வெள்ளி, 17 மே, 2013

ஃப்ரூட் சாலட் 46 – பேருந்து ஓட்டுனர்களுக்கு ஹெல்மெட் – அமலா - ஈரம்



இந்த வார செய்தி:




சமீபத்தில் ஒரு அரசியல் பிரமுகர், அவரது மகன் மற்றும் வேறு சிலரையும் கைது செய்தது அனைவரும் அறிந்ததே. கைது செய்ததிலிருந்தே அக்கட்சியினர் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் நிறைய ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் போராட்டங்கள், ஓடும் வாகனங்கள் மீது கல்லெறிதல் போன்ற சம்பவங்கள் நடந்தன.

பேருந்துகள் மீது கல்லெறிந்து ஓட்டுனர்கள் பலருக்குக் காயங்கள் ஏற்பட்டதால் தமிழக அரசின் பேருந்து நிறுவனங்கள் ஒரு வித்தியாசமான முடிவு எடுத்து அதை அமுல் செய்திருக்கிறார்கள் – பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஓடும் அனைத்து பேருந்துகளின் ஓட்டுனர்களுக்கு அரசு செலவில் ஹெல்மெட் தந்து அதை அணிந்து கொண்டு ஓட்டும்படி கட்டளையிட்டுள்ளார்கள்.

பெரம்பலூரிலிருந்து சென்னை சென்ற பேருந்தில் முதன் முதலாக ஹெல்மெட் அணிந்து ஓட்டிக்கொண்டு சென்றதை படம் பிடித்து போட்டிருந்தது பார்த்தபோது மனதில் ஒரு கேள்வி – ஓட்டுனருக்கு ஹெல்மெட் சரி – பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு? அவர்களுக்கு கல்லடி பட்டால் பரவாயில்லையா….  ஓட்டுனர்கள் பேருந்தினை ஓட்டிக்கொண்டிருக்கும்போது கல்லடி பட்டு அதன் மூலம் விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு நிச்சயம் இருக்கிறது என்றாலும் பயணிகளுடைய பாதுகாப்பும் அரசின் கடமையல்லவா?

இன்னுமொரு விஷயமும் இருக்கிறது – எந்த அரசியல்வாதி கைது செய்யப்பட்டாலும் உடனே அவரது அடிப்பொடிகள், இப்படி வன்முறையில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்வதும், அரசின் உடைமைகளை இப்படி தேவையில்லாது அழிப்பதும் நிச்சயம் கண்டிக்கத்தக்க விஷயம். நமது வசதிக்காகத் தானே இத்தனை பேருந்துகளும், மற்ற அரசு உடைமைகளும். இதைப் புரிந்து கொள்ளாது அழிப்பதில் ஏனிந்த மோகம்….. 

யார் இந்த உண்மையை இவர்களுக்குப் புரிய வைப்பது….. 
   
இந்த வார முகப்புத்தக இற்றை:

கால்களில் ஈரம் படாமல் கடலை கடந்தவர் கூட இருக்கலாம்… ஆனால் கண்களில் ஈரம் படாமல் வாழ்க்கையை கடந்தவர் யாரும் இருக்க முடியாது. கவலையை விடுவோம்….  கல கலவென சிரிப்போம்…..

இந்த வார குறுஞ்செய்தி:

LOCKS ARE NEVER MANUFACTURED WITHOUT A KEY….  SIMILARLY, GOD NEVER GIVES PROBLEMS WITHOUT SOLUTIONS. ONLY WE NEED TO HAVE PATIENCE TO UNLOCK THEM.

ரசித்த பாடல்:

மெல்லத் திறந்தது கதவு படத்திலிருந்து “வா வெண்ணிலா உன்னைத் தானே” எனும் பாடல் இந்த வார ரசித்த பாடலாய். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி மற்றும் இசைஞானி இளையராஜா இணைந்து இசை அமைத்த படம். இதோ பாடல் உங்கள் ரசனைக்கு…..


 
ராஜா காது கழுதை காது:

சாதாரணமாகவே ஹிந்தி தெரியாதவர்கள் வட நாட்டிற்கு வரும்போது மொழிப் பிரச்சனை தான். அதுவே ஹிந்தி அரைகுறையாகத் தெரிந்திருந்தாலும் பிரச்சனை தான். அப்படி ஒரு அரைகுறை ஹிந்தி தெரிந்த மனிதர் தனது இருசக்கர வண்டிக்குக் காற்றடிக்கும் போது கேட்டது…. “அரே பாய், காடி மே ஆந்தி பரோ!” காற்று என்பதற்கு ஹிந்தியில் ”ஹவா”. அவர் கேட்டது ஆந்தி – அதாவது ”புயல் காற்று”. கேட்ட அந்த கடைக்காரர் முகத்தினைப் பார்க்க வேண்டும்! அவர் காற்றில் பறந்துவிடுவார் போல இருந்தது…..

புகைப்படம்:




தனது தோழியை அணைத்தபடி அதே நேரம் தத்தமது குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு, புகைப்படம் எடுப்பதற்கு ஏதுவாய் ஒரு போஸ் கொடுத்துக் கொண்டு…..  அப்பப்பா எத்தனை வேலைகள் ஒரே சமயத்தில்….. 

படித்ததில் பிடித்தது:

ஈரம்

நிகழ்வுகளின் 
நிழலில் 
மனம் 
உலர்த்துகின்றது 
நனைந்த நினைவுகளை
உலர்ந்தபின் 
உணர்த்தும் 
உண்மை உறவுகள் ....

-    விஜய்.

என்ன நண்பர்களே, இந்த வார பழக்கலவையைச் சுவைத்தீர்களா? மீண்டும் அடுத்த வாரம் வேறொரு பழக்கலவையோடு உங்களைச் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து…..

60 கருத்துகள்:

  1. ருசியான ஃப்ரூட் சாலட். பாராட்டுக்கள், வெங்கட்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  2. Superb Fruit-salt. Hope you are enjoying your time with your family in Trichy. All the very best.
    vijay

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

      நீக்கு
  3. ஃப்ரூட் சாலட் வழக்கம் போல மிக சுவையாக இருந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அவர்கள் உண்மைகள்.

      நீக்கு
  4. நல்ல தொகுப்பு. புகைப்படம் வெகு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  5. ரொம்ப ரொம்ப டேஸ்டா இருந்ததுங்க.....ஃப்ரூட் சாலட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

      நீக்கு
  6. //ஓட்டுனருக்கு ஹெல்மெட் சரி – பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு? அவர்களுக்கு கல்லடி பட்டால் பரவாயில்லையா…. //

    படகுச் சவாரிக்கு லைஃப் ஜாக்கெட் மாதிரி ஹெல்மெட் கேட்டு சாலைமறியல் போராட்டம் நடத்திடுவோம்!
    [தலை(!)மை திரு.வெங்கட் நாகராஜ்]
    யாருப்பா அங்க ரெண்டு லோடு கல் இறக்குங்க!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.... கிளம்பிட்டாங்கையா... கிளம்பிட்டாங்க! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு [வேங்கட ஸ்ரீனிவாசன்]

      நீக்கு
  7. கண்களில் ஈரம் படாமல் வாழ்க்கையை கடந்தவர் யாரும் இருக்க முடியாது. கவலையை விடுவோம்…. கல கலவென சிரிப்போம்…..

    சிரிப்போடு பரிமாறிய சுவையான
    பழக்கலவைக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  8. எந்த பிரச்னை என்றாலும் முதலில் இலக்காவது பேருந்துகளும் அதன் ஒட்டுனர்களுமே. அரசின் நடவடிக்கையை பாராட்டுவோம்.பயணிகளின் பாதுகாப்பு? நல்ல கேள்வி!

    அருமையான பாடலுடன் கூடிய காணொளி ரசிக்க வைத்தது.

    கவிதை மனதிற்கு என்னவோ செய்தது.

    கழுதைகாது நல்ல தமாஷ்!

    குரங்குகளின் குடும்ப படம் சூப்பர்!

    பழக்கலவை சுவையோ சுவை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

      நீக்கு
  9. சுவையான சத்தான ஃப்ரூட் சாலடை
    படித்து ருசித்தோம்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  10. பதில்கள்
    1. தமிழ் மணம் நான்காம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  11. பெரிய கொடுமை தான் நண்பரே..
    தமிழக வரலாற்றில் பேருந்து ஓட்டுனர்
    தலைக்கவசம் மாட்டியது இப்போதுதான்...
    சாதி வெறி தலைக்கேறி பித்தம்
    பிடித்த வெறியர்கள் மத்தியில்
    அல்லாடும் சாமானியர்கள் ஆகிப்போனோம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

      நீக்கு
  12. பழக்கலவைச்சுவையோ சுவை.
    குரங்கு குடும்ப படம்,கவிதை, ரசித்தபடல்,
    முகப்புத்தக இற்றை எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  13. புகைப்படம் வெகுவாக கவர்ந்ததுங்க. அரசியல் காரணங்களால் மக்கள் படும் அவதிக்கு அளவேயில்லை மக்களில் சிலரே காரணம் உணர்த்த வேண்டும் . அருமைங்க பழக்கலவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  15. 1) நியாயமான ஆதங்கம்.
    2) உண்மை.
    3) இதுவும் உண்மை!
    4) எஸ் பி பியின் குரலுக்காகவே ரசிக்க வேண்டிய பாடல்.
    5) ஹா..ஹா...ஹா...
    6) அழகு.
    7) அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  16. மிகவும் இனிப்பான பஞ்சாமிர்தம் பகிர்ந்துள்ளீர்கள்.
    குரங்கின் பாசப் படம் மனதை நெகிழ வைத்தது.
    பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

      நீக்கு
  17. சுவையான ஃப்ரூட் சாலட்.. இற்றை, குறுஞ்செய்தி அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.

      நீக்கு

  18. பழ சுவையில் எனக்கு பிடித்தது, வா வெண்ணிலா பாடல்தான், இந்த பாடலை வைத்தே ஒரு நிலவை எனக்காக பிடித்தேன், எனவே மரணம் வரை நினைவில் கொள்ளும் பாடல் இது...

    அந்த நிலவும் இந்த உலகத்தைவிட்டு போய்விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

      நீக்கு
  19. எனக்கென்னவோ ஹெல்மெட்டுக்குப் பதில் திருப்பி அடிக்க பல சைஸ்களில் கற்களுடன் ஒரு தொட்டி ஒவ்வொரு பஸ்ஸிலும் வைக்கலாமென்று தோன்றுதிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது நல்ல ஐடியா தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

      நீக்கு
  20. விஸ்வனாதனும் இளையராஜாவும் சேர்ந்து இசை அமைச்சாங்களா?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.... மெல்லத்திறந்தது கதவு படத்திற்கு. படத்தின் அனைத்துப் பாடல்களுமே செம ஹிட்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

      நீக்கு
  21. அருமை... இந்தவார ப்ரூட்சலாட் பிரமாதம். ஆனாலும் அதிலேயும் நமக்கு ரொம்ம்ம்பப் பிடிச்சதின்னு ஒண்ணு இருக்கணுமே... அதான் 'இந்த வார முகப்புத்தக இற்றை' மனசை ஒற்றிவிட்டது...
    பகிர்விற்கு மிக்க நன்றி சகோதரரே!

    த ம. 10

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

      நீக்கு
  22. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  23. I like the song "ooru sanam"- from the same movie... Lovely music... Photograph-- superb!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அந்தப் பாடல் பிடிக்கும்....

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதங்கி....

      நீக்கு
  24. நம்ம ஆளுங்களுக்கு எத்தனை எடுத்துச் சொன்னாலும் புரியாது வெங்கட்! எவனாவது அரசியல் வியாதி கைது பண்ணப்பட்டதும் வன்முறையில ஈடுபடறவங்களை ஸ்பாட்லயே சுட்டுரலாம், அல்லது தடியடி நடத்தலாம்னு போலீஸுக்கு ஃபுல் சப்போர்ட் தந்து ஒரு தடவை வெளுத்தா, பரதேசிங்க அப்புறம் அடங்கியிருப்பானுங்க. முகப்புத்தக இற்றையை மிக ரசித்தேன். மெ.தி.கதவு படப்பாடல் மனதை வருடிச் சென்றது. அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் கணேஷ். எதிலும் அரசியல் ஆதாயம் தேடுபவர்களை தலைவர்களாகக் கொண்டு அழிந்து கொண்டிருக்கிறோம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

      நீக்கு
  25. புகைப்படம் சூப்பர்! குட்டிங்களுக்கு திருஷ்டி சுத்திப் போடுங்கப்பா! (ஆனாலும் அவங்க privacy-யில் தலையிட்டிருக்கீங்க.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்].....

      ஆஹா இப்படி ஒரு விஷயத்தைக் கிளப்பி விடறீங்களே அண்ணாச்சி......

      நீக்கு
  26. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  27. அழகான குட்டிகள். எங்கே பிடிச்சீங்க??? திரு ஈஸ்வரன் சொன்னதை ஆமோதிக்கிறேன். :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் பிடித்த இடமும், தகவல்களும் விரைவில் ஒரு பகிர்வாக வரும்...

      குட்டிங்களுக்கு திருஷ்டி சுத்தி போடணும்னு சொன்னதை தானே ஆமோதிக்கறீங்க! :)))))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  28. நமது முன்னோர்களின் பாசப் பிணைப்பை பார்க்கையில் ,நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருப்பதாக படுகிறது !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  29. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....