எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, August 15, 2014

ஃப்ரூட் சாலட் – 102 – ரத்னாபாய் – பட்டன் ரோஸ் - சாதனை அரசிகள்


இந்த வார செய்தி:

புள்ளைங்களுக்காக படகு ஓட்டுறதுஇன்பம்!

தள்ளாத வயதிலும், 'தில்'லாகப் படகு ஓட்டுகிறார் 80 வயது பாட்டி ரத்னாபாய்.  அவர் கதையை இந்த வார செய்தியாகப் பார்க்கலாம்.


கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சாலிக்கடவு கிராமத்தைச் சேர்ந்தவள் நான். திருநெல்வேலியில பாயுற தாமிரபரணி ஆறு போலவே, இங்கேயும் ஒரு தாமிரபரணி ஆறு ஓடுது. அகஸ்திய மலையில உருவாகி, தேங்காய்ப் பட்டினம், கடலுக்குப் போய் சேரும் தாமிரபரணி ஆறு, 60கி.மீ., நீளத்துக்குப் போகுது. அஞ்சாலிக்கடவு கிராமத்துக்கும், அக்கரையிலிருக்கிற மாரையபுரம் கிராமத்துக்கும் நடுவுல ஓடுற இந்த ஆத்தைக் கடக்கத்தான், 25 வருஷமா, எங்க ஊர் மக்களுக்காக, நான் படகு ஓட்டிக்கிட்டு இருக்கேன். இக்கரையில், இருபதுக்கும் மேலான கிராமங்களும், மாரையபுரம் பக்கத்துல நிறைய கிராமங்களும் உள்ளன. ஆத்தை சுத்தி போகணும்னா, 12 கி.மீ., போகணும். இதுவே, படகு வழியா கடந்தா, வெறும் 0.5 கி.மீ., தான்.

என்னுடைய ரெண்டு புள்ளைங்களுமே கல்யாணமாகி, வெளியூரில் இருக்காங்க. ஆரம்பத்துல எங்க வீட்டுக்காரரு ராமய்யன் தான் துடுப்பு போட்டு, படகு ஓட்டிக்கிட்டு இருந்தாரு. ஆற்றின் ஆழம், 60 அடிக்கு மேல இருந்ததால, கீழ விழுந்தா உயிர் பிழைக்க முடியாது. அவரு உடம்புக்கு முடியாம இறந்து போனதும், ஊர்க்காரங்க தவிச்சுப் போய் நின்னது, மனசுக்குகஷ்டமா இருந்தது. என்னோட வீட்டுக்காரரு செய்த சேவையை செய்யணும்ன்னு முடிவு செஞ்சு, அவரு ஓட்டின படகை நான் ஓட்டும்போது, அவர் என் கூடவே இருக்கிற மாதிரி நம்பிக்கை வந்துச்சு.

'பொம்பளையா இருக்க... வயசான காலத்துல உனக்கு ஏன் இந்த வீண் வேலை. புள்ளைங்க சம்பாதிச்சுக் கொடுங்கறதை வெச்சுகிட்டு, சாப்பிட்டு நிம்மதியா இருக்க வேண்டியது தானே?' என, பலரும் புத்திமதி கூறினர். இது வெறும் படகு மட்டுமில்ல. நானும், என் வீட்டுக்காரரும் வாழ்ந்த நினைவுச்சின்னம். என் உசுரு போனாலும், அது இந்தப் படகுல தான் போகணும். படகு ஓட்ட ஆரம்பிச்சபோது, துடுப்பு போட்டு ஓட்டிக்கிட்டு இருந்தேன். தற்போது, 80 வயது ஆவதால், இந்தக் கரையிலிருந்து, அந்த கரைக்கு ஒரு நீண்ட கயிற்றை கட்டி, அது மூலமா புடிச்சி இழுத்து, இக்கரைக்கும், அக்கரைக்கும் வர்றதுமா, என்னோட படகுப் பயணம் தொடர்ந்துக்கிட்டு இருக்கு. 

படகு சவாரிக்காக, எந்த கட்டணமும் வாங்குறதில்ல. அவர்களா விருப்பப்பட்டு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் கொடுத்தா மட்டும் தான் வாங்கிப்பேன். எங்க வீட்டுக்காரரும் படிக்காதவரு, நானும் படிக்கலியேன்னு எப்பவுமே குறைப்பட்டுக்குவோம். ஆனா, நான் ஓட்டுற படகுல, ஏகப்பட்ட புள்ளைங்க படிக்கப் போவதை நினைக்கும்போது, பெருமிதமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு; இந்த வயசுல கஷ்டப்பட்டு, படகு ஓட்டுறது ஓர் அர்த்தமாகவும் இருக்கு.

எத்தனை நல்ல மனது இந்த 80 வயது பாட்டிக்கு.  அவருக்கு இந்த வார பூங்கொத்து!

நன்றி: தினமலர்.

இந்த வார முகப்புத்தக இற்றை:


இந்த வார குறுஞ்செய்தி:

FRIENDSHIP IS NOT HAVING A GANG OF PEOPLE AROUND YOU. IT’S BEST TO HAVE ONE HEART WHICH IS TRULY THINKING OF YOU AND CARING FOR YOU.

ரசித்த பாடல்:

இதயக் கோவில் படத்திலிருந்து எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி அவர்கள் பாடியபாட்டுத் தலைவன் பாடினால்பாட்டு இந்த வார ரசித்த பாடலாய் இதோ உங்களுக்காக!ராஜா காது கழுதை காது:

ரயிலில் தனது தாயுடன் பயணித்த ஒரு சிறுமி: ரயில் புறப்பட்டதும், தனது தந்தையை அலைபேசியில் அழைத்துச் சொன்னது – “அப்பா, நான் தாத்தா வீட்டுக்குப் போய்ட்டு சீக்கிரமா வந்துடுவேன்நீ அழாம சமத்தா இருக்கணும், தைரியமா இருக்கணும். சரியா!”

இந்த வார புகைப்படம்:படித்ததில் பிடித்தது:

”பல பேர் வயதை ஒரு தடையா நினைக்கிறாங்க. உண்மையில் வயது என்பது அனுபவம். சாதிக்க வேண்டும் என்று உந்துதல் இருந்தால், எந்த வயதிலும் சாதிக்கலாம்!” – முத்து சபாரத்தினம்.

-    தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் எழுதிய சாதனை அரசிகள் புத்தகத்திலிருந்து.

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து….


28 comments:

 1. தள்ளாத வயதிலும், 'தில்'லாகப் படகு ஓட்டும் சாதனை அரசியும் ,
  அப்பாவைத்தேற்றும் அழகுக்குழந்தையும் பழக்கலவையில் தனி ருசி..
  பாராட்டுக்கள்..

  இனிய சுதந்திரத்திருநாள் வாழ்த்துகள்.!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 2. பழக்கலவையை வழக்கம்போல் சுவைத்தேன்!
  இனிய விடுதலைத்திருநாள் நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   உங்களுக்கும் எனது மனமார்ந்த விடுதலைத் திருநாள் நல்வாழ்த்துகள்.

   Delete
 3. எல்லாமே அருமை. இதய கோவில் பாடல்கள் எல்லாமே அருமையான பாடல்கள். ரா கா க கா சிரிக்க வைத்தது. முதல் செய்தியை எங்கள் பாசிட்டிவ் செய்திகளுக்கு நானும் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. முதல் செய்தி உங்கள் பக்கத்திலும் வரும் என நினைத்தேன்......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 4. இந்தப் பாட்டியின் தைரியத்தைப் பாராட்டுவதா அல்லது பிறருக்கு
  உதவும் அந்த நல்ல குணத்தைப் பாராட்டுவதா என்று கூட புரியவில்லை !
  கையெடுத்து வணங்குகின்றேன் சகோதரா. பகிர்வுக்கு மிக்க நன்றி .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   தைரியம், நல்லெண்ணம், அவரது நற்குணம் அனைத்துமே பாராட்டுக்குரியவை தான்.

   Delete
 5. பூங்கொத்து வாங்கிய பாட்டிக்கு வாழ்த்துக்கள்! சுவையான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 6. அந்தப் பாட்டியின் திடமும் சேவைக் குணமும் சிலிர்க்க வைத்தன.

  ReplyDelete
  Replies
  1. பாட்டியைப் பற்றி படித்த போது எனக்கும் அதே உணர்வு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 7. அனைத்தும் அருமை நண்பரே! இந்த தல்ளாத வயதிலும் பாட்டி சாதனை செய்துள்ளார் என்றே சொல்ல வேணுட்ம்!

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து சாதனை செய்து வருகிறாரே....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 8. படகோட்டும் பாட்டிக்கு என் சார்பாகவும் ஒரு பூங்கொத்து அண்ணா...
  அப்பாவை அழமால் இருக்கச் சொன்ன குட்டீஸ், பாட்டுத்தலைவன் பாடல் என அனைத்தும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. படகோட்டும் பாட்டிக்கு பூங்கொத்து! :) அவரது சார்பில் எனது நன்றி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

   Delete
 9. ஃப்ரூட் சலாட் இனித்தது. எதைச் சொல்ல எதைவிட.?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 10. அந்த பாட்டியை நம்பி படகில் பயணம் செய்பவர்களைப் பாராட்ட வேண்டியதுதான். இந்த வயதிலும் படகு இழுக்கும் பாட்டிக்கு அந்த ஊர் அதிகாரிகள் ஓய்வு கொடுத்து பென்ஷன் வாங்கித்தர வேண்டும்.
  த.ம.7

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 11. ரத்னா பாய் பாராட்டிற்கு உரியவர். தள்ளாத வயதிலும் அடுத்தவர்களுக்கு உதவும் எண்ணத்துடன் செயல்படுகிறாரே எவ்வளவு பாராட்டினாலும் தகும்
  நன்றி ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி.

   Delete
 12. நான் ஓட்டுற படகுல, ஏகப்பட்ட புள்ளைங்க படிக்கப் போவதை நினைக்கும்போது, பெருமிதமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு; இந்த வயசுல கஷ்டப்பட்டு, படகு ஓட்டுறது ஓர் அர்த்தமாகவும் இருக்கு”.///பாராட்ட வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete
 13. ரா.ஈ. பத்மநாபன்August 21, 2014 at 10:02 AM

  ஏ! ரத்னாபாய் பாட்டி எங்க ஊருல்லா! கன்னியாரி ஜில்லான்னா சும்மாவா!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 14. பாட்டிக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....