அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*********
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.
********
உன்னை Pose கொடுக்கச் சொன்னா அழகா pose கொடுக்கற கிருஷ்ணா. என் முத்தான முத்தல்லவோ🥰😍❤️ ஆனா அந்த வெண்ணெய்ப் பானையை safe ஆ விடாம பிடிச்சுக்கற பாரு... அடேயப்பா... அதுக்குன்னே மூணாவது கை முளைச்சமாதிரி தோணுது...
எல்லாம் உன் கற்பனை மா.... snap எடுத்தாச்சா? நான் ஃப்ரீயா.... (முத்து மாலைய மானாவாரியா எல்லாத்துக்கும் சுத்தி விட்டதுனால situation song வேற...😏)
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
**********
இப்பிடிப் பாத்துப் பாத்து தலையில இருந்து பாதம் வரைக்கும் (கொலுசு முதற்கொண்டு) நீலமணில தன் அருமைப் பிள்ளைக்கு அலங்காரம் பண்ணி விட்டிருக்காங்களே தேவி, எனக்கு ஒரு குட்டி நீல வெல்வெட் சட்டை போட்டு விட்டிருந்தா குறைஞ்சா போயிடும்! ஆமா, கண்ணுக்கெட்டின தூரம் வரைக்கும் ஒரு பிரசாதத்தக்கூட காணோம்??? 🤔 இன்னும் ready ஆகலையா... மஹா சங்கடஹர சதுர்த்தியாச்சே...
பசிக்குதே...
என்ன மூஞ்சூறு bro மொனகற?
இல்ல, உங்க dress பிரமாதம் பாஸ்.... ஏதாவது எலி கிலி கடிச்சாலும் ஒண்ணும் ஆகாது... அதோட பல்லுதான் damage ஆகும்...😬 இல்ல? (இப்பத்தான லேசா கடிச்சுப் பாத்தேன்... ஆஆஆ...😲)
ஓம் கணேசாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻
*******
அண்ணா நான் நன்னா மறஞ்சுண்டு இருக்கேனா இந்தத் தூண் பின்னால? அம்மா வந்தா கண்டு பிடிக்க மாட்டா இல்ல???
சந்தேகம்தான், தூண் கொஞ்சம் சின்னது...
நீ கட்டிலுக்கடியில ஒளிஞ்சுண்டிருந்திருக்கணும் கிருஷ்ணா.. (வெண்ணை intake ஐ குறைச்சுக்கோன்னேன், கேட்டாத்தானே...)
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
********
அம்மா இடது கையில பிடிச்சுக்க flute ஐக் குடு. ச்சும்மா எதுக்கு கைய மடக்கி வெச்சுக்கணும்?
பரவாயில்ல கிருஷ்ணா, எல்லோரும் உன்னோட 6 விரல் பத்தித்தான் யோசிப்பாங்க.. flute இல்லாதது தெரியாது...
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
*********
என்ன கிருஷ்ணா, சிவப்பு சிவப்பா இருக்கு உன் காலடி? என்ன திரிசமன் பண்ணின???
எப்பவும் ஈர கோல மாவுல தான காலை முக்கி நடந்து பார்ப்பேன்? இன்னிக்கி நீ காவி பொடியை கரைச்சு வெச்சிருந்த இல்ல? அதுக்குள்ள காலை விட்டு நடந்து பாத்தேன் ஒரு change க்கு.. அழகா இருக்கு இல்ல?
இருக்கும், வரேன் இரு, உன்ன..... இன்னும் எத்தனை இடத்த நான் தொடைக்கணுமோ.... கடவுளே...
டென்ஷன் ஆகாதம்மா, BP ஏறிடும்...... Cool...
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
*********
ஏம்மா என்ன நீ மட்டும்தான எப்பவும் குளிப்பாட்டுவ? இன்னிக்கி என்ன இத்தன பேரு..... ஒண்ணு மட்டும் ஞாபகம் வெச்சுக்கோ... எத்தனைபேர் எதுல குளிப்பாட்டினாலும் (இதுல கழுதைப்பால் வேற...) நான் இப்படித்தான் இருப்பேன்..(பளபளன்னு - காக்கைச் சிறகு மாதிரி)...
புரிஞ்சுதா?? Torture பண்ணாத...
இல்லடா செல்லம். நீ இப்படி இருந்தாத்தான் கொள்ளை அழகு.... இவா எல்லாரும் எனக்கு ஹெல்ப் பண்ண வந்திருக்கா... உனக்கு ஹேப்பி பர்த்டே இல்லயா?அதான் நன்னா எண்ணெய், வாசனைப் பொடியெல்லாம் தேச்சு குளிப்பாட்ட... (உன்னை அடக்க இன்னும் 4 பேரு வேணும்.... கொஞ்சமாவா படுத்துவ....)
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
Happy janmashtami🦚🦜💐
********
ஆஹா நீ flute ஐ வாசிக்கக் கூட வேண்டாம் இதுமாதிரி கைல வெச்சுக்கிட்டாலே போதும் பார்ப்பவர்கள் அப்படியே சொக்கிப் போயிடுவாங்க, என்னை மாதிரி... அதனால தம் பிடிச்சு வாசிச்சு சிரமப் படாத ராதா..... குடுக்கறியா இப்படி?
(ஹ்ம்ம்ம்ம் நீ இன்னும் நிறைய practice பண்ணனும், அப்பத்தான் காதுகொடுத்து நீ வாசிக்கறதக் கேட்கமுடியும்னு சொல்லமுடியாம எப்படியெல்லாம் மஸ்கா போட வேண்டியிருக்கு... யப்பா...😕)
ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
06-09-2026








படங்களையும் வரிகளையும் ரசித்தேன்.
பதிலளிநீக்கு