எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, December 3, 2014

நடனமாடியபடி வாகனம் ஓட்டலாமா?மாதா வைஷ்ணோ தேவி பயணம்பகுதி 13

முந்தைய பகுதிகள்: பகுதி-1 2 3 4 5 6 7 8 9 10 11 12

படம்: இணையத்திலிருந்து....

சென்ற பகுதியில் பார்க்க வேண்டிய சில இடங்களைப் பற்றிச் சொல்லி இருந்தேன். உங்களுக்கும் இங்கேயெல்லாம் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்திருந்தால் நான் எழுதியதின் நோக்கம் நிறைவேறியது என்று சொல்லுவேன்!

கட்ரா நகரிலிருந்து தில்லி செல்ல இம்முறையும் www.redbus.in தளத்தின் மூலம் தான் முன்பதிவு செய்திருந்தோம்.  தில்லியிலிருந்து கட்ரா வரும்போது கிடைத்த அனுபவங்களை இத்தொடர் ஆரம்பிக்கும் முன்னரே ஒரு பதிவாக வெளியிட்டேன். அப்பதிவு படிக்காதவர்களின் வசதிக்காக இங்கே அதன் சுட்டி – ரெட் பஸ்ஸும் சினிமாவும்.  அப்பயணத்தில் கிடைத்த அனுபவம் போலவே இப்பயணத்திலும் சில அனுபவங்கள். அதை இப்பதிவில் பார்க்கலாம்!

மாலை ஆறு மணிக்கு புறப்பட வேண்டிய பேருந்து 06.15 மணிக்கு புறப்பட்டது. சரியான சமயத்தில் புறப்பட்டால் நம் இந்திய நாட்டின் பெருமைக்கு களங்கம் ஏற்பட்டு விடுமே! ஓட்டுனர் ஒரு மோனா சர்தார் – அவருக்கு உதவியாளர் ஒரு சர்தார். மோனா சர்தார் என்பவர் பகடி அணியாத பஞ்சாபி.  பயணிகள் அனைவரும் வந்ததும் பேருந்து புறப்பட்டது. இம்முறை வந்த பேருந்து ஒரு Mercedes Benz பேருந்து.

பேருந்து ஓட்டுனர் கைகளில் அப்படியே விளையாடியது.  சர்வசாதாரணமாக 130 கிலோமீட்டர் வேகத்தினைத் தொட்டது பேருந்து. முன் இருக்கையில் இருந்த எனக்கு அவர் ஓட்டுவதைப் பார்த்தபடியே இருந்ததில் திகில் இருந்தாலும், அவரது திறமையில் அவருக்கு இருக்கும் நம்பிக்கை பிடித்திருந்தது. பெரும்பாலான விபத்துகள் சில நொடிகளில் நடந்து விடுவதுதானே... இருந்தாலும் அவரது வேகம் பற்றி பேருந்தில் இருந்த எவருக்குமே கவலை இருப்பது போல தெரியவில்லை. அனைவரும் தூங்குவதிலும் பேருந்தில் ஓடிக் கொண்டிருந்த ஹிந்தி படத்திலும் மூழ்கி இருந்தார்கள். 

சென்ற பயணத்தில் yamla pagla deewaanaa-2 பார்த்து நொந்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்! இல்லையா... இதோ ஒரு அப்பதிவில் ஒரு PEEP IN!


குத்தே, கமீனே, மே தேரா கூன் பீஜாவுங்காஎன டாய்லெட் சீட்டில் அமர்ந்து முக்கியபடியே பேசினால் என்ன குரல் வருமோ அந்த குரலில் பேசும் தர்மேந்திரா, அவரது சத்புத்திரர்களான சன்னி தியோல், பாபி தியோல் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த யம்லா, பக்லா, தீவானா பார்ட் 2தான் அந்த படம். படம் முழுக்க ஒரே அபத்தம். ஐம்பது பேரை ஒரே ஆளாக சன்னி தியோல் அடித்து வீழ்த்துகிறார்.


இம்முறை போட்ட படம் தமிழிலும் வந்திருக்கிறது – சூர்யாவின் சகோதரர் கார்த்திக் மற்றும் சந்தானம் நடித்த படம்! ஹிந்தியில் அக்‌ஷய் குமார், சோனாக்‌ஷி சின்ஹா நடித்தது – இயக்கம் – நம்ம பிரபுதேவா - படத் தலைப்பு – ரௌடி ராதோர்.  தமிழ் படம் பெயர் சொல்லுங்க பார்க்கலாம்!

பெரும்பாலான பயணிகள் வைஷ்ணவ தேவியை தரிசித்து திரும்புவர்கள் என்பதால் அனைவரின் முகத்திலும் களைப்பு.  ஒரு சிலர் உட்கார முடியாது திண்டாட்டம்.  ஒரு பெண்மணி நடுவே காலை நீட்டியபடி உட்கார்ந்து கொண்டார். ஓட்டுனரின் உதவியாளர் அவரை சீட்டில் உட்காரச் சொல்லியபடியே இருந்தார். எல்லோரையும் முன் இருக்கையைப் பிடித்துக் கொள்ளவும் சொன்னார் – வேகத்தில் விழுந்து விடக்கூடும் என்று இப்படி ஒரு எச்சரிக்கை. 

ஜம்முவில் சிலரை ஏற்றிக்கொண்ட பின்னர் வண்டி ஓடிய வேகம் என்னை பயமுறுத்தியது என்று தான் சொல்ல வேண்டும்.  அப்படி ஒரு வேகம்.  பேருந்தினை ஓட்டியபடியே மெல்லிய ஒலியில் பாட்டுக் கேட்டபடி ஓட்டிக் கொண்டிருந்தார்.  பேருந்தில் இருக்கும் அனைவரும் தூங்க, தூங்காது வந்தது நாங்கள் மூவர் தான் – ஓட்டுனர், அவரது உதவியாளர் மற்றும் நான்!  பேருந்து அவர் சொன்னபடியெல்லாம் கேட்டது! அப்படி ஒரு வேகம். 

பஞ்சாபி பாடல்கள் ஒலிக்க அப்பாட்டின் தாளத்திற்கு ஏற்ப இவர் இருக்கையில் இருந்தபடியே நடனமாடிக் கொண்டிருக்கிறார். அவ்வப்போது உதவியாளரை ஒரு கையால் அணைத்து [ஓயே ஜப்பி பாவ்! – கட்டிப் புடி என்பது தான் இதன் அர்த்தம்!] அவரையும் நடனமாட வைத்தார்.  ஒரு கையால் Steering பிடித்து ஓட்டினாலும் அதே வேகம்.  முழு இரவும் இப்படி இவரது திறமையை பார்த்தபடியே வந்தேன் – தூங்கவே இல்லை என்பது தான் மிச்சம். 

அது எப்படிங்க வண்டி ஓட்டிக்கிட்டே நடனமாட முடியும்?என்று சந்தேகம் இருந்தால் உங்களுக்காகவே யூவில் தேடி ஒரு காணொளி இணைத்திருக்கிறேன்!  இவங்க ஆடறாங்க பாருங்க!நடுவழியில் ஒரு உணவகத்தில் பேருந்து நிறுத்தும்போது இரவு 12 மணி.  அந்த நேரத்திலும் உணவகத்தில் அப்படி ஒரு ஜனத்திரள்.  நாங்களும் ஜோதியில் கலந்து இரவு உணவை முடித்தோம்.

சாப்பிட்ட பிறகு கொஞ்சம் கண்களை மூடியபடி ஓய்வு எடுத்துக் கொண்டேன்.  வண்டி அதே வேகத்தில் சென்றது கண்களை மூடியிருந்தாலும் புரிந்தது. மாலை புறப்பட்ட பேருந்து அனாயாசமாக வேகம் தொட்டு கட்ராவிற்கும் தில்லிக்கும் இடையே இருக்கும் தூரத்தினை விரைவாக குறைத்தபடி இருந்தது. அதிகாலை ஐந்தரை மணிக்கே தில்லியின் மஹாராணா பிரதாப் ISBT அருமே எங்களை இறக்கி விட்டார் ஓட்டுனர்.  இறங்கும்போது ஓட்டுனர் என்னிடம் கேட்ட கேள்வி – “நான் தூங்காது அவரையே கவனித்ததை அவரும் கவனித்திருப்பதை எனக்கு உணர்த்தியது! அவர் கேட்ட கேள்வி இது தான் – “வேகமா ஓட்டினாலும் நல்லா ஓட்டினேனா!என்பது தான்!

நல்லாதான் ஓட்டுறீங்க – ஓட்டும்போது நடனமாடுவதை மட்டுமாவது குறைத்துக் கொள்ளுங்கள்! உங்களை நம்பி 50 பெயரின் உயிர் இருக்கிறது என அவருக்குச் சொல்லி வந்தேன். வேகம் விவேகமல்ல என்றாலும் இப்படி வேகமாக பயணிப்பது பிடித்திருக்கிறது!

தில்லியிலிருந்து கட்ரா வரை சென்று அன்னை வைஷ்ணவதேவியை தரிசித்த அனுபவங்களையும் வேறு சில விஷயங்களையும் இத்தொடரின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். இத்தொடர் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  விரைவில் வேறு ஒரு பயணத்தொடரோடு உங்களைச் சந்திக்கிறேன். 

பயணம் இனியது.  ஆதலினால் பயணம் செவோம்!

ஜெய் மாதா [dh]தி!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

50 comments:

 1. வணக்கம்
  ஐயா
  நானும் சென்று வந்தது போல ஒரு உணர்வு.... நடந்த நிகழ்வை ஒன்றும் விடாமல் அழகாக எடுத்துரைத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
  த.ம 2வது
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 2. தங்களுடன் பயணித்த ஓர் உணர்வு
  நன்றி ஐயா
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 3. எங்களுக்கும் பார்க்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் எப்போ முடியும் என்றுதான் தெரியவில்லை! :)))

  மோனா சர்தார் வார்த்தை புதிது. பகடியும்! பகடின்னா அந்தப் பெரிய தலைப்பாகைதானே? !!

  அக்ஷய் நடித்த படத்தின் தமிழ் சிறுத்தை! ஓகே?


  ReplyDelete
  Replies
  1. பகடி - தலைப்பாகை.....

   சிறுத்தை தான்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 4. Replies
  1. தமிழ் மணம் ஐந்தாம் வாக்கிற்கு மிக்க நன்றி மது.

   Delete
 5. பயண அனுபவம்,, காணொளி இரண்டும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 6. உங்கள் பயணம் விபரீதப்பயணமாயிருந்திருந்தாலும் தப்பித்து வந்து விட்டீர்கள். அதுவும் முன்னிருக்கையில் ஆபத்து அதிகம். பயண அனுபவமும் காணொளியும் அழகு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.....

   Delete
 7. பணம் இனிது, முடியும் போது செல்ல வேண்டும். பஸ் தான் எப்படி வந்து சேரும் என நானும் முழித்திருந்தேன், நல்ல படியா வந்து சேர்ந்தது. தம 8

  ReplyDelete
  Replies
  1. பணம்/பயணம் இரண்டுமே இனிது..... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி....

   Delete
 8. #இவங்க ஆடறங்க பாருங்க!#
  செய்ற வேலையைகஷ்டப்படாமல் இஷ்டப் பட்டு செய்தால் ஆட்டம் வரத்தானே செய்யும் :)
  த ம 7

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 9. 130 கி.மீ வேகத்தில் ஓடிய பேருந்து - திரில்லிங்!..
  அதையும் ரசனையுடன் - விவரித்த விதம் அருமை!..
  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 10. இன்றுதான் முழுவதையும் படித்தேன்
  அற்புதமாகப் பதிவு செய்துள்ளீர்கள்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தொடரின் அனைத்து பகுதிகளையும் படித்தமைக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 11. Replies
  1. தமிழ் மணம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 12. ஜெய் மாதா தி!

  இந்தத் தொடர் எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்துச்சு. போகமுடியாத இடம் என்பதால் ரசித்து வாசித்தேன். படங்கள் எல்லாம் அருமையோ அருமை!

  இனிய பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. இத்தொடரினை நீங்களும் ரசித்ததில் எனக்கும் மகிழ்ச்சி.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 13. தங்களோடு பயணித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது உங்கள் பதிவு. வாழ்த்துக்கள்!அடுத்த பயணத்திற்கு காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 14. வைஷ்ணவி தேவி யாத்திரையை உங்களோடு பயணித்து முடித்ததில் மகிழ்ச்சி! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்...

   Delete
 15. உண்மை தான். எவ்வளவு வேகமாக வண்டியை ஓட்டினாலும் நிதானத்துடன் இருந்தாலே போதும்.
  ஆனால் நடனத்தில் கவனம் சென்று விட்டால்.....
  சற்று வேகமான பதிவுதான். சுறுசுறுப்பாகப் படித்தேன். அவ்வளவு பனம் நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 16. நல்லபடியா வந்து சேர்ந்துட்டீங்க. அடுத்த பயனத்தொடருக்காக காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   அடுத்த தொடர் விரைவில்! :)

   Delete
 17. படிக்கும்போதே பயம் அப்பிக்கொள்கிறது! பதிவும் தொய்வில்லாமல்! நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 18. நாம் பயணம் செல்லும் காரை டிரைவர் ந்டனமாடியபடியே ஓட்டினால், அதிலும் அவரது இருக்கைக்கு அருகையிலேயே நாம் கவனித்துக் கொண்டு இருந்தால், பயணியின் மனநிலை எப்படி இருக்கும்? பகிர்வுக்கு நன்றி.
  த.ம.12

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா...

   Delete
 19. பயணம் எமக்கும் சுகமாய் இருந்தது,,, நண்பரே,,,

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.....

   Delete
 20. Replies
  1. தமிழ் மணம் 13-ஆம் வாக்கிற்கு நன்றி கில்லர்ஜி.....

   Delete
 21. பயணம் இனியது. ஆதலினால் பயணம் செய்வோம்!


  எனக்கும் ஆசைதான்! முதுமை தடுக்கிறதே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.....

   Delete
 22. பயணங்களை நீங்கள் பகிர்வதின் மூலம் நாங்களே பயணம் செய்வது போல உணர்கிறோம்.
  தொடரட்டும் பயணங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்...

   Delete
 23. வணக்கம் சகோதரரே!

  இத்தொடர் பயணத்தில் நாங்களும் உங்கள் மூலமாக பயணித்து வந்த மாதிரியான ஒரு உணர்வு ஏற்பட்டது. அந்த அளவுக்கு தாங்கள் விவரித்து எழுத நாங்களும் ரசித்துப் படித்தோம். நன்றி!

  பயணம் இனிமையானதுதான். எனவே இனியும் தொடருகிறேன்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 24. அற்புதமான பயண அனுபவக் கட்டுரை!
  உள்ளம் தொட்டது சகோதரரே!.. எனக்கும் உடனுக்குடன் தொடர முடியாது
  போயிருந்தும் இன்று படிக்க நேரம் ஒதுக்கி வந்துவிடப் பயணமும் முடிவுக்கு வந்துவிட்டதே!..
  யாவும் அன்னையின் அருள்தான்!

  கிட்டாதது எனச் சிலவற்றை நான் பட்டியலிட்டு வைத்திருக்கின்றேன் என் வாழ்வில்!
  அதில் இத்தகைய பயணங்களும் என்பது வருத்தந்தருகிற உண்மையான விடயம்!
  இப்படியாயினும் உங்கள் தயவால் படித்துக் களித்திடக் கிட்டியது பேறே!..

  அருமையான படங்களும் இனிய பதிவும்!
  பகிர்வினுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 25. தங்களோடு பயணம் செய்து மாதாவை தரிசித்து முடித்துவிட்டோம். எங்களுக்கும் நேரில் வாய்க்கின்றதா என்பதை மாதா தான் முடிவு செய்ய வேண்டும். அடுத்த பயணத் தொடருக்குக் காத்திருக்கின்றோம். மிக்க நன்றி பகிர்வுக்கு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....