புதன், 10 டிசம்பர், 2014

ரௌடிகளின் வகுப்பு

ரசித்த குறும்படங்கள் பகிர்வு வெளியிட்டு சில மாதங்கள் ஆகிவிட்டன.  தொடர்ந்து புதன் கிழமைகளில் ரசித்த குறும்படங்கள் பற்றி எழுதி வந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். சற்றே இடைவெளிக்குப் பிறகு இன்று மீண்டும் ஒரு குறும்படம் பற்றிய பகிர்வு. 

இரண்டொரு நாட்களுக்கு முன்னர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையேயான பந்தம் பற்றிய சில பதிவுகளை படிக்க நேர்ந்தது. ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும், மாணவர்களை எப்படி நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பது பற்றியெல்லாம் அவ்வப்போது படித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.  மாணவர்கள் களிமண் போன்றவர்கள் – ஆசிரியர்கள் எப்படி அவர்களை வடிவமைக்கிறார்களோ அந்த நிலைக்கு அவர்கள் வருகிறார்கள் என்றும் சொல்வதுண்டு.

இக் காணொளியில் நாம் காணப்போவதும் இப்படி ஒரு வகுப்பறை தான்.  பள்ளியில் ஆசிரியராக சேர்ந்த முதல் நாளே “Class of Rowdies” என்று அழைக்கப்படும் வகுப்பில் பாடம் நடத்த வேண்டிய கட்டாயம் அந்த ஆசிரியருக்கு.  அங்கே தனக்கு கிடைத்த அனுபவம் அவரை நோகடிக்கச் செய்கிறது.  பள்ளியில் ஏற்கனவே பணிபுரியும் ஆசிரியர்கள் சிரித்தபடியே “எப்படி இருந்தது முதல் நாள் அனுபவம்?என்று கேட்க, பதில் சொல்லாது வெளியேறுகிறார்.

அடுத்த நாள் அவர் என்ன செய்தார்? மாணவர்களை எப்படி அவர் மாற்றினார், அவர்களின் நற்திறமைகளை வெளிக்கொணர என்ன செய்தார் என்பதை மிக அழகாகச் சொல்லி இருக்கிறார்கள் இக்குறும்படத்தில். 

இது ஆசிரியர்-மாணவர் ஆகியோருக்கு மட்டும் பொருந்தாமல் பெற்றோர்-குழந்தைகள் ஆகியோருக்கும் பொருந்தும் என எனக்குத் தோன்றியது.  இக்குறும்படத்தினை நீங்களும் பார்த்து, உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன்!
என்ன நண்பர்களே, நிதின் தாஸ் என்பவரின் தயாரிப்பில் உருவான இக்குறும்படத்தினை ரசித்தீர்களா?

மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

44 கருத்துகள்:

 1. பார்க்க ஆவல் இருந்தாலும் இப்போது நேரமில்லை. :))))

  பின்னர் வந்து பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்த போது பாருங்கள் :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. காணொளி கண்டு
  ஒரு ஆசிரியர் என்ற முறையில் மிகவும் பெருமைப் படுகின்றேன்
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்குப் பிடிக்கும் என பதிவிடும்போது நினைத்தேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 3. பதில்கள்
  1. தமிழ் மண வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 5. வீட்டிற்கு சென்று தான் காணொளியை பாக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்தபோது பாருங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு
 6. எல்லாவற்றையும் புரிய வைத்து...... கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்...
  தம. 5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி.

   நீக்கு
 7. அருமையான காணொளி. ஆசிரியர், மாணவர் நல்லுறவு அருமையாக சித்தரிக்க பட்டுள்ளது .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 8. இந்தப் படம் ஏற்கெனவே பார்த்திருக்கிறேன்..... அருமையான ஆசிரியர்.. பெற்றோர்களுக்கும் இதே வழிதான் என்பதில் சந்தேகமில்லை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   நீக்கு
 9. வணக்கம்
  ஐயா.
  இரசிக்கவைக்கும் காணொளி... சொல்லிய கருத்தும் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
  கவியதையாக என்பக்கம் வாருங்கள் அன்போடு

  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: எப்போது மலரும்…………….:

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   நீக்கு
 10. காணொளி க்கு நன்றி சார் பார்க்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்தபோது பாருங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சரவணன்.

   நீக்கு
 11. சில நாட்களுக்கு முன் விஜய் டீவியில் 7c என்னும் சீரியல் வந்து கொண்டிருந்தது. எப்படி ஒரு ஆசிரியர் வகுப்பையே மாற்றினார் என்பது கதை. அதை நினைவு படுத்தியது இது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 12. காணொளியை இரசித்தேன்! B.Ed படிப்பவர்கள் மாணவர்களுக்கு பாடம் எடுப்பதை கற்றுக்கொள்வதற்காக சில பள்ளிகளுக்கு அழைத்து செல்வார்களாம். அங்குள்ள மாணவர்கள் வந்திருப்பவர் பயிற்சி ஆசிரியர்(மாணவர்) என்பதால் ஒரே கலாட்டா செய்வார்களாம். அவர்களை எப்படி சமாளித்து பாடம் நடத்துகிறார்கள் என்பதை பொறுத்தே அவர்களுக்கு மதிப்பெண்கள் தரப்படுமாம். ஆசிரியக் கல்லூரி மாணவர்கள் பார்க்கவேண்டிய குறும்படம் இது. பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 13. குறும்படத்தினை மிகவும் ரசித்தேன்.

  தாரே ஜாமீன் பர் படம் நினைவுக்கு வந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மீண்டும் வந்து படத்தினைப் பார்த்தமைக்கு நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 14. மிக அருமையான படம். ஆசிரியருக்குப் பெருமை சேர்க்கும் படம். ஒரு ஆசிரியானாக பெருமை அடைகின்றேன் (றோம்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   நீக்கு
 15. இந்தக் காணொளி முன்பே நான் பார்த்திருக்கிறேன் அண்ணா..
  அருமையான குறும்படம்...
  பகிர்வுக்கு நன்றி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு
 16. அருமையான படம். இதை இத்தனை கலர்புல் லாக இல்லாமலும் நம்மூரில் செய்துகொண்டிருக்கிற ஆசிரியர்களோடு தான் நான் இருக்கிறேன். குறும்படம் என்பதால் இப்படி short டா சொல்லிடாங்க. இது மாதிரியான கிளாஸ் களை கையாண்டு வெற்றி பெற புதுமை முயற்சிகளோடு அதீத பொறுமையும் , சகிப்புத்தன்மையும் வேண்டும் என்பது இதில் முன்னுபவம் உள்ள என் தாழ்மையான கருத்து. அதவும் மாறும், மாற்றிவிட வேண்டும் என்கிற தீவிர எண்ணமும், செயலும் இருந்தால்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.

   நீக்கு
 17. ஆசிரியரைப் பெருமை படுத்தும் ,அருமை படத்தை கண்டு ரசித்தேன் !
  த ம 8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 18. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 19. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 20. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 21. அற்புதம். அருமை வொண்டர்ஃபுல்.அன்பு அழகு .கருணை. ப்ரில்லியண்ட். நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   நீக்கு
 22. திருமதி கீதா சாம்பசிவம் பதிவில் கொடுத்திருந்த இணைப்பைத் தொடர்ந்து இந்தக் குறும்படம் பார்த்தேன். கண்ணில் நீர் வந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....