தனுமா சரிதான்.. நிஜம்மாவே அது ஆபத்துல இருக்கு..:)

  ReplyDelete
  Replies
  1. அது தான் ஆபத்துல இருந்தது - நிஜமாவே. நான் செய்யறத பார்த்து அங்கிருந்த மத்த சுற்றுலாப் பயணிகளும் இந்த போஸ்ல படம் எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க!

   தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.

   Delete
 11. அட வெங்கட்...

  படங்கள் எல்லாமே ரொம்ப அருமைன்னா அதோடு நீங்க சேர்த்து கொடுத்த கமெண்ட்கள் ரொம்ப ரொம்ப அருமை... க்ரியேட்டிவிட்டி சுப்பர்ப்... படங்கள் மட்டும் ரசிக்க வந்தோருக்கு போனஸ் மிட்டாய் போல இனித்தது தங்களின் டைமிங் கமெண்டுகள்... ஹைலைட் முதலைய யாராச்சும் காப்பாத்துக்கங்கப்பா என்பதை படிக்கும்போதே சிரிப்பு வந்துவிட்டது வெங்கட்....

  ஜெய்ப்பூரை சுத்தி பார்த்த பிரமிப்பு எங்களுக்கும்.... நிறைவாய் இருந்தது வெங்கட்....

  டிஸ்கியும் படித்து ரசித்தேன்.. இதோ இவ்ளவு சொன்னப்பின் படிக்க போகாம இருப்பேனோ?

  அன்பு நன்றிகள் வெங்கட் பகிர்வுக்கு.... தொடர அன்பு வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. //முதலைய யாராச்சும் காப்பாத்துக்கங்கப்பா என்பதை படிக்கும்போதே சிரிப்பு வந்துவிட்டது வெங்கட்....//

   ரசித்ததற்கு நன்றி சகோ.

   தங்களது வருகைக்கும் இரண்டு பதிவுகளையும் படித்தமைக்கும் மிக்க நன்றி மஞ்சுபாஷிணி.

   Delete
 12. எல்லாப்படங்களும் வெகு அருமை, வெங்கட்ஜி. vgk

  ReplyDelete
  Replies
  1. தங்களது தொடர் வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி!

   Delete
 13. கொசுவத்தி ஏத்தி வச்ச படங்கள்!

  அருமை!!!!!

  ReplyDelete
  Replies
  1. மூன்று வருடங்களுக்கு முன் சென்றது. எனக்கும் கொசுவத்திதான்... :)

   தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 14. Replies
  1. தங்களது வருகைக்கும் தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி வரலாற்று சுவடுகள்.

   Delete
 15. யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற நல்ல உள்ளத்தோடு, ஜெய்பூர் சுற்றுலாவை படம் பிடித்ததோடு நில்லாமல் சிறு குழந்தையும் புரிந்து கொள்ளும்படி கொடுக்கப்பட்ட தன்னிகரற்ற விளக்கங்கள் மிக அருமை, ப்ளாக் சக்கரவர்த்தி என்று ஆன்றோர் போற்றும் வெங்கட் அவர்களே ,நீவீர் வாழ்க. ஜெய்பூர் பார்க்க முடியவில்லையே என்ற எனது கனவு தங்களால் நிறைவேறியது. நன்றி அய்யா! மேலும் இது போன்ற புகைப்பட சுற்றுலாக்களை தங்களிடம் எதிர் பார்கிறேன்.

  வேளச்சேரி நடராஜன்.

  ReplyDelete
  Replies
  1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனது தளத்தில் தங்களது வருகை... மிக்க மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி வி.கே.என். ஜி!

   Delete
 16. படங்கள் அருமை...

  படத்திற்கான விளக்கமும் அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 17. ஆமோ கோட்டையும், ஹவர் மகாலும் அருமை.
  ஜல் மஹால் த்ரில்!
  முதலையைக் காப்பாற்றுங்க... :)))
  வெள்ளிப் பாத்திரம்... இதில் தண்ணீர் எடுத்துப் போய் எவ்வளவு நாள் குளி/டித்திருக்க முடியும்?!! :))

  ReplyDelete
  Replies
  1. வெள்ளிப் பாத்திரம் - இது போல இரண்டு பெரிய ஜாடிகளில் தண்ணீர் சென்றது ஸ்ரீராம். ராஜாவுக்கு மட்டும்தான். அதனால் போதும்...

   தங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 18. sharp pictures!
  ஜெய்ப்பூர் போனதேயில்லை. bucket listல் சேர்த்திருக்கிறேன். அடுத்த வருசம் தில்லி வரப்ப ஒரு ரவுண்டு அடிச்சுடணும்.

  வெள்ளிக்குடம் சைஸ் என்ன தெரியுமா? உச்ச நாளில் அமிதாப்பச்சன் கூட இது போல் அடம் பிடிப்பார்னு படிச்சிருக்கேன். நீங்க சொல்றாப்ல... இருக்கு, அடம் பிடிக்கிறான்னு விட வேண்டியது தான்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க போயிட்டு வரலாம்.. :)

   வெள்ளிக்குடம் கிட்டத்தட்ட 5 1/2 அடி உயரம். 350 கிலோ எடை என்று படித்ததாக நினைவு. இது மாதிரி இரண்டு இருக்கு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை ஜி!

   Delete
 19. Photos are wonderful. Congrats. Keep it up.
  With love
  vijay

  ReplyDelete
  Replies
  1. Thanks for the encouraging words and compliments. Thank you Vijayaraghavan Ji!

   Delete
 20. @ அப்பாதுரை.

  இந்த கூஜாக்கள்தான் இப்போ உலகிலேயே உள்ள வெள்ளிச்சாமான்களில் பெருசுன்ற இடத்தை கின்னஸ் புக்கிலே பிடிச்சுவச்சுருக்கு. இந்த கூஜா ஒவ்வொன்னும் 345 கிலோ எடை. சுற்றளவு 14 அடி 10 அங்குலம். இதன் உசரம் 5 அடி 3 அங்குலம். கொள்ளளவு 900 கேலன் ( 4091 லிட்டர்)

  இன்னும் கொஞ்ச விவரம் இங்கே

  http://thulasidhalam.blogspot.co.nz/2011/05/7.html

  வெங்கட்..... மாப்பு.

  உங்க பதிவில் ஓசி விளம்பரம்...ஹிஹி.....

  ReplyDelete
  Replies
  1. இரண்டாம் வருகைக்கும் நான் எழுதாமல் விட்ட தகவல்களை இங்கே பகிர்ந்ததற்கும் நன்றி.

   மாப்பு... எதற்கு டீச்சர்... இது உங்க தளம்.... :)

   Delete
  2. ரொம்ப நன்றிங்க.

   ஒரு வசதி - சுலபமா திருடமுடியாது.

   Delete
  3. முன்பெல்லாம் அங்கே நின்று புகைப்படங்கள் எடுக்க அனுமதித்து வந்தார்கள். இப்போதெல்லாம் அனுமதிப்பதில்லை. தூரத்தில் இருந்து பார்க்க மட்டுமே முடிகிறது என சமீபத்தில் சென்ற நண்பர் சொன்னார். எதையும் செய்ய முடியும் [திருடவும்..] இந்தியாவில் என நினைத்து விட்டார்களோ!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 21. உங்க பெருந்தன்மைக்கு நன்றி, வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. //உங்க பெருந்தன்மைக்கு நன்றி, வெங்கட்.//

   :)) நன்றி.

   Delete
 22. ஓசியில ஜெய்பூரை சுத்திக் காட்டியமைக்கு மிக்க
  நன்றி சார் .அடுத்த பயணத்தில் சிந்திப்போம் :)

  ReplyDelete
  Replies
  1. அடுத்த பயணத்திற்கும் டிக்கெட் காசெல்லாம் கொடுக்க வேண்டாம்... அதனால தொடர்ந்து பயணம் செய்ய வாங்க!

   தங்களது முதல் வருகை[?]க்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி அன்பு உள்ளம்.

   Delete
 23. இருக்க‌ப்ப‌ட்ட‌வ‌ங்க‌ எதுவேணும்னாலும் செய்ய‌லாம்:))

  ப‌ட‌ங்க‌ளின் துல்லிய‌மும் அழ‌கும் பிர‌மிப்பு த‌ரும்ப‌டி. உங்க‌ த‌ய‌வில் நாங்க‌ளும் க‌ண்டுகொள்கிறோம் ச‌கோ...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் படங்களை ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 24. இந்த கூஜாக்கள்தான் இப்போ உலகிலேயே உள்ள வெள்ளிச்சாமான்களில் பெருசுன்ற இடத்தை கின்னஸ் புக்கிலே பிடிச்சுவச்சுருக்கு. இந்த கூஜா ஒவ்வொன்னும் 345 கிலோ எடை. சுற்றளவு 14 அடி 10 அங்குலம். இதன் உசரம் 5 அடி 3 அங்குலம். கொள்ளளவு 900 கேலன் ( 4091 லிட்டர்)

  அம்மாடி! அர‌சு நெய்வேலியிலிருந்து சென்னைக்கு த‌ண்ணி கொண்டு போகும் செல‌வைத் தாண்டிடும் போலிருக்கே... கூஜாவின் இன்றைய‌ ம‌திப்பு!

  ReplyDelete
  Replies
  1. இது போல விலைமதிப்பில்லாத விஷயங்கள் நம் நாட்டில் நிறைய உண்டு சகோ. இங்கே வெள்ளி கூஜா என்றால், குவாலியர் அரண்மனையில் உணவு மேஜையிலே வெள்ளி தண்டவாடத்தில் ஓடும் ஏழு பெட்டிகள் கொண்ட வெள்ளி ரயில்....

   இன்னும் எத்தனை எத்தனையோ....

   தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 25. ஜெய்பூர் படங்கள் அருமை சார்...
  முதலைய காப்பாத்துங்க பஞ்ச் சூப்பர் ...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 26. அருமையா இருக்கு சார்...

  பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி... (TM 8)

  ReplyDelete
  Replies
  1. தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 27. ஜெய்ப்பூர் போக வேண்டும் என்கிற ஆசை உம்மால் தீர்ந்தது! மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் போய்ட்டு வாங்க!.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆர்.ஆர்.ஆர்.

   Delete
 28. ஜெயப்பூர் சுற்றிப் பார்த்துவிட்டோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி....

   Delete
 29. படங்கள் எல்லாம் அருமை, மறுமுறை ஜெயப்பூரை சுற்றிப்பார்த்து விட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா. பதிவின் மூலம் இரண்டாம் முறை ஜெய்பூரை சுற்றிவிட்டது குறித்து மகிழ்ச்சி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....