வியாழன், 4 மார்ச், 2010

டீலா - நோ டீலா?சனி மற்றும் ஞாயிறு இரவு 08.30 மணிக்கு ஒளிபரப்பாகும் டீலா - நோ டீலா? நிகழ்ச்சி பற்றி சன் டீவி நிறுவனத்தின் வலைப்பக்கத்தில் இப்படி குறிப்பிட்டு இருக்கிறார்கள் - "Deala No Deala, the biggest game show in South Indian Television history and one of the most successful shows ever in television history globally.” இது உண்மையா அல்லது பொய்யா என்று அலசுவதற்காக எழுதப்பட்டது அல்ல இந்த பதிவு.

ரிஷி அவர்களால் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியினால் ஒரு நண்பரின் குடும்பத்தில் ஏற்பட்ட சலசலப்புகளைப் பார்த்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

ஒரு சனிக்கிழமை நண்பரின் வீட்டுக்குச் சென்றபோது தொலைக்காட்சி பெட்டியில் ”டீலா நோ டீலா” ஓடிக்கொண்டு இருந்தது. நிகழ்ச்சி ஆரம்பித்து பத்து நிமிடங்கள் ஆகியிருக்கலாம். நண்பரின் வீட்டில் நான்கு பேர் – நண்பர், அவரது இல்லத்தரசி, இரண்டு குழந்தைகள். ஒவ்வொரு பெட்டி திறந்ததும் ஒரே இரைச்சல் வீட்டில். நடப்பது எதுவும் எனக்குப் புரியவில்லை. நண்பரிடம் விசாரித்தபோது அவர் சொன்ன பதில் வித்தியாசமாக இருந்தது. மொத்தம் இருபத்தி ஆறு பெட்டிகள் நிகழ்ச்சியில் திறந்து அதில் உள்ள மதிப்பு காட்டப்படுகிறது. நண்பரின் வீட்டில் உள்ள நால்வருடைய பிறந்த தேதி உள்ள பெட்டிகளை அவர்களது பெட்டியாக எடுத்துக்கொள்கிறார்கள். அந்த எண் உடைய பெட்டியில் உள்ள பணத்தின் மதிப்பை அவர்களுடையதாக எண்ணிக்கொள்கிறார்கள். நிகழ்ச்சியின் முடிவில் அந்த நாலு பெட்டியில் உள்ள மதிப்புகளில் எவருடைய பெட்டியில் அதிக மதிப்பு உள்ளது அந்த பெட்டி எண் – அந்த தேதியில் பிறந்தவர் ஜெயித்துவிட்டதாக அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்.

இத்தோடு முடிந்துவிட்டால் பரவாயில்லை – எல்லா சூதாட்டங்களைப் போலவே இவர்களது ஆட்டமும் தகராறிலேயே முடிந்தது. தோற்றவர் ஜெயித்தவர்களிடம் தான் தோற்றதற்காக சண்டை போடுகிறார். இதில் இன்னுமொரு வருந்தத்தக்க விஷயம் இந்த சண்டை எல்லா வாரமும் நடைபெறும் நிகழ்ச்சியாம்.

சாதாரண தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக வீட்டில் இத்தனை சண்டையும் சச்சரவும் தேவையா என்றே எனக்குத்தோன்றியது. நல்ல வேளை இவர்கள் நால்வரில் எவருடைய பிறந்த தேதியும் 27-31 தேதிகளில் இல்லை. அப்படி இருந்திருந்தால் சன் தொலைக்காட்சியிடம் சண்டைக்குச் சென்றாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

5 கருத்துகள்:

 1. இப்படில்லாம் கூடவா நடக்குது? ம்ம் உக்காந்து யோசிப்பாங்களோ ??

  பதிலளிநீக்கு
 2. பரவாயில்லை சார். பல வீடுகளில் தொலைகாட்சி பெட்டியில் மூழ்கி கொண்டு ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வது கூட குறைந்துவரும் சூழலில், நிகழ்ச்சியைப் குடும்பத்தோடு பார்த்து கும்மி அடிக்கிறார்கள் என்றால் பாராட்ட வேண்டியதுதான். தமிழ் நாட்டுல - ரோடு ஆக்சிடேன்ட்டுக்கு ஆம்புலன்ஸ் சர்விஸ் (108) அறிமுகப்படுத்திய மாதிரி, வீட்டுல அடிதடிக்கும் எமெர்ஜென்சி நம்பர் அறிமுகபடுத்த வேண்டி வராம இருந்தால் சரிதான்.

  பதிலளிநீக்கு
 3. \\
  Easwaran said...
  பரவாயில்லை சார். பல வீடுகளில் தொலைகாட்சி பெட்டியில் மூழ்கி கொண்டு ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வது கூட குறைந்துவரும் சூழலில், நிகழ்ச்சியைப் குடும்பத்தோடு பார்த்து கும்மி அடிக்கிறார்கள் என்றால் பாராட்ட வேண்டியதுதான்//

  அதானே :)

  பதிலளிநீக்கு
 4. அதிசயம்தான்.. ஆனால் இது அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயம்.. அவர்களாய்ப் பார்த்து மனம் மாற வேண்டும்.

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....