எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, December 12, 2014

ஃப்ரூட் சாலட் – 118 – பிச்சை – பல்செட் – மனிதனும் மலர்களும்
இந்த வார செய்தி:

மாலைமலர் நாளிதழில் வந்த இந்த செய்தி படித்தவுடன் இதை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.  வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் இவர்கள் பிச்சை எடுக்க வந்திருப்பார்களா என்று தோன்றினாலும், மாவட்ட கலெக்டர் இவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்திருக்கும் செயல் நிச்சயம் பாராட்டுக்குரியது.  மாலைமலர் இணையதளத்தில் வந்த முழு செய்தியும் கீழே!

பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 12 பேருக்கு கல்லூரியில் வேலை: கோவை கலெக்டர் ஏற்பாடுகோவை நகரத்தின் சாலைகளில் பிச்சை எடுத்து திரிந்துக் கொண்டிருந்த 6 பெண்கள் உள்பட 12 பேருக்கு இங்குள்ள கல்லூரி ஒன்றில் வேலை வாங்கித்தந்து கோவை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் உதவி செய்துள்ளார்.

கோவை நகரத்தின் சாலைகளில் பிச்சை எடுத்து திரிந்துக் கொண்டிருந்த இவர்கள் அனைவருக்கும் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அரசு புனர்வாழ்வு மையத்தில் பாத்திரம் கழுவுதல், இடங்களை பெருக்கி சுத்தப்படுத்துவது உள்ளிட்ட தொழில்சாரா பயிற்சிகள் சுமார் ஒருவார காலம் அளிக்கப்பட்டன.

மேலும், மனவளக்கலை மற்றும் மருத்துவத்தின் மூலமாக அவர்களின் மனப்பாங்கை மாற்றி, இங்குள்ள கல்லூரி ஒன்றில் வேலையும் வாங்கித்தந்து கோவை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் உதவி செய்துள்ளார்.

குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா கல்லூரியில் இவர்கள் 12 பேருக்கும் வேலை வழங்கும்படி மாவட்ட கலெக்டர் செய்த சிபாரிசை ஏற்று இந்த கல்லூரி நிர்வாகம் இவர்களுக்கு தூய்மை மற்றும் பராமரிப்பு பணிகளை வழங்கியுள்ளது.

மற்றவர்களைப் போல் இவர்களும் ஒரு கண்ணியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று அக்கறை செலுத்திய மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் மற்றும் வேலை அளித்த ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் நிர்வாகிகள் ஆகியோரை பின்பற்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களும் பிரபல தொழில் நிறுவனங்களும் முயற்சித்தால் இன்னும் ஏராளமான பிச்சைக்காரர்களின் வாழ்க்கையில் நிச்சயமாக பல ஒளி விளக்குகளை ஏற்றிவைக்க முடியும்.இந்த வார முகப்புத்தக இற்றை:

இந்த வார குறுஞ்செய்தி:

நூறு வருடங்கள் வாழவேண்டிய மனிதன் அழுது கொண்டே பிறக்கின்றான்! ஆனால் சில மணித்துளிகள் மட்டுமே வாழக்கூடிய மலர்கள் சிரித்துக் கொண்டே பிறக்கின்றன!!இந்த வார ரசித்த பாடல்:

Holland has got talent show ஒன்றில் பாடிய ஒன்பது வயது சிறுமியான Amira Willighagen-வின் பாடலைக் கேட்டதுண்டா நீங்கள்? நான் சென்ற வருடமே கேட்டிருக்கிறேன்.  நேற்று நண்பர் ஒருவர் மீண்டும் இதை தனது முகப்புத்தகத்தில் பகிர்ந்து கொண்டார். உங்களுடனும் இதைப் பகிர்ந்து கொள்கிறேன்!
இந்த வார காணொளி:

பல் செட் – வைத்துக் கொள்வது கொஞ்சம் கடினமான விஷயம் – பல சமயங்களில் தொல்லை தரும் விஷயம்! காக்கா தூக்கிக் கொண்டு போகாமல் வேறு இருக்க வேண்டுமே! [சில வருடங்கள் எனது பக்கத்தில் எழுதிய பதிவான அண்டங்காக்காயை வென்ற பல்லவன் நினைவுக்கு வருகிறதா?] இந்த பெரியவர் பல் செட் வைத்து என்னமா விளையாட்டு காண்பிக்கிறார் பாருங்கள்!

இந்த வார புகைப்படம்:

தில்லியில் குளிர் ஆரம்பித்து விட்டது! மக்கள் குளிர்கால உடைகளை அணிகிறார்களோ இல்லையோ எருமை மாடுகளும் நாய்களும் ஸ்வெட்டர் போட்டுக்கொள்ள ஆரம்பித்துவிட்டன! தில்லியில் கடைத்தெரு ஒன்றில் குழந்தைகளுக்கான உடைகள் தொங்கவிடப்பட்ட காட்சி இந்த வார புகைப்படமாக!


படித்ததில் பிடித்தது:

என்று தணியும்.....

பாலகன் அழும்
குரல் கேட்டு
பால்புட்டியுடன்
ஓடி வந்தாள் பார்வதி
பயந்து போனாள்....!

அங்கே
அங்கமெல்லாம்
மெலிந்த நிலையில்
அழுது கொண்டிருந்தார்கள்
ஆயிரம் ஆயிரம்
ஞானசம்பந்தர்கள்.....மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

60 comments:

 1. //மக்கள் குளிர்கால உடைகளை அணிகிறார்களோ இல்லையோ எருமை மாடுகளும் நாய்களும் ஸ்வெட்டர் போட்டுக்கொள்ள ஆரம்பித்துவிட்டன!//

  நெஜமாவா? போட்டோ எடுத்துக் காமிச்சாத்தான் நம்புவேன்.

  ReplyDelete
  Replies
  1. சாமி நிஜந்தான் எங்க வீட்டு நாய்க்குட்டிக்கு ஜாக்கெட் போடாம குளிர்காலத்தில் வெளியே கூட்டிச் செல்லமாட்டேன்

   Delete
  2. ஃபோட்டோ தானே எடுத்துப் போட்டுடுவோம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி கந்தசாமி ஐயா.

   Delete
  3. உங்க வீட்டுல நாய்க்குட்டி இருக்கா மதுரைத் தமிழன்....

   நல்ல விஷயம் தான்!

   Delete
 2. வணக்கம்
  ஐயா.
  அனைத்தும் சிறப்பான தொகுப்புக்கள்.. சொல்லிய குறுஞ்செய்தி மற்றும் படங்கள் எல்லாம் அருமையாக உள்ளது.. பகிர்வுக்கு நன்றி
  த.ம 2

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்......

   Delete
 3. ///நூறு வருடங்கள் வாழவேண்டிய மனிதன் அழுது கொண்டே பிறக்கின்றான்! ஆனால் சில மணித்துளிகள் மட்டுமே வாழக்கூடிய மலர்கள் சிரித்துக் கொண்டே பிறக்கின்றன!!///

  மிக அருமை... எங்க இருந்து இதை எல்லாம் கண்டுபிடித்து பதிகிறீர்கள்....ரகசியத்தை கொஞ்சம் சொல்லி தாங்கப்பா

  ReplyDelete
  Replies
  1. சில குறுஞ்செய்திகள் நண்பர்களிடமிருந்து வந்தவை. சில வலைவீசி தேடியவை.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 4. இந்த வார ஃப்ரூட் சாலட் அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete

 5. நூறு வருடங்கள் வாழவேண்டிய மனிதன் அழுது கொண்டே பிறக்கின்றான்! ஆனால் சில மணித்துளிகள் மட்டுமே வாழக்கூடிய மலர்கள் சிரித்துக் கொண்டே பிறக்கின்றன!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 6. முதன்முதலாக இப்போதுதான் உங்களது ப்ரூட் சாலட்டை ரசித்தேன். பல்வேறு தலைப்புகளில் தெரிந்தெடுக்கப்பட்ட அழகான பதிவுகள். கோவை மாவட்டஆட்சியர் பற்றிய பதிவு மனதில் பதிந்தது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 7. இவ் வார பழக்கலவையில் உள்ள அனைத்தையும் இரசித்தேன்! பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 8. அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 9. அருமை அருமை குறுஞ்செய்தி!

  கோவை கலெக்டர் போல் இருந்துவிட்டால் வறுமை குறைந்து விடுமோ?!! பாராட்டிற்குரியவர்.

  இற்றையும் அருமை.

  அந்தப் பெண் பிரமிக்க வைக்கின்றாளே!!! என்ன குரல் வளம்! மிகவும் ரசித்தோம்.

  பல்செட் மனிதர் ஏனோ விளையாடவில்லை...என்ன பிரச்சனை என்று தெரியவில்லை

  படித்ததில் பிடித்தது ....பிடித்தது.! ரசித்தோம்!

  ReplyDelete
  Replies
  1. பல்செட் மனிதர் - ஒரு முறை Refresh செய்து பாருங்களேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 10. பிச்சைக் காரர்களும் உழைக்கத் தயார்தானே. அர்ச்சனா பட்நாய்க்கின் பணி பாராட்டுக்குரியது. . பல் செட்டை வைத்துக்கொண்டு மனிதன் என்னமாக விளையாடுகிறார். அருவருப்பாகவும் தோன்றுகிறது/ பார்வதி எத்தனை குழந்தைகளுக்குப் பால் கொடுக்கமுடியும். கதையை விட கற்பனை பிரமாதம். ஃப்ரூட் சலாட் முழுதும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.....

   பல்செட் காணொளி - பகிர்ந்து கொள்வதற்கு சற்றே யோசித்தேன் - அருவருப்பாக இருக்கும் என!

   Delete
 11. உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை வலைப்பக்கம்- இல் இணைக்கவும்.

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு நன்றி வலைப்பக்கம்!

   Delete
 12. அனைத்தும் எப்போதும் போல அருமை.
  அதிலும் கவிதை மிக அருமை நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 13. ///நூறு வருடங்கள் வாழவேண்டிய மனிதன் அழுது கொண்டே பிறக்கின்றான்! ஆனால் சில மணித்துளிகள் மட்டுமே வாழக்கூடிய மலர்கள் சிரித்துக் கொண்டே பிறக்கின்றன!!///
  எளிமையான வார்த்தைகளில்
  எவ்வளவு பெரிய உண்மை
  நன்றி ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 14. Replies
  1. தமிழ் மணம் ஆறாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 15. Amira Willighagenன் பாடல் நன்றாக இருந்தாலும் ,சில இடங்களில் தொண்டைக்கு மேல் (ற்)கத்திய இசை போல் உள்ளது :)
  த ம 7

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 16. பாராட்டப்பட வேண்டிய கலக்டர் ...
  குட்டிப்பாப்பாவின் அசாத்திய திறமை அருமை..
  சுவை அருமை இந்த சாலடில்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 17. Replies
  1. தமிழ் மணம் எட்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி மது.

   Delete
 18. வணக்கம் சகோதரரே!

  பிச்சைக்காரர்கள் உழைத்து வாழ எடுத்த முடிவை குறித்த விஷயம் பாராட்டுக்குரியது.
  மனிதனையும், மலர்களையும், பற்றிய குறுஞ்செய்தி மனதில் பதிந்தது.
  புகைப்படம், காணொளி, கவிதை என அனைத்தும் அருமை! ரசித்தேன்.
  பகிர்ந்தமைக்கு நன்றி!

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 19. சிறுமியின் பாடல் அருமை...
  பல் செட் கலக்கல்.
  மற்றவையும் சூப்பர் அண்ணா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 20. நூறு வருடங்கள் வாழவேண்டிய மனிதன் அழுது கொண்டே பிறக்கின்றான்! ஆனால் சில மணித்துளிகள் மட்டுமே வாழக்கூடிய மலர்கள் சிரித்துக் கொண்டே பிறக்கின்றன!!//

  சிரித்துக் கொண்டு பிறப்பதுடன் அவை நம்மையும் மகிழ்ச்சி படுத்துகிறதே!

  சின்னசிறுமியின் பாடல், கவிதை எல்லாம் அருமை.
  வாழ்த்துக்கள்.


  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 21. உழைக்க தயங்கும் உலத்தில் நிச்சயம் பாராட்ட பட வேண்டியவர்கள் இந்த பிச்சைகாரர்கள் தான் .பலர் வேலை என்றவுடன் பிடி ஓட்டம் தான் .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனி வாசன்.

   Delete
 22. நண்பரே குறுஞ்செய்தி அருமை
  வலைச்சர வேலையில் மூழ்கி விட்டேன் வருகை தரவும்

  http://blogintamil.blogspot.ae/2014/12/blog-post_12.html

  ReplyDelete
  Replies
  1. வலைச்சரப் பணிக்கு வாழ்த்துகள் கில்லர்ஜி..... நிச்சயம் வருவேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 23. கலெக்டரின் செயல் பாராட்டுக்குரியது! குறுஞ்செய்தி அருமை! கவிதை சிறப்பு! அனைத்துமே ரசிக்க வைத்தன! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 24. முதல் செய்தி முதன்மையானது. தொடர்ந்தவையும் சுவையே.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 25. பிச்சைகாரர்களுக்கு வேலை கொடுத்த விஷியம் மிக அருமை, துபாயில் இன்னேரம் ( அக்டோபரில் இருந்து) அதிக குளிராக இருக்கும் ஆனால் இந்த வருடம் டிசம்பர் ஆகியும் குளிர் தொடங்க வில்லை.ஃப்ரூட் சாலடில் மற்ற தகவல் அனைத்தும் அருமை, பாடல் கேட்க முடியவில்லை பிறகு கேட்டு பார்க்கீறேன்

  ReplyDelete
  Replies
  1. இங்கேயும் கொஞ்ச லேட் தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜலீலா.

   Delete
 26. ஞானசம்பந்தர்கள் கலக்கல். கவிதை எழுதினவர் யாரோ? பிச்சைக்காரர்களுக்கு மறு வாழ்வு கொடுத்த மாவட்ட ஆட்சியாளருக்குப் பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. இது ரொம்ப வருடங்களுக்கு முன்னர் படித்த கவிதை. நினைவிலிருந்து இங்கே பகிர்ந்து கொண்டேன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 27. கோவை ஆட்சியரின் மனிதாபிமான சேவைக்கு தலை வணங்குவோம் .. பதவியை தாண்டி செய்த உதவி .. அதனை பகிர்ந்த தங்களுக்கு நன்றி .. பல் செட் விளையாட்டு பல் சுளுக்கும் அளவு சிரிக்க வைத்தது .. அருமையான கதம்ப மாலை தங்கள் பதிவு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாரதிக்குமார்....

   Delete
 28. கலெக்டரின் பணி பாராட்டுக்குரியது. கவிதை மனதை தொட்டது.காணொளி புன்னகைக்க வைத்தது.முகநூல் இற்றை பிரமாதம். ப்ரூட் சாலட் சுவையோ சுவை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 29. எல்லா கலெக்டர்களும் இவரைப் போல இருந்தால் வேலையில்லாப் பஞ்சம் குறையுமே. பசியால் வாடும் குழந்தைகளைப் பற்றிய கவிதை மனதைத் தொட்டது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....