எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, November 28, 2014

ஃப்ரூட் சாலட் – 116 – புல்லட் ரயில் – அருணா சாய்ராம் - உப்புமா
இந்த வார செய்தி:

தில்லியிலிருந்து சென்னைக்கு [சுமார் 2200 கிலோ மீட்டர்] 7 மணி நேரத்தில் வர சாத்தியம் உண்டா?  தில்லியிலிருந்து சென்னைக்கு புல்லட் ரயில் விட முடியும் என்றால்! சீனாவும் இந்தியாவும் நினைத்தால் இது சில வருடங்களில் நடந்து விடக்கூடும்!  இது முடியுமா என்பதை தெரிந்து கொள்ள ஒரு Feasibility Study நடத்த இருக்கிறார்கள்.  அதிவேக விரைவு ரயில்களை இயக்கும் சீனாவில் இதற்கான ஆயத்த பயிற்சிக்கு இந்திய ரயில்வே துறையிலிருந்து 100 பேர் வரை பயிற்சி பெறப் போகிறார்களாம். 

இப்போது இந்த தொலைவினை ராஜ்தானி விரைவு ரயில் மூலம் கடக்க சுமார் 29 மணி நேரம் ஆகிறது. மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் புல்லட் ரயில் வந்தால் 7 மணி நேரத்தில் வந்து விடமுடியும். 

சீன அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் இந்த சோதனைகளில் முழு நம்பிக்கையுடன் செயல்படுவோம் என்று சொல்கிறார்கள்.  பார்க்கலாம் – அதிவேக ரயில் வந்தால் நல்லது தானே!

இந்த வார முகப்புத்தக இற்றை:இந்த வார குறுஞ்செய்தி:இந்த வார ரசித்த பாடல்:

அருணா சாய்ராம் அவர்களின் அருமையான குரலில் “விஷமக்கார கண்ணன்பாடல் இந்த வார ரசித்த பாடலாய்.....
 இந்த வார புத்தகம்:

சமீபத்தில் படித்த ஒரு கவிதைத் தொகுப்பு – “தயக்கம் ஏனோ அதைச் சொல்ல! அறுசீர் விருத்தம், எண் விருத்தம், பிற கவிதைகள் என தனித்தனியாக எழுதியவற்றை தொகுத்து வெளியிட்டு இருக்கிறார் ஆசிரியர்.  ஒரே ஒரு கவிதை மட்டும் இங்கே.....

சோலையின் ஏக்கம்!!

மீனோடு போட்டியிடும் கண்கள் மின்னும்!
     மென்நடையைக் கண்டுநாணி அன்னம் ஓடும்!
தேனோடு கலந்திருக்கும் பழங்கள் தோற்கும்!
     தெளிதமிழால் அவள்பேச இனிப்பே முந்தும்!
வானோடு வகைமாறும் மேக வண்ணம்
     வடிவழகில் மாற்றமிடும், அவளைக் கண்டால்
மானோடு மயிலாடும் சோலை ஏங்கும்
     மலர்ப்பாதம் தன்மீது படுமா என்றே!!

இது போன்ற இனிமையான பல கவிதைகளை தன்னுள்ளே கொண்டது இப்புத்தகம்.

எல்லாம் சரி கவிதை எழுதியது யார் என்றே சொல்லாமல் விட்டாயேஎன்று நீங்கள் கேட்குமுன் சொல்லிவிடுகிறேன் – கவிதைத் தொகுப்பு பதிவர் “அருணா செல்வம்அவர்களின் ஏழாவது படைப்பு இது.  தொகுப்பில் உள்ள மொத்த கவிதைகளையும் ரசிக்க விரும்புவர்கள் புத்தகத்தினை இங்கே பெறலாம்:


“மணிமேகலை பிரசுரம், தபால் பெட்டி எண்: 1447, 7 [ப.எண் 4] தணிகாசலம் சாலை, தியாகராயநகர், சென்னை-600017. விலை ரூபாய் 60/-.

இந்த வார புகைப்படம்:சென்ற வாரம் தில்லியில் உள்ள ஒரு சுற்றுலா தலத்திற்குச் சென்றபோது எடுத்த புகைப்படம். குடும்பத்துடன் வந்திருந்த சுட்டிப் பெண் – முதலில் புகைப்படம் எடுத்துக்கொள்ள மறுத்தாலும் பிறகு எடுத்துக் கொள்ளச் சம்மதித்தார்!

படித்ததில் பிடித்தது:

வன்முறையாளர்களின்
துப்பாக்கி ரவைக்குப்
பலியானார்கள் பலர்!
நானோ
அடிக்கடி
என் மனைவியின்
பம்பாய் ரவைக்கு
இரையாகிறேன்!

பல வருடங்கள் முன் படித்த உப்புமா கவிதை! நேற்று வீட்டில் உப்புமா சாப்பிட்ட போது ஏனோ நினைவுக்கு வந்தது!

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

53 comments:

 1. உப்புமா கவிதை அருமை
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 2. Replies
  1. தமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 3. நீங்கள் தில்லிக்கும் சென்னைக்கும் அடிக்கடி சென்று வருவதற்காகவே சீக்கிரம் புல்லட் ரயில் வந்துவிடும். அந்த குழந்தை அழகு.
  உப்புமாவே பிடிக்காது, இதுல உப்புமா கவிதையா?. ஆனாலும் இந்த உப்புமா கவிதை எனக்கு ரொம்ப பிடித்து விட்டது.

  ReplyDelete
  Replies
  1. உப்புமா பிடிக்காது! - இங்கேயும் அதே அதே சபாபதே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 4. சாலட் எனில் எப்படி பல்சுவை
  இருக்கவேண்டும் என்பதற்கு உங்கள்
  ஃபுரூட் சால்ட் பதிவுகளே நல்ல உதாரணம்
  பின் புலமாக பாடலைக் கேட்டபடி பதிவுகளைப்
  படிப்பது மிக சுகமாக இருந்தது
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் தொடர்ந்து தரும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி ரமணி ஐயா.

   Delete
 5. Replies
  1. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஐயா.

   Delete
 6. ஃப்ரூட்சாலட் அருமை. அருணாசாய்ராம் இந்த பாடல் எனக்கும் மிக பிடித்தபாட்டு.
  குழந்தை அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 7. அருணா சாய்ராம் அவர்களின் பாடலும், அருணா செல்வம் அவர்களின் கவிதையும்,நீங்கள் படித்த உப்புமா கவிதையும் கூடிய இந்த வார பழக்கலவை அருமை! பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 8. புல்லட் ரயில் நல்லதுதான். இது போல டெக்னாலஜி வசதி ஒன்று இருக்கிறது. ஆனால் உபயோகப்படுத்திக் கொள்ளவில்லை என்றால் நம் தவறுதானே? உப்புமாக் கவிதை அருமை. அருணா செல்வம் 7 புத்தகங்கள் வெளியிட்டு விட்டாரா? அட! வாழ்த்துகள் சகோதரி!


  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
  2. வாழ்த்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

   Delete
 9. செய்தி, சிந்தனைகள், பாடல், குழந்தையின் ஒளிப்படம் அனைத்தும் அருமை. அருணா செல்வம் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
  2. வாழ்த்திற்கு மிக்க நன்றி ராமலஷ்மி அம்மா.

   Delete
 10. உப்புமா கவிதை சூப்பர்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 11. ப்ரூட் சாலட் அருமை...
  அருணா செல்வம் அக்காவின் கவிதை அருமை...
  உப்புமா கவிதை சூப்பர் அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
  2. மிக்க நன்றி குமார்.

   Delete
 12. வீல்சேர் என்றதும் அரசியலாக இருக்குமோ என்று மனம் இழுத்தது. நீங்கள் அப்படி இல்லை என்று அறிவேன். படத்தை ரசித்தேன்.

  அருணா செல்வம் – பதிவர்?

  உப்புமா கவிதையை ரசித்தேன். நீங்கள் மதுரைத் தமிழன் பற்றி எழுதியபோது சொன்ன பூரிக்கட்டை நினைவுக்கு வந்தது.
  த.ம.6

  ReplyDelete
  Replies
  1. அருணா செல்வம் பதிவர் தான். லிங்க் கொடுத்திருக்கிறேனே....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
  2. அருணா செல்வம் - பதிவர்?

   அடக்கடவுளே...... நானும் இவ்வளவு நாளாக பதிவர் என்று தான் நினைத்திருந்தேன். ஐயாவின் லிஸ்ட்டில் நான் இல்லை போலும்.....ம்ம்ம்....

   Delete
 13. ரவை கவிதைஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்

  சகொதரி அருணாசெல்வம் புத்தகம்! வரது கவிதைகள் எல்லாமே அருமையாக இருக்கும்....வாழ்த்துக்கள் சகோதரி!

  அருணாசெல்வம் கவிதையில் கலக்குவார் என்றால் அருணா சாய்ராம் பாடலில்..மிகவும் அனுபவித்து, பாவனைகளுடன் அவர் பாடுவதே அழகுதான். (பார்க்கவும் கேட்கவும்)வித்தியாசமான குரல்... மிகவும் பிடித்த இசையரசி (கீதா) மற்ற கருத்துக்கள் எல்லாம் இருவரதும்.

  சுட்டிப்பாப்பா அருமை. இற்றையும், குறுஞ்செய்தியும் கூட...

  புல்லட் ரெயில் நன்றாகத்தான் இருக்கும். இருக்கின்றது...வருமா..நம்புவோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
  2. தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி துளசிதரன் ஐயா.

   Delete
 14. சுவையாக இருந்தது சகோ..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 15. அருமையான தொகுப்பு. சீக்கிரமே புல்லட் வரட்டும். ரோஷணிக்கு நல்ல செய்தி. அருணா சாயிராம் எத்தனை கேட்டால் போதும். கடைசிப் பெண்ணின் குண்டு முகம் அழகு. அருணா செல்வம் அவர்களின் கவிதைப் பெண்ணும் சோலையும் அமிர்தம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா..

   Delete
  2. தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி வல்லிசிம்ஹன் அம்மா.

   Delete
 16. எனக்கு என்னவோ இந்த மாதிரி அதிவேக ரயில்களை விடுவதை விட நெரிசலைக் குறைக்க பொதுமக்கள் ( பணக்காரர்கள் அல்ல) உபயோகப் படுத்த அதிக ரயில்களும் அதிக வசதிகளும் செய்து தருவதே நல்லது என்று தோன்றுகிறது.பணம் இருப்பவர்கள் ஆகாய மார்க்கத்தை உபயோகிக்கலாம். குழந்தை படம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 17. புல்லட் ரயில் வந்தால் நல்லதுதான் ! குறுஞ்செய்தியும் முகநூல் இற்றையும் சிறப்பான ஒன்று! கவிதையை எங்கோ படித்த மாதிரி இருக்கே என்று யோசிக்கும் போதே அருணா செல்வமுடையது என்று சொல்லி நூல் கிடைக்குமிடமும் தந்துவிட்டீர்கள்! உப்புமா கவிதை கலகல! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
  2. என் கவிதையை ஞாபகத்தில் வைத்தமைக்கு மிக்க நன்றி சுரேஷ்.

   Delete
 18. #என் மனைவியின்பம்பாய் ரவைக்குஇரையாகிறேன்#
  இந்த ரவைக்கு தப்பியோர் யாரும் உண்டா :)
  த ம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 19. வீட்ல தினம் இனி உப்புமா தானா?
  பதிவர் அருணா செல்வமா?

  ReplyDelete
  Replies
  1. தினம் உப்புமா! :) அது சரி....

   பதிவர் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
  2. நான் எழுதுவதெல்லாம் பதிவா.....? என்ற சந்தேகம் வந்துவிட்டது....... ம்ம்ம்...

   Delete
 20. த ம 10
  அந்த வில் சேர் பாட்டி வாவ்...
  கலக்றீங்க பாஸ் ...
  புலட் ட்ரைன் வந்தால் பெரிய விடயம் தான் ..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 21. இந்த மாதிரி அதிவேக ரயில்களை விடுவதை விட நெரிசலைக் குறைக்க பொதுமக்கள் ( பணக்காரர்கள் அல்ல) உபயோகப் படுத்த அதிக ரயில்களும் அதிக வசதிகளும் செய்து தருவதே நல்லது என்று தோன்றுகிறது.பணம் இருப்பவர்கள் ஆகாய மார்க்கத்தை உபயோகிக்கலாம். நம் நாட்டு நிலவரப்படி ஜனத்தொகை குறைக்கும் வழியாக மாறி விடாது என யாராவது உத்திரவாதம் தருவார்களா?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி yesjiar.

   உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

   Delete
 22. நாகராஜ் அண்ணா..... மிக்க நன்றி.

  நேரம் இல்லாமையால் அதிகமாக வலைப்பக்கம் வர முடிவதில்லை.

  உங்களின் ஃபுரூட் சாலட் எப்போதும் போல மிக அருமை.
  அதில் என் புத்தக அறிமுகமும்.....!!! நன்றி நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....