எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, October 25, 2013

ஃப்ரூட் சாலட் – 64 – ஓடிப் போனவன் – நாக்கு – ரதி[சி] – புதிய வலைப்பூஇந்த வார செய்தி:

கணேஷ் தாங்க்டே [Dhangde] தாணே நகரின் காவல் துறையில் பணி புரியும் காவலாளி. பணியில் சேர்ந்த சில நாட்களில் தத்தமது இளமை பற்றி பேசச் சொல்லி அவரது அதிகாரி அழைக்க இவரது முறை வருகிற வரை கணேஷுக்கு வயிற்றில் சற்றே கிலி. தன்னுடைய பின்னணியை எப்படிச் சொல்வது என ஒரு பயம் – பயப்படுவதற்கு காரணம் இருக்கிறது. என்ன காரணம்?

1989-90-களில் பள்ளியில் படிக்கும்போது தனது நண்பர் ஒருவருடன் பள்ளியை விட்டு வெளியே வந்து வெளியூர் செல்லும் ரயிலில் ஏறி வீட்டை விட்டு ஓடிப் போனார் கணேஷ்! ரயிலில் பயணித்து அடுத்ததோர் ரயில் நிலையத்தில் இறங்கினால் முற்றிலும் தெரியாத ஊர். என்ன செய்வது புரியாது அழத் தொடங்கினார். இறங்கிய இடம் மும்பை.

அங்கே கடற்கரையின் ஓரத்தில் இருக்கும் குடிசை வாசி அடைக்கலம் தந்து லோக்கல் ரயில்களில் பிச்சை எடுக்க பழக்கியிருக்கிறார். ஒரு விபத்தில் சிக்கியபோது சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உதவியோடு ஆனந்த் நிகேதன் எனும் அநாதை இல்லத்தில் சேர்க்கப்பட அங்கேயே தங்கி, 12-ஆம் வகுப்பு வரை படித்திருக்கிறார்.

பிறகு இளங்கலை பட்டப்படிப்பு படிக்க ஆரம்பித்து பாதியில் விட்டு காவல் துறையில் வேலைக்குச் சேர முயற்சித்து சேர்ந்து விட்டதே அவரது பின்னணி.  அவரது முறை வரும்போது இதை தெரிவித்தபோது மொத்த காவலாளிகளும் அவரது நிலை அறிந்து வேதனைப் பட்டனர்.  எப்படியாவது அவரை அவரது குடும்பத்துடன் சேர்க்க வேண்டுமென முயற்சியைத் தொடங்கினார்கள்.

முதன் முதல் படித்த பள்ளியை நினைவு கொண்டு அங்கிருந்து தேடலைத் துவங்கிய கணேஷும் அவர்களது நண்பர்களும் வெற்றி கொண்டார்கள். அவரது தாய் இன்னமும் அதே வீட்டில் இருப்பது தெரிந்து கொண்டு 23 வருடங்கள் கழித்து மீண்டும் தனது குடும்பத்தாருடன் இணைந்திருக்கிறார் கணேஷ்.

பல சிறுவர்கள் வீட்டை விட்டு ஓடி வாழ்க்கையில் தத்தளித்து நிலை தடுமாறி போய்விடுவது வழக்கம். இந்த கணேஷுக்கு நல்ல நேரம். காலம் தாழ்ந்தாலும் தனது குடும்பத்துடன் மீண்டும் இணைய முடிந்திருக்கிறது. இதற்கு உதவிய காவல் துறை நண்பர்களும், அதிகாரிகளும் பாராட்டுக்குரியவர்களே!

இந்த வார முகப்புத்தக இற்றை:நாக்கு ஒரு தீ! ஆக்கவும் அழிக்கவும் வல்லது – ஆகவே அதை கவனமாக பயன்படுத்துங்கள்.

இந்த வார குறுஞ்செய்தி

தான் செய்தது தவறு என்று தெரிந்ததும் சரணடைபவர் நேர்மையானவர்.  தான் செய்தது தவறா சரியா என தெரியாதபோதும் சரணடைபவர் புத்திசாலி. தான் செய்தது முற்றிலும் சரி என நிச்சயமாகத் தெரிந்தும் சரணடைபவர் – கணவர்!

– இந்த குறுஞ்செய்தியை அனுப்பிய சகோதரி சரஸ்வதி மோகன் அவர்களுக்கு எனது நன்றி!

ரசித்த படம்: 

ஓவியரின் கற்பனை – மிகவும் பிடித்தது….. உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்!

நன்றி: கூகிள்......

ரசித்த பாடல்:

கண்ணே கனியமுதே என ஒரு திரைப்படம் வந்தது. யார் கண்ணன் இயக்கத்தில், எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இசையமைக்க சித்ரா விஸ்வேஸ்வரன் அவர்கள் இந்த பாட்டிற்கு நடனம் அமைக்க ஒரு சிறப்பான பாடல்….   என்ன பாடல் என கேட்கிறீர்களா? பாரதியாரின் பாடல் அது! இதோ நீங்களே கேளுங்களேன்.  
கூடுதல் தகவல்: இந்தப் படத்தின் கதை விமலா ரமணி அவர்களின் ”உலா வரும் உறவுகள்” கதை. வலைப்பக்கத்தில் எழுதுவதை விட்டு முகப்புத்தகத்திலேயே மூழ்கி விட்ட கற்றலும் கேட்டலும் ராஜிக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் – முகப்புத்தகத்தில் இந்தப் பாடலின் சுட்டியை பகிர்ந்தமைக்கு…..

ராஜா காது கழுதை காது:

என்ன தான் தில்லியில் இருந்தாலும் பல சமயங்களில் தமிழ்க் குரலைக் கேட்க முடிகிறது. அதுவும் வீட்டின் அருகிலேயே ஒரு சத்திரமும், பிர்லா மந்திரும் இருப்பதால் தில்லியைச் சுற்றிப் பார்க்க வரும் தமிழர்களின் குரலைக் கேட்க முடிகிறது. நேற்று சத்திரத்தின் வாசலில் பனியன் விற்கும் ஒரு ஹிந்தி பெரியவரிடம் தமிழிலேயே பேரம் பேசிக்கொண்டிருந்த ஒரு தமிழ் பெண்மணி: 

”எப்படிப்பா குடுக்கறே?”

வியாபாரி – 100 ரூபாய் [Hundred]

பெண்மணி – கொஞ்சம் குறைக்கக் கூடாதா?

வியாபாரி – ஒரே விலை!

அதற்குள் பின்னாலிருந்து ஒரு பெண்மணி – “மூணு பனியன் [டீ ஷர்ட்] 100 ரூபாய்க்கு கேளுங்க!”

வியாபாரி – “தில்லில ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விக்குது. தெரியுமில்ல! அதுனால ஒரே விலை தான்!”

வியாபாரி ஹிந்தியில் சொல்வது புரிகிறதோ இல்லையோ பேரம் தொடர்கிறது. :)

படித்ததில் பிடித்தது!:

ரசி!

நம்பிக்கை முழுவதும்
வற்றிப்போய்
நடக்கும் போதும்
தொட்டியிலிருக்கும் பூக்களை
பக்கத்து வீட்டு குழந்தையின்
சிரிப்பை
பெயர் தெரியா பறவைகள்
எழுப்பும் ஒலியை
ஏதேனும் ஒன்றை
ரசி மென்மையாய்!

-          இலட்சுமணன்.

நன்றி: வீடு திரும்பல் மோகன்குமார் – வெற்றிக்கோடு.

வலைப்பூ அறிமுகம்:

இந்த வாரத்தில் உங்களுக்கு ஒரு புதிய வலைப்பூவின் அறிமுகம். புதுவையிலிருந்து வலைப்பூவில் கவிதைகள் படைத்திடும் நண்பர் சேஷாத்ரியை நீங்கள் அறிவீர்கள். இப்போது அவரது மகள் பவித்ராவும் கவிதைகள் [ஆங்கிலத்திலும் தமிழிலும்] கவிதைகள் எழுதி அவரது பக்கத்தில் வெளியிடுகிறார்.  இதுவரை இரண்டு கவிதைகள் எழுதி வெளியிட்டு இருக்கிறார்.  ஒன்று ஆங்கிலத்தில், மற்றொன்று தமிழில்.  புதிய பதிவாளரை வாழ்த்தி வரவேற்போம். அவரது வலைப்பூவிற்கான சுட்டி – வரிகளில் விரியும் வானவில்.

என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

58 comments:

 1. கணேஷ் பற்றிய தகவல் - சுவாரஸ்யம்.
  இற்றை - உண்மை.
  குறுஞ்செய்தி - ஹா..ஹா..ஹா..
  ரசித்த படம் - ஆஹா..
  காணொளி - நல்ல பாடல். கல்யாண வசந்தம் ராகத்தில் அமைந்த பாடல் என்று இரண்டு நாட்களுக்குமுன் ரேவதி வெங்கட் முகநூலில் பகிர்ந்திருந்தார்!
  பேரம். ப.பி, ரசித்த கவிதை, வ.அ. எல்லாமே ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. நான் பதிவில் சொல்லியிருப்பதும் ரேவதி வெங்கட் தான்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. இன்னும் தமிழ்மணத்தில் 'சப்மிட்' ஆகவில்லை போல! ஓட்டுப்பட்டையைக் காணோம்!

  ReplyDelete
  Replies
  1. ஆட்டோ பப்ளிஷ்.... தமிழ் மணம் இணைக்கணும்... :) நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. Replies
  1. தமிழ் மணத்தில் வாக்களித்தமைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 4. காக்கிச் சட்டைகளுக்குள்ளிருந்த இதயங்களின் தரிசனம் நெகிழ வைத்தது. காணொளியில் பகிர்ந்த பாரதியின் பாடல் அருமை. புதிய வலைத்தளத்தை அறிமுகம் செய்ததும் வெகு சிறப்பு! (தலைப்பைப் பார்த்ததும் நீங்கள்தான் புதுய வலைப்பூ துவங்கிட்டீங்களோன்னு நினைச்சேன்) ப்ரூட் சாலட் செம டேஸ்ட்!

  ReplyDelete
  Replies
  1. ஒரு வலைப்பூவில் எழுதுவதே சிரமமாக இருக்கிறது இப்போது! இதில் இன்னொரு வலைப்பூ?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ் அண்ணே.

   Delete
 5. குடும்பத்தோடு இணைக்க உதவிய போலீஸ்காரர்களுக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும்ம் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   Delete
 6. கணேஷ் தாங்க்டே மிகவும் கொடுத்து வைத்தவர்... இனிமையான பாடல், புதிய தள அறிமுகம் உட்பட மற்ற ஃப்ரூட் சாலட் அனைத்தும் நல்ல சுவை... நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 7. நம்பிக்கை முழுவதும்
  வற்றிப்போய்
  நடக்கும் போதும்
  தொட்டியிலிருக்கும் பூக்களை
  பக்கத்து வீட்டு குழந்தையின்
  சிரிப்பை
  பெயர் தெரியா பறவைகள்
  எழுப்பும் ஒலியை
  ஏதேனும் ஒன்றை
  ரசி மென்மையாய்!//

  மிகவும் ரசித்தேன்....!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   எனக்கும் மிகவும் பிடித்தது இந்த கவிதை. படிக்கும்போதே பகிர்ந்து கொள்ள தோன்றியது.

   Delete
 8. கணேஷ் கொடுத்து வைத்தவர்.
  படம் அருமை நன்றி ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் அவர்களே.....

   Delete
 9. எல்லாமே நல்லாயிருக்கு. ரஸித்தேன். பகிர்வுக்கு நன்றிகள், ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 10. மிகவும் ரசித்தேன்
  அந்தப் பொன்மொழியில்
  தவறே செய்ய்யவில்லையாயினும்
  மன்னிப்புக் கேட்கத் தயங்காதவன்
  கணவன் என இருந்தால் இன்னும்
  சிறப்பாக உண்மையாக இருக்குமோ ?

  காணொளிப் பாடல் பகிர்வுக்கு
  மனமார்ந்த நன்றி
  இது எனக்கும் அதிகம் பிடித்த பாடல்

  சாலட் வழக்கம்போல் அருமை
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
  (கணினி சரியாகிவிட்டதா ? )

  ReplyDelete
  Replies
  1. ஆங்கிலத்தில் இருந்ததை அப்படியே தமிழில் மொழி பெயர்த்தது. நீங்கள் சொல்லும்படி எழுதியிருந்தால் நிச்சயம் சிறப்பாக இருந்திருக்கும்.....

   கணினி இன்னும் சரியாக வில்லை. அவர் எடுத்துக்கொண்டு வரும் வரை நண்பரின் மடிக்கணினியை பயன்படுத்துகிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 11. Replies
  1. தமிழ் மணம் நான்காம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 12. மிகவும் ரசித்தேன் சுவைத்தேன் உங்கள் அறிமுகப் பதிவாளரின் தளமும் சென்று கருத்துக்கள் இட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 13. ஃப்ரூட் சாலட் மிக அருமை.பகிர்ந்த செய்திகள், பாடல் எல்லாம் அருமை.

  புதிய பதிவாளர் பவித்ராவுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா......

   Delete
 14. இனிய பழச்சுவை பகிர்வு...
  அழகிய கவிதை பகிர்வுக்கும் நன்றிகள் நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

   Delete
 15. காணொளிப் பாடல் பகிர்வுடன் ஃப்ரூட் சாலட் ருசித்தது ..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 16. பல செய்திகள்! அறிய முடிந்தது !கணேசன் வரலாறு அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 17. ஃ ப்ரூட் சாலட் டேஸ்டி யாக இருந்தது .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா.....

   Delete
 18. கணேஷ் தாங்க்டே பற்றியது அருமையான செய்தி

  மரங்கள் பற்றிய விழிப்புணர்வு படம் நல்ல கற்பனை அந்த வரைகலைஞருக்கு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 19. அத்தனையும் அருமையாக இருந்தது!...
  காணொளிப் பாடல் இன்றுதான் கேட்கிறேன் அருமை!
  ”ரசி”- நம்பிக்கைக் கவிவரிகள் என்னை ஈர்த்தது... ஆழ்ந்து ரசித்தேன்!

  புதிய வலைப்பூ அறிமுகம் சிறப்பு! பார்க்கின்றேன்!

  அனைத்துப் பகிர்வினுக்கும் மிக்க நன்றி!
  வாழ்த்துக்கள் சகோ!

  எனது வலைத்தளத்திற்கும் உங்கள் வருகையை ஆவலுடன் வேண்டுகிறேன்!
  வந்தால் மகிழ்வேன்! நன்றி சகோ!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   உங்கள் பக்கத்திற்கும் வருகிறேன்.....

   Delete
 20. சுவையான பழக்கலவை.!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   Delete


 21. நின்னையே ரதியென்று...

  அருமையான பாடல்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 22. ஐயா!என்னுடைய வலைப்பூவை அறிமுகம் செய்தமைக்கு என் உளமார்ந்த நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பவித்ரா... தொடர்ந்து பல பதிவுகள் எழுதிட வாழ்த்துகள்.

   Delete
 23. முதல் செய்தி நெகிழ்வு.பழக்கலவை நற்சுவை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 24. பாடல், பட்ம், கவிதை,சம்பவங்கள்.. பழக்கலவை அற்புதம் நண்பரே! என் மகளின் வலைப்பூவை அறிமுகம் செய்தமைக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 25. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

  ReplyDelete
 26. அந்த ஓவியப் படம் அருமை..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கருண்.

   Delete
 27. கணேஷ் பற்றிய தகவல்களும் ஓவியமும் அருமை... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

   Delete
 28. ப்ரூட் சாலட் அனைத்தும் கலந்த அற்புதமான பகிர்வு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 29. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 30. ப்ரூட் சாலட் மிக அருமை...ஒவ்வொரு பழமும் அருமை!! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....