வியாழன், 5 பிப்ரவரி, 2015

இடைத்தேர்தல் மற்றும் தேர்தல்படம்:  நன்றி - இணையம்.

கடந்த சில நாட்களாகவே அரசியல் பக்கம் மீண்டும் சூடு பிடித்திருக்கிறது.  சமீபத்தில் தமிழகம் குறிப்பாக திருவரங்கம் வந்த போது இடைத்தேர்தலுக்கான ஆயத்தங்கள் தொடங்கி விட்டன.  ஒவ்வொரு கட்சியும் வெற்றிக்கனியை பறிக்க பலத்த முஸ்தீபுகளில் இறங்கி விட்டார்கள். திருவரங்கம் முழுவதுமே கரை வேட்டிகளாலும், அவர்கள் வந்திறங்கும் SUV வண்டிகளாலும் நிறைந்திருக்கிறது. 

ஒவ்வொரு பகுதியிலும் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது தற்காலிக அலுவலகங்களை, காலியாக இருக்கும் இடங்களிலும், வீடுகளிலும் அமைத்து இருக்கிறார்கள்.  எங்கே பார்த்தாலும் கைகளில் வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு வீடு வீடாக அலைவதைப் பார்க்கும் போது இந்த கும்பல் எல்லாம் இன்னும் சில நாட்கள் தான் இருக்கும் என்பது கண்கூடாக தெரிகிறது.

சென்ற தேர்தலிலேயே கட்சிகள் பணப் பட்டுவாடா செய்தது என்ற குற்றச்சாட்டுகளை கேட்க முடிந்தது.  ஆங்காங்கே பல லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இம்முறையும் பல வகைகளில் ஓட்டுகளை வாங்கும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. வந்த வரை லாபம் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் பல வாக்காளர்கள் இருப்பதையும் பார்க்க முடிந்தது. 

வாக்கு ஒன்றிற்கு ரூபாய் 200 முதல் 500 வரை வழங்குவார்கள் என ஒரு கட்சியின் அடிப்பொடி சொல்லிக் கொண்டிருக்க, அங்கிருந்த மற்றொருவர் “இந்த வாட்டி நாங்க ஏமாற மாட்டோம்....  வீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் யார் தர்றாங்களோ அவங்களுக்கு தான் நாங்க ஓட்டு போடப் போறோம்என்று சொன்னதைக் கேட்டபோது, அதிர்ச்சி அதிகரித்தது! அந்நபர் மீது நான் வைத்திருந்த மரியாதை குறைந்தது! 

நேற்று கூட ஒரு பன்மாடிக் குடியிருப்பில் அனைத்து வீடுகளுக்கும் இலவச வேட்டி-புடவை கொடுத்து இருக்கிறதாகக் கேள்விப்பட்டேன். இப்படி பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடுவதை விட சும்மா இருக்கலாம்! பணம், பொருட்கள், சாராயம் என்று எதையாவது கொடுத்து வாக்குகளை அள்ளி விட அனைத்து கட்சிகளும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. வெற்றி பெற்று விட்டால், செலவு செய்த பணத்தினை பல மடங்காக திரும்பப் பெறலாம் என்ற பேராசையில் அனைவரும் மூழ்கியிருக்கின்றனர். 

தமிழகத்தின் மொத்த அமைச்சரவையே திருவரங்கத்தில் இருப்பது போலத் தோன்றியது. அப்பப்பா எத்தனை எத்தனை வாகனங்கள், கரை வேட்டி மனிதர்கள்.  சாதாரணமாகவே சுற்றுலாப் பயணிகளால் நிறைந்திருக்கும் திருவரங்கம் இந்த அசாதரணமான தாக்குதலால் திக்கு முக்காடிக் கொண்டிருக்கிறது. எல்லா இடங்களிலும் இருக்கும் வாகன நெரிசலைப் பார்த்தால் ஏதேது.... நாம் இருப்பது திருவரங்கத்திலா இல்லை தலைநகரிலா? என்றும் தோன்றியது.

இரு கட்சியினரும் பக்கத்துப் பக்கத்து வீடுகளில் தற்காலிக அலுவலகங்கள் அமைத்துக் கொண்டிருக்க, அவ்வப்போது சிற்சில மோதல்களும் முறைப்புகளும் பார்க்கும்போது “எப்படா இந்த தேர்தல் முடியும்?என்ற எண்ணம் திருவரங்கவாசிகளுக்கு வந்திருக்கும்!

திருவரங்கத்தின் இடைத் தேர்தல் இப்படி இருக்க, தலைநகர் தில்லியிலும் தேர்தல் ஜூரம் அதிகரித்து விட்டது. வாக்கு சேகரிக்க இன்று தான் கடைசி நாள்.  ஒவ்வொருவரும் மற்றவரை சரமாரியாக தாக்கிக் கொள்வதைப் பார்க்கும் போது என்னம்மா...  ஏம்மா இப்படி பண்றீங்க!என்று தொலைக்காட்சியில் சொல்வதைப் போலத் தான் சொல்லத் தோன்றுகிறது. 

எப்படியும் ஜெயிக்க வேண்டும் என்று ஒவ்வொரு கட்சியும் போட்டி போட்டுக் கொண்டு களத்தில் இறங்கி இருக்கிறார்கள்.  தேர்தல் சமயத்தில் மட்டுமே நடக்கும் பல வேலைகள் இப்போது மீண்டும் நடந்து கொண்டிருக்கிறது.  இத்தனை நாளாக இல்லாத கூத்தாக, தினமும் புது தில்லி மாநகராட்சியின் வண்டி ஓலமிட்டபடி எல்லாத் தெருக்களிலும் வந்து கொண்டிருக்கிறது – “குப்பைகளை தெருவில் போடாதீர்கள். உங்கள் வீட்டு வாசலுக்கு எங்கள் வண்டி வருகிறது. அதில் மட்டுமே குப்பை போடவும்என்று வண்டியோடு அலைகிறார்கள். இத்தனை வருடங்களாக இம்மாதிரி ஒரு சேவையை நான் பார்த்ததில்லை.

Jhuggi-Jhopri என்று ஹிந்தியில் அழைக்கப்படும் தற்காலிக குடிசைகள் இருக்கும் பகுதியில் ஓட்டுக்காக உற்சாக பானம் சாதாரண தண்ணீர் போலவே பாட்டில் பாட்டிலாக விநியோகம் நடந்து கொண்டிருக்கிறது. நேற்று ஒரு கட்சியின் நிர்வாகியிடம் 5000 பாட்டில்கள் பறிமுதல் செய்திருக்கிறது காவல் துறை.

தில்லியைப் பொறுத்த மட்டில், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் சந்திக்க இருக்கும் சவால்கள் எண்ணிக்கையில் அதிகம். கட்டுக்கடங்காத மக்கள் தொகை – தினம் தினம் வெளி மாநிலங்களிலிருந்து வேலை தேடி வந்து குவியும் மக்கள், தண்ணீர் பிரச்சனை, விலைவாசி ஏற்றம், மின்சாரப் பற்றாக்குறை, பெண்களுக்கான பாதுகாப்பு என பிரச்சனைகளும் சவால்களும் நிறைந்த இடம். கற்பழிப்பு சம்பவங்கள் நடக்காத நாட்களே குறைவு எனச் சொல்லிவிடலாம்.

முக்கிய கட்சிகளில் ஒரு கட்சி முன்னாள் பெண் காவல்துறை அதிகாரியை முக்கியமந்திரியாக நிறுத்த மற்றொரு கட்சி பெண்களுக்கு பாதுகாப்பு தருவோம் என்றும், லஞ்சம் ஒழிப்போம் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறது.  யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்பது வரும் 10-ஆம் தேதி தெரிந்து விடும்..... பார்க்கலாம் என்ன நடக்கப் போகிறது என!


இடைத்தேர்தலோ, முழுத் தேர்தலோ, இப்படி அரசியல்வாதிகள் தரும் சொல்ப பணத்திற்கோ, இலவசங்களுக்கோ ஆசைப்பட்டு தம்மை விலைப் பொருளாக மாற்றிக் கொள்ளாமல் இருக்கப் போகிறார்களோ என்ற எண்ணம் மனதில் வருகிறது.
 
இடைத் தேர்தல் முடிவுக்கு 16-ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.  தலைநகர் வாசிகள் கொஞ்சம் மூச்சு விட்டுக் கொள்ளலாம்! 10ஆம் தேதியே முடிவு தெரிந்து விடும். திருவரங்க வாசிகள் இந்த தேர்தல் தொல்லைகளை இன்னும் சில நாட்கள் அனுபவித்துத் தீர வேண்டும்...... வேறு வழியில்லை.

நாளை வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


30 கருத்துகள்:

 1. நானே உங்களிடம் கேட்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். இரு தொகுதிகள் பற்றியும் சொல்லக்கூடிய பதிவர் நீங்கள்தான்.

  டெல்லியில் யாருக்கு வாய்ப்பு என்று தோன்றுகிறது உங்களுக்கு?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஆத்மி பார்ட்டி தான் வெற்றி பெறும் என்று தோன்றுகிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. நிஜமாகவே - மக்களுக்கு நல்லவைகளைச் செய்வார்கள் என்ற நம்பிக்கை வரவில்லை..
  நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளவேண்டும்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   நீக்கு
 3. டில்லி தேர்தல் பற்றி பதிவு நீங்கள் வெளியிட வேண்டும் என்று நான் கேட்கலாம் என்று நினைத்து இருந்தேன் ஆனால் அது உங்களை தொந்தரவு செய்வது போல இருக்கும் என நினைத்து விட்டுவிட்டேன். ஆனால் நாங்கள் கேட்காமலே நீங்களும் தேர்தல் பற்றி பதிவு போட்டு இருக்கிறீர்கள் ஆனால் அது பட்டும்படாமலும் ஏதோ எழுதியது போலதான் எனக்கு தோன்றுகிறது. நீங்கள் பலரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு இருப்பதால் மற்றவர்களிடம் கேட்டு அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றாவது எழுதி இருக்கலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல விஷயங்களை வெளிப்படையாக எழுத முடிவதில்லை மதுரைத் தமிழன்.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. //இப்படி பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடுவதை விட சும்மா இருக்கலாம்!//
  ஆம் சும்மாவே இருக்கலாம்தான். தேர்தல் வந்தாலே தொல்லைதான் என்றாகிவிட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

   நீக்கு
 5. உங்களுக்கு ஓட்டு திருவரங்கத்திலா டெல்லியிலா? பணத்தோடோ இல்லை வேறு எதையாவது காட்டியோ உங்களை யாராவது அணுகினார்களா.?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு ஓட்டு தில்லியில்.....

   திருவரங்கத்தில் யாரும் அணுகவில்லை. சிலருக்குக் கொடுத்ததைப் பார்த்தேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   நீக்கு
 6. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு கடுமையான தண்டனை தந்தாலோழிய இந்த ‘வியாதி’யை ஒழிக்கமுடியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே... இந்த தண்டனையை கொண்டு வருவது யாரு ?

   நீக்கு
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
  3. நல்ல கேள்வி கில்லர்ஜி!... பூனைக்கு யார் மணி கட்டுவது!

   நீக்கு
 7. சாக்கடையைக் கூட விட்டுவைக்கவில்லை. அதன்மேலேயே கொட்டகை அமைத்து கட்சி மீட்டிங்...:)) இரவு 10 மணி வரை கூட வேட்டுகளும் அதை மிஞ்சிவிடும் வேட்பாளர்களின் அலறலும்....:(( என திருவரங்கமே அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 8. டில்லிக்கு ராசான்னாலும் பார்ட்டி சொல்லை தட்டாதே.
  அவைங்க குடுக்குறாய்ங்க நாங்க வாங்குறோம். இதில் என்ன தப்பு அப்டீன்னு புதுசா ஒரு பார்ட்டி கெளம்பி இருக்காம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அன்பே சிவம்.

   நீக்கு
 9. என்றுதான் இந்த மக் ''கல் ''திருந்துவார்களோ....?
  தமிழ் மணம் - டூ வீலர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருந்தும் நாள் என்றோ?.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி...

   நீக்கு
 10. உங்கள் பதிவைப் படித்து முடித்ததும் எனக்கு வந்த சந்தேகம், “நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள்? ஸ்ரீரங்கத்திலா அல்லது டெல்லியிலா?” என்பதுதான். இடைத்தேர்தல் முடியும் வரை, நான் ஸ்ரீரங்கம் பக்கம் போகாமல் இருப்பது நல்லது என்று எண்ணுகிறேன். காரணம் எங்கெங்கு நோக்கினும் கரை வேட்டிகள்.
  த.ம.3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருவரங்கத்திலிருந்து சென்ற வாரம் தான் புது தில்லி திரும்பினேன்.....

   தேர்தல் முடியும் வரை திருவரங்கம் செல்லாமல் இருப்பது நல்லது என்று நீங்கள் எண்ணுவது சரி தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   நீக்கு
 11. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 12. Jhuggi-Jhopri என்று ஹிந்தியில் அழைக்கப்படும் தற்காலிக குடிசைகள் இருக்கும் பகுதியில் ஓட்டுக்காக உற்சாக பானம் சாதாரண தண்ணீர் போலவே பாட்டில் பாட்டிலாக விநியோகம் நடந்து கொண்டிருக்கிறது. நேற்று ஒரு கட்சியின் நிர்வாகியிடம் 5000 பாட்டில்கள் பறிமுதல் செய்திருக்கிறது காவல் துறை.//

  அடப் பாவிங்களா! நம்ம நாடு குடியரசா இல்லை "குடி" அரசா......

  இடைத்தேர்தலோ, முழுத் தேர்தலோ, இப்படி அரசியல்வாதிகள் தரும் சொல்ப பணத்திற்கோ, இலவசங்களுக்கோ ஆசைப்பட்டு தம்மை விலைப் பொருளாக மாற்றிக் கொள்ளாமல் இருக்கப் போகிறார்களோ என்ற எண்ணம் மனதில் வருகிறது.// உண்மையே! எப்பொது வாக்காளர்கள் தங்கலை விலைப் பொருளாக மாற்றிக் கொள்ளாத நிலை வருகின்றதோ அன்றுதான் நமது நாட்டில் நல்ல ஒரு அரசு அமைகின்றது என்று நம்பலாம்.  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதாஜி.

   நீக்கு
 13. //இப்படி பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடுவதை விட சும்மா இருக்கலாம்!//

  சும்மா இருக்க மாட்டோமே! பணம் வாங்க மாட்டோமே! ஆனால் கையை கறை படுத்திக்க பொய் விடுவோமே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அரசியல்வாதி மாதிரியே பேசறீங்க அண்ணாச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 14. மக்களுக்கு யாரை
  மனதார பிடிக்கிறதோ
  அவர்களே
  அமோகமாக
  வெற்றி பெறுவது
  வழக்கம்தானே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிருஷ்ணமூர்த்தி சித்தப்பா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....