எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, October 26, 2013

யார் குற்றவாளி?
நிகழ்வு-1: சென்ற செவ்வாய் கிழமை இரவு. தலைநகர் தில்லியின் பதினேழு வயது பெண் மூன்று காட்டுமிராண்டி இளைஞர்களால் சீரழிக்கப்பட்டார். இது ஊடகங்களில் வந்த செய்தி. 

நிகழ்வு-2: வெளி வராத ஒரு செய்தியும் இருக்கிறது – அதே நாளில் பதினொன்றாம் வகுப்பில் படிக்கும் மாணவி – பள்ளியில் படிப்பது தவிர மேற்படிப்புக்காக பயிற்சி வகுப்பிலும் படித்து வருகிறார். அங்கே பன்னிரண்டாவது படிக்கும் ஒரு மாணவனுடன் சற்றே நெருங்கி நட்புடன் பழகியிருக்கிறார் போல.  

இரவு எட்டு மணிக்கு இந்தப் பெண்ணை அலைபேசியில் அழைத்து பாடத்தில் ஏதோ சந்தேகம் இருக்கிறது – சேர்ந்து படிக்கலாம் என அழைத்ததாக தெரிகிறது. தெரிந்த பையன் தானே என அந்த நேரத்தில் இந்தப் பெண்ணும் செல்ல, ஒரு காரில் அழைத்துக் கொண்டு போய், ஏதோ மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை சீரழித்திருக்கிறார்கள். பாடத்தில் சந்தேகம் என அழைத்து உடலியலில் அவர்களுக்கு இருந்த சந்தேகங்களை தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த வெறியர்கள்.

வெளியே தெரிந்தால் அவமானம் என இதை மூடி மறைத்து விட்டார்கள் பெற்றவர்கள். கூடவே அந்த இளைஞன் படங்கள் எடுத்திருப்பதாகவும் போலீஸுக்குச் சென்றால் அவற்றை வெளியிட்டு விடுவதாக மிரட்டியதால் போலீஸுக்கு போகவில்லை பெற்றோர்கள். பெற்றோர்களிடம் சொல்வதற்கு முன்னரே தோழி ஒருத்தியிடம் சொல்ல அதன் மூலம் விஷயம் வெளிவந்திருக்கிறது. எதையோ செய்து விஷயத்தினை அடக்கி வைத்திருக்கிறார்கள்.

நிகழ்வு-3: ஹைதை நகரில் ஒரு தெலுங்கு பெண். 22 வயது. ஏதோ எம்.என்.சி. யில் வேலை. போய் வரும் போது ஒரு 25 வயது ஆணுடன் பழக்கம் ஏற்பட, நட்பு காதலாக கனிந்து இருக்கிறது. ஒன்றிரண்டு வருடங்கள் காதலித்து, “இப்போ கல்யாணம், அப்போ கல்யாணம்” என இழுத்தடிக்கப்பட்டு, பின்னர் தெரிய வந்திருக்கிறது அந்த ஆண் ஏற்கனவே கல்யாணம் ஆனவர் என. உடனே அவருடன் தொடர்பினை முறித்துக் கொண்டு பெற்றோர்கள் பார்த்த மணமகனை [அமெரிக்க மணமகனை] கல்யாணம் செய்து கொள்ள ஏற்பாடுகள் நடந்திருக்கிறது.  எப்படியோ விஷயம் தெரிந்து கொண்ட அந்த காதலன், இவர்கள் இருவரும் சேர்ந்து இருந்தபோது எடுத்துக்கொண்ட படங்களை அமெரிக்க மாப்பிள்ளைக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி இருக்கிறார். விளைவு – நிச்சயித்த திருமணம் நின்றுவிட்டது.

நிகழ்வுகள் மூன்று விதமாக இருந்தாலும், இந்த இரண்டு மூன்று தினங்களில் கேட்டவை/படித்தவை.  இது போல தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. 

இந்த செய்திகள் வந்து சில நாட்களுக்குள் மறந்து போய்விடக் கூடிய அபாயம் நிறைந்தவை. அடுத்த பெண் இது போல அவஸ்தைக்கு ஆளானாலோ, வேறு ஏதாவது அரசியல் நிகழ்வு நடந்தாலோ பத்திரிகைகளும், ஊடகங்களும் மறந்து விடக்கூடிய செய்தி.

பள்ளியில் பதினொன்றாவது படிக்கும் பெண் பற்றி மற்றொரு பெண் சொல்லும் போது நன்கு படிக்கக் கூடியவள் என்றும் புத்திசாலி என்றும் சொல்கிறார். ஆனாலும் படிப்பதில் இருந்த புத்திசாலித்தனம் வாழ்க்கையில் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் இல்லையே என்பது தான் வருத்தப்பட வேண்டிய செய்தி.

இந்த விஷயத்தில் புரியாத சில விஷயங்கள் – யார் குற்றவாளி?

மகளுக்கு சுதந்திரம் தருகிறேன் என்ற பெயரில் எந்த நேரத்திலும் வெளியே செல்ல அனுமதி அளித்த பெற்றோர்களா? இரவு எட்டு மணிக்கு மேல் வெளியே செல்லும் போது, “தனியே போவது அவசியமா?, எங்கே செல்கிறாய்” என்று கேட்காது இருப்பது தில்லியில் மிக சாதாரணம். பத்து பதினோரு மணிக்குக் கூட பெண்கள் வீட்டின் அருகில் இருக்கும் பூங்காக்களில் தனியாக சுற்றுவது இங்கே வழக்கம்.  அந்த அளவிற்கு இங்கே பெண்களுக்குச் சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள் பெற்றோர்கள். இந்த சுதந்திரம் கொடுக்கும் பெற்றோர்கள் குற்றவாளிகளா?

படிப்பில் இருக்கும் புத்திசாலித்தனம், நாட்டு நடப்பில் – குறிப்பாக தில்லி போன்ற பெரு நகரங்களில் பெண்களுக்கு இரவில் இருக்கும் அபாயங்களை தெரிந்து கொள்வதில் இல்லாதது அந்த பெண்ணின் குற்றமோ? பெண்களிடம் பழகுவது போலவே ஆண் நண்பர்களிடமும்/ மாணவர்களிடமும் பழகுவது எந்த தைரியத்தில்? இது அசட்டு தைரியம் என தெரியாது போய்விட்டதே இந்த பெண்ணிற்கு? இது இந்த பெண்ணின் குற்றமா?

தொடர்ந்து இது போன்ற பல குற்றங்கள் நிகழ்ந்து விட்டாலும், இரவு நேரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தாத காவல் துறை, அரசாங்கத்தின் குற்றமா? வரும் முன் காப்போம் என்பதை மக்களுக்கு மட்டுமல்ல, காவல் துறையும் செய்ய வேண்டுமென உணரவில்லையே. போதிய ஊழியர்களோ, இருக்கும் ஊழியர்கள் அரசியல்வாதிகளின் பாதுகாப்பிற்கு பயன்படுகிறார்கள் என்பதையோ சொல்லி தப்பித்து விடுவது சாதாரணமான ஒன்றாக இருக்கிறதே.

இப்படி ஒரு குற்றம் நடந்து குற்றம் இழைத்தவருக்கும் முன்னுதாரணமான ஒரு தண்டனை கொடுக்க முடியாத நமது அரசியல் சட்டத்தின் குற்றமா?

இல்லை ஆண்மகவினைப் பெற்றெடுத்த பெற்றோர்கள் அவர்களை நல்ல படியாக வளர்க்காது – அவர்களுக்குத் தகுந்த விஷயங்களைச் சொல்லித் தராதது குற்றமா?

யார் குற்றவாளி? ஒன்றுமே புரியவில்லை. இளம் குருத்துகளை  இப்படி அழித்து விட்டார்களே என வருத்தப் படுவதைத் தவிர வேறொன்றும் புரியவில்லை.

என்னவோ போங்க! படிக்கும்போதே வெறுப்புத்தான் வருகிறது எல்லா விஷயங்களின் மீதும்.

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

70 comments:

 1. யார் குற்றவாளி? ஒன்றுமே புரியவில்லை. இளம் குருத்துகளை இப்படி அழித்து விட்டார்களே என வருத்தப் படுவதைத் தவிர வேறொன்றும் புரியவில்லை.//

  காலம் ஏன் இப்படி ஆகி விட்டது ? யார் குற்றவாளி, குழந்தைகளா? பெற்றோர்களா? சமுதாயமா?
  என்று நம்மால் புலம்ப மட்டும் தான் முடியும்.
  தனிமனித ஒழுக்கம் கடைபிடிக்கபட்டால் தான் சமுதாயம் நலம்பெறும்.

  ReplyDelete
  Replies
  1. தனி மனித ஒழுக்கம் - கிலோ என்ன விலை என்றாகிவிட்டதே....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 2. யாரைக் குற்றம் சொல்லியும் பிரயோசனமில்லை .பாதிப்புக்கு உள்ளாகும் பெண் மட்டுமே விழிப்புடன் இருக்க வேண்டும் ...வேறு யாராலும் அவளைக் காப்பாற்ற முடியாது ,தன்னைத் தானே அவள் தான் காத்துக் கொள்ள வேண்டும் !
  த.ம 3

  ReplyDelete
 3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

  ReplyDelete
 4. பெற்றோர்கள் தான் முதல் குற்றவாளி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 5. சமூகம் மற்றும் அரசுக்கும் பொறுப்பு உண்டு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete
 6. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_26.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு நன்றி தனபாலன். ஏற்கனவே பார்த்து நன்றியும் சொல்லி விட்டேன்.

   Delete
 7. இது போன்றவிஷயங்களில் பெண்கள் சுதந்திரம் எப்படி வரையறுக்கப் படுகிறது.?
  தகுதி இல்லாதவனை நம்புவதால்.
  பெற்றோர்களை ஏமாற்றிப் புதிதாக வந்தவரை ஏற்றுக் கொள்வதால்.

  கண்டிக்கும் பெற்றோர்களை வெறுப்பதால். எத்தனையோ காரணங்கள்.
  பதின்ம வயதுப் பசங்க இரு தரப்பிலும் ஏதோ தவறு நிகழ்கிறது.
  மிக வருத்தமாக இருக்கிறது வெங்கட்.
  இனி வளரும் தலைமுறையின் எண்ணங்கள் நல்ல முறையில் காப்பாற்றப் படவேண்டும். இறைவன் அருள் முன்னிற்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   நேற்று கேள்விப்பட்டதிலிருந்து கடைசி இரண்டு விஷயங்களும் ரொம்பவே மனதை வேதனைப்படுத்தியது..... இன்றைக்கு ஹைதை பெண்ணின் அப்பா தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் ஏற்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.....

   என்னத்த சொல்ல.....

   Delete
 8. நீங்கள் குறிப்பிட்ட இந்த நிகழ்வில் ஊடகங்கள் ,திரைப்படங்கள் ஆற்றும் பங்கை குறிப்பிடாமல் விட்டு விட்டீர்கள்... அவற்றைப் பார்த்து பள்ளி வயதில் காதல் என்பது கட்டாயம் இல்லையென்றால் அது கேவலம் எனும் மனோபாவம் குழந்தைகளிடையே விதைக்கப்பட்டுள்ளது. இதற்கு யார் காரணம்?.....

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் எழில். ஊடகங்களும், திரைப்படங்களையும் நான் விட்டுவிட்டேன். நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதையும் மறந்து விட்டோமே......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 9. அண்மையிலே விஜய் டி.வி யிலே பெண்ணீயம் பற்றிய ஒரு நிகழ்ச்சி நடந்தது.

  பெற்றோர், கணவனுக்கு சற்று ஒத்துப்போய், குடும்ப மகிழ்ச்சியே இலக்கு என கருதும் பெண்டிர் ஒரு பக்கமும்,

  குடும்பத்திலும் சமூகத்திலும், அதாவது வீட்டுக்கு வெளியில் தனது சமூக வாழ்க்கையிலும் பெண்ணுக்கு உண்டான உரிமைகளை நிலை நாட்டவேண்டிய கட்டாயத்தை வலியுறுத்தும் பெண்ணீய வாதிகள் இன்னொரு பக்கமும்

  கருத்து பரிமாற்றத்தில்,

  வீட்டுக்குள் தாய் தந்தை கணவன் இவர்கள் சொற்படி நடந்து குடும்ப மகிழ்ச்சியை இலக்காக கொண்ட பெண்களுக்கு சமூகத்தைப்பற்றிய சிந்தனை இல்லை என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது.

  பாதுகாப்பு இல்லாத இடங்களுக்கு இரவிலே செல்லக்கூட தயங்க கூடாது என்ற கருத்து சொல்லப்பட்டது.

  விபத்தும் விளைவுகளும் ஒரு தனி நபருக்கு தான் ஏற்படுகின்றன. அசட்டுத் துணிச்சலால் ஏற்படும் விபரீதங்களை தடுக்க, நிறுத்த இந்த பெண்ணீய தீவிர வாதிகள் கூட்டம் போடலாம், போராட்டம் நடத்தலாம், கொடி பிடிக்கலாம் , ஆயினும் பால் கொட்டி விட்டது. திரும்பவும் அதை அள்ளித் தர முடியுமோ?

  பள்ளிக்கு, கல்லூரிக்குச் செல்லும் பெண்கள் தத்தம் உரிமைகள் என்ன என்று தெரிந்து கொள்ளவேண்டும், அதே சமயம், தத்தம் சொந்த பாதுகாப்பு முக்கியம், தமது எதிர்காலத்தை கண் முன் நிறுத்தி எந்த செயலும் செய்யவேண்டும்.

  சமூகத்தில் பாலியல் குற்றவாளிகள் ஒவ்வொருவரின் மன நிலையையும் கண்டு கொண்டு அவர்களை அவர்கள் மன நிலை அடிப்படையில் , அவர்கள் குற்றம் புரியுமுன், ஏதும் ஒரு குண்டர் சட்டத்தில் அடைக்க முடியுமா ? குற்றம் நடந்த பின்புதான் அவர்களை இனம் கண்டு கொள்ளப்படுகிறது.

  பெண்களே ...நீங்கள் தான் முடிவு எடுக்கவேண்டும்.

  தாய்மார்கள் தத்தம் இளம் பெண்களுக்கு இதமான வகையில் சொல்ல வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள் பெண்மையை போற்றும் , மனித உரிமைகளை, பெண் உரிமைகளை, மதிக்கும் உணர்வினை ஏற்படுத்தும் மனோ ரீதியான வகுப்புகள் நடத்தவேண்டும் .

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா....

   Delete
 10. தனிமனித ஒழுக்கம் குறைந்துவருவதன் அறிகுறிதான் இது. ஒட்டுமொத்த சமுதாயத்தைத் தான் குறை சொல்ல வேண்டும். நான் மும்பையில் பணியாற்றியபோது நள்ளிரவில் புறநகர் ரயில் நிலையங்களுக்கு வெளியே ஆட்டோக்கள் வரிசைக் கட்டி நிற்பதையும் அதில் இளம் பெண்கள் எவ்வித பயமுமின்றி தனித்து பயணிப்பதையும் பார்த்திருக்கிறேன். ஏன் இங்கும் நான் வசிக்கும் ஆவடியில் நள்ளிரவில் ரயில் நிலையத்தில் வந்து இறங்கினாலும் இளம் பெண்கள் தனித்து ரயிலில் இருந்து இறங்கி மத்திய பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் கடைசி பேருந்தில் ஏறிச் செல்வதையும் பார்த்திருக்கிறேன். . நீங்களே சொல்லிவிட்டீர்கள் இன்றும் தில்லியில் இரவு பதினோரு மணிக்கு இளம்பெண்களை பூங்காக்களில் பார்ப்பது சகஜம் என்று. ஆகவே இத்தகைய நிகழ்வுகள் நாட்டின் ஏதாவது ஒரு இடத்தில் நடந்துக்கொண்டுதான் இருக்கும். இந்தியா போன்ற பெரிய நாட்டில் நடக்கும் ஒருசில நிகழ்வுகளை வைத்து நாட்டில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்றும் பெற்றோர்கள் இன்னும் சற்று கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகாத விஷயங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோசப் ஜி!

   Delete
 11. இதில் அவ்வளவு எளிதாக யார் பக்கம் தவறு என்று சொல்ல முடிவதில்லை. குழந்தைகள் வளர வளர பெற்றோருக்கும் அவர்களுக்கும் இடையே இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது. அவர்களுக்கு முப்பது வயதாகும்போது தான் மறுபடி இடைவெளி குறைகிறது என நினைக்கிறேன். அந்த பசங்களின் பெற்றோருக்கு தன் மகன் இப்படிப்பட்ட செயலை செய்திருப்பான் என்றே நம்ப முடியாத சூழ்நிலை தான் பெரும்பாலும்! தனி மனித ஒழுக்கம் பேணுதல் மட்டுமே இதை போன்ற செயல்களை குறைக்கும். எங்கே.. எந்த வேலைக்கும் செல்லாமல் 'காதல்' , எப்போதும் குடிப்பது, அடிதடி.. இவையே இன்றைய சினிமாவின் ஹீரோவின் கல்யாண குணங்கள் என்று இருக்கும்போது, ஒழுக்கமாக இருக்க இன்சென்டிவ் யாருக்கு இருக்கும்?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பந்து ஜி!

   Delete
 12. நல்ல சிந்தனை சார், தவறு இருபக்கமும் இருக்கிறது, ஆனால் ஆண்கள் பக்கம் மட்டுமே குற்றம் சொல்லுவார்கள், கொஞ்சம் எதிர்த்தாலும் பெண்ணியம் ஆணாதிக்கம் என்று ஓடி வந்துவிடுவார்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 13. வருத்தமான செய்தி. சுதந்திரத்தின் எல்லை என்ன என்பதைப் பெற்றோரும் உணர்த்த வேண்டும். குழந்தைகளும் புரிந்து கொள்ள வேண்டும். இப்போதெல்லாம் கண்டித்து வளர்ப்பதே தவறு, மாபெரும் குற்றம் என்றதொரு மனப்பான்மை பெருகி வருகிறது. எதுவும் நன்றாக இல்லை என்றாலும் அதைச் சொல்லித் திருத்தக் கூடாது; தப்பாக நடந்து கொண்டாலும் அதை எடுத்துக் காட்டக் கூடாது என்றெல்லாம் சொல்லுகின்றனர்.

  கேட்டால் உளவியல் ரீதியாகக் குழந்தைகள் பாதிக்கப்படுவார்களாம். இப்படி எல்லாம் நடந்து கொண்டதன் மூலம் மட்டும் பாதிப்புகள் இல்லாமல் இருக்கிறதா? நம் நாட்டுப் பண்டைய வளர்ப்பு முறையும், பண்டைய கல்வி முறையும் என்று தொலைந்ததோ அன்றே எல்லாம் போச்சு! :(

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 14. மிகவும் வேதனைக்குள்ளாக்கிய நிகழ்வுகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 15. குற்றவாளி முதலில் எல்லாம் திரைப்படம் என்று சொல்லப்பட்டது.
  இப்போது நான் சொல்கிறேன் அந்த குற்றவாளி கணினியும் அலைபேசியும் தான்.
  கடிவாளம் இல்லா கணினிக்குத் தணிக்கையே இல்லையே ..... அரசு கண்டிப்பாக
  இதில் தலையிட்டு நிறைய விஷயங்களைத் தடை செய்யலாம்.
  over exposure at tender adolescent age itself which spoils their mind .......even adults fail in controlling !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   Delete
 16. தன் மகனோ மகளோ தவறிழைக்க மாட்டார்கள் என்று பெற்றோரின் நம்பிக்கை. முதல் குற்றவாளி சம்பந்தப்பட்டவர் தான். தெரியாமல் செய்வதல்ல இவை. அத்துமீறலினால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய செய்திகளைப் படிக்க / கேட்க.. நிறையவே இப்போது ஊடகங்கள் உதவுகின்றன. அதே சிக்கல் நமக்கு நேராது என்கிற அசட்டுத் துணிச்சல்தான் இவர்களை எல்லை தாண்ட சொல்கிறது.. இளமை வேகம்.. பின் விளைவுகள் குறித்த பயமின்மை.. கட்டுப்பாட்டுடன் வைக்கும் பெற்றோரையே டிமிக்கி கொடுக்கிற வாரிசுகளும் உண்டு.. நம்மீது அன்பு காட்டுகிற பெரியவர்களை ஏமாற்ற முனைவது நமக்கே ஆப்பு வைத்துக் கொள்ளும் அறிவீனம் என்று புரிந்து கொள்ள வேண்டும் இளைய தலைமுறை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 17. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் நல்ல பண்புடன் வளர பெற்றோர்தான் முதல் காரணமாயிருக்கிறார்கள்.... ! வளர்ப்பில் குறைபாடு இருக்கும் பட்சம் சமூகம், ஊடகங்களில் இருக்கும் தவறுகள் எளிதாக அவர்களை அந்த பாதைக்கு கொண்டு சென்று விடுகிறது.

  ஒழுக்கம் என்பது இருபாலருக்கும் அவசியமானது என்ற சமூக நோக்கு வர வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா அன்பரசு.

   தங்களது முதல் வருகையோ?.....

   Delete
 18. யார் குற்றவாளி...:(

  பெற்றோரா.. இல்லை இங்கு சம்பவப்பட்டவர்கள்
  பெற்றோர் சொல்லுக்கும் மேலாக சுயபுத்தியும் உள்ளவர்கள்தானே...

  எங்கோ போகிறது எல்லாம்..
  வருத்தம் மட்டுமே மிச்சம்...:(

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 19. //இளம் குருத்துகளை இப்படி அழித்து விட்டார்களே என வருத்தப் படுவதைத் தவிர வேறொன்றும் புரியவில்லை.//

  ;(((((

  சேலையில் முள் விழுந்தாலும், முள்ளில் சேலை விழுந்தாலும் பாதிக்கப்படப்போவது சேலை மட்டுமே.

  பெண்களுக்கு சுதந்திரமாவது மண்ணாங்கட்டியாவது. அவர்கள் அடங்கி ஒடுங்கி ஆர்பாட்டம் இல்லாமல் இருக்குமிடம் தெரியாமல் சமத்தாக இருப்பது ஒன்றே பாதுகாப்பானது.

  குறிப்பிட்ட வயதுக்கு மேல் பெண்கள் ஆண்களுடன் எந்த விதத்திலும் [Telephone, e-mail, chatting, face-book, etc., etc.,] பழகுவதே முற்றிலும் தவறு என்பது என் மிகத்தாழ்மையான கருத்து.

  இவற்றையெல்லாம் படிக்கவே மிகவும் வேதனையாக உள்ளது, வெங்கட் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
  2. பெண்களுக்கு சுதந்திரமாவது மண்ணாங்கட்டியாவது. அவர்கள் அடங்கி ஒடுங்கி ஆர்பாட்டம் இல்லாமல் இருக்குமிடம் தெரியாமல் சமத்தாக இருப்பது ஒன்றே பாதுகாப்பானது. //

   இது ரொம்ப பழங்கால கருத்து சார். இன்னமுமா இதே மாதிரியான சிந்தனையில் இருப்பீங்க? கேக்கறதுக்கே வருத்தமா இருக்கு. ரோட்ல போனா இப்பல்லாம் விபத்துகள் நிறையவே நடக்குதுன்னு வெளிய போகாம இருக்கறமா என்ன?

   Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோசப் ஜி!

   Delete
 20. //இளம் குருத்துகளை இப்படி அழித்து விட்டார்களே என வருத்தப் படுவதைத் தவிர வேறொன்றும் புரியவில்லை.//

  ;(((((

  சேலையில் முள் விழுந்தாலும், முள்ளில் சேலை விழுந்தாலும் பாதிக்கப்படப்போவது சேலை மட்டுமே.

  பெண்களுக்கு சுதந்திரமாவது மண்ணாங்கட்டியாவது. அவர்கள் அடங்கி ஒடுங்கி ஆர்பாட்டம் இல்லாமல் இருக்குமிடம் தெரியாமல் சமத்தாக இருப்பது ஒன்றே என்றும் பாதுகாப்பானது.

  குறிப்பிட்ட வயதுக்கு மேல் பெண்கள் ஆண்களுடன் எந்த விதத்திலும் [Telephone, e-mail, chatting, face-book, Google+ etc., etc.,] பழகுவதே முற்றிலும் தவறு என்பது என் மிகத்தாழ்மையான கருத்து. அதுவும் நேரில் சந்திப்பது அதைவிட மிகப்பெரிய ஆபத்து.

  எவ்வளவு செய்திகள் இதுபோல திரும்பத்திரும்ப வந்தாலும் யாரும் திருந்தப்போவது இல்லை. இதை அவ்வப்போது மறந்து விடுவார்கள்.

  பாதிக்கப்பட்ட பெண்களாலும் குடும்பத்தாராலும் மட்டுமே தான் இவற்றை மறக்க முடியாது. கடைசிவரை நினைத்து நினைத்து வெந்து நொந்து போவார்கள்.

  மனம் காவலா .... மதில் காவலா ... என்பார்கள், அந்தக்காலத்தில்.

  இன்றைய குற்றவாளிகள், சமூக விரோதிகள் மனதையும் உடைத்து, மதிலையும் உடைத்து, வீர தீர சாதனைகள் புரிவதாக நினைத்து, தண்டனையின்றி தப்பித்தும் விடுவது தான் வேதனையிலும் வேதனை.

  இவற்றையெல்லாம் படிக்கவே மிகவும் வேதனையாக உள்ளது, வெங்கட் ஜி.

  பெண் குழந்தைகளை வைத்துள்ளவர்கள் அதிக கவனமாக விழிப்புணர்வுடன் இருக்கட்டும். வேறென்ன சொல்ல ;(

  ReplyDelete
  Replies
  1. மனம் காவலா..... மதில் காவலா? அதே தான்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 21. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 22. பதிவர் சந்திப்பில் பார்த்தும் உரையாட முடியவில்லை! இன்று வலைச்சர அறிமுகம் மூலம் தளத்தை தொடர்கிறேன்! நன்றி! மாறி வரும் கலாச்சார சீரழிவுகளே இது போன்ற குற்றங்களுக்கு காரணம் என்று தோன்றுகிறது! நல்லதொரு பதிவு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

   Delete
 23. பெண்களின் சுதந்திரம் ஒரு பெரிய கேள்விக் குறியாகத் தானிருக்கிறது. ?
  உங்கள் பதிவைப் படிக்க படிக்க மனம் வலித்தது. வருங்கால் பெண்கள் நிலையை நினைத்தாலே அச்சம் தான் மேலிடுகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 24. தனி மனித ஒழுக்கமே சமூகத்தை சீர்திருத்தும்.... த.ம.8

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

   Delete
 25. இதயெல்லாம் கேள்விப்படும்போதே வயத்துல புளியை கரைக்குது! நம்ம வீட்டுலயும் 2 பொட்டப்புள்ள இருக்கேன்னு!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.....

   Delete
 26. விடையில்லாமல் சுற்றும் கேள்விகள்.

  ReplyDelete
  Replies
  1. அதே தான்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 27. குழந்தைகள் மட்டுமின்றி அவர்களது பெற்றோர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்...

  மாதர் சங்கமும் பிரண்ட்ஸ் கிளப்பும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை கொடுத்துவிடாது என்பதை உணர்ந்து அவர்களைப் பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. அனைவருமே விழிப்புடன் இருக்க வேண்டியது தான்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
  2. தமிழ் மணம் ஒன்பதாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 28. தாங்கள் எழுப்பிச் செல்லும்கேள்விகள் எல்லாம்
  மிகச் சரியானதே ?
  வாழும் சூழலை சீர்செய்ய என்ன செய்யப்போகிறோம்
  எதிர்காலம் அச்சமூட்டுவதாகத்தான் இருக்கிறது
  ஆழமான சிந்தனையுட்ன கூடிய பகிர்வுக்கு
  மனமார்ந்த நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 29. ஒட்டு மொத்த சமூகத்தையும் இக் குற்றம் சாரும் .தனி மனித ஒழுக்கத்தைக்
  கடைப் பிடிப்பதனால் மட்டும் இக் குற்றம் நிகழாமல் இருக்கப் போவதில்லை .
  தனி மனித ஒழுக்கம் அனைவருக்கும் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒன்று .
  ஆனாலும் அதையும் அத்து மீறி இக் குற்றத்தைச் செய்பவர்களுக்குச் சட்டம்
  கொடுக்கும் தண்டணையானது மிகவும் நினைத்துப் பார்க்கக் கூடியதாகவும்
  அச்சத்தைக் கண்முன் நிறுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும் .இங்கே ஓர்
  எடுத்துக் காட்டுக்காகத் தாங்கள் சொன்ன நிகழ்வுகள் போல் இன்னும் இன்னும்
  எத்தனையோ கொடிய நிகழ்வுகள் பெண்ணினத்திற்கு எதிராக அன்றாடம் நிகழ்ந்த
  வண்ணம் தான் இருக்கின்றது .இன்றல்ல நேற்றல்ல நீண்ட காலமாக. இதனை
  நிறுத்த முடியும் என்றால் அது சட்டத்தினால் மட்டுமே முடியும் . சட்டம் இதுவரைத் தன்
  கடமையை இங்கே சரிவரத் தான் செய்கின்றதா ?............வலு கட்டாயமாக ஒரு
  பெண்ணின் வாழ்வைச் சீரழிக்கும் இக் கொடிய மிருகங்களுக்குச் சட்டம் கொடுக்கும்
  தண்டணை தான் என்ன ?...பாதிக்கப் பட்ட மக்களால் கொடுக்க நினைக்கும்
  தண்டணையைச் சட்டம் ஏற்றுக் கொள்ளுமா ?....இந்த விடயத்தில் அச்சத்தைக் கொடுக்காத சட்டமும் அதைக் கண்டு பொங்கி ஏழாத மக்களும் தான் இக் குற்றத்திற்கும்
  பொறுப்பாளிகள் .கல்வியறிவில் சிறந்து விளங்கினாலும் நம்பிக்கை ஊட்டும்
  வார்த்தைளால் அறிவு மழுங்கடிக்கப் படுகிறதே .அப்பாவித் தனமான மக்கள் இவர்கள்
  போன்று இன்னும் எத்தனை எத்தனையோ பேர் இருக்கத்தான் செய்கின்றனர் உலகளாவிய
  ரீதியில் :(((((( விழிப்புணர்வு தரக்கூடிய சிறப்பான இப் பகிர்வு மேலும் மேலும் தொடர
  வேண்டும் சகோதரா !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்

   Delete
 30. கொடியிடையில் மயங்கிக்
  கொடுமை தனை இழைக்கும்
  கொடியவரை அழித்திடவே
  கொண்டு வாரும் புதுச் சட்டம் ..

  அடிமையல்ல பெண்ணினத்தின்
  அடி வயிறு பத்தி எரிகிறது .....
  துணிவுடனே துப்பாக்கியைத்
  தூக்கி நில்லும் இவ்விடத்தில் ..

  வெறிப் பிடித்த நாய்களென்று
  கொன்று குவிக்கும் சட்டத்திற்கு
  ஐந்தறிவும் ஒன்று தான்
  ஆறறிவும் ஒன்று தான் .....

  வாய் பேசா நாய்களுக்கு
  வகுத்த சட்டம் இப் பேய்களுக்கும்
  வர வேண்டும் உலகினிலே என்று
  வரும் வரைக்கும் கொடி பிடிப்போம் ....

  அம்பாளடியாள்

  ReplyDelete
  Replies
  1. கருத்துள்ள கவிதை.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்....

   Delete
 31. தனிமனித ஒழுக்கம் அவசியம்! இளம் பெண்கள் தனியே செல்வதை இரவில் தவிர்த்தல் அவசியம்! பெற்றோர்க்கும் பங்குண்டு! சிந்திக்க வைக்கும் பதிவு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 32. Kandikka vendiya vizhayangalai kandikka thavariya petrorgale kutravaligal.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 33. இது போல தொடர் நிகழ்வுகள் அரசாங்கத்தின் சட்டம் ஒழுங்கு நல்ல நிலையில் இருப்பதை தான் காட்டுகிறது.பெண்களும் பெற்றவரும் பிரச்சனை அடுத்தவருக்கு தானே என்கிற மனோ பாவம் .சுதந்திரம் என்பது சிங்கையில் இருப்பவர்கள் பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு தனியாக போவதை பார்த்து இருக்கலாம் .சட்டம் அங்கே சரியாக இருக்கிறது..ஆனால் இங்கே??????.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனிவாசன்.

   Delete
 34. // மகளுக்கு சுதந்திரம் தருகிறேன் என்ற பெயரில் எந்த நேரத்திலும் வெளியே செல்ல அனுமதி அளித்த பெற்றோர்களா? இரவு எட்டு மணிக்கு மேல் வெளியே செல்லும் போது, “தனியே போவது அவசியமா?, எங்கே செல்கிறாய்” என்று கேட்காது இருப்பது தில்லியில் மிக சாதாரணம். பத்து பதினோரு மணிக்குக் கூட பெண்கள் வீட்டின் அருகில் இருக்கும் பூங்காக்களில் தனியாக சுற்றுவது இங்கே வழக்கம். அந்த அளவிற்கு இங்கே பெண்களுக்குச் சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள் பெற்றோர்கள். இந்த சுதந்திரம் கொடுக்கும் பெற்றோர்கள் குற்றவாளிகளா? //


  **இதில் மகள் என்பதை மகன் எனவும் பெண்கள் என்பதை ஆண்கள் எனவும் மாற்றி படித்தால் பெற்றோர்களே குற்றவாளிகள்**

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி Cookery Musings.....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....