எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, August 29, 2012

கல்யாணம்… ஆஹாஹா கல்யாணம்…கல்யாணம்… ஆஹாஹா கல்யாணம்… அப்படின்னு ஒரு பழைய பாட்டு கேட்டு இருக்கீங்களா? கேட்கலைன்னா இப்ப கேளுங்க! அது சரி… இப்ப எதுக்கு இந்தப் பாட்டுன்னு கேட்கறீங்களா? கல்யாணம் எத்தனை வகைன்னு நேற்று படித்தேன். அது பற்றிய பகிர்வு இது. இது எங்க பார்த்தேன்னு கேட்கறதுக்கு முன்னாடி என்னன்னு பார்த்துடுவோமே!


எண்வகை மணங்கள்

நாலு நாளைக் கலியாணமாக இருந்தது ஒரு நாளைக் கல்யாணமாக ஆகி, அதுவும் ஒரு வேளைக் கலியாணமாக மாறி இப்போது உபசாரப் பத்திரம் படித்துக் கொடுக்கும் நிலைக்கு நம் நாட்டுத் திருமணங்கள் வந்திருக்கின்றன. இதற்கு நமது முற்போக்கு கருத்துகள் ஒரு காரணமாக இருந்தாலும் நாட்டின் பொருளாதாரமும் சுபிட்சமும் கூட இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றன. இந்த விவாஹம் என்னும் சடங்கு இப்போதிருக்கும் முறையே மாறி இன்னும் பல உருவங்களில் வரலாமாயினும் மனிதன் உள்ள வரையில் விவாஹமும் இருக்கத்தான் போகிறது. ஆகவே, நமது வாழ்க்கையில் அத்யாவசியங்களில் ஒன்றாகிய இந்தத் திருமண முறை எப்படி எப்படி இருந்து வந்திருக்கிறது என்பதைப் பார்ப்போம். 

அறனிலை யொப்பே பொருள்கோள் தெய்வம்
யாழோர் கூட்டம் அரும்பொருள் வினையே
யிராக்கதம் பேய்னிலை யென்று கூறிய
மறையோர் மன்ற லெட்டிவை

மேலே கண்ட பழம் பாடல் எண்வகை மணங்களைக் குறிக்கிறது. மன்றல் எட்டு என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தாலும் நம் நாட்டில் திருமணங்கள் எட்டு வகைகளில் நடைபெற்று வந்ததாக அறிகிறோம். இந்த மணங்கள் முறையே, பிராம்மம், பிராஜாபத்யம், ஆருஷம், தெய்வம், காந்தர்வம், ஆசுரம், ராக்ஷசம், பைசாசம் என்பவையாகும். இம்முறையாக மணம் புரிந்து இல்வாழ்க்கை நடத்திய எட்டு புராண புருஷர்களைப் பின்வரும் சித்திரங்கள் விவரிக்கின்றன.
 

பிராம்மம் [மீனாட்சி கல்யாணம்]: முறைப்படி தகுந்த வரனைத் தேர்ந்தெடுத்துத் தன் மகளைக் கன்னிகாதானம் செய்து கொடுப்பதே பிராம்மம் ஆகும். ஜகன்மாதாவே தன் மகளாக அவதரித்திருக்கிறாள், திக்விஜயம் செய்து ஜயக்கொடி நாட்டியிருக்கிறாள், அத்தகைய மகளுக்குத் தகுந்த நாயகன் ஈஸ்வரனே என்பதை உணர்ந்து, சுந்தர பாண்டியனாக வந்த சொக்கநாதருக்கு மீனாட்சியை மணம் புரிவித்து மகிழ்கின்றான் மலயத்வஜ பாண்டியன்.தெய்வம் [ரிஸ்யச்ருங்கர் – சாந்தை]: உயர்ந்த பொருளை உயர்ந்தோருக்கு அளித்தல் என்னும் முறைப்படி உயிரினும் இனிய தன் மகள் சாந்தையைத் தன்னால் யாகத்திற்கு குருவாக வரிக்கப்பட்ட ரிஸ்யச்ருங்கருக்கு திருமணம் செய்து வைக்கிறார் ரோம பாத மஹாராஜன்.
ஆருஷம் [பழங்காலம்]: பெண்மையின் உதவி இல்லாமல், ஆண்மகனால் தனித்து வாழ முடியாது என்பதை உணர்கிறான். பெண்ணைப் பெற்றவர்களிடம் சென்று “என்னுடைய கடமைகளைச் சரிவர செய்வதற்கு உங்கள் பெண்ணை எனக்குக் கொடுங்கள். அதற்குப் பதிலாக இரு பசுக்களைத் தருகிறேன்” என்று கூறிப் பண்டமாற்று முறையில் விவாஹம் செய்து கொள்கிறான்.பிராஜாபத்யம் [சீதை – ராமன்]: “இல்லற தர்மம் மிகவும் சிறந்தது.  உலகில் எல்லா தர்மங்களுக்கும் அதுவே ஆதாரமாக விளங்குவது.  அறத்தையுணர்ந்து அதன் வழி நடப்பாள் சீதை. அவளை மணம்புரிந்துகொண்டு இருவரும் உலகில் தர்மஸ்தாபனம் செய்வீர்களாக!” என்று தன் மகளின் கைப்பற்றி ராமனிடம் ஒப்புவிக்கிறார் ஜனகமஹாராஜன்.ஆசுரம் [சந்தனு – மத்ஸ்யகந்தி]: மஹாராஜா சந்தனு ஒரு செம்படவப் பெண்மீது காதல் கொள்கிறான். இதுதான் சமயமென்று பெண்ணின் பெற்றோர்கள், “உமது செல்வத்தில் என்னுடைய மகள் வழிக்கு உரிமை கிடைக்க வேண்டும்” என்று கேட்கிறார்கள். சொத்து நிச்சயம் கிடைக்கும் என்று ஊர்ஜிதமான பிறகுதான் பெண்ணைக் கொடுக்கிறார்கள். இது பணத்தை முன்னிட்டு நடந்த மணம்.காந்தர்வம் [துஷ்யந்தன் – சகுந்தலை]: அவன் அரசன். அவள் ஆசிரமவாஸி. ஒருவரை ஒருவர் முன்பின் அறியார்கள், கண்டதும் காதல் கொண்டு காந்தர்வ மணம் செய்து கொண்டார்கள். காதலின் பாதை கரடு முரடானது என்பதை இருவரும் அறிந்தும் கொண்டார்கள். ஆனால், அந்த மனமொருமித்த காதலர்களின் மைந்தனின் பெயரால் தான் இன்றும் நமது நாடு “பாரத தேசம்” என்று அழைக்கப்படுகிறது.ராக்ஷசம் [ருக்மிணி கல்யாணம்]: ருக்மிணியை அவள் விருப்பத்திற்கு மாறாக, மணம் செய்து வைக்க விரும்புகிறார்கள் பெற்றோர்கள். ருக்மிணி கிருஷ்ணனுக்குத் தூது அனுப்புகிறாள். குறித்த காலத்தில் வந்து பலாத்கார முறையில் தன் ரதத்தில் சிறையெடுத்துச் சென்று மணம் புரிந்து கொள்கிறான் கண்ணன்.பைசாசம்: தான் ஆசைப்பட்ட பென்ணை அவள் விருப்பத்தையும் கேட்காமல் நள்ளிரவில் பேய்போல் வீட்டிற்குள் புகுந்து, அவள் தூங்குகின்ற சமயத்தில் தூக்கிச் செல்கிறான் ஒரு அரக்கன்.ரிஜிஸ்டர் [தற்காலம்]: மேலே சொன்ன தொந்தரவுகளெல்லாம் இல்லாமல், மனமொப்பிய இருவர், வயது, தோற்றம், முகூர்த்தம், நாள் கிழமை எதையும் லட்சியம் செய்யாமல், தங்கள் மணத்தை தாங்களே சென்று பதிவு செய்து கொள்ளும் முறை.


என்ன படிச்சீங்களா! இப்ப, எங்கே படித்தேன், என்பதற்கு வருவோம்! இது ஆனந்த விகடன் இதழின்  1949-ஆம் வருட தீபாவளி மலரில் படித்தது.  பொக்கிஷம் என்ற வரிசையில் அவ்வப்போது இது போன்ற பதிவுகள், இப்பதிவிற்குக் கிடைக்கும் “வரவேற்பை”ப் பொறுத்து தொடர்ந்து வரும்!

என்ன நண்பர்களே, பிடித்திருக்கா இப்பதிவு…  

மீண்டும் வேறொரு பொக்கிஷப் பகிர்வில் விரைவில் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

68 comments:

 1. சிறப்பான பகிர்வு சார்... விளக்கங்கள் அருமை...

  வாழ்த்துக்கள்... நன்றி... (TM 2)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 2. ஏற்கனவே கேள்விபட்ட விஷயம்தான். தொடருங்கள் வெங்கட் நாகராஜ்

  ReplyDelete
 3. பொக்கிஷமான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 4. நிச்சயமாக பொக்கிஷம்தான்
  அருமையாகத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தமைக்கு
  மனமார்ந்த நன்றி
  தயவு செய்து தொடர்ந்து பதிவிடவும்
  அறியாதன பல அறிந்து கொள்வோம்
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி ரமணிஜி! பதிவர் சந்திப்பு ஃபோட்டோவில் கலக்கறீங்க!

   விரைவில் சந்திப்போம்....

   Delete
 5. Replies
  1. தமிழ்மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 6. பொக்கிஷப் பகிர்வு அருமை. வாழ்த்துக்கள் மிக பல.

  விஜய்

  ReplyDelete
  Replies
  1. தங்களது தொடர் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 7. ஆஹா, நான் பிறப்பதற்கு மூன்று மாதங்கள் முன்பே பிறந்துள்ள பொக்கிஷம். இனிமை. பகிர்வுக்குப் பாராட்டுக்கள், நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... நீங்க பிறப்பதற்கு முன்பு வந்த புத்தகமா! வாவ்....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 8. Replies
  1. தொடரத்தான் நினைக்கிறேன் சீனி....

   வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 9. இப்பத்தான் சகோ நிறைய்ய விஷயங்கள் தெரிஞ்சுகிட்டேன்.

  பொக்கிஷங்கள் தொடரட்டும்

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் புதிய விஷயம் சில. அதனால் தான் பகிர்ந்தேன்.

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புதுகைத் தென்றல்.

   Delete
 10. நல்ல பதிவு வெங்கட்.

  தொடரவும்.

  ReplyDelete
  Replies
  1. தொடரதான் நினைத்திருக்கிறேன் சீனு [வெங்கட ஸ்ரீனிவாசன்].

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிடா.

   Delete
 11. யப்பா... 1949ம் வருஷமா... அசத்திட்டேள் போங்கோ... பொக்கிஷங்கள் தொடர்ந்து வர சிவப்புக் கம்பளம் விரிக்கிறேன் வெங்கட். தொடரட்டும்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கணேஷ் 1949 தான். நேற்று தான் கிடைத்தது. உடனே பதிவு செய்து விட்டேன்... :)

   தொடர்ந்து பதிவிடுகிறேன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   Delete
 12. வாக்களிக்க தமிழ்மணம் காணலையே வெங்கட்... என்னாச்சு?

  ReplyDelete
  Replies
  1. தமிழ்மணத்தில் ஏதாவது பிரச்சனையாக இருக்கலாம். இப்போது வேலை செய்கிறது கணேஷ்.

   Delete
 13. அட இவ்ளோ விஷயம் இருக்கா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சீனு.

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி [திடங்கொண்டு போராடு] சீனு.

   Delete
 14. Very very informative...
  -- We need to give more importance / values to our culture / tradition

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதவன்.

   Delete
  2. What is the cultural value here Madhavan?

   Delete
  3. மாதவன்.... அப்பாதுரை கேட்கிறார்.. சொல்லுங்கள்..

   “கேள்விக்கென்ன பதில்... அவர் கேள்விக்கென்ன பதில்?”

   Delete
 15. Very Very informative..

  -- We need to give more importance to our cultures / traditions

  ReplyDelete
 16. இது வாசித்துள்ளேன் சகோதரா.
  இத்தனை திருமணங்களும் இப்போதும் நடக்கிறது.
  அந்த ஆதிகாலப் பெயர்களில் மட்டும்
  மாற்றத்துடன் என்பது என்கருத்து.
  நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
  Replies
  1. //அந்த ஆதிகாலப் பெயர்களில் மட்டும்
   மாற்றத்துடன் என்பது என்கருத்து.//

   ம்ம்ம்...

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!

   Delete
 17. அருமையான பதிவு, தொடருங்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வரலாற்று சுவடுகள்.

   Delete
 18. கோபுலுவின் படம் பார்க்க சந்தோஷம் ஏற்பட்டது. ஒன்பதுவகைத் திருமணங்கள் என்று கூடச் சொல்லலாமோ....Living together list டில் வரவில்லையே?!!

  ReplyDelete
  Replies
  1. கோபுலுவின் படம் பார்க்கும்போதே மகிழ்ச்சியாக இருந்தது....

   உங்கள் சந்தோஷம் இங்கேயும்....

   ஒன்பது என்று சொல்லலாமோ... 1949-ல் வரவில்லையோ லிவிங் டுகெதர்.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 19. பிரமாதம் பிரமாதம் அற்புதமான பகிர்வுங்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 20. ரசித்துப் படித்தேன். பைசாச விவாகத்துக்கு உதாரணம் எழுதவில்லையா? (என்னைக் கேட்டிருந்தால் கொடுத்திருப்பேனே? :-)
  //ஒரு வேளைக் கலியாணமாக மாறி இப்போது உபசாரப் பத்திரம் படித்துக் கொடுக்கும் நிலைக்கு
  1949ல் எழுதியதா? இல்லை உங்கள் அறிமுகமா? 49ல் ரிஜிஸ்டர் கல்யாணம் நடப்பதைப் பற்றி எழுதியிருப்பது ஆச்சரியமாகவும் இனிமையாகவும் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் படித்தமைக்கு நன்றி அப்பாதுரை ஜி! முன்பே நான் கேட்காவிட்டால் என்ன... இப்போது கேட்கிறேன். பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

   ////ஒரு வேளைக் கலியாணமாக மாறி இப்போது உபசாரப் பத்திரம் படித்துக் கொடுக்கும் நிலைக்கு//

   1949-ல் எழுதியது தான்... நீல வண்ணத்தில் எழுதியது அனைத்துமே அப்போது எழுதியது. கருப்பு வண்ணன் அடியேனின் கைவண்ணம்... :)

   உண்மை அந்த காலத்திலேயே ரெஜிஸ்டர் கல்யாணம் நடப்பது பற்றி எழுதி இருந்தது எனக்கும் ஆச்சரியம் தான்...

   வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி அப்பாதுரை ஜி!

   Delete
  2. 49லியே ஒருவேளைக் கல்யாணம் என்பது ஆச்சரியம். அறுபதுகளில் நடந்த என் பெற்றோர் திருமணம் 4 நாள் "தெருமுழுக்கப் பந்தல் கட்டி" நடந்ததா சொல்வாங்க.

   Delete
  3. ஹிஹி.. பைசாச விவாகம் பற்றிச் சொல்லுமுன் பர்மிஷன் வாங்க வேணும்..

   Delete
  4. //49லியே ஒருவேளைக் கல்யாணம் என்பது ஆச்சரியம். அறுபதுகளில் நடந்த என் பெற்றோர் திருமணம் 4 நாள் "தெருமுழுக்கப் பந்தல் கட்டி" நடந்ததா சொல்வாங்க.//

   எங்க பெரியம்மா கல்யாணம் கூட நான்கு நாள் நடந்தது. அம்மா கல்யாணம் இரண்டு நாள்.... 49-லியே ஒரு வேளைக் கல்யாணம் என்பது நிச்சயம் ஆச்சரியம் தான்...

   Delete
  5. //ஹிஹி.. பைசாச விவாகம் பற்றிச் சொல்லுமுன் பர்மிஷன் வாங்க வேணும்..//

   ஹிஹி... இதை.. இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்!

   Delete
 21. ஆஹா.. எவ்வளவு அருமையான தகவல்கள். நன்றி..

  ReplyDelete
  Replies
  1. தகவல்களை ரசித்து கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 22. பொக்கிஷத்தை எங்களோட பகிர்ந்தமைக்கு நன்றிகள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 23. எங்க கல்யாண நாள் அன்று கல்யாணம் பற்றிய உங்கள் பதிவு வாட் எ Coincidence !

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். மோகன். பதிவு பப்ளிஷ் ஆன பிறகு தான் உங்க பதிவு பார்த்தேன். இதையே நினைத்தேன்....

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன்.

   Delete
 24. ஆஹா ஆஹா.........

  எல்லோரும் எட்டுக்குள்ளே ஒன்னா இருக்கோம்:-))))

  ReplyDelete
  Replies
  1. எட்டுக்குள்ளே ஒண்ணா இருக்கோம்! எதுன்னு யோசிச்சுட்டும் இருக்கோம்! :))

   வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 25. எழுபதுகளில் எனக்கு நான்கு நாள் கல்யாணம். :)))) கோபுலு படம் பார்த்ததுமே சந்தோஷம் பொங்கியது. தலைப்பைப் பார்த்துட்டு உங்க கல்யாணம் பத்தித் தானோனு நினைச்சு, ஏற்கெனவே எழுதி இருக்கீங்களேனு யோசனையோட வந்தேன். எங்கே கிடைச்சது 1949--ம் வருஷத்து தீபாவளி மலர்?? ஆஹா, படிக்கணும் போல இருக்கு. கூரியர் பண்ணுங்க. :))))))

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் நாலு நாள் கல்யாணமா....

   படிக்கணும்னு உங்களுக்கும் ஆசையா.... கூரியர்ல அனுப்பலாம் - ஆனா லைப்ரரி புக்... சுட மனசு வரலை....

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete
 26. பொக்கிஷப் பகிர்வு சூப்பர்.எல்லாக்கல்யாணமும் இப்பவும் நடக்கிறது.வேற வேறு பெயர்களில்..நல்ல பகிர்வு.பொக்கிஷத்தையும் தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆசியா உமர்.

   Delete
 27. கடைசி படத்தைப் பார்த்ததும் சிறுவயதில் பார்த்த ஆனந்தவிகடன் படம் நினைவுக்கு வந்தது.மிக நல்ல பதிவு! பகிர்வுக்கு நன்றி!
  காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
  Replies
  1. பலருக்கு கோபுலு அவர்களை நினைவூட்டியது கண்டு மகிழ்ச்சி...

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 28. சொல்ல மறந்துட்டேன் வெங்கட்ஜி.

  1972 இல் எனக்கும் நாலு நாள் கல்யாணம் தான் நடந்தது. மிகவும் வைதீக முறைப்படி, இரண்டு வேளையும் ஒளபாஸனம் செய்து விட்டு, பிறகு ஓர் நல்ல நாள் பார்த்து எங்கள் அன்பான வாழ்க்கை தொடரப்பட்டது.

  அதே போலவே என் பெரிய மகனுக்கும் 1998 இல் நான்கு நாட்கள் கல்யாணமே செய்தோம்.

  சாஸ்திரப்படி அதில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் அடங்கியுள்ளன.

  அன்புடன் VGK

  ReplyDelete
  Replies
  1. மீண்டும் வருகை புரிந்து தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு வை.கோ. ஜி!

   Delete
 29. Replies
  1. அடாடா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆர்.ஆர்.ஆர்.

   Delete
 30. 1949-ஆம் வருட தீபாவளி மலரில் படித்தது. பொக்கிஷம் என்ற வரிசையில் அவ்வப்போது இது போன்ற பதிவுகள், இப்பதிவிற்குக் கிடைக்கும் “வரவேற்பை”ப் பொறுத்து தொடர்ந்து வரும்!//

  தொடர்ந்து தாருங்கள்.
  பொக்கிஷம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   தொடர நினைத்திருக்கிறேன்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....