வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

என்ன ஜோரா உத!
மொழி என்பது ஒரு முக்கியமான விஷயம்.  நாம் எத்தனை மொழிகளைக் கற்றுக்கொண்டாலும் நல்லது தான்தமிழகத்தில் இருந்த வரை ஹிந்தியின் முக்கியத்துவம் புரியவில்லை.  பிறகு வேலை கிடைத்து முதல் பணியிடமே தில்லி என்று  ஆன பிறகு தான் அடடா நமக்கு  ஹிந்தி மொழி தெரிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்ற அறிவு வந்தது.  அலுவலகத்தில்உஜாஹர் சிங் விர்மானிஎன்ற ஒரு சர்தார்ஜி இருந்தார்.  அவரிடம் ஆங்கிலத்தில் பேசினால், அவருக்கு ஆங்கிலம் தெரிந்தபோதிலும், ஹிந்தியில்தான் பதில் சொல்வார்.  நான்திருதிருவென முழிக்கும் போது அவர் பேசிய ஹிந்தி சொற்களுக்கான அர்த்தத்தை விளக்கி விட்டு, ”பேசப் பேச தான் உனக்கு ஹிந்தி வரும், ஆகையால் தப்பாக பேசிடுவோமோ என்று பயப்படாமல் பேசு, அவ்வப்போது நான் திருத்துகிறேன்என்று என்னை உற்சாகப்படுத்தி ஹிந்தி சொல்லிக் கொடுத்தார்.  ஆறு மாதத்தில் கஷ்டப்பட்டு ஒருவாறு ஹிந்தி கற்றுக் கொண்டேன்அதன் பிறகுதான் மொழியின் இன்றியமையாமை என்னவென்று  புரிந்தது.

ஒரு எழுத்து வித்தியாசம்….

என் நண்பர் ஒருவரின் அப்பா தனது பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தில்லி வந்து நிரந்தரமாக தங்கினார். பக்கத்து இடங்களுக்கெல்லாம் தனியாகவே போய் வருவார். தனக்குத் தெரிந்த அரை குறை ஹிந்தியை வைத்துச் சமாளித்து சில சமயம் கடைகளுக்குச் சென்று காய்கறி கூட வாங்கி வருவார்.  ஒரு சமயம் அவர் வீட்டில் ஏதோ பூஜைக்கு ஏற்பாடு செய்ய, ஹோமத்திற்குத் தேவையான மரத் துண்டுகளை தானே வாங்கி வருவதாகச் சொல்லிவிட்டு  மரக் கடைக்கு  சென்று, ”லடுக்கி தேதோஎன்று சொல்ல, கடைக்காரர் என்னடா இது, இந்த வயதான மனிதர் இப்படிக் கேட்கிறாரே என்று பார்க்க, திரும்பவும்ஜல்தி லடுக்கி தேதோ, கர் மே ஹவன் ஹேஎன்று சொல்லியிருக்கிறார்அப்போது தான் கடைக்காரருக்குப் புரிந்திருக்கிறது இந்த மனிதர் கேட்பது லடுக்கி அல்லலக்டிஎன்பது. ஹிந்தியில்லக்டிஎன்றால் மரத் துண்டு, ”லடுக்கிஎன்றால் பெண்.  ஒரு சிறிய வித்தியாசத்தினால் எப்படி அர்த்தமே மாறிவிட்டது பாருங்க!   நண்பரின் அப்பாவிற்கு கடைக்காரர் இதைப் புரிய வைத்து அனுப்பியதை வந்து வீட்டில் சிரித்தபடியே சொன்ன போது நாங்கள் எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம்.  இப்போதும் இவ்விஷயத்தை நினைத்தால் எங்களுக்கெல்லாம் "குபுக்" சிரிப்புதான்.

இதைப் போலவே நம் மக்கள் தில்லி வந்த உடனே செய்யும் ஒரு ரொம்ப நல்ல காரியம், நாம அவங்களிடமிருந்து  ஹிந்தி கத்துக்கறமோ இல்லையோ, ஹிந்திக்காரனுக்கு மறக்காம  தமிழ் சொல்லிக் கொடுக்கறது. இப்படித்தான் வேறொரு  நண்பர் ஒரு ஹிந்திக் காரருக்குவணக்கம், சௌக்கியமா, எப்படி இருக்கே, சாப்பாடு ஆச்சா-ன்னெல்லாம் சொல்லிக் கொடுத்தார்.   அதோட விட்டிருந்தால்தான் பரவாயில்லையே.  கடைசியா இன்னொன்னையும்   சொல்லிக் கொடுத்தார்.  அதுஎன்ன ஜோரா உதைஎன்பது.  இதைக் கத்துக்கிட்டதற்கப்புறம், பார்க்கற எல்லா தமிழர்களிடமும் வரிசையா சொல்ல ஆரம்பிச்சுடுவார்  – “வணக்கம், சௌக்கியமா, எப்படி இருக்கே, சாப்பாடு ஆச்சா, என்ன ஜோரா உத”.   இவ்வளவு நல்லா தமிழ் பேசறாரே ஆனா கடைசியில போய் இப்படி உதைக்க சொல்றாரே பாவம்னு எல்லாரும் குழம்பினாலும், ஒரு ஆள் நிஜமாவே ஜோரா உதைக்க ஆரம்பிக்க அப்பத்தான் அவருக்கு அந்த சொல்லின்  முழு அர்த்தமும் புரிஞ்சது!29 கருத்துகள்:

 1. Me the first.,
  தங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்..

  பதிலளிநீக்கு
 2. மெளனராகம் [ரேவதி, வி.கே.ராமசாமி & சர்தார்ஜி] ஸ்டைலில் ஜாலியாக இருந்தது தங்களின் இந்தப் பதிவு. மகிழ்ச்சி. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 3. அப்படியே சந்தடிச் சாக்கில் இரண்டு
  ஹிந்தி சொற்களை மனதில்
  எளிதாக பதியச்செய்து விட்டீர்களே
  நகைச்சுவையோடு கூடிய இயல்பான நடையில்
  ஒரு நல்ல பதிவு.வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. வெங்கட் அந்த கடைசி பார்ட் மௌனராகத்தை நினைவுப் படுத்தியது. நீங்கள் எளிய முறையில் ஹிந்தி பதிவு பதிவு போடுங்களேன்

  பதிலளிநீக்கு
 5. மொழி வெறி , திணிப்பு என இந்தியை ஒதுக்கியது வெளிநாட்டுக்கு வந்து மிக கஷ்டபடவைக்கிறது... வீணாப் போன வெள்ளைக்காரங்க இந்தியான்ன இந்தி தானே உங்க மொழின்னு சொல்லி இந்திக் காரங்களிடம் பணிவிஷயமா மொழிபெயர்ப்புக்கு என்னைக்கூப்பிட தர்மசங்கடமாகிவிடுகிறது....

  பக்கத்துல மாநிலத்தவங்க மொழி பலத்துல தான் மேல வர்றங்கா..நம் ஆட்களிடம் உள்ள அசாத்திய தொழில்நுட்ப பலத்தோடு மொழியறிவும் சிறந்தால் இன்னமும் பல உயரங்களை எட்டுவார்கள்....

  பதிலளிநீக்கு
 6. good one sir!
  enakku engalukku nadantha sambavam innu ninaivil varuthu. en amma-ku konjam accent problem. enna baasha pesinaalum oru malabar vaasam irukkum.
  kolkata-la kaai vaanga pogum pothu, maliga saamaan bengali perellaam english-la ezhuthi vechchu kondu naanum, ammavum market ponom. ellaam correct-a solli konde vanda amma- thideer-nu "Dil Chahiye" nnanga!

  kada kaarar therichchu poittaar! :)

  enakkum appa vivaram theriyaathu.. oru 10 nimisham aachchu avanukku shock thelinju athu Dil illa "Thil" (Ellu) nnu purinjukka! :D

  baasha therinjaa mattum pothaathu. pronunciation um correct-aa pannanum!

  very nice post...

  பதிலளிநீக்கு
 7. ரொம்ப காமெடிதான். பாஷை கற்றுக்கொள்ளும் வரை நாம் படும் படு, சொல்லி முடியாதுதான். அதுவும் தமிழில் க, ச, ட, த, ப எல்லாமே ஒன்னுதான். ஹிந்தில எல்லாம் நாலு, கானான்ன்னு தமிழ்ல ஒரே ”கா”தான்
  சொல்லுவோம்.ஹிந்தில khana(கானா)
  சாப்பாடு, gaana(கானா)பாட்டு.
  இப்படி உச்சரிப்பிலும் நிறைய காமெடி ஆகும்.

  பதிலளிநீக்கு
 8. உங்க போஸ்ட்டும் மாதங்கியோட கமெண்ட்டும் சூப்பரோ சூப்பர். கொஞ்ச கொஞ்சமா எங்க எல்லோருக்கும் கொஞ்சம் ஹிந்தி கத்துக் கொடுங்களேன் மாஸ்டர்! ;-)

  பதிலளிநீக்கு
 9. ரசித்து வாசித்தேன்.... Brought back lot of sweet memories of my failed effort to learn spoken Hindi. I wish I had learned it. :-(

  பதிலளிநீக்கு
 10. எனக்கும் மௌனராகம் தான் நினைவுக்கு வந்தது :))

  பதிலளிநீக்கு
 11. 'என்ன ஜோரான வதை .... இது ?' - பாஷை தெரியாமல் போனால் படும் அவஸ்தையை ஹாஸ்யமாக எழுதிய பாணி ரசிக்க வைத்தது !!

  பதிலளிநீக்கு
 12. இன்னும் இது போல நிறைய காமெடி
  பார்ட் போடுங்க சார்
  நல்லா இருக்கு

  பதிலளிநீக்கு
 13. எங்க அலுவலகத்திலும் ஒரு சர்தார் நண்பர் இருக்கிறார். தினமும் வணக்கம் சொல்லிக்கொள்வோம்...

  பதிலளிநீக்கு
 14. ரொம்ப நல்லாயிருக்கு வெங்கட்... நகைச்சுவை உணர்வு நிரம்பியவர்களுக்குத்தான் இத்தகைய சம்பவங்கள் நேரிடும். பிற மொழி கற்க வேண்டிய அவசியத்தையும் அழகாக சொல்லியாச்சு. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!!

  பதிலளிநீக்கு
 15. //
  இதைப் போலவே நம் மக்கள் தில்லி வந்த உடனே செய்யும் ஒரு ரொம்ப நல்ல காரியம், நாம அவங்களிடமிருந்து ஹிந்தி கத்துக்கறமோ இல்லையோ, ஹிந்திக்காரனுக்கு மறக்காம தமிழ் சொல்லிக் கொடுக்கறது.//

  huh...naangallaam yaaru...pinna,thamizh theriyaathavan tharaniyileye irukka mudiyaathu, thilliyila vittuduvoomaa??

  பதிலளிநீக்கு
 16. அருமையான பகிர்வு.ஹிந்தி தெரியாதுனா இந்தியர்களா?ன்னு ஒரு சிலர் கேட்பதுண்டு.வெட்கமாகத்தான் இருக்கும்.இந்தியர்களுக்கு இந்தி கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.ரசித்து படித்தேன்.

  பதிலளிநீக்கு
 17. நானும் ஒரு வங்காளியும் (கொமோல் ராய்) அறைநண்பர்களாக இருந்தபோது அடித்த கூத்துக்கள் நினைவுக்கு வருகின்றன வெங்கட்.

  அவனுக்குத் தமிழ் சொல்லிகொடுத்து ஓய்ந்துபோனேன்.என்ன பண்றே என்பதை என்னோ பொண்றே என்பான்.அவர்களுக்கு வ கிடையாது. வித்யாவை பித்யா என்பான்.வணக்கம் சொன்னால் பணக்கம் என்பான்.

  என் வங்காள அறிவை அவன் என்ன சொல்வானோ அவனிடம்தான் கேட்கவேண்டும்.

  ஆனால் சத்யஜித்ரே மறைவுக்கு நான் கண்ணீர் சிந்தியபோது அவனும் என்னைக் கட்டிக் கொண்டு அழுதான்.

  பதிலளிநீக்கு
 18. சாரி வெங்கட். வ மட்டுமில்லை ய வும் கிடையாது அவர்களுக்கு. வித்யாவை பித்தா என்றும் வித்யாலய் என்பதை பித்தோலொய் என்றும் சத்யஜித்ராய் என்பதை சொத்தோஜித் ராய் என்றும்தான் சொல்வார்கள். ஞாபகமறதியில் விட்டுப்போயிற்று

  பதிலளிநீக்கு
 19. இந்தி எதிர்ப்பு என்று மொழியைக் கற்கவிடாமல் செய்ததை நினைத்து இன்றும் வருந்துகிறோம்.

  பதிலளிநீக்கு
 20. @@ சக்தி ஸ்டடி செண்டர்-கருண்: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  @@ வை. கோபாலகிருஷ்ணன்: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. நிறைய பேருக்கு மௌனராகம் நினைவிற்கு வந்துள்ளது :) அதில் ரேவதியின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்தது.

  @@ ரமணி: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. ஏதோ என்னால் ஆனது. கொஞ்சம் ஹிந்தி தெரிந்தால் நல்லதுதானே…


  @@ எல்.கே.: “தலைநகரிலிருந்து” தொடரில் சில ஹிந்தி வார்த்தைகளைச் சொல்லிக்கொடுத்துக் கொண்டு இருக்கிறேனே. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  @@ பத்மநாபன்: உண்மைதான் பத்துஜி! மக்களை எல்லாம் ஹிந்தி படிக்காதே எனச் சொல்லிவிட்டு அவர்கள் குடும்பத்தினர் மட்டும் நன்று ஹிந்தி கற்றுக்கொண்டு விட்டார்கள்! வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  @@ மாதங்கி: நீங்கள் சொல்வது போல, வார்த்தையும் தெரியணும், அதைச் சரியாக உச்சரிக்கவும் தெரியணும். இல்லையெனில் அனர்த்தம் ஆகிவிடும்! வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  ## லக்ஷ்மி: சரியாகச் சொன்னீர்கள் அம்மா! வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  @@ ஆர்.வி.எஸ்: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. விட்டால் எல்லோரும் என்னை “ஏக் காவ்[ன்] மே ஏக் கிசான் ரஹ்தாதா” [ரகு தாத்தா!] சொல்ல வச்சிடுவீங்க போல!

  ## சித்ரா: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. இப்பொழுது கூட ஒன்றும் பாதகமில்லை. ஹிந்தி கற்றுக் கொள்ளலாமே!

  @@ முத்துலெட்சுமி: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. மௌனராகம் நினைவுக்கு வருவதை மறுக்க முடியாது!

  @@ மோகன்குமார்: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  @@ எல்லென்: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. தெரிந்து கொள்ளும் வரை அவஸ்தை தான். தெரிந்துவிட்டால் மிகவும் நல்லது.

  @@ ராஜி: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. அவ்வப்போது இது போல எழுதத்தான் ஆசை!

  @@ கே.பி.ஜனா: ஜோரா கீதா! டாங்ஸ் தலைவா! வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  ## கலாநேசன்: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. வணக்கத்துடன் சற்று பஞ்சாபியும் கற்றுக்கொள்ள முயற்சியுங்களேன்!!

  @@ நிலாமகள்: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. உண்மைதான். எத்தனை மொழி கற்றுக்கொண்டாலும் நல்லதுதானே..

  ## அன்னு: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. அதானே பார்த்தேன். யாரும் இப்படி கற்றுக்கொடுப்பவருக்கு சப்போர்ட்டுக்கு வரலையேன்னு!

  @@ ஆசியா உமர்: பல வெளிநாட்டவர்கள் இந்தியர் என்றாலே ஹிந்தி தெரிந்திருக்கவேண்டும் எனதான் நினைக்கிறார்கள்! வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  ## எல்.கே.: அன்னு இன்னும் ஒரியா தெரியுமான்னு சொல்லலை !!!

  @@ அமைதிச்சாரல்: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  ## சுந்தர்ஜி: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. ஒவ்வொரு மாநிலத்தவருக்கும் என இப்படி சில விஷயங்கள் இருக்கும். என்னுடன் பணி புரிபவரில் இரண்டு மூன்று வங்காளிகள் இருக்கிறார்கள். என் பெயரை “பெங்கட்” என்றுதான் சொல்லுவார்கள்! கேட்டுக்கொண்டு இருக்க வேண்டியதுதான்! “நதி” என்பதைக் கூட “நொதி” என்று தான் சொல்வார்கள்!!

  @@ கோமதி அரசு: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா!

  ## சே. குமார்: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே.

  @@ இராஜராஜேஸ்வரி: உண்மைதான்! நிறைய பேருக்கு கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்! வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  இண்ட்லி மற்றும் தமிழ்மணத்தில் வாக்கு அளித்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 21. அன்புள்ளம் கொண்ட பென்கட், மன்னிக்கவும், கட்டுரையின் தாக்கத்தினால் வந்த விளைவு, வெங்கட் அவர்களே,
  ஹிந்தி மொழி என்ன, எந்த மொழியையும் கற்க வயதில்லை, கற்கவேண்டும் என்ற ஆர்வமும், விடாமுயற்சியும் தேவை. உண்மையில் நான், 46 முதல 50 வயதுவரை படித்து "விஷாரத்" தேர்ச்சி பெற்றேன்.மேலும், என்சகோதரர் குழந்தைகளுக்கு, அவர்கள் தேர்ச்சி பெறும் ஒவ்வொரு தேர்விற்கும் , ரூபாய் ஐம்பது கொடுத்து ஊக்குவித்தேன். திருமதி லக்ஷ்மி சொல்வதுபோல் இல்லை. தமிழில் வல்லினம், இடையினம் மற்றும் மெல்லினம் உண்டு. திருமதி மாதங்கி ஹிந்தியில் இதற்கு முக்யத்வம் கொடுக்காததால் வந்த விளைவு, "Thil," "Dhil," ஆகியது."கற்க கசடற, கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.(வள்ளுவர்)

  தாங்கள், நம்மவர்களுக்கு ஹிந்தி சொல்லிக்கொடுக்கலாம், புத்தகம் போடலாம்.எனக்கு ஆசான் திரு நாகராஜன் , வங்கியில் பணிபுரிந்துவிட்டு மாலையில் எல்லோருக்கும் கற்பித்தார்.குரு தக்ஷிணையும்
  பெற்றார்.

  நன்றி, நகைச்சுவை மன்னரே, வாழ்க வளர்க.
  மந்தவெளி நடராஜன்.

  பதிலளிநீக்கு
 22. @@ அமுதா கிருஷ்ணா: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  @@ வி.கே.என்.: கற்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை அழகாய் விளக்கியதற்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....