எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, November 12, 2014

மலையடியை முத்தமிடும் நதி – கவிதை எழுத அழைப்புஎன்னைப் போன்று கவிதை எழுதத் தெரியாதவனிடம் ஒரு படத்தினைக் கொடுத்து அதைப் பற்றி கவிதை எழுத வேண்டும் என்று சொன்னால் – கூடவே எழுதாவிட்டால் கடுமையான தண்டனை உண்டுஎன்றும் சொல்லிவிட்டால் கூட “தண்டனை எதுவானாலும் பரவாயில்லை அதைப் பெற்றுக் கொள்கிறேன். கவிதை எழுதத் தெரியாது என்று தான் சொல்லுவேன். உரைநடையாக எதையாவது எழுத வேண்டுமானாலும் கொஞ்சம் முயற்சித்துப் பார்க்கலாம்! கவிதை நமக்கு சுட்டாலும் வராது! 

கல்லூரி காலத்தில் வரிகளை மடக்கிப் போட்டு கவிதை என்று சொல்லி தமிழாசிரியை ஒருவரிடம் திட்டு வாங்கியதுண்டு! அந்த கவிதை என்ன என்று கூட இப்போது நினைவில்லை.

மனைவி
அமைவதெல்லாம்
தரகர் கொடுத்த வரம்

என்று எழுதி விட்டு அதை கவிதை என்று நினைத்துக் கொண்டவன் நான்! :)

இப்படியெல்லாம் இருந்தாலும், மற்றவர்களின் கவிதைகளைப் படித்தாவது இன்புறுவோம் என்று நிறைய கவிதைகளைப் படித்து மகிழ்ச்சி அடைவது வாடிக்கையாகிவிட்டது. கல்லூரி காலத்தில் படித்த பல கவிதைகளை நாட்குறிப்பில் எழுதி வைத்துக் கொண்டிருந்தேன். அந்த நாட்குறிப்பு இன்னமும் என்னிடம் உண்டு! அதாவது 1989-91 வரை நான் படித்த பல கவிதைகள் அதில் உண்டு!

அதனால் தான் பதிவெழுத வந்ததிலிருந்து கவிதைகளை தொடர்ந்து படித்து வருவது மட்டுமல்லாமல், எனது பக்கத்தில் படம் ஒன்றைக் கொடுத்து கவிஞர்களையும், கவிதாயினிகளையும் கவிதை எழுத அழைப்பதை வழக்கமாக வைத்திருந்தேன்.  அப்படி கொடுத்த படங்களும், அதற்கு நண்பர்கள் எழுதிய கவிதைகளும் உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்படி விடுத்த அழைப்புகளின் சுட்டி கீழே.சமீபத்தில் முகப்புத்தகத்தில் இப்படி ஒரு படமும் அதற்கான கவிதையும் நெய்வேலி நகரில் எங்கள் அடுத்த வீட்டில் இருந்த ஸ்ரீ வெளியிட்டு இருந்தார்.  அதைப் பார்த்தவுடனே மிகவும் பிடித்து விட்டது. படமும் மிக அருமையான படம்.  ஒரு நதி. பக்கத்தில் மலைத் தொடர். நதியின் ஓரத்தில் ஒரு சிறிய வீடு. ரம்மியமான சூழல்.  இப்படி ஒரு இடம் இருந்தால் நிம்மதியாக நான்கு ஐந்து நாட்கள் அங்கே ஏகாந்தமாய் இருக்கத் தோன்றும். 

இந்தப் படத்திற்கு நண்பர்கள் எப்படி கவிதை எழுதுவார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அதைக் கேட்டுவிடுவோமே என்று தோன்றியதால் தான் இந்தப் பதிவு!

அந்தப் படத்தினையும்,  அதற்கு ஸ்ரீஎழுதிய கவிதையும் கீழே கொடுத்திருக்கிறேன். மலைத் தொடர்கள் இருபுறமும்
கரை படர்த்த
நடுவில் ஓடும்
நதியின் நீரோட்டம்!

நீரின் சலனம்
மலையை அசைப்பதில்லை
மலையின் மௌனம்
நதியை நிறுத்துவதில்லை!

தொடர்ந்து ஓடும் நதியால்
மலைமுகட்டைத் தீண்டமுடியாது!
நதியைத் தீண்ட
மலை தன் தலையைத் தாழ்த்தாது!

மலையடியை முத்தமிட்டு
நதி தன் விரகத்தைச் சொல்லும்!
மலை உச்சியை அதன் ஏக்கம்
அசைக்கவே முடியாது!

மலையின் கம்பீரம் அதன் மௌனத்தில்தான்!
நதியின் நளினம் அதன் நீரோட்டத்தில்தான்!
ஓடும் நதி ஓடிக்கொண்டிருக்கும்!
வளரும் மலை வளர்ந்து கொண்டிருக்கும்!
இரண்டையும் நீல வானம் வேடிக்கைப் பார்க்கும்!
-          ஸ்ரீ

என்ன நண்பர்களே, படத்தைப் பார்த்தது மட்டுமின்றி, கவிதையையும் படித்து ரசித்தீர்களா!  எதற்கு காத்திருப்பு, மடை திறந்த வெள்ளம் போல உங்கள் கற்பனை ஊற்றுகள் கவிதைகளாகப் பாயட்டும்! உங்கள் கற்பனையில் வடித்த கவிதைகளை பின்னூட்டத்திலோ உங்கள் தளத்திலோ வெளியிடுங்கள். கவிதையை உங்கள் பக்கத்தில் வெளியிட்டால், அத்தகவலை இப்பதிவிற்கான பின்னூட்டத்தில் சொல்லுங்கள்!  உங்களுக்கு கவிதை எழுத ஒரு வாய்ப்பு! என்னைப் போன்ற கவிதை ரசிகர்களுக்கு பல கவிதைகள் படித்திட வாய்ப்பு! 

உங்கள் கவிதைகளுக்கான காத்திருப்புடன்....

வெங்கட்
புது தில்லி.

வலைச்சரத்தில் இன்று:   கூட்டுக்குடும்பம் - படித்து உங்கள் மேலான கருத்துகளைச் சொல்லுங்களேன்!

50 comments:

 1. ஸ்ரீ எழுதிய கவிதை மிகப் பொருத்தமான கவிதை . இயல்பை சொல்வதிலும் ஒரு அழகு உண்டு. அது இந்தக் கவிதையில் அற்புதமாக தெரிகிறது. நிறைவு வரிகள் மிக அருமை

  ReplyDelete
 2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

  ReplyDelete
 3. நல்லது
  கவிதைகள் வரட்டும் என ஆவலோடு காத்திருக்கிறேன்
  அன்பன்
  மது
  தம மூன்று

  ReplyDelete
  Replies
  1. காத்திருப்போம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது!

   Delete
 4. கவிஞர்களின் கவிதைக்கு நானும் காத்திருக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 5. இயற்கை எழில் கொஞ்சும் இடம். அழகிய படம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 6. மலையின் கம்பீரம் அதன் மௌனத்தில்தான்!
  நதியின் நளினம் அதன் நீரோட்டத்தில்தான்!
  ஓடும் நதி ஓடிக்கொண்டிருக்கும்!
  வளரும் மலை வளர்ந்து கொண்டிருக்கும்!
  இரண்டையும் நீல வானம் வேடிக்கைப் பார்க்கும்!//

  மிக அருமையான் வரிகள்.
  வாழ்த்துக்கள்.ஸ்ரீ அவர்களுக்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 7. வணக்கம் அண்ணாச்சி கவிதை அருமை காட்சி இன்னும் அழகு .முன்னர் போல கட்டுப்பாடு இல்லை என்பதால் ஏதோ சிரி அவர்களின் மேடையில் நானும் ஒரு பார்வையாளனாக கவிதை பாடுகின்றேன் என் தளத்தில்.ஏதோ இல்லக்கணம் அறியாத என்னையும் எழுத தூண்டும் படப்பகிர்வுக்கு நன்றி!லிங்கு தனிமரம் பின் தரும்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன். பதிவிட்ட பின் பின்னூட்டத்தில் சுட்டி தந்து விடுங்கள்!

   Delete
 8. வணக்கம் சகோதரரே!

  இயற்கையின் வண்ணத்தில் கண்ணுக்கும், மனதுக்கும் ரம்மயமான உணர்வினை தரும் படம். அதற்கேற்ற கவிதையும் அருமை.கவிதையை எழுதிய " ஸ்ரீ " அவர்களுக்கு வாழ்த்துக்கள். சிறப்பான பகிர்வு பகிர்ந்தமைக்கு நன்றி!

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி. நீங்களும் உங்கள் கவிதையை எழுதி வெளியிடுவீர்கள் தானே!

   Delete
 9. அருமையான புகைப்படம்... அருமையான கவிதையும்.... வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 10. படமும் கவிதையும் அருமை! என்னுடைய ஹைக்கூ ஒன்று

  மலையை
  விழுங்கிக்கொண்டு இருக்கிறது
  நதி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்....

   ஹைகூ அருமை...

   Delete
 11. கவிதை அருமை
  கவிஞர்கள் கவி மழை பொழியட்டும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 12. Replies
  1. த்மிழ் மணம் ஆறாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 13. மண்டைக் காய்ந்து போய் இருந்த வேளையில் பசுமையான சூழல் கவிதை அருமை.
  ஸ்ரீ அவர்களுக்குப் பாராட்டுக்கள்.
  நானும் எழுத முயற்சிக்கிறேன் நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்....

   கவிதை எழுதி தகவலும் சொல்லுங்கள்!

   Delete
 14. கடவுள் தன் தூரிகை எடுத்து
  அழகு வண்ணம் குழைத்து குழைத்து செய்த
  முப்பரிமாண சிற்பம்

  இங்கே இருப்பது
  வெறும் ஓவியம் அல்ல
  ஜீவ சித்திரம்
  இதிலே தோய்ந்த மனம்
  சொர்க்கம் சென்று வந்த
  சுகமடையும்

  இங்கே
  ஒரு நாள் வாழ்ந்தாலே
  நூறு ஜென்மம் வாழ்ந்த
  திருப்தி வரும்

  மாந்தர்களே
  செயற்கை ஓவியங்களை
  ரசித்தது போதும்
  இங்கே வாருங்கள்

  ராஜா ரவிவர்மாவும்
  வரைய இயலா ஓவியம் ஒன்று
  தரையில் படர்ந்திருக்கிறது

  மைக்கேல் ஏஞ்சலோவும்
  வடிக்க இயலா சித்திரம் சித்திரம் ஒன்று
  தன் அழகைக் காண
  அழைப்பிதழை அனுப்பியிருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வாவ்.... அருமையான கவிதை.... பாராட்டுகள் நண்பரே.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை டேனியல்.

   Delete
  2. ஓ.கே. சார். நன்றி. ஒரு அழகான படத்தை பகிர்ந்து என்னை கவிதை எழுதத் தூண்டிய தங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

   Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை டேனியல்.

   எங்களுக்கு அருமையான கவிதை படிக்கத் தந்த உங்களுக்கும் நன்றி!

   Delete
 15. கவிதை அருமை...
  வாழ்த்துக்கள் ஸ்ரீக்கும் தங்களுக்கும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 16. படமும், கவிதையும் அருமை காத்திருக்கிறேன் கவிதைக்காக.....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 17. கவிதைக்கும் நமக்கும் ரொம்ப தூரம் சார்... அவ்வ்வ்வ்....

  ஆனாலும் மற்றவர்களின் கவிதைக்காக காத்திருக்கிறேன்.....

  ReplyDelete
  Replies
  1. வாங்க ராசா வாங்க! நீங்க நம்ம கட்சி! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்.பை.

   Delete
 18. உங்களை மாதிரி தான் சார் நானும். நமக்கு கவிதை எல்லாம் எழுத வராது.
  மற்றவர்கள் கவிதையை படித்து பார்க்கிறேன்,

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 19. மலையும் நதியும் போல் இல்லாமல், படமும் பாட்டும் ஒன்றுக்குள் ஒன்று மூழ்கி,மூழ்கி எழுகின்றன! அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 20. Arumaiyana iyarkai kaatchi. Poruththamana kavidhai. Velittu magizhchi thandhamaikku paaraattukkal.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 21. http://www.thanimaram.org/2014/11/2_13.html

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

   உங்கள் தளத்தில் கவிதை படித்து கருத்துரைத்தேன்!

   Delete
 22. அருமையான மனதைக் கொள்ளை கொள்ளும் படம். எங்களுக்கும் கவிதைக்கும் எட்டாம் பொருத்தம்!!!

  என்ன ஜி இப்படிச் சொல்லிவிட்டீர்கள் உங்கள் ஹைக்கூ (அப்படித்தானே இதற்குப் பெயர்?!!) அருமை!

  ”மனைவி
  அமைவதெல்லாம்
  தரகர் கொடுத்த வரம்”// அருமை! அருமை!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 23. ஸ்ரீ யின் கவிதை மிக அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 24. அநேகமாக உங்களை அந்த கவிதைதான் இந்த புகைப்படத்தையே ரசிக்க தூண்டியிருக்கும் என நம்புகிறேன். அருமையான கவிதை...பரிமாறிய உங்களுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாரதிக்குமார்.

   Delete
 25. அழகான இயற்கை காட்சி. கவிதை எழுத வாய்ப்பினை நல்கியமைக்கு நன்றிகள் சகோதரரே !

  எனது கவிதைக்கான இணைப்பு

  http://tamizhmuhil.blogspot.com/2014/11/blog-post_23.html

  ReplyDelete
  Replies
  1. அழைப்பினை ஏற்று கவிதை படைத்தமைக்கு நன்றி தமிழ்முகில் பிரகாசம் ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....