இரு மாநில பயணம் –
பகுதி – 21
இப்
பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu
இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!
bபேட்t த்வாரகா படகுத்துறையில்
இறங்கி கடைவீதிகள் வழியே பொறுமையாக நடந்து சென்று கோவில் வாயிலை அடைந்தோம். ஏற்கனவே
முந்தைய பயணத்தில் பார்த்த கோவில்தான். அப்போது வேறு குழு. இப்போது வேறு குழு!
பழைய நினைவுகளை மீட்டெடுத்தபடியே நடந்து கோவில் வாயிலை அடைந்தால் – கோவில் வாயிற்கதவு
பூட்டி இருந்தது. சரி கொஞ்சம் நேரம் காத்திருக்கலாம் என முடிவு செய்து அங்கே
இருந்த மரத்தடியில் சற்றே இளைப்பாறினோம். நாங்கள் இளைப்பாறும் சமயத்தில்,
இக்கோவில் பற்றிய கதை – சென்ற முறை எழுதிய பதிவிலிருந்து சில வரிகள் இங்கேயும்….


