எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, June 18, 2010

சிந்தனைச் சிதறல்கள்…..

நாகரீகம்?சென்ற வெள்ளிக் கிழமை தில்லி மெட்ரோவில் நான் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது பக்கத்தில் ஒரு கல்லூரி மாணவர் அமர்ந்திருந்தார். ஜீன்ஸ் பேண்ட், மேலே ஒரு குர்தா, பின்னால் ஒரு பேக்-பேக் [Back-pack], ரப்பர் பேண்ட் போடப்பட்ட நீண்ட கூந்தல், கையில் ஒரு கிடாருடன் உட்கார்ந்திருந்தாலும் ஆடியபடியே இருந்தார். வாய் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தது. கைகளில் நம்மை பயமுறுத்தும் டாட்டூக்கள். இந்த அலங்காரமெல்லாம் பரவாயில்லை என சொல்ல வைக்கும்படி இருந்த ஒன்று – புருவத்தில் அவர் அணிந்திருந்த ஒரு அணிகலன் – Eyebrow Pin. மென்மையான கண்ணுக்கு மேலே இப்படியெல்லாம் ஒரு அணிகலன் அணிவது தேவையா, இதுதான் நாகரீகமா? தெரியவில்லை. அதை அணிவதற்கு முன்னால் எப்படி புருவத்தில் ஓட்டை போட்டிருப்பார்கள்? வலிக்கவே வலிக்காதா?. காலகாலமா பெண்கள் காதிலும், மூக்கிலும் தோடு மூக்குத்தி அணிந்து கொண்டாலும் இது கொஞ்சம் ஓவரா தெரியல?

நேரம்….

போன வாரம் பொழுது போகாம ”சரி டீவியாவது பார்த்து வைப்போமே!”ன்னு டீவி ஸ்விட்ச்சை ஆன் பண்ணி சன் மியூசிக் வைச்சேன். பார்த்தா இளைய தளபதி “நான் நடந்தா அதிரடி”ன்னு சரவெடி வெடிச்சுட்டு இருந்தார். வெடின்னாலே நமக்கு ரொம்ப பயமாச்சேன்னு ”இசையருவி”யில குளிக்கப் போனேன். அங்க போனா ”புலி உறு”மிக்கிட்டு இருக்கு. நமக்கோ பூனை போடற மியாவ் சத்தம் கேட்டாலே அதிரும், இதுல புலி வேற உறுமுதேன்னு டீவி பொட்டிய அணைக்கப் போனேன்.

அதுக்குள்ள என் பொண்ணு அப்பா டீவியை அணைக்காதீங்க, நான் சுட்டி டீவி பார்க்கறேன்னு சொன்னதினாலே, ஓவர் டு சுட்டி டீவி. அங்க ”சிந்துபாத்தும் அற்புதத் தீவும்” ஓடிட்டு இருந்தது. ”கொடுமை, கொடுமைன்னு ஒருத்தன் கோவிலுக்குப் போனானாம், அங்க என்னடான்னா ரெண்டு கொடுமை தலைவிரிச்சு ஆடிட்டு இருந்ததாம்” ன்னு சொல்ற மாதிரி சிந்துபாத் யாரோ ஒருத்தர பார்த்து ”நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு நாளு தூங்க மாட்டே”ன்னு பஞ்ச் டயலாக் விட்டுட்டு இருக்காரு. அய்யய்யோன்னு அப்ப நிறுத்துன டீவி தான். நாலு நாள் ஆச்சு தொட்டு. என்னத்த சொல்ல? எல்லாம் நேரம்.

12 comments:

 1. boss pocchu intha kaala naagareegathai kindal panreengale. appa neenga palamaivaathi

  ReplyDelete
 2. முதல் நிகழ்வு சிந்திக்கத்தூண்டியது . இரண்டாவது நிகழ்வு நகைச்சுவை . பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 3. டிவி யை நிறுத்தினா நிம்மதிதான்!

  ReplyDelete
 4. சிந்துபாத்துமா... அட கால கொடுமையே.... டிவி வர வர அப்படி தாங்க ஆகி போச்சு...

  ReplyDelete
 5. அன்புள்ள வெங்கட் அய்யா, நாம் மேலை நாட்டினரைப் பார்த்து அவர்கள் நாகரிகத்தை காப்பியடிப்பதை தவிர்த்து, அவர்கள் பெரிதாக மதிக்கும், உழைப்பு , சத்தியம், நேர்மை, காலத்தை மதிக்கும் பண்பாடு, இவைகளை பின்பற்றி நடந்தால், நமது நாடு சீனாவை மிஞ்சிவிடும் காலம் வெகு தூரத்தில் இல்லை என அறுதியிட்டு கூறிட முடியும்.

  மற்றும் டி.வீ. பார்பதில், தண்ணீரிலிருந்து, பாலை மாத்திரம் பிரித்துண்ணும் அன்னப்பட்சியின் சாதுர்யத்தை நாம் வளர்த்துக்கொண்டால், பிரச்சனைகளை தவிர்த்து, நிம்மதியாக வாழலாம் என்று அறிஞர்கள் சொல்லுவார்கள்.!!
  மந்தவெளி நடராஜன்.

  ReplyDelete
 6. I hope Vijay is killing every one...! Cool Post Boss!

  ReplyDelete
 7. நாகராஜ்...

  நீங்க இங்க இருந்து தலைநகர் டில்லிக்கு போனாலும், கொசு உங்கள எப்படி தொரத்துது பார்த்தீங்களா??

  பாட்டுன்னாலே அது விஜய் பாட்டு தான்னு ஆகி போச்சு இந்த சேனல்ல எல்லாம்... அது நல்லா இருந்தாலும் பரவாயில்ல... எல்லாம், சொத்தை பாட்டுக்கள்...

  நம் விதியை நொந்து கொள்வதை தவிர வேற என்ன செய்ய?

  ReplyDelete
 8. டி.வி.பெட்டியை அணைக்கறதில்ல உள்ள நிம்மதி வேற எதிலும் இல்ல!!

  ReplyDelete
 9. சுட்டியில் எல்லாரும் இப்படித்தான் பஞ்ச் டயலாக் போட்டு தாக்கராங்க.. ஊருக்கு வந்த இடத்துல இதெல்லாம் பாத்து நான் அதிர்ந்து போயிருக்கேன்.. எங்க வீட்டுல டில்லியில் எல்லாம் சுட்டி வ்ராதுங்கறது எனக்கு பெரிய நிம்மதி தான்.. ;)

  ReplyDelete
 10. ///மென்மையான கண்ணுக்கு மேலே இப்படியெல்லாம் ஒரு அணிகலன் அணிவது தேவையா, இதுதான் நாகரீகமா? தெரியவில்லை. அதை அணிவதற்கு முன்னால் எப்படி புருவத்தில் ஓட்டை போட்டிருப்பார்கள் ///

  இதை போன்றவர்களை பார்த்தாலே ஏனென்று தெரியாமல் எனக்கு ஏதோ பயமாகத்தான் இருக்கிறது...

  ReplyDelete
 11. ஹாஹாஹா... யோகியின் புண்ணியத்தில் தமிழ் சேனல்களிலிருந்து விடுதலை எனக்கு.

  முதல் நிகழ்வு பத்தி சொல்ல ஒண்ணுமில்லை வெங்கட். எல்லாம் கழண்டு போய் அலையுதுங்க.

  ReplyDelete
 12. • வாங்க LK. நான் பழமைவாதி இல்லை. கண்ணுக்கு மேலே இப்படி குத்துனா வலிக்குமோன்னு பயப்படுற ”பயவாதி” : )
  • வாங்க பனித்துளி சங்கர், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. : )
  • வாங்க ரிஷபன் சார். சரியா சொன்னீங்க! : )
  • வாங்க அப்பாவி தங்கமணி. ஆமாம் சிந்துபாத்தும் சேர்ந்து கொடுமை படுத்தறார். : )
  • வாங்க VKN. அருமையான கருத்து. இந்தாங்க என்னோட பூங்கொத்து. : )
  • வாங்க தேவா. முதல் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. : )
  • வாங்க R. கோபி, விதியை நொந்து கொள்வதை விட பேசாம தொலைக்காட்சியே பார்க்காம இருக்கறது தான் சரின்னு தோணுது! : )
  • வாங்க ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி சார். நிம்மதி வேணும்னா நீங்க சொன்ன மாதிரி தான் செய்யணும். : )
  • வாங்க முத்துலெட்சுமி. நான் தப்பிக்க முடியல, ”டாடா ஸ்கை”ல தர 11 தமிழ் சேனல்களில் சுட்டியும் ஒன்று. : )
  • வாங்க கமலேஷ். எனக்கும் பயம் தான். பார்க்க – தோழர் LK அவர்களுக்குக் கொடுத்த பதில். : )
  • வாங்க விக்னேஷ்வரி! வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. : )

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....