எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, February 27, 2015

ஃப்ரூட் சாலட் – 127 – கழிவுகளும் செல்வம் தரும் – புல்லாங்குழல் – நவீன உடற்பயிற்சி


இந்த வார செய்தி:

கழிவுகளை செல்வமாக பாருங்கள்!டென்மார்க் துாதரகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து, விருப்ப ஓய்வு பெற்று, வீடு வீடாக சென்று கழிவுகளை சேகரிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் மங்களம் பாலசுப்ரமணியன்: நம்மை சுற்றி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி வைத்துக் கொள்ள, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கணும். ஓய்வுக் காலத்தை உருப்படியாக கழிக்க, நல்ல வழி இதுதான் என, தோன்றியது. உடனடியாக நாங்கள் வசிக்கும் சென்னை, பம்மல் பகுதியில் இரண்டு, மூன்று பேருடன் களம் இறங்கினேன். ஒரு பிரபல குளிர்பான நிறுவனமும், எக்ஸ்னோராவும் எங்கள் முயற்சிக்கு ஊக்கம் தந்தன. என்னுடைய தலைமையில் இயங்கும், 'பசுமைத் துாதுவர்கள்' என்று சொல்லப்படும் குழுவினர், பம்மலை சுற்றியுள்ள சில தெருக்களில், வீடு வீடாகப் போய் குப்பைகளை சேகரிக்கின்றனர். அரசிடம் கடுமையாக முயற்சி செய்து பெற்ற இடத்தில், மக்கும் குப்பைகளை உரமாக்கும் பணி நடக்கிறது. கேரி பேக், ஷாம்பு பாக்கெட் போன்ற பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து, அவற்றை, 'ரீ-சைக்கிளிங்' செய்து, இயந்திரத்தின் மூலம் துணி போல் நெய்கிறோம். அதை மூலப் பொருளாக கொண்டு, 'வால் ஹேங்கிக், பென் ஸ்டாண்ட், ஸ்கிரீன் என, பல்வேறு பொருட்களை செய்து விற்கிறோம்.

மிக சமீபமாகத் தான், குப்பை - துாய்மைன்னு இந்த விஷயத்தில் மக்களிடம் ஒரு விழிப்புணர்வு வந்துள்ளது. ஆனால், எங்கள் பகுதியில், 20 ஆண்டுகளுக்கு முன்பே, இதை துவங்கிவிட்டோம். ஆரம்பத்தில், கூட்டங்கள் போட்டு தான் மக்களுக்கும் புரிய வைக்க வேண்டி இருந்தது.

இப்போது பல வீடுகளில், மக்கும் குப்பை, மக்காத குப்பைன்னு அவர்களே பிரித்து கொடுத்து விடுகின்றனர். தங்கள் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள பழகி விட்டனர். நாம் துவங்கிய பணி, நல்ல முடிவை கொடுத்துள்ளதை நினைக்கும் போது, மனதுக்கு நிறைவாக உள்ளது. கலெக்டர், கவர்னர் என, பல தரப்பிலிருந்தும் எங்க களப் பணியை பார்த்து பாராட்டுகின்றனர். கழிவுகளை அருவருப்பாக பார்க்காமல், செல்வமாக நினைத்தது தான், இதற்கெல்லாம் காரணம். சுற்றுவட்டார ஓட்டல்களில் இருந்து, உணவுக் கழிவுகளை சேகரித்து நொதிக்க வைத்து, காஸ் தயாரிக்கிறோம். இதற்காக, பயோ காஸ் உற்பத்தி மையமும் செயல்படுகிறது. இங்கிருந்து பெறப்படும் காஸ் மூலம், ஜெனரேட்டர் இயக்கி அதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தால், 50க்கும் மேற்பட்ட தெருவிளக்குகளை எரியச் செய்கிறோம். குரோம்பேட்டை ஏரியாவில், ஏராளமான தோல் தொழிற்சாலைகள் உள்ளன. அங்கிருந்து டன் கணக்கில் கழிவுகள் வெளியேற்றப்படும். அவற்றை ஒரே இடத்தில் சேமித்து, மறு சுழற்சி செய்யும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறோம்.

-          தினமலர் சொல்கிறார்கள் பகுதியிலிருந்து....

பாராட்டுக்குரிய விஷயம் இது.  இவர்கள் போல இன்னும் நிறைய பேர் நம் நாட்டுக்கு தேவை. அரசாங்கமும் இது போன்றவர்களை ஊக்குவித்தால் நல்லது!  இவர்களுக்கு இந்த வார பூங்கொத்து!இந்த வார முகப்புத்தக இற்றை:இந்த வார நகைச்சுவை:இந்த வார இசை:

சமீபத்தில் இசைக்கலைஞர் ரோணு மஜும்தார் அவர்களில் பேட்டி ஒன்று காணும் வாய்ப்பு கிடைத்தது. புல்லாங்குழலில் மனிதர் கலக்குகிறார்...  அவரது வாசிப்பு ஒன்று இந்த வாரத்தில் ரசித்த இசையாக!இந்த வார புகைப்படம்:இந்தப் படமும் GARDEN OF FIVE SENSES-ல் எடுத்தது தான். இது ஒரு மொட்டு. என்ன பூ, என்ன தாவரம் என்பதை யாராவது சொல்ல முடியுமா? என்று பார்க்கவே இந்தப் பகிர்வு! ஒரு சின்னக் குறிப்பு வேணா தரவா? – மருத்துவ குணம் நிறைந்தது இச்செடி!

இப்ப பூ படமும் சேர்த்தாச்சு! :)

 ராஜா காது கழுதைக் காது:

தில்லியிலுள்ள ஒரு பூங்கா GARDEN OF FIVE SENSES.  வருடா வருடம் இங்கே FLOWER SHOW/FESTIVAL என கொண்டாடுவது வழக்கம். இந்த வருடமும் நடந்தது. அங்கே நிறைய காதலர்களைப் பார்க்க முடிந்தது. Festival இல்லாத நாட்களில் அங்கே குழந்தைகளோடு செல்வது அவ்வளவு நல்லதல்ல! இது போன்ற Festival சமயங்களில் காதலர்கள் கூட்டம் குறைவாகத் தான் இருக்கும் என்றாலும் சில ஜோடிகளின் லீலைகளைப் பார்த்த ஒரு பத்து பன்னிரெண்டு வயது மதிக்கத்தக்க சிறுவன் சொன்னது –

“இங்கே வரணும்னா கல்யாணம் பண்ணிட்டு தான் வரணும் போல இருக்கு!


படித்ததில் பிடித்தது:ஒரு கோப்பைத் தேநீருக்கு
அவளிடம் கெஞ்ச வேண்டும்.
மப்ளர் கட்டாமல் நடக்க
அவள் பார்வைக்குத் தப்பவேண்டும்.
இன்னொரு கரண்டி சாம்பார்
அவள் அறியாமல் எடுக்க வேண்டும்.
மொசைக் தரையில்
தவறி வீழ்ந்த மாத்திரை
அவள் பார்வைக்குத் தப்பாது.
எட்டு மணிக் கடிகாரம்
அவள் சொன்னால் மணியடிக்கும்..
சாப்பிட வரச் சொல்லி.
ராட்சசிதான்..
எமகாதகிதான்..
உயிரை வாங்குபவள்தான்..
மூலையில் ஒரு தீபமாகிப் போனபின்
உற்றார் உறவுகள் நகர்ந்து போனதும்
தனித்திருக்கிற ஹாலில்
எடுத்துப் போட ஆளின்றி..
பிளாஸ்க் டீ குடிக்காமல்..
காலை சாம்பார் ஜில்லிட்டு..
உள்ளே குளிரும் நடுக்கத்திற்கு
சால்வை போர்த்தி..
அம்மு..
வாயேன்.. வந்து திட்டேன். !

( அவரைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது )

-   ரிஷபன்.

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

60 comments:

 1. அனைத்தும் அருமை.. எனினும் ,
  ரோணு மஜும்தார் அவர்களின் புல்லாங்குழல் - இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 2. அப்பாடா.... இப்படியாவது கழிவுகள் போய் ஊர் சுத்தமானால் நிம்மதி!

  குட்டிப்பையன் சொன்னது ஜோர்!

  என்ன பூவாக இருக்குமுன்னு யோசிக்கிறேன். நிலசம்பங்கி வகையோ?

  ReplyDelete
  Replies
  1. இப்ப பூவின் படமும் சேர்த்திருக்கிறேன் டீச்சர்.... பார்த்துட்டு சொல்லுங்க!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 3. அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 4. சாதாரணமாக தினமலர் சொல்கிறார்கள் பகுதிக்கு லிங்க் தர முடியாது. எனவேதான் அந்தப் பகுதியில் வரும் பாஸிட்டிவ் செய்திகளை என் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து லிங்க் கொடுக்கிறேன். மற்ற செய்திகளுக்கு அந்தச் செய்தித்தாள் பக்கத்திலேயே லிங்க் கொடுத்து விடுகிறேன். இன்றைய 'சொல்கிறார்கள்' பகுதி நற்செய்தியை நீங்கள் பகிர்ந்து விட்டதால் நான் தனியாகப் பகிராமல், உங்கள் பக்கத்தையே லிங்க் தந்து விடுகிறேன்!

  இவ்வளவு பெரிய விளக்கம் தேவை இல்லைதான். இருந்தாலும் சொல்லத் தோன்றியது.

  :))))))

  ReplyDelete
  Replies
  1. அப்பாடி எவ்வளவு பெரிய விளக்கம். கண்ணுக்குப்படும் ஏதோ ஒரு நல்ல செய்தியை பகிர்ந்து கொள்கிறேன் - அது எப்படியும் உங்கள் பதிவிலும் வரும் என்று ஒவ்வொரு முறையும் நினைப்பேன்..... இம்முறையும்.....

   உங்கள் கண்ணுக்குப் படாது எனும்படி செய்தியை இனித் தேட வேண்டும்! :)))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. ரா. ஈ. பத்மநாபன்February 27, 2015 at 10:48 AM

  ''GARDEN OF FIVE SENSES" மற்ற நாட்களில் SENSELESS காதலர்களின் தொல்லையால் "கார்டன் OF நியூசென்ஸ்" !!
  “இங்கே வரணும்னா கல்யாணம் பண்ணிட்டு தான் வரணும் போல இருக்கு!” - அடடா! அவன் கவலை அவனுக்கு!
  ரிஷபன் கவிதை - வாழ்க்கை ரகசியம்.

  ReplyDelete
  Replies
  1. அவன் கவலை அவனுக்கு! :))) அதே தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....

   Delete
 6. திருமதி மங்களம் பாலசுப்ரமணியன் செய்து வருவது அருமையான சேவை! அவர்களுக்கு என் சார்பிலும் ஒரு பூங்கொத்து. பலரும் அறிய இந்த நல்ல செய்தியை பதிவாகத்தந்த உங்களுக்கும் ஒரு பூங்கொத்து!!
  புல்லாங்குழல் இசை அருமை! ரிஷபனின் கவிதை மனதை கனமாக்கியது!

  ReplyDelete
  Replies
  1. ரிஷபன் சாரின் கவிதை படித்தவுடன் பிடித்தது...... அதனால் தான் இங்கே பகிர்ந்து கொண்டேன்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன்.

   Delete
 7. வியந்தேன்; ரசித்தேன் ; சிரித்தேன் ;
  கடைசியில் ரிஷபன் சார் கவிதை நிதர்சனம் மனசை பிசைந்தது .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 8. அனைத்துமே அருமை.
  குப்பையிலிருந்து ரீ-சைக்கிளிங்' சிறப்பான விஷயம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

   Delete
 9. இந்த வார பழக்கலவையில் முகப்புத்தக இற்றையும், நகைச்சுவையும், இசைக்கலைஞர் ரோணு மஜூம்தார் அவர்களின் புல்லாங்குழல் இசையும் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி!
  இந்த வார புகைப்படத்தில் உள்ள தாவரம் திருமதி துளசி கோபால் அவர்கள் சொன்னது போல் நில சம்பங்கி தான். Asparagaceae தாவர குடும்பத்தைச் சேர்ந்த இதனுடைய பெயர் Polianthes tuberosa. என்ன சரிதானே திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

  ReplyDelete
  Replies
  1. இப்போது பூவின் படத்தினையும் சேர்த்திருக்கிறேன்.... பார்த்துட்டு சொல்லுங்க சார்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி சார்.

   Delete
  2. தெரியவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன். தாங்கள் தான் அந்த தாவரத்தின் பெயரை சொல்லவேண்டும்.

   Delete
  3. தளிர் சுரேஷ் சொன்னது போல இது கற்றாழைப் பூ.... கற்றாழைகளில் பலவகைகளில் இதுவும் ஒன்று.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 10. மங்களம் பாலகிருஷ்ணன் அவர்களின் தொண்டு பாராட்டிற்குரியது. ஊர் சுத்தமாக்குதல் என்பது மிகப் பெரிய விஷயம்....நம்ம ஊர்ல...

  இற்றை அருமை....அதிலிருக்கும் அந்தப் பூனைக் குட்டிகள் கொள்ளை அழகு!

  நகைச்சுவை ஹஹஹஹ

  அந்தக் குட்டிப்பையனின் கமென்ட் செம...

  ரிஷபன் அவர்களின் கவிதை அருமை ...ம்ம்ம்ம் வாழ்க்கையே அதுதான்

  அந்தப் புல்லாங்குழல் ஆஹா......காதில் இன்னும் ...ஒலிக்கின்றது...டாப்.மிகவும் ரசித்தோம்...ரசிக்கின்றோம்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   புல்லாங்குழல் இசை உங்களுக்குப் பிடிக்கும் என பகிர்ந்து கொள்ளும் போதே நினைத்தேன்.

   Delete
 11. படித்ததில் பிடித்தது எனக்கும் மிகவும் பிடித்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 12. புகைப்படம் .....அருமை...ஆனால் என்ன பூவாக இருக்கும் என்று சொல்லத் தெரியவில்லை....(பார்த்த உடனே பங்களூர் கத்தரிக்காய் போல இருக்கே என்று தோன்றியது....ஹஹஹ் )

  ReplyDelete
  Replies
  1. பெங்களூர் கத்திரிக்காய்... ஹாஹா..... சின்னது! :)

   இப்போது பூவின் படமும் சேர்த்திருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி.

   Delete
 13. மிக்க நன்றி ஸார் !

  ReplyDelete
  Replies
  1. நான் தானே நன்றி சொல்லணும்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்.

   Delete
 14. சொர்க்கமாகும் என்பதில் சிறிதும் ஐயமில்லை..

  வெங்கட் இறுதியில் நீங்கள் பகிர்ந்து இருக்கும் கவிதை மிக அருமை அதிலும் இந்த வரி "மூலையில் ஒரு தீபமாகிப் போனபின்' கவிதைக்கே உயிர் கொடுப்பன போலிருக்கிறது இந்த வரி இல்லையென்றால் மற்றவரிகள் எல்லாம் அர்த்தமில்லா வரிகள்தான். கவிதை என்றால் புரியாமல் வார்த்தை ஜாலங்களால் எழுதுவதுதான் என்று நினைத்து எழுதுபவர்கள் மத்தியில் மிக அருமையாக எழுதி சென்று இருக்கிறார் இதை எழுதியவர் அவருக்கும் இதை பகிர்ந்த உங்களுக்கும் பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. கவிதை எழுதிய திரு ரிஷபன் அவர்களும் ஒரு பதிவர் தான். அவரது பக்கம் - www.rishaban57.blogspot.com.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 15. என்ன மொட்டு என்ன பூ? நான் என்ன ராமலக்‌ஷ்மியா?

  ரிஷபன் கவிதை டாப்.

  ReplyDelete
  Replies
  1. இப்போது பூவின் படமும் சேர்த்திருக்கிறேன்.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை.

   Delete
 16. ரிஷபனின் கவிதை
  உண்மையான 'புகை'ப் படம்
  ஆஹா! குழல் இனிமையில் அந்த முரளிதரனே மயங்கிப் போவான்.

  ReplyDelete
  Replies
  1. முரளிதரனே மயங்கிப் போவான்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 17. வணக்கம்
  ஐயா
  ஒவ்வொரு கருத்துக்களும் நன்று இறுதியில் சொல்லிய கவிதை மிக மிக நன்று பகிர்வுக்கு நன்றி த.ம 6
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 18. எல்லாமே அருமை என்றாலும் இறுதியில் சொன்ன திரு.ரிஷபனின் கவிதை ஆஹா... அற்புதம் அண்ணா....
  புல்லாங்குழல் இசை கேட்டுக் கொண்டேதான் கருத்து டைப் செய்கிறேன்....
  வாவ்.... என்ன அருமை....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 19. ரிஷபன் கவிதை... அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 20. சிறப்பான தகவல்கள்! நன்றி! கற்றாழைப்பூவா?

  ReplyDelete
  Replies
  1. கற்றாழையின் பலவகைகளில் ஒன்று தான்.... சரியாகச் சொல்லி விட்டீர்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 21. நாட்டுக்கு, ( மங்களம் பாலசுப்ரமணியன் போன்றவர்கள்) நிறைய தேவை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 22. தாங்கள் புகைப்படங்களைத் தெரிவு செய்யும் விதம் நன்று. ஒவ்வொரு கோணத்தில் சிறப்பாக உள்ள புகைப்படங்கள். தங்களது ரசனைக்குப் பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 23. ஐயாவின் கவிதை உட்பட அனைத்தும் அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 24. அனைத்தும் அருமை ஐயா
  தங்களின் ஒவ்வொரு படமுமே கவிதைதான்
  நன்றி ஐயா
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 25. மங்களம் பாலசுப்ரமணியன் அவர்களுக்கு வணக்கங்கள்.
  புல்லாங்குழல் இசை பகிர்வு மற்றும் அனைத்தும் அருமை. கவிதை மனதை கனக்க வைத்து விட்டது . ஏற்கனவே படித்து விட்டாலும் மறுபடி படிக்கும் போதும் மனதை சங்கடப்படுத்தும் கவிதை. துணையை பிரிந்த இருபக்க உறவுகளும் பிரிந்து சென்ற துணையை நினைத்து வேதனை படுவது தவிர்க்க முடியாது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

   Delete
 26. நல்லதொரு தொகுப்பு. கவிதை, இசை, ஒளிப்படங்கள் மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 27. அனைத்தும் அருமை. புல்லாங்குழல் இனிமை வழிந்தோடுகிறது இன்னும் காதுகளில்...
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

   Delete
 28. என்னுடைய பதிவு உலகம் உருண்டை தானே...? நேரம் இருப்பின் காண வாருங்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பதிவினையும் படிக்க விரைவில் வருகிறேன்......

   தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

   Delete
 29. கவிதையால் கண்கள் கலங்கியது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....