திங்கள், 8 டிசம்பர், 2014

ஏற்காடு போகலாமா? - மினி பயணத் தொடர்ஏழைகளின் ஊட்டி – பகுதி 1


தொடர்ந்து வட இந்தியப் பகுதிகளையே சுற்றிக் காண்பித்து வரும் உங்களுக்கு தமிழகத்தில் சுற்றிப் பார்க்க, அதைப்பற்றி எழுத இடமா இல்லை? அதே போல, எப்போதும் நண்பர்களோடு பயணித்த இடங்கள் பற்றியே எழுதிவருவது ஏன்! குடும்பத்துடன் சென்றதில்லையா? எனும் கேள்விகள் எனது நண்பர்கள் சிலருக்கு ஏற்பட அக்கேள்விக் கணைகளை எனை நோக்கி வீசியதுண்டு. 

 

சமீபத்தில் வலைச்சர ஆசிரியர் பொறுப்பில் இருந்தபோது[B]ப்ரஜ் பரிக்ரமாஎனும் பதிவில் வலைப்பதிவர் கில்லர்ஜி கூட இப்படி ஒரு கருத்துரை எழுதி இருந்தார்.

விசயங்கள் அனைத்தும் வடநாட்டைச்சுற்றியே... செல்கிறதே....தமிழ்நாடு பயணங்கள் பற்றி எழுதக்கூடாது என்ற எண்ணம் இல்லை. தமிழகத்தில் இருக்கும் இடங்களை பலரும் அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அவர்களே அவ்விடங்களுக்கு பயணித்திருக்கவும் கூடும். அதனால் தான் எனது பக்கத்தில் பயணக் கட்டுரைகள் பெரும்பாலும் வட இந்திய பயணங்களாகவே அமைந்து விடுகிறது வழக்கமாகி விட்டது.  ஒரு மாற்றத்திற்காக, இம்முறை, சென்ற மே மாதத்தில் குடும்பத்துடன் சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஏற்காடு சென்ற பயணம் பற்றிய குறிப்புகள் ஒரு மினி தொடராக இன்று முதல் வெளி வரும்.


  
ஏற்காடு – ஊட்டியை மலைகளின் அரசி என்றும், கொடைக்கானலை மலைகளின் இளவரசி என்றும் அழைப்பது போலவே ஏற்காட்டினை தென்னிந்தியாவின் விலை உயர்ந்த அணிகலன் என்று அழைக்கிறார்கள். சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள இந்த வாசஸ்தலம் எப்போதுமே மிதமான தட்பவெட்பத்தில் இருக்கும்.  ஏரி மற்றும் காடு ஆகிய இரண்டு வார்த்தைகளிலிருந்து உருவானது தான் ஏற்காடு என்றும் சொல்லலாம்! இங்கே அழகிய ஒரு ஏரியும் நிறைய மரங்களும் உண்டு. ஏழைகளின் ஊட்டி என்றும் இவ்விடத்தினை அழைக்கிறார்கள். நாங்கள் திருச்சியிலிருந்து சேலம் வரை சுமார் 142 கிலோ மீட்டர் வந்து அங்கிருந்து 28 கிலோ மீட்டர் பயணித்தால் ஏற்காடு வந்து விடலாம்.  மொத்த தொலைவே 170 கிலோ மீட்டர் தான் என்பதால் நாங்கள் எங்களுக்குத் தெரிந்த நபர் ஒருவரின் காரினை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு ஒரு அதிகாலையில் திருச்சியிலிருந்து புறப்பட்டோம். தற்போது தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் பயணிப்பது ஒரு சுகமான அனுபவம் தான்.  பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் திருச்சியிலிருந்து சேலம் பயணிக்கும்போது அத்தனை சுகமாக இருந்ததில்லை. பல இடங்களில் மோசமான சாலைகளில் பயணிக்க வேண்டியிருந்திருக்கிறது.  இப்போது சாலை நன்றாகவே இருப்பதால் உல்லாசமாக பயணிக்க முடிகிறது.  மிதமான வேகத்தில் வண்டியைச் செலுத்திய எங்கள் ஓட்டுனர் ராமநாதனிடம், சேலம் வந்ததும் நல்ல உணவகத்தினில் நிறுத்தச் சொன்னோம். ஏற்காடு சென்ற பிறகு சாப்பிடலாம் என்று சொன்னார் – ஏற்காடு செல்ல 20 கொண்டை ஊசி வளைவுகள் உண்டேஎன்பது நினைவு வர நானும் சரி என்று சொல்லி விட்டேன்.20 கொண்டை ஊசி வளைவுகளையும் சுலபமாகக் கடந்து எங்களை ஏற்காடு நகரத்தினுள் அவர் அழைத்து வந்து சேர்த்த நேரம் காலை எட்டு மணி.  காலை உணவினை ஏதாவது உணவகத்தில் எடுத்துக் கொள்ள நினைத்தால் பெரும்பாலான உணவகங்கள் அசைவ உணவகங்களாக இருக்கவே சில இடங்களில் விசாரித்தோம்.  இரண்டு உணவகங்களைச் சொன்னார்கள் – ஒன்று தமிழ்நாடு சுற்றுலாத்துறை நடத்தும் உணவகம் மற்றொன்று தனியார் உணவகம் ஒன்று. சுற்றுலாத் துறை நடத்தும் உணவகம் அருகிலேயே இருக்க அங்கேயே செல்ல முடிவெடுத்தோம். உள்ளே நுழைந்து திருச்சியிலிருந்து தொடர்ந்து பயணித்த காரணத்தினால் முதலில் Wash Room” பயன்படுத்த எண்ணி அங்கே இருந்தவரிடம் அப்படியே கேட்டேன் – அவர் சொன்ன பதில் என்னுடைய அறியாமையை புலப்படுத்தியது! அவரிடம் நான் அப்படி கேட்டிருக்கக் கூடாது! “பாத்ரூம் எங்கே இருக்குப்பா என்று மீண்டும் கேட்டபோது சரியான பதில் கிடைத்தது! அவர் முதலில் காண்பித்தது உணவகத்தில் இருந்த Wash Basin! இயற்கை உபாதைகளைகளிலிருந்து விடுபட்ட பின்னர் உணவகத்தில் அமர்ந்து காலை உணவிற்கான பட்டியலைக் கேட்டோம்.வழக்கமான இட்லி, பொங்கல், வடை என்று தான் அடுக்கினார்.  வட இந்தியப் பயணங்களில் எப்போதுமே கோதுமை பரோட்டா, ப்ரெட், பழங்கள், பாலுடன் மக்காச்சோள செதில்கள் என்று சாப்பிட்டு அலுத்துப் போன எனக்கு இந்த மாற்றம் கொஞ்சம் நல்லதாய்ப் பட அதையே கொண்டுவரச் சொன்னேன். இட்லி கல்லாக இருக்க, வடை அதைவிட மோசம் – பல் நன்றாக இருப்பவர்களுக்கே அதை கடித்து விழுங்குவது கடினம்! நாங்கள் இப்படி அவதிப் பட்டுக் கொண்டிருக்க, அங்கேயே தங்கும் விடுதியில் தங்கியிருந்த ஒரு பெரிய குடும்பம் அனைத்து உணவுகளையும் அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தது! அவர்கள் செய்த அட்டகாசங்கள் அடுத்த பகுதியில் பார்க்கலாம்!

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

58 கருத்துகள்:

 1. படங்கள் அனைத்தும் அருமை...

  அருமையான டிபன் கிடைப்பது அரிது தான்...

  கூடவே பயணிக்கிறோம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 2. சுற்றுலா தளங்களில் உணவு எப்பவும் சுமார்தான்.... நீங்கள் சேலத்திலேயே காலை உணவை முடித்திருந்திருக்கலாம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   நீக்கு
 3. சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்காடு சென்று வந்தது பற்றி எனது வலைப் பதிவில் எழுதியிருந்தது தங்கள் பதிவைப் படிக்கும்போது நினைவுக்கு வருகிறது.. தங்களது பதிவில் புதிய தகவல்களையும் அரிய/அழகிய புகைப்படங்களை எதிர்பார்த்து தொடர்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   உங்கள் கட்டுரை எனக்கும் நினைவில் வந்தது ஐயா....

   நீக்கு
 4. வீட்டை விட்டு வெளியில் சென்று விட்டால் - நல்ல உணவு கிடைப்பது - அரிது.
  சிறிய கிராமங்களில் கிடைக்கும் உணவின் தரம் கூட நகரங்களில் கிடைப்பதில்லை.
  வெறும் ஆடம்பரம் தான்.. அவஸ்தையே மிச்சம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 6. ஏற்காடு மீது அவ்வளவு ஈர்ப்பில்லை எனக்கு என்றாலும் செல்ல நினைக்கும் இடம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   நீக்கு
 7. நான் பலமுறை ஏற்காடு சென்றுள்ளேன்! அருமையான இடம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் மூன்று முறை சென்றுள்ளேன். குடும்பத்துடன் செல்வது இது தான் முதல் முறை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 8. வணக்கம் சகோ !

  தங்களின் பயண அனுபவத்தினூடாக நாங்களும் பயணிக்கின்றோம்
  மேலும் தொடர என் வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   நீக்கு
 9. படங்கள் சூப்பர்...ஏற்காட்டுக்கு நாங்களும் உங்களோடு சேர்ந்து கொண்டோம்....த ம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி.

   நீக்கு
 10. ஏற்காடு ஏரி குடிநீருக்குப்பயன்படும் நன்னீர் ஏரி..

  ஊட்டி ஏரி சாக்கடைகளின் சங்கமம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
  2. ஏற்காடு ஏரியும் சாக்கடைகளின் சங்கமம் தான்,

   நீக்கு
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பெருமாள் செல்லம் ஜி!

   நீக்கு
 11. ஏற்காடு மிக நன்றாக இருக்கும்,. நாங்களும் முன்பு இரண்டு ,மூன்று முறை போய் இருக்கிறோம்.
  படங்கள் மிக அழகு. வானர குடும்பம் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 12. எல்லா சுற்றுலாத் தளங்களும் முன்னேற்றம் என்ற போர்வையில் பாழாகிக் கொண்டிருக்கும் போது ஏற்காடு தன் பழமைத் தனத்தை விட்டு மாறாமலிருப்பது ஆறுதலான விஷயம். நாங்கள் 15 வருடங்களுக்கு முன் போனபோது இந்த நிலைமை. இப்போது மாறியிருக்கிறதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.....

   நீக்கு
 13. தமிழ்நாடு டூரிசம் போர்டு ஹோட்டல்களில் சில முறை உண்டிருக்கிறேன்! உணவின் தரம் சரியாகத்தான் இருக்காது. சுவையாக தொடங்கியுள்ளீர்கள்! தொடர்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 14. சுவாரஸ்யமான ஆரம்பம். படங்கள் எல்லாம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 15. சுற்றுலாத்துறையினர் நடத்தும் உண்வகங்கள் பெரும்பாலும் என் நண்பர் ஒருவர் சொல்வதுபொல் “திராபை”ஹொகனேகல்லில் நாங்கள் இதே அவஸ்தையை அடைந்திருக்கிறோம். எங்கெல்லாமோ பயண பட்ட நான் ஏற்காடு சென்றதில்லை....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   ஒரு முறை சென்று வரலாம்....

   நீக்கு
 16. ஒரு முறை ஏற்காடு சென்று வந்திருக்கின்றேன் ஐயா
  படங்கள் அருமை
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 17. பதில்கள்
  1. தமிழ் மணம் ஒன்பதாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 18. வணக்கம் சகோதரரே!

  தென்னிந்திய பயணமென்றாலும் இதுவரை ஏற்காடு சென்றதில்லை. தங்கள் பதிவை தொடர்ந்தால் சென்று வந்த உணர்வு வந்து விடும்.பனி போர்த்திய படங்கள் அருமை! குளிருக்கு அடக்கமாக அமர்ந்திருக்கும்,அந்த மூவரின் பார்வையிலும், குளிரின் தன்மை பிரதிபலிக்கின்றதே.!
  மே மாதத்திலும் அவ்வளவு குளிரா? தொடர்கிறேன் சகோதரரே!

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நாங்கள் சென்ற சமயத்தில் மேகமூட்டமும் மழையும் கூட இருந்தது! :)

   நீக்கு
 19. ஒருவழியா இப்போதான் தெரிந்த ஊர் பெயரா இருக்கு. இங்கு போனதில்லை. ஆனல் படங்களைப் பார்க்கும்போது போகத்தூண்டுகிறது. முன்னோர்கள் ___ ரொம்பவே அழகா இருக்காங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   முன்னோர்கள் அழகு - ரொம்பவே ரசிக்க முடிந்தது இல்லையா!

   நீக்கு
 20. எழுதுங்கள் தமிழ்நாட்டு பயணத் தொடரை. தொடர்கிறேன்
  அப்புறம் அந்த குடும்பம் சகித புகைப்படம் ரொம்ப சூப்பர் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு
 21. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   நீக்கு
 22. படங்கள் அருமை. முதல் சில படங்களைப் பார்க்கும்போதே குளிர்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 23. ஏற்காட்டை பார்க்க வேண்டிய ஏற்பாட்டில் உடன் இறங்கி விட்டேன் :)
  த ம 13

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 24. ஏற்காடு சென்றிருக்கின்ரோம். தங்களது விவரணமும், படங்களும் மிகவும் அருமை!

  ம்ம் அங்கு தங்கியிருந்த பெரிய குடும்பம் அடித்து நொறுஈகிய அந்தக் குடும்பம் ஹஹ்ஹாஹஹ் எதிர்பார்க்கின்றோம் அவர்களது அடித்து நொறுக்கல்களை....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   நீக்கு
 25. ரம்புட்டான் மரம் அழகாக இருக்கிறது , இங்கு அரிதாக உள்ள மரம். ஒரு முறை ஏற்காடு சென்று பார்க்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனிவாசன்.

   நீக்கு
 26. ஏற்காடு இன்னும் போனதில்லை. பார்க்கலாம். படங்கள் அருமை. பொதுவாகச் சுற்றுலா ஓட்டல்களில் உணவு சுமாராகத் தான் இருக்கிறது. ஆனால் திருமலா திருப்பதி சுற்றுலா விடுதி விதிவிலக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 27. இன்றுதான் படிக்க முடிக்க முடிந்தது. தொடர்கின்றேன்.
  த.ம.14

  பதிலளிநீக்கு
 28. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

  பதிலளிநீக்கு
 29. ஏற்காட்டில் தம்பி உணவகத்தில் சாப்பிட்டுள்ளீர்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பெருமாள் செல்லம் ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....