எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, February 20, 2015

ஃப்ரூட் சாலட் – 126 – மின் ரதம் – 5 பீர் 2 ஃபுல் – மந்திரக் குவளை


இந்த வார செய்தி:

சிவகங்கை பொறியியல் மாணவரின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 'ரதம்'- 11 யூனிட் மின் சக்தியில் 400 கி.மீ. செல்லலாம்

11 யூனிட் மின்சக்தியில் 400 கி.மீ. தூரம் ஓடும் வகையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரதம்என்ற அதிநவீன வசதிகள் உடைய இருசக்கர வாகனத்தை பொறியியல் மாணவர் ஒருவர் உருவாக்கி உள்ளார்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மறவர் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் அமுதா. இவர்களின் இளைய மகன் மணிகண்டன் (21). இவர், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு பொறியியல் கல்வி (மெக்கானிக்கல்) படிக்கிறார்.

இவர், பிளஸ் 2 படித்தபோதே வாகன விபத்தை கட்டுப்படுத்தும் கருவி, பைக் திருட்டை தடுக்கும் கருவியை கண்டுபிடித்து ஆட்சியர், எஸ்.பியிடம் பாராட்டு பெற்றுள்ளார்.

பொறியியல் படிப்பில் சேர்ந்த பின்னர், பெண்கள் தற்காத்துக் கொள்ளும் புதிய கருவியைக் கண்டுபிடித்தார்.

இந்நிலையில், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரதம்என்ற அதிநவீன இருசக்கர வாகனத்தை உருவாக்கியுள்ளார். இதன் அறிமுக நிகழ்ச்சி நேற்று மானாமதுரையில் நடந்தது.

இதில் மாணவர் வி.ஆர். மணிகண்டன் பேசியது: ''வாகன எரிபொருளுக்கு அதிகம் செலவாகிறது. இதனால் மின்சாரத்தில் இயங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரதம்தயாரித்துள்ளேன். இதில் மூன்றரை மணி நேரம் சார்ஜ் செய்தால், 11 யூனிட் மின்சாரம் பேட்டரியில் சேகரமாகும். இதன்மூலம், மணிக்கு 75 கிமீ வேகத்தில் சுமார் 400 கி.மீ. வரை பயணிக்கலாம். இதற்கான செலவு ரூ. 36 மட்டும்தான். பராமரிப்பு, தேய்மானம் இல்லை. இரைச்சல் இருக்காது. 300 கிலோ சுமையைத் தாங்கும்.

இந்த பைக்கில் விபத்தை அறிந்து தானாகவே தற்காத்துக் கொள்ளும் வசதி உள்ளது. மேலும் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை எடுக்க முடியாது. பெற்றோரின் பேச்சை மீறி அதிக வேகத்தில் வாகனம் ஓட்டும் பிள்ளைகளுக்கு கடிவாளம் போடும் வசதியும் உள்ளது. ஜிபிஆர்எஸ் தொழில்நுட்பமும் உள்ளது. வாகனத்தில் ஏற்படும் பழுதுகளை மடிக்கணினி மூலம் இணைத்து உரிமையாளர்களே தெரிந்துகொள்ளும் வசதியும் உள்ளது. வாகனம் திருடுபோகாமல் தடுக்கும் வசதியும் உள்ளது.

ரதம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1 கி.மீ.க்கு 9 பைசாதான் செலவாகும். இந்த வாகனத்தை ரூ. 80 ஆயிரம் செலவில் தயாரிக்கலாம். அரசு மானியம் கிடைத்தால் விலையில் 30 சதவீதம் குறையும். சூரிய சக்தி மூலம் பேட்டரியை சார்ஜ் ஏற்றும் வசதியும் உள்ளது. ரதம்ஸ்கூட்டரின் காப்புரிமை, விற்பனைக்காக புனேயில் உள்ள ஏர்ஏஐ-அமைப்பின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்'' என்றார்.

நன்றி: தி இந்து இணைய இதழ்.

நல்ல விஷயமாகத் தான் தெரிகிறது. எரிசக்தி பற்றாக்குறை/விலை அதிகமாக இருக்கும் இந்நாளில் இது நல்ல வசதி! ஆனாலும் தமிழகத்தில் இருக்கும் மின்சாரப் பற்றாக்குறையை நினைத்தால் தான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது!

இந்த வார முகப்புத்தக இற்றை:

காப்பாத்தும்போது கடவுளாய்த் தெரியும் டாக்டர்கள், பில் போடும்போது மட்டும் எமனாய்த் தெரிகிறார்கள் – Prakash Ramaswamy.

இந்த வார குறுஞ்செய்தி:

நீங்கள் இருக்கும் இடத்தை பொறுத்தே உங்களை பற்றி முடிவு செய்கிறார்கள்.  

எப்படின்னு கேட்டா ஒரு குட்டி கதை சொல்ல வேண்டியிருக்கு!

கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தாராம். நம் குடிமக்களை பார்த்து பொறாமை கொண்டு, அப்படி என்ன தான் இருக்கு இந்த டாஸ்மாக் கடைக்குள் என்று பார்த்து வர உள்ளே சென்றாராம். சரி குடித்து தான் பார்த்து விடுவோம் என்று எண்ணி ஆர்டரும் செய்து விட்டார்.

5 பீர் முழுவதும் முடிந்தது. ஒரு வித்தியாசமும் தெரியல, தொடர்ந்தார் 2 FULL. அப்பொழுதும் ஒன்னும் ஆகல. மீண்டும் முதலிருந்து 5 பீர் ஆரம்பித்தார், கடைகாரருக்கு ஆச்சரியம் தாளாமல், கேட்டாராம்.....

"யாருய்யா நீ?  இவ்வளவு குடிச்சும் உனக்கு போதை ஏறல? மறுபடியும் கேட்கறே?

அதற்கு நம்ம கடவுள் சொன்ன பதில்: நான் தான்பா உங்களை ஆளும் கடவுள். எனக்கு இந்த போதை ஒன்றும் செய்யாது" என்றார்.

கடைக்காரர்: "தோ டா...! தொரைக்கு இப்ப தான் ஏற ஆரம்பிச்சி இருக்கு! நடக்கட்டும்..! நடக்கட்டும்..!

இந்த வார நகைச்சுவை:

கணவர் குளித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவர் ஷாம்புவை தனது தோள்களிலும் உபயோகப்படுத்த, மனைவி யோவ் உனக்கென்ன பைத்தியமா புடிச்சு இருக்கு! ஷாம்பு தலைக்கு மட்டும் தான் போடணும்னு சொல்ல, கணவன் சொன்ன பதில் – உனக்கு தான் பைத்தியம்! இந்த ஷாம்பு பாட்டில்ல என்ன போட்டு இருக்குன்னு பாரு.....

Head and Shoulders Shampoo!

இந்த வார புகைப்படம்:

காலணிகள் – காலில் போட்டுக்கொள்ள மட்டும் தான் என்று யார் சொன்னது? அதை வேறு விதமாகவும் பயன்படுத்தலாம் என்று சொல்லாமல் சொன்னது ஒரு கடை! அங்கே இருந்தது இங்கே புகைப்படமாக!இந்த வார கார்ட்டூன்:

இரண்டு வருடம் முன்னர் வந்த கார்ட்டூன் தான் – இப்போதும் இது பொருந்தும்! இந்தியாவில் உள்ள அலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை சுத்தமான கழிவறைகளின் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகம்! இந்நிலை என்று மாறுமோ? கார்ட்டூன் பாருங்களேன்!படித்ததில் பிடித்தது:

மந்திரக் குவளை

முன்னொரு காலத்தில் ஓர் அரசன் இருந்தான். அவன் மிகவும் முன் கோபக்காரன். தன் கெட்ட குணம் தெரிந்தும் அவனால் அதை மாற்றிக் கொள்ள முடியவில்லை.

ஒரு நாள் தேவதை ஒன்று அவன் முன் தோன்றியது.

பொன்னால் செய்த ஒரு குவளையை அவனிடம் கொடுத்தது. "உனக்குச் சினம் வரும்போதெல்லாம் இதில் மூன்று முறை தண்ணீர் நிரப்பிக்குடி; பிறகு சினமே வராது" என்று கூறி மறைந்தது தேவதை.

அப்போதிருந்தே அரசன் அப்படிச் செய்யத் தொடங்கினான். சில நாட்களில் அவன் சினம் அவனை விட்டு விலகியது.

பல நாட்கள் சென்றன. மீண்டும் ஒரு நாள் தேவதை அவன்முன் தோன்றியது. மந்திரக் குவளை கொடுத்ததற்காக பலமுறை அதற்கு நன்றி கூறித் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான் மன்னன்.

"மன்னனே உன்னை ஏமாற்ற நான் விரும்பவில்லை. அது மந்திரக்குவளை அல்ல. சாதாரணமானதுதான். சினம் வரும்போது சிந்திக்க நேரம் இருக்காது. சிந்தனை வந்தால் சினம் தானே குறையும். தண்ணீரை மூன்று முறை ஊற்றிக் குடிக்கும் போது நேரம் கிடைக்கிறது. அப்போது சிந்திக்க முடிவதால் புலன்கள் அமைதி பெறுகின்றன. உனக்கு நியாயமும் புலப்படுகிறது என்று கூறி மறைந்தது தேவதை......

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..


நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


32 comments:

 1. "மன்னனே உன்னை ஏமாற்ற நான் விரும்பவில்லை. அது மந்திரக்குவளை அல்ல. சாதாரணமானதுதான். சினம் வரும்போது சிந்திக்க நேரம் இருக்காது. சிந்தனை வந்தால் சினம் தானே குறையும். தண்ணீரை மூன்று முறை ஊற்றிக் குடிக்கும் போது நேரம் கிடைக்கிறது. அப்போது சிந்திக்க முடிவதால் புலன்கள் அமைதி பெறுகின்றன. உனக்கு நியாயமும் புலப்படுகிறது” என்று கூறி மறைந்தது தேவதை......

  appothu சினம் vara VILLAYAAA?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனானி.....

   Delete
 2. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 3. மனிகண்டனுக்குப் பாராட்டுகள்.

  சிரிக்கவைக்கும் இற்றை.

  சிரிக்கவைக்கிறது குருஞ்செய்தியும்!

  நகைச்சுவையும் சிரிப்புதான்!

  தேவதை உண்மையைச் சொன்னதும் 'என்னை ஏமாற்றி விட்டாயே' என்று கோபப் படாமல் இருந்தாரே மன்னர்!


  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 4. 36 ரூபாய் செலவில் 400 கிலோ மீட்டர் பயணிக்கலாமா? ஆஹா!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 5. அனைத்துமே சிறப்பு.

  எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 'ரதம்' சிறப்பான கண்டுபிடிப்பு.

  கடைசி கதை அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

   Delete
 6. சிறப்பான தகவல்களை தாங்கி வந்த ப்ருட் சாலட் இனித்தது! அந்த ஷாம்பு ஜோக் கலக்கல்! குட்டிக்கதை! எலக்ட்ரிக் ரதம் அனைத்தும் சிறப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 7. ப்ரூட் சாலாட் நல்ல சுவை அண்ணே..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 8. ஹெட் அண்ட் சோல்டர் ரசிக்க வைத்தது...
  மற்றவையும் அருமை அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 9. நல்ல கண்டுபிடிப்பு வந்தால் இயற்கையும் பாதுகாக்கப்படும் .நல்ல நகைச்சுவை , கருத்துள்ள கார்டூன் , தண்ணீர் குடிக்கும் நேரம் தான் அமைதிக்கான நேரம்.😆

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனிவாசன்.

   Delete
 10. அற்புதமான செய்தி இந்த ரதம் ஸ்கூட்டர். அந்தப் பையனுக்கு அங்கீகாரம் கிடைக்கவேண்டும். மன்னனுக்குச் சினம் உறைந்தது போல எல்லோருக்கும் ஞானம் வந்தால் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   Delete
 11. அனைத்தும் அருமை நண்பரே
  தமிழ் மணம் 4

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   Delete
 12. வி.ஆர். மணிகண்டன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  கதை ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 13. அனைத்துமே அருமை. மாணவருககுப் பாராட்டுகள். செருப்பைத் தொங்கவிட இப்படியும் ஒரு வழியா?

  ReplyDelete
  Replies
  1. அந்தப் படத்தில் இருப்பவை கீ செயின்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 14. வணக்கம்
  ஐயா.

  வி.ஆர் மணிகண்டன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தங்களின் தேடலுக்கு பாராட்டுக்கள் பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 15. வியாபார அரசியல் இது போன்ற கண்டுபிடிப்புகளை தூக்கி நிறுத்துவதில்லை என்பதுதான் வருத்தமே ப்ரூட் சேலட்டுன் மற்ற பகுதிகளும் இனிப்பு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 16. மணிகண்டனுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்!

  டபுள் போனஸ்/த்ரிபுள்?? இற்றை, குறுஞ்செய்தி ஹஹாஹ்ஹ ரகம் அதோடு நகைச்சுவை ஹஹஹ் அருமை!

  படித்ததில் பிடித்தது எங்களுக்கும் பிடித்தது...

  ஷூ செயின் ஸாரி கீ செயின் சூப்பர்....பார்த்திருக்கின்றோம்...னீங்கள் எடுத்திருக்கும் விதம் அழகாக உள்ளது....

  கார்ட்டூன் ம்ம்ம் என்ன சொல்ல நம் நாட்டின் நிலைமை.....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....