எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, October 27, 2013

கொலு பொம்மைகள்…..
நவராத்திரி சமயத்தில் பல வீடுகளில் கொலு வைப்பது வழக்கம் அல்லவா? அப்படி தில்லியில் கொலு வைத்திருந்த சில நண்பர்களின் வீடுகளுக்குச் சென்றபோது [வேற எதுக்கு சுண்டல் சாப்பிடத்தான்!] அங்கிருந்த கண்கவர்ந்த சில பொம்மைகளை படம் எடுத்தேன். அவற்றின் படங்கள் தான் இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சில பொம்மைகள் மிகவும் பழமையானவை. அதைப் போன்ற பொம்மைகள் வேறெங்கும் நான் பார்த்ததில்லை. அதனால் அவற்றையும் புகைப்படம் எடுத்தேன். வேறெதற்கு, உங்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான்!


அம்மி மிதித்து அருந்ததி பார்த்து…… 
பேண்ட் வாத்தியங்கள் முழங்க….
கல்யாணம்…  ஆஹாஹா கல்யாணம்……


இங்கும் அம்மியும் அருந்ததியும் உண்டு!
ஆனால் பேண்ட் வாத்தியம் மிஸ்ஸிங்…..
அந்தக் காலத்து கல்யாணம் போல!


”கெட்டி மேளம்…. கெட்டி மேளம்….” பலரும் குரல் கொடுக்க….
அது கேட்டவுடனே வாசிக்கத் தயாராக இருக்கிறோம்!


கல்யாண சமையல் சாதம்… காய்கறிகளும் பிரமாதம்……


காந்தி தாத்தா சொன்ன குரங்கு பார்த்து இருப்பீங்க…. 
அதையே சொல்லும் எங்களைப் பார்த்ததுண்டா?


விஷ்ணுவைத் தாங்கியபடி கருடன்….
வீதியுலா போகத் தயாராக!


சிவன் – பார்வதி……
எதிரே பணிவுடன் கார்த்திகைப் பெண்கள்…..
தாமரை மலர்களில் ஆறுமுகன்!


தமிழகமும் ஒடிசாவும்….
தமிழகத்திலிருந்து மரப்பாச்சி பொம்மைகள்…..
ஒடிசாவிலிருந்து பூரி ஜகந்நாத் பொம்மைகள்…..


பத்து அவதாரங்கள்……
அஷ்ட லக்ஷ்மி பொம்மைகள்…..


நர்த்தன கிருஷ்ணர்கள்…..
[கிட்டத்தட்ட ஐந்து தலைமுறைகளுக்கு மேல் பூஜிக்கப்பட்ட விக்ரஹங்கள் இவை.….. தலைமுறை தலைமுறையாக காப்பாற்றி வந்திருக்கிறார்கள்….]

என்ன நண்பர்களே, இந்த வார புகைப்படங்களை ரசித்தீர்களா? அடுத்த வாரம் ஞாயிறன்று வேறு சில புகைப்படங்கள் தொடரும்….. 

மீண்டும் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

52 comments:

 1. சிறு வயதில் கொலு பார்த்த நினைவுகள் வருகின்றன. அருமையான கொலுக் காட்சி ஐயா. வழங்கியமைக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 2. அற்புதமான கொலு பொம்மைகள்
  ஊறுகாயின் ருசி ஊற ஊற என்பதுபோல
  நாள்பட்ட பழைய பொம்மைகளின் அழகு
  புதிய பொம்மைகளில் இல்லையென்பது
  தெளிவாகத் தெரிகிறது
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உண்மை....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 3. Replies
  1. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 4. எல்லாமே வெகு அழகாக இருந்தன. 3, 5,6 மிகவும் பிடித்தது.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஆதி......

   Delete
 5. கொலு பொம்மைகள் வித்தியாசமாக அழகாக உள்ளது... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 6. நம்முடைய இதிகாசங்களையும்
  கடவுளர்களின் அவதாரங்களையும்...
  திருமணத்தில் நம்முடைய பாரம்பரியங்களையும்
  விளக்கும் அழகான கண்காட்சி நண்பரே..
  காணச் செய்ததற்கு நன்றிகள் பல.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

   Delete
 7. அனைத்து கொலு பொம்மைகளும் அழகோ அழகு. நம்மையே சிறு குழந்தைகளாக்கி குதூகலம் அடையச் செய்வதே கொலுவின் தனிச்சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 8. நர்த்தன கிருஷ்ணர்கள்…..
  [கிட்டத்தட்ட ஐந்து தலைமுறைகளுக்கு மேல் பூஜிக்கப்பட்ட விக்ரஹங்கள் இவை.….. தலைமுறை தலைமுறையாக காப்பாற்றி வந்திருக்கிறார்கள்….]

  வியக்கவைத்தது ...ரசிக்கவும் வைத்தது ..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 9. பழயன கழிதலும், புதியன புகுதலும் என்ற நிலை இருக்கும் சூழலில், இந்த மாதிரியான கலாசார உணர்வுகளை பொம்மைகள் மூலம் வெளிப்படுத்தும் மக்களுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆன்ந்த்....

   Delete
 10. #பேண்ட் வாத்தியம் மிஸ்ஸிங்…..
  அந்தக் காலத்து கல்யாணம் போல!#
  பொம்மை கல்யாணம் அருமை !தற்போதைய கல்யாணங்களில் செண்டை மேளமும் இடம் பெற துவங்கி உள்ளது !
  த.ம 5
  த.ம.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 11. துல்லியமான தரமான தெளிவான படங்கள்.
  எடுத்த விதம் சிறப்பு கொலுவைப் போல்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   Delete
 12. அந்நாளையப் பொம்மைகள்! அனைத்தும் அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 13. அனைத்து கொலு பொம்மைகளும் அழகு.
  அடுக்கின விதமும் உங்கள்படங்களும் சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   Delete
 14. அருமையான கொலு பொம்மைகள்! அழகாக படம் பிடித்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

   Delete
 15. நானும் நாங்கள் சென்று வந்த கொலு புகைப் படங்களைப் பகிரவேண்டும் என்று நினைத்து மறந்தே போய் விட்டது!

  ReplyDelete
  Replies
  1. இப்ப மட்டும் என்ன, பகிர்ந்து விடுங்களேன்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 16. படங்களும் விளக்கமும் அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கண்ணதாசன்.

   Delete
 17. தங்களின் கைவண்ணத்தில் பொம்மைகள் இன்னும் அழகாயினவோ? நல்லதொரு பகிர்விற்கு நன்றீ!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 18. எப்படிப்பட்ட கலகலப்பான பண்டிகை நவராத்திரி. ஒரு காலத்தில் நானும் ’பொம்மைகளை’ப் பார்க்கச் சென்றதுண்டு!!
  சிறு வயதில் சுண்டல் வகையறாவுக்கு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 19. அழகான கொலு பொம்மைகள். பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேல்.

   Delete
 20. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 21. I like Ramiani's comment
  நாள்பட்ட பழைய பொம்மைகளின் அழகு
  புதிய பொம்மைகளில் இல்லையென்பது
  தெளிவாகத் தெரிகிறது. nice

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகாதேவன் ஜி!

   Delete
 22. ரமணி சொல்வது சுவாரசியம்.
  அடுத்த தலைமுறையில் என்ன மாதிரி செட் பொம்மைகள் வைப்பார்கள்? கால் சென்டர், எலக்சன் சீன்...?

  ReplyDelete
  Replies
  1. போர் பொம்மைகள்.....?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 23. ஹைய்யோ!!!! அந்த கருட சேவை அற்புதமா இருக்கு! பழைய பொம்மைகள் எப்பவும் ரொம்பவே அழகுதான்! நல்ல திருத்தமான முகப்பொலிவுடன் இருக்கும்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   கை வலி பரவாயில்லையா?

   Delete
 24. நானே கொலுவிற்கு போனதுபோன்ற உணர்வு! தோன்றுகிறது! படங்களைப் பார்த்ததும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 25. ஆஹா ரசித்தேன். என்ன அழகு. இவ்வளவு பொம்மைகளையும் நவராத்திரி முடிந்த பிறகு எங்கே வைப்பார்கள்? பாதுகாப்பதற்கு ஒரு பெரிய அலமாரியே தேவைப்படும் போலிருக்கு. !

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொரு வருடமும் கொலு முடிந்த பின் பொம்மைகளை பாதுகாப்பாக எடுத்து மரப் பெட்டிகளில் அடுக்கி வைப்பார்கள். அடுத்த வருடம் வரை பொம்மைகளுக்கு உறக்கம் தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி.

   Delete
 26. ஐந்து தலைமுறைகளாக பாதுகாக்கப்படும் அழகிய கொலு பொம்மைகள் ஆஹ்ஹா காணக்கிடைக்காத காட்சி !அருமை ..நம்ம பண்பாட்டை காக்கும் அவர்களுக்கும் அதை காட்சி படுத்திய உங்களுக்கும் நன்றி ..

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகை மின்னல் நாகராஜ்..... மிக்க மகிழ்ச்சி....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....