எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, December 19, 2014

ஃப்ரூட் சாலட் – 119 – தன்னம்பிக்கை – இன்னும் தேவை – காதல்

இந்த வார செய்தி  :இரண்டு நாட்களாக இந்த காணொளி இணையத்தில் அதிகம் பேரால் காணப்பட்டு வருகிறது. உத்திரப் பிரதேச மாநிலத்தின் [B]புலந்த்ஷஹர் மாவட்ட ஆட்சியாளர் சந்திரகலா அதிகாரிகளை மக்கள் முன்னரே அவர்களது வேலையில் இருக்கும் குறைகளை, ஒரு மழைக்கும் தாங்காத நடைபாதைகளை அமைத்த விதத்தினை எப்படிச் சாடுகிறார் என்பதைப் பாருங்களேன்!  ஹிந்தி புரியாதவர்கள் இந்த சுட்டியில் சென்று ஆங்கிலத்தில் எழுதி இருப்பதைப் பார்க்கலாம்!இந்த வார முகப்புத்தக இற்றை:

மரணம் உன்னை விடப் பெரியது தான் – ஆனாலும் அது உன்னை ஒரே ஒரு முறை தான் ஜெயிக்க முடியும்; ஆனால் நீ வாழும் ஒவ்வொரு நொடியும் மரணத்தை ஜெயித்துக் கொண்டிருக்கிறாய் என்பதை மறந்து விடாதே!

இந்த வார குறுஞ்செய்தி:

தோல்வி வரும்போது அதற்கு இதயத்தில் இடம் கொடுக்காதே....
வெற்றி வரும்போது அதற்கு தலையில் இடம் கொடுக்காதே!

இந்த வார ரசித்த பாடல்:

மௌன ராகம் படத்திலிருந்து சின்னச் சின்ன வண்ணக் குயில்பாடல் இந்த வார ரசித்த பாடலாக – எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும் பாடல்.....  இதோ உங்கள் ரசிப்பிற்கு!
இந்த வார காணொளி:

Tony Meléndez – நிகாராகுவா-வில் பிறந்தவர்.  தனது 16 வயதில் கிடார் வாசிக்கக் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டார் – இது முடியாத வேலை என அனைவரும் சொல்ல, தன்னம்பிக்கையோடு கற்றுக் கொள்ள ஆரம்பித்தார்.தனது முயற்சியில் வெற்றியும் பெற்றார்.  அவர் வாசித்த “Let it be!” பாடல் இந்த வாரத்தின் காணொளியாக!
இந்த வார புகைப்படம்:

மூன்று வாரங்களுக்கு முன்னர் இங்கே சென்றிருந்தேன்... இவ்விடம் தில்லியில் தான் உள்ளது. என்ன இடம் என்று படம் பார்த்து சொல்ல முடிந்தால் சொல்லுங்களேன்!படித்ததில் பிடித்தது:அழகை பார்த்து வருவதுதான் காதல் என்றால்
அழகில்லாதவர்கள் காதலிக்க முடியாது...!!!

பணத்தை பார்த்து வருவதுதான் காதல் என்றால்
ஏழைகளுக்கு காதல் வராது...!!!

உண்மையில் காதல் என்பது என்ன?

அன்பிற்காக ஏங்கிகொண்டிருக்கும் ஒரு
இதயத்திற்கு உண்மையான அன்பு எங்கிருந்து 
பெறப்படுகிறதோ அங்கு உருவாகும் ஒரு 
உன்னதமான காதல்...!!!

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

60 comments:

 1. இசைப்பதற்கு கைகள் இல்லாவிட்டால் என்ன,
  மனமிருந்தால் போதும்,
  முயன்றால் போதும் என்பதை நிரூபித்திருக்கிறார்
  போற்றப்பட வேண்டியவர்
  நன்றி ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 2. Replies
  1. தமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 3. எல்லாமே சூப்பர் அதிலும் அந்த போட்டோ so cute:)) என்ன ஒரு ரசனையான டிரஸ் code:))
  அந்த இடம் சப்தர் ஜங் என்கிறது இன்னொரு tab:)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.

   படத்தை சேமிக்கும்போது அந்த பெயர் வைத்தேன்! :) அதனால் சுலபமாக கண்டுபிடிக்கலாம்!

   Delete
 4. அருமையோ அருமை.. கடைசிகவிதை நச்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவி.

   Delete
 5. சந்திரகலா அவர்களைப் போன்ற அதிகாரிகள் நிறையப் பேர்கள் தேவை.
  காலால் கிடார் வாசிப்பவரின் தன்னம்பிக்கை அனைவரும் கற்க வேண்டிய ஒன்று. அருமையான பாடல் காட்சி மௌன ராகம் பாடல். ரேவதியின் அழகு மனத்தைக் கவருகிறது.
  கவிதை - அன்பு உருவாகும் இடம் அற்புதம்! டில்லியில் அதிக இடங்கள் பார்த்ததில்லை. அதனால் கேள்விக்கு விடை தெரியவில்லை.
  ப்ரூட் சாலட் நல்ல சரியான விகிதத்தில் அமைந்த கலவை. பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

   Delete
 6. வணக்கம்
  ஐயா

  அன்பிற்காக ஏங்கிகொண்டிருக்கும் ஒரு
  இதயத்திற்கு உண்மையான அன்பு எங்கிருந்து
  பெறப்படுகிறதோ அங்கு உருவாகும் ஒரு
  உன்னதமான காதல்...
  காதலைப்பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்
  மனம் கொண்டது மாளிகை என்பது போலதான்...காதலும்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 7. நீங்கள் ரசித்த பாடல் எப்போதும் எல்லோராலும் ரசிக்கப்படும் பாடல்! காட்சியும் கூட! மறுபடியும் ஒரு முறை இந்தப்பாடல் காட்சியைப்பார்க்க வைத்ததற்கு அன்பு நன்றி!

  முகப்புத்தக இற்றை அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 8. அருமை எல்லமே. இறையும், குறுன்செய்தியும் சூப்பர்.

  பாடல் ரசித்த பாடல் மீண்டும் ரசித்தோம்.

  காலால் கிடார் வாசிப்பது ஹப்பா என்ன ஒரு திறமை விடா முயற்ச்சி...கைகள் இல்லை என்றால் என்ன...என்று ...ம்ம்ம்ம் தன்னம்பிக்கை மனிதர்தான்..

  காதல் கவிதை மிக மிக அருமை....டாப்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 9. ஃபுரூட் சாலட்... எப்போதும் போலவே சுவையோ சுவை நாகராஜ் ஜி.
  த.ம. 4

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 10. படித்து ரசித்து பார்த்து மகிழ்ந்தேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 11. டில்லியில் ஆக்ரா --தாஜ்மகால் சரியா!
  மிக்க ரசித்தேன்
  பாராட்டுகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. தாஜ்மஹால் அல்ல! இது சஃப்தர்ஜங் கல்லறை....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் அவர்களே.

   Delete
 12. வாழும் ஒவ்வொரு நொடியும் மரணத்தை ஜெயித்துக் கொண்டிருக்கிறாய் என்பதை மறந்து விடாதே! அருமை!


  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 13. Tony Meléndez இன் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் முயன்றால் முடியாததொன்றுமில்லை என்பதை காட்டுகிறது. மாவட்ட ஆட்சியர் சந்திரகலா அவர்கள் தன் கீழ் உள்ள அலுவலர்களை பொது மக்கள் முன்னிலையில் சாடியது வருந்தக்கூடியது என்றாலும் ஊழல் புரிவோரை இவ்வாறு செய்தால் தான் திரும்பவும் செய்ய மாட்டார்கள்.

  நீங்கள் வெளியிட்டுள்ள படம் சப்தர்ஜங்க் கல்லறை என நினைக்கிறேன்.
  இவ்வார பழக்கலவை வழக்கம்போல் அருமை. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   சஃப்தர்ஜங் கல்லறை தான்.

   Delete
 14. முகப்புத்தக இற்றை உட்பட அனைத்தும் அருமை...

  முடிவில் கவிதை ஆகா...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 15. 'Let it be...' ஆஹா அற்புதமான மனிதர்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 16. .அனைத்தையும் ரசித்தேன்.

  காணொளிகள் திறக்க நேரம் பிடிக்கின்றன (எனக்கு).

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 17. இந்த வார ஃப்ரூட் சாலட் வழக்கம் போல் அருமை. குழந்தைகளோடு இருக்கும் அந்த இரண்டு புகைப்படங்களும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 18. பாடலும் படங்களும் அருமை.
  கால்களால் சாதிக்கும் அவரை வாழ்த்துவோம் அண்ணா..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 19. ரசிக்கவைத்த ஃப்ரூட் சாலட். கலவையான சுவைத் தகவல்கள். நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 20. இந்த வாரப் பதிவுகளை ரசித்தேன். இந்த வார முகப்புத்தக இற்றையும், இந்த வார குறுஞ்செய்தியும் தன்னம்பிக்கை தருவனவாக உள்ளன. நன்றி.:

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 21. பாராட்டுக்குரியவர் Tony Meloendez.

  நல்ல தொகுப்பு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 22. அருமையான ஃப்ரூட்சாலட். பாடல் பகிர்வுக்கு நன்றி, பிடித்தபாடல்.
  கால்களால் கிட்டார் வாசிப்பது அவரின் தன்னம்பிக்கையை காட்டுகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 23. சாலட் சுவையோ...சுவை...த.ம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி.

   Delete
 24. இந்த வார காணொளியில் வந்த காலொளியை ரசித்தேன் ,என்ன ஒரு தன்னம்பிக்கை !
  த ம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 25. அனைத்தும் திகட்டாத தேன்சுவை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 26. சாலட் அருமை ...
  ஷரம் ஆனா சாகியே... அவ்வ்வ்வவ்வ்வ்வவ் யாருப்பா இந்த பொண்ணு.. இந்தப் போடு போடுது...
  ஸ்ட்ராங்கான நடவடிக்கை எடுத்தாலே போதும்.. அப்படி எடுக்க முடியாத நிலையில் அவர்களது அறச்சீற்றத்தை இப்படித் தனித்துக்கொண்டார் போல..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 27. Replies
  1. தமிழ் மண வாக்கிற்கு மிக்க நன்றி மது.

   Delete
 28. என்னங்க ஜெய்ளுக்கு அனுப்பிருவாங்கலாமே...
  எனக்கென்னவோ உதைக்குது...

  ReplyDelete
  Replies
  1. :) கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 29. அனைத்தும் சுவை
  அது ஹுமாயூன் டோம்ப் தானே

  ReplyDelete
  Replies
  1. அப்பா என்ன விளாசு விளாஸூகிறராறர் இந்தக் கலெக்டர். ஹாட்ஸ் ஆஃப். சின்னசின்ன வண்ணக்குயில் ம்ம் இன்னும் ரீங்கரிக்கிறது. காதலை அழகாகக் சொல்லி இருககிறது வரிகள். நன்றி வெங்கட்.

   Delete
  2. //அது ஹுமாயூன் டோம்ப் தானே ?//

   இல்லை சஃப்தர்ஜங் டோம்ப்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....