எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, December 17, 2014

கரகரப்ரியா......

இந்த வருடத்தின் சங்கீத சீசன் ஆரம்பிக்கப் போகிறது.  சென்னையில் இருந்தால் ஒவ்வொரு சபாவாகச் சென்று கச்சேரி கேட்கிறோமோ இல்லையோ அங்கே இருக்கும் உணவகங்களில் விதம் விதமாக சாப்பிட்டு வரலாம். கொடுத்து வைத்த சென்னை வாசிகள்! வாழ்க நலமுடன்!  தில்லியிலும் சில கச்சேரிகள் நடந்தாலும் செவிக்குணவு கிடைக்கும் அளவிற்கு வயிற்றுக்கு கிடைப்பதில்லை!

அட பரவாயில்லையே, இந்த தளத்தில் கூட சங்கீதம் பற்றிய பதிவா என்று சந்தோஷத்துடனோ அல்லது வியப்புடனோ பார்த்து, சங்கீதம் பற்றி அப்படி என்ன எழுதி இருக்கிறது எனப் படிக்க விரும்பினால் அது நிச்சயம் இங்கே கிடைக்கப் போவதில்லை! இது கரகரப்ப்ரியா ராகம் பற்றிய பதிவல்ல ஒரு மனிதரைப் பற்றியது.

அலுவலக நண்பர் ஒருவர் சதா பேசிக் கொண்டிருப்பார். அவருக்குத் தெரியாத விஷயமே இல்லாத மாதிரி தான் பேசுவார்.  எந்த ஒரு விஷயத்தினை நீங்கள் பேச ஆரம்பித்தாலும் அவரும் தன்னுடைய பிரதாபங்களை அள்ளி வீச ஆரம்பித்து விடுவார்.  அவர் பேசப்பேச நீங்கள் பேச வேண்டிய விஷயமே உங்களுக்கு மறந்து விடும் அல்லது உங்களால் பேச முடியாது. அவர் உங்களை பேச விட்டால் தானே!

எந்த விஷயமாக இருந்தாலும் சரி, அது ஜோதிடமாகட்டும், அரசியலாகட்டும், மருத்துவமாகட்டும், அறிவியலாகட்டும், மாடலிங் ஆகட்டும், உணவு, உடை என்ற எதுவாக இருந்தாலும் சரி தன் கதையை ஆரம்பித்து விடுவார்.  தன்னைப் பற்றி அவருக்கு ரொம்ப அதிகமாகவே மதிப்பு உண்டு. தனக்குதான் அனைத்தும் தெரியும் என்பதை அவராகவே சொல்லிக் கொள்வார். பல்துறை வித்தகர் என்று பெருமையாகச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரோ என்று அவரை ஏத்திவிட்டு ஏத்தி விட்டு இப்போது தாங்க முடியாத அளவிற்குப் போய்விட்டது!

நேற்று நண்பர் ஒருவர் “இன்னிக்கு காலையிலே எனக்கு....”  என்று ஆரம்பித்து அவர் சொல்ல வந்த விஷயத்தினை ஆரம்பிக்கு முன்னரே கரகரப்ரியா ஆரம்பித்து விட்டார். நான் கூட இன்னிக்கு காலையிலே சீக்கிரமா எழுந்து மூச்சுப் பயிற்சி செய்த பிறகு குளித்து ஓட்ஸ் கஞ்சியும் பாலும் சாப்பிட்டேன். இதோ அலுவலகத்திற்கு வந்தாச்சு! காலையிலேயே, சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வந்து விடவேண்டும். அது தான் நல்லது!என்று சொல்ல, தனது பிரச்சனையை சொல்ல வந்த மற்றொரு நண்பருக்கு காது வழியாக புகை! “யோவ்! நான் எனக்கு வயிறு சரியில்ல, காலையிலேயே நாலு தடவை போக வேண்டியதாப் போச்சு! அதுனால இன்னிக்கு சாப்பாடு சாப்பிடமாட்டேன்!அப்படின்னு சொல்ல வந்தேன்! நீ வேற! கடுப்படிக்காத!என்று சொன்னார்.  

அதற்கும் அவரிடம் ஒரு பதில் இருந்தது! ஆமாமாம் நான் கூட இப்படித்தான் வயிறு சரியில்லைன்னா சாப்பிட மாட்டேன்! “லங்கணம் பரம ஔஷதம்அப்படின்னு ஒரு விஷயம் இருக்கு தெரியுமா! உனக்கு எங்க அது தெரியப்போகுது! இதுக்கு அர்த்தம் என்ன தெரியுமா என்று கேட்டு, இந்த மாதிரி வயிறு சரியில்லாத நேரத்தில பட்டினி போடறது தான் ரொம்ப சிறந்த மருந்து! புரியுதா நான் சொல்றதுஎன்று கேட்க, வயிற்று வலி நபர், ஒரு கையால் வயிற்றையும் மறு கையால் தலையையும் பிடித்துக் கொண்டு நகர்ந்தார்!

இவருக்கு மருத்துவத்தில் தெரியாத விஷயமே இல்லை என்பது போல அனைத்து வியாதிகளைப் பற்றியும் பேசுவார். மருத்துவத்தில் பெரிய படிப்பு படிச்சவர் போல பல வியாதிகளின் பெயரையும் அதற்கான மருத்துவம் பற்றியும் சொல்லும்போது, இவரைப் பற்றி தெரியாதவர்கள், “அட பரவாயில்லையே, பெரிய ஞானஸ்தன் போலஎன்று நினைத்துவிடக்கூடும்!

தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கும் இவருக்கு சில நாட்கள் முன்பு தொண்டை கட்டி விட்டது. டிசம்பர் மாதம் வந்த பின்பும் குளிர் வரவில்லை.  திடீரென ஒரு நாள் குளிர் அதிகரித்து விட, அவருடைய தொண்டை கட்டிக்கொண்டு அவரால் பேசவே முடியவில்லை. தேவர் மகன் படத்தில் ரேவதி சொல்வது போல வெறும் காத்து தான்வந்தது. ஆனாலும் இவர் பேசுவதை விடவில்லை!  நாங்கள் அன்றாவது பேசாமல் இருப்பார் என்று நினைத்துக் கொண்டிருக்க, அவரோ, சைகை மொழியிலும், முடிந்த அளவு பேச்சிலும் கரகர எனும் குரலிலும் கரகரப்ரியாவாகி பேசிக்கொண்டிருந்தார்.  அவர் அப்பொழுது பேசியது ஏன் தொண்டை கட்டிக் கொள்கிறது, அதற்கு என்ன மருத்துவம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.  “யோவ் முதல்ல பேசறத நிறுத்து! எங்களுக்குச் சொல்ற எல்லா மருத்துவமும் உனக்குத் தான் இப்ப தேவைஎன்று சொல்லலாம் என அனைவரும் யோசித்தாலும் சொல்ல முடியவில்லை!  

இரண்டு மூன்று நாட்களாக இதே கரகரப்ரியாவில் எங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். தாங்க முடியவில்லை. தகரத்தினை கருங்கல்லில் வைத்து தேய்த்தாற்போல குரலில் பிரதாபங்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார். இரண்டு நாட்கள் பொறுத்துக் கொண்ட நாங்களும், இனிமேல் தாங்க முடியாது என்பதால், உங்கள் Vocal Chord-க்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்கள் என்று சொல்லிவிட்டோம்.  ஆனாலும் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் பேசாது இருக்க வாயில் எதையாவது வைத்து ஒட்டி விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம்!

இவரை என்ன பண்ணலாம்! சொல்லுங்களேன்! சரி கரகரப்ரியா ராகம் பற்றி சொல்லிவிட்டு அந்த ராகத்தில் அமைந்த சினிமா பாடல் ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்தேன். இணையத்தில் தேடும்போது, விக்ரம், சூர்யா நடித்த பிதாமகன்படத்தில் வரும் இளங்காத்து வீசுதே!பாடல் கரகரப்ரியா ராகத்தில் அமைக்கப்பட்ட பாடல் என்று ஒரு தளத்தில் குறிப்பிட்டு இருந்தது.


பாடலை ரசித்தீர்களா? இந்த பாடல் கரகரப்ரியா ராகத்தில் அமைந்தது தானா என்பதை இசை தெரிந்த நண்பர்கள் பின்னூட்டத்தில் சொல்லலாமே!

மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

50 comments:

 1. கரகரப்பிரியாவை ரசித்தோம்.. வேறு வழி??!!

  ReplyDelete
  Replies
  1. அப்படி போடுங்க!

   Delete
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜ்ராஜேஸ்வரி ஜி!

   வேற வழியே இல்லை! :)))

   Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   அதே தான். போட்டுத் தாக்கிட்டாங்க! இனிமே பதிவே எழுத வேண்டாம்னு எனக்கும் ஒரு யோசனை இருக்கு......

   Delete
 2. நாலு தடவ கேட்டுட்டேன். நிச்சயமா கரகரப்ரியாதான் சந்தேகமே இல்லை. (கரகரப்ரியா - அப்படீன்னா என்னங்க)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.

   Delete
 3. பெரிய ஞானஸ்தன் - அவருக்கு.... ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 4. முனைவர் பழனி கந்தசாமி ஐயா கேட்பதைத்தான் நானும் கேட்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 5. சென்னை வாசிகள் வெறும் டிசம்பர் மாதத்தில் தான் சங்கீதத்தை ரசிக்கிறார்கள். ஆனால் நீங்களோ தினமும் இல்ல ரசிக்கிறீங்க. இப்படி ஒரு வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைக்கும். நீங்க அவருக்கு நன்றியை அல்லவா சொல்லணும்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 6. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 7. இது தானா - கரகரப்பிரியா!?.. அருமை!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   இப்பாடல் கரகரப்ரியா என்று ஒரு தளத்தில் இருந்தது. சங்கீத நிபுணர்கள் தான் சொல்ல வேண்டும்!

   Delete
 8. இவர் போல கேரக்டர்கள் எல்லா இடத்திலும் உண்டு!

  இந்தமுறை சங்கீத சபாக்களில் கேண்டீன்களில் சில மாற்றங்கள் உண்டு என்று படித்தேன்.

  இருமலர்கள் படப்பாடலான 'மாதவிப் பொன்மயிலாள்' பாடல் உறுதியாக கரகரப்ரியா ராகம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   மேலதிகத் தகவலுக்கும்!

   Delete
 9. சில மனிதர்களால் பேசாமல் இருக்க முடியாது. பாடல் பகிர்வுமிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 10. தேவையில்லாமல் மூக்கை நுழைத்து அறுக்கும் இவர்கள் எங்கும் உள்ளார்கள் போல!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 11. ஹாஹஹஹஹ் செம கரகரப்பிரியாதான்! மிகவும் ரசித்தோம்.....

  நாங்கள் சொல்ல வந்தது.....நண்பர் ஸ்ரீ ராம் சொல்லி இருப்பது போல் மாதவிப் பொன்மயிலாள் அச்சு கரகரப்ரியாவேதான்....ஆனால் இளம் காற்று வீசுதே....ம்ம்ம் சொல்ல இயலவில்லை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 12. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 13. இவர் போன்ற மனிதர்கள் எல்லா இடத்திலும் இருக்கத்ததான் செய்கிறார்கள்
  எனது உடன் பணியாற்றுபவர் ஒருவர் இருக்கிறார், அவர் தன்னைத்தவிர வேறு யாரையும்
  புகழ்ந்து பேசியோ, நல்லவிதமாக பேசியோ நான் இதுவரை கேட்டதில்லை.
  என்ன செய்வது, இவர்களுடனும் பழகித்தான் ஆக வேண்டியிருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 14. Replies
  1. தமிழ் மணம் ஐந்தாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 15. கரகரப்ரியா.....இப்படியும் சிலர் விடாது கருப்பு மாதிரிந்தான்.....என்ன செய்வது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி.

   Delete
 16. வணக்கம் சகோதரரே!

  நல்ல நகைச்சுவைப்பதிவு.ரசித்தேன்.

  . ஓ! இதுதான் கரகரப்ரியாவா?

  நகைச்சுவையுடன், ஒரு ராகத்தைப் பற்றி விளங்க செய்தமைக்கு நன்றி. அதற்கு காரணமாக இருந்த தங்கள் நண்பர் வாழ்க.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 17. வணக்கம்
  ஐயா.
  சிறப்பான விளம் பகிர்வுக்கு நன்றி இறுதியில் உள்ள பாடல் மிக அருமையாக உள்ளது... பகிர்வுக்கு நன்றி
  த.ம6
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பருவமாறிந்து பருவச்சிறகை விரித்தேன்.:

  கவிதையாக என்பக்கம் வாருங்கள் அன்புடன்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 18. கரகரப்பிரியா ரசிக்க வைத்தது அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 19. ஹ ஹ இப்படிப்பட்ட ஆட்கள் இருக்கும் இடத்தில இருந்து அப்பீட் ஆக வேண்டியது தான் ...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 20. படம் அருமை
  த ம +1

  ReplyDelete
  Replies
  1. படத்தினை ரசித்தமைக்கும் தமிழ் மண வாக்களித்தமைக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 21. கரகரப்பிரியா பற்றி அறிந்தேன். அவர் வாயில் எதையாவது வைத்து ஒட்டுவதை விட உங்கள் அனைவரின் காதிலும் பஞ்சை வைத்துக்கொள்ளலாம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 22. ஹா....ஹா...ஹா...
  அந்த பாட்டு பிடிக்கும் ஆனா அது என்ன ராகம் னு எல்லாம் தெரியாது அண்ணா!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.

   Delete
 23. போனவாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இரண்டு இளைஞர்கள் 'I will sing for you' பாடலைப் பாடினார்கள் அது கரகரப்ரியா. நெற்றிக்கண் படத்தில் வரும் மாப்பிள்ளைக்கு மாமன் வயசு பாடல் கரகரப்ரியா. ஸ்ரீராம் சொல்லியிருக்கும் மாதவிப் பொன்மயிலாள் பாடலும் கரகரப்ரியாதான். இந்தப் பாடல் தெரியவில்லை. யாராவது இசை மேதை வந்து தான் சொல்லவேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....