எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, December 1, 2014

பத்னிடாப் – மன்சர் ஏரி – ஷிவ்கோரிமாதா வைஷ்ணோ தேவி பயணம்பகுதி 12

முந்தைய பகுதிகள்: பகுதி-1 2 3 4 5 6 7 8 9 10 11

சென்ற பகுதியில் நாம் பார்த்த [B]பா[B]பா [DH]தன்சர் அனைவருக்குமே பிடித்திருந்தது தெரிந்து மகிழ்ச்சி.  சிறிய இடம் என்றாலும் கிடைத்த அனுபவம் அரிது. இந்த வாரம் நாம் மேலும் பார்க்க வேண்டிய சில இடங்கள் பற்றிப் பார்க்கப் போகிறோம்.  ஒவ்வொரு கட்ரா பயணத்தின் போதும் நான் செல்ல நினைக்கும் – ஆனால் செல்ல முடியாத ஒரு இடம் பத்னிடாப்! [PATNITOP].

பத்னிடாப்: படங்கள்: இணையத்திலிருந்து.....

கட்ராவிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அருமையானதோர் இடம் இது. கடல்மட்டத்திலிருந்து சுமார் 2000 மீட்டர் உயரத்தில் இருக்கும் இவ்விடத்திற்குச் செல்ல எல்லா மாதங்களும் ஏற்றவை தான். மலையேற்றம், பனிச்சறுக்கு விளையாட்டுகள் என பல விஷயங்களும் இங்கே உண்டு.  அதிகமாக பிரபலம் அடையாத இந்த சுற்றுலாத்தலத்தில் தங்கும் வசதிகளும் உண்டு. ஷுத்[dh] மஹாதேவி கா பஹாட் [மலை] எனும் இடத்தில் தேவியின் திரிசூலம் உள்ள கோவில் ஒன்றும் உண்டு. இயற்கையை ரசித்து சற்றே இளைப்பாற ஏற்ற இடம் இது. மேலதிகத் தகவல்கள் இங்கே!

மன்சர் லேக்:
 படங்கள்: இணையத்திலிருந்து.....

கட்ரா நகரிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு அழகான ஏரி தான் இந்த மன்சர் லேக்.  பக்கத்திலேயே ஜம்மு காஷ்மீர் மாநில சுற்றுலாத் துறையின் தங்குமிடங்களும் உண்டு.  ஏரியில் படகு வசதிகளும் உண்டு.  என்னுடைய முந்தைய கட்ரா பயணத்தின் போது இங்கே ஓர் இரவு ஓர் பகல் தங்கியதுண்டு.  மிகவும் இயற்கையான சூழலில் சிறிய ஏரி, சுற்றிலும் மலை, ரம்மியமான சூழலில் தங்குமிடம் என மிகவும் ரசித்த ஒரு இடம் இது. இந்த ஏரியில் பெரிய பெரிய ஆமைகள் உண்டு. நாங்கள் இங்கே தங்கியிருந்த போது மாலை நேரத்தில் ஏரியைச் சுற்றி ஒரு நடை வந்தோம். வழியெங்கும் கிராமங்கள் – பறவைகளின் குரல்கள் தவிர வேறு எந்த சத்தமும் இல்லாது அமைதி – அதில் நடந்து சென்ற அனுபவம் இன்னமும் நினைவில் உண்டு!

அங்கேயே உண்வகமும் உண்டு – இருந்தாலும் நீங்களே சமைத்து சாப்பிட வேண்டுமென்றாலும், தங்குமிடத்தில் வசதி உண்டு! நாங்கள் உணவகத்தில் தான் சாப்பிட்டோம்! சுத்திப் பார்க்க வந்து அங்கேயும் சமையல் வேறா! என்ற எண்ணம் தான் காரணம்!

எந்த கவலைகளும் இன்றி சுகமாய் இருந்த தினம் அது.  நாங்கள் ஏரியைச் சுற்றி வர கொஞ்சம் தாமதம் ஆனதால் பதட்டத்தில் இருந்தனர் தங்குமிட நிர்வாகிகள்!  சொல்லிட்டுப் போயிருக்கலாம் இல்ல!என்று கடிந்து கொண்டார்கள்.

அருமையான இடம் நீங்களும் பார்க்கலாமே!

ஷிவ்கோரி:


  
படங்கள்: இணையத்திலிருந்து.....

கட்ரா ரியாசி பாதையில் 72 கிலோமீட்டர் பயணித்து நாம் அடையும் இடம் ஷிவ்கோரி.  குகைக்குள் இருந்த வைஷ்ணவ தேவியைப் பார்த்தது போலவே குகைக்குள் இருக்கும் சிவபெருமானையும் நீங்கள் தரிசிக்க நினைத்தால் செல்ல வேண்டிய இடம் இந்த ஷிவ்கோரி. சிவபெருமானின் கையில் வைத்திருக்கும் உடுக்கை [ஹிந்தியில் [d]டம்ரு] போலவே வடிவம் கொண்டது இக்குகை. ஆரம்பத்தில் கொஞ்சம் அகலமாகவும் நடுவில் குறுகிய வடிவம் கொண்டது. சில இடங்களில் ஊர்ந்து தான் செல்ல வேண்டியிருக்கும்.

குகையின் நடுவே இயற்கையிலே உருவான சிவலிங்கமும் மேலே இருந்து தாரையாக வழியும் தண்ணீர் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதும் இவ்விட்த்தின் சிறப்பு.  பால் கலந்த தண்ணீர் போலவே அப்படி ஒரு நிறம் உண்டாம் இத்தண்ணீருக்கு.  இங்கே சென்று வந்த நண்பர்கள் இக்கோவில் பற்றிச் சொல்லும்போது இது வரை நாம் இங்கே சென்று வந்ததில்லையே என்ற எண்ணம் வரும்.  அடுத்த பயணத்திலாவது ஷிவ்கோரி, பத்னிடாப் ஆகிய இரண்டு இடங்களைப் பார்க்க வேண்டும்.

மேலே சொன்ன மூன்று இடங்கள் தவிர, ஜம்மு நகரிலும் சில அருமையான கோவில்கள் உண்டு.  ஜம்முவில் ரகுநாத் மந்திர், குஃபா மந்திர் போன்ற சில கோவில்களும் மேலும் சில சுற்றுலாத் தலங்களும் உண்டு.  இம்முறை கட்ரா நகரிலிருந்தே தில்லி வரை செல்ல முன்பதிவு செய்து விட்டதால் ஜம்மு நகரிலுள்ள கோவில்களுக்கோ மற்ற இடங்களுக்கோ செல்லவில்லை.

மாலை நேரத்தில் முன்பதிவு செய்திருந்த பேருந்து எங்களை சுமந்து செல்ல தயாராக இருந்தது. இப்பேருந்து பயணத்தின் போது கிடைத்த அனுபவங்கள் அடுத்த பகுதியில் – இத்தொடரின் கடைசி பகுதியில்!

ஜெய் மாதா [dh]தி!

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

38 comments:

 1. அழகான படங்களுடன் தாங்கள் அளித்த செய்திகள் அருமை..
  ஷிவ்கோரி - குகைக் கோயில் பற்றிய தகவல் புதிது.
  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 2. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 3. நேரில் சென்று வரும் ஆவலைத்தூண்டுகிறது உங்கள் பதிவு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆறுமுகம் அய்யாசாமி.

   Delete
 4. தொடரின் கடைசிப் பகுதிக்கு வந்துவிட்டோமா என்ன?
  சரி, அந்த பயணத்தின் போது கிடைத்த அனுபவத்தை சீக்கிரம் சொல்லுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 5. /நாங்கள் ஏரியைச் சுற்றி வர கொஞ்சம் தாமதம் ஆனதால் பதட்டத்தில் இருந்தனர் தங்குமிட நிர்வாகிகள்! ”சொல்லிட்டுப் போயிருக்கலாம் இல்ல!” என்று கடிந்து கொண்டார்கள்./ தீவிர வாதிகள் குறித்த பயமா. ?படித்துக் கொண்டுவரும்போது சிறிது பொறாமை எட்டிப்பார்க்கிறது

  ReplyDelete
  Replies
  1. இருக்கலாம்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 6. பயணம் இனிதாக இருக்கிறது....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி.

   Delete
 7. Replies
  1. தங்களது வருகைக்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 8. கண்ணைக் கொள்ளைக் கொள்ளும் பத்மினி டாப் ...சாரி ....பத்னிடாப் படங்கள் அருமை :)
  த ம 3

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 9. செல்ல விரும்பி,செல்ல இயலாத இடங்களை உங்கள் எழுத்தில்,படங்களில் கண்டு மகிழ்கிறேன் வெங்கட்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 10. காண இய்லாத இடங்களை காட்சிப் படுத்தி விருந்து வைத்துள்ளீர்கள் ஐயா
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 11. Replies
  1. தமிழ் மணம் ஆறாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 12. நேரில் பார்க்க முடியாத இடங்களை தங்கள் பதிவின் மூலம் பார்க்க உதவியமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 13. படங்கள் மிக அழகு! தகவல்களுடன் பகிர்வு சிறப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 14. வலைச்சரத்தில் தங்களது பதிவுஅறிமுகம் கண்டேன். வாழ்த்துக்கள். தங்களது இப்பதிவு காசிப்பயணத்தின்போது நாங்கள் ரிஷிகேஷ் சென்றதை நினைவூட்டியது.
  http://drbjambulingam.blogspot.com/
  http://ponnibuddha.blogspot.com/

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 15. படங்களுடன் பதிவும் அருமை நாகராஜ் ஜி.

  பார்க்க வேண்டிய இடங்கள்...... முடியுமா என்று தெரியவில்லை. இப்படியே உங்கள் பதிவின் மூலம் கண்டு ரசித்தவிட வேண்டியது தான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 16. பனியும் பச்சைப் புல்வெளியும் எத்தனை அழகு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 17. வணக்கம் சகோதரரே!

  தாங்கள் செல்லா முடியா இடங்களும், பயணப்பட்ட இடங்களும், இயற்கையின் சூழல் அதி அற்புதமாக இருக்கிறது! பச்சைபசேலென்ற அந்தப்புல்வெளி பிரேசமும், சுற்றிலும் மரங்களும், பனிமூடிய மலையழகும்,மனதை கவர்கின்றது.

  இவற்றையெல்லாம் நேரில் சென்று காணும் வாய்ப்பு வருமோ வராதோ, தெரியவில்லை!
  பயண கட்டுரையில் தொடர்கிறேன்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 18. பயணக் கட்டுரை படிக்கப் படிக்க மனதில் நாமும் உங்களுடன் எல்லாவற்றையும் கண்டு, களிக்கும் ஓர் உணர்வு தோன்றுகிறது சகோதரரே!

  உங்கள் எழுத்தின் இயல்பு மிக அருமை! எங்களையும் உங்களுடன் சேர்த்திழுத்துக் கொண்டல்லவா போகின்றீர்கள்.. அருமை சகோதரரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 19. பத்னிடாப் மிகவும் அருமையாக உள்ளது! மனதைக் கவர்கின்றது. உடனே சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றது. ரசித்தோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....