எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, February 11, 2015

சுந்தரம் மாமா

சுந்தரம் மாமா - எப்போதும் முகத்தில் புன்னகை – கடும் சொல் பேசாதவர்.  பாசமானவர். அனைவரிடமும் அன்புடன் பழகுபவர்.  இரயில்வே துறையிலிருந்து ஓய்வு பெற்றவர். விளையாட்டுகளில் ஆர்வம் அதிகமுண்டு. போலவே நடை பழகுவதிலும்! எங்கும் நடந்தே சென்று விடுவார். எத்தனை கஷ்டம் இருந்தாலும் அதனைச் சொல்லி புலம்பிக் கொண்டிருக்காமல் “Enjoy Life as it comes!” என்று வாழ்பவர்.

வாழ்கையில் சந்தித்த பிரச்சனைகள் எண்ணிலடங்கா....  ஒரு மகன் மற்றும் மகள். மகன் வங்கி ஒன்றில் பஞ்சாபில் பணி புரிந்து கொண்டிருந்தார்.  வங்கி அவரை ஒரு பயிற்சிக்காக அனுப்பியது. பயிற்சி சமயத்திலேயே இதயக் கோளாறினால் இறந்து போக, தில்லியிலிருந்து அவசர அவசரமாக பயணித்தார். மூன்று வயது பேத்தி, மருமகள் இருவரையும் அழைத்துக் கொண்டு தில்லி திரும்பினார்.  மகன் இறந்து ஆறு மாதங்களுக்குள் மருமகள் மறுமணம் புரிந்து கொண்டு தனது மகளையும் அழைத்துக் கொண்டுச் சென்று விட்டார். அதன் பிறகு அவர்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பில்லை.

மகள் வட இந்தியரை காதலித்து திருமணம் புரிந்து கொண்டார். மருமகனுக்கு பெரிதாக வேலை ஒன்றுமில்லை. அவருக்கு இவரின் சொத்து மேல் மட்டுமே ஆசை. அவ்வப்போது பணம் கேட்டு தொந்தரவுகள். தங்கி இருந்த சொந்த வீட்டினை விற்று பணம் தரும்படியும் அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்தார். 

சுந்தரம் மாமா அவர்களின் மனைவி சர்க்கரை நோயாளி – அதுவும் கொஞ்சம் நஞ்சம் அல்ல – தினம் தினம் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். அவராகவே போட்டுக் கொண்டாலும், வீட்டு வேலைகள் பலவும் இவர் தான் செய்ய வேண்டும்.  70 வயதுக்கு மேலானாலும் தொடர்ந்து வீட்டு வேலைகளையும் செய்து கொண்டு வீட்டுக்கு தினம் தினம் வேண்டிய பொருட்களையும் வாங்கி வருவது என எல்லாம் இவர் சந்தோஷமாக செய்வார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இவரது மனைவியின் உடல் நிலை மிகவும் மோசமாகி ஒவ்வொரு உறுப்புகளாக தனக்கு வயசாகி விட்ட்தென கைவிரிக்க, படுத்த படுக்கை – படுக்கையிலேயே அனைத்தும் – அனைத்திற்கும் குழாய்களும்/பைகளும்....  இத்தனை கஷ்டம் இருந்தபோதும் தான் செய்யும் வேலைகளில் சமையலும் சேர்ந்து விட முடிந்த அளவிற்கு எல்லாத்தையும் செய்வார் சுந்தரம் மாமா. 

தனக்கும் கண்களில் புரை வந்துவிட, அதற்கான மருத்துவம் செய்து கொள்ளாமல் – யார் தன்னைப் பார்த்துக் கொள்வார் என்ற கேள்வியுடனே –நடமாடினார்.  சாலையைக் கடக்கும் போது ஒரு குத்துமதிப்பாகத் தான் நடப்பார்.  இப்படியெல்லாம் வாழ்க்கையையும் அதன் சுகதுக்கங்களையும் அதன் போக்கிலேயே விட்டு வசித்தவர்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் மனைவி உடல் நிலை முழுவதும் மோசமாகி இறைவனடி சேர்ந்தார். தனியாக இருக்க வேண்டிய சூழல். மகளும் மருமகனும் இவரை தங்களுடனேயே வந்து இருக்கும்படி நிர்பந்தம் செய்ய, அங்கேயே சென்றார்.  சென்று சில நாட்களில் சொந்த வீடு வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்? எப்படியும் உங்களுக்கப்புறம் எங்களுக்குத் தானேஎன்று வீட்டினை விற்று வந்த பணத்தினை வைத்து ஏதோ தொழில் தொடங்கினார்கள். 

இரயில்வே துறையில் நல்ல நிலையில் இருந்ததால் மாதாமாதம் ஓய்வுத் தொகை வந்து கொண்டிருந்தது. மருத்துவத் தேவைகளையும் இரயில்வேயின் மருத்துவமனைகளில் கவனித்துக் கொண்டார்.  சில நாட்களாகவே வாழ்க்கையில் அவர் கடந்து வந்த கடினமான பாதைகளை நினைத்துக் கொண்டே இருந்தார். வயதும் அதிகமாகிக் கொண்டே போகிறது. எண்பதுக்கும் மேலே ஆகி விட்டது.

இதற்கு மேலும் என்னால் வாழ்வின் சுகதுக்கங்களை சகித்துக் கொள்ள முடியாது.  என்னை எப்போது இறைவன் தனது பாதங்களில் சேர்த்துக் கொள்வானோ என்று சில ஆண்டுகளாகவே சொல்லிக் கொண்டிருந்தார்.  பொங்கல் சமயத்தில் நான் தமிழகத்திற்கு வந்து தில்லி திரும்பினேன்.  நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன் – “உன்னை தொந்தரவு செய்ய வேண்டாம்னு நினைச்சு ஒரு விஷயம் உன்கிட்ட சொல்லல! நம்ம சுந்தரம் மாமா இறந்துட்டார்!  என்று சொல்ல, நானும் சாதாரணமாக “அடடா அப்படியா? பாவம் ரொம்பவே கஷ்டப் பட்டு விட்டாரே. இறைவன் இப்போழுதாவது அவரை தன்னிடம் அழைத்துக் கொண்டாரே!என்று சொன்னேன். 

அதற்கு எனக்கு கிடைத்த பதில் என்னை ரொம்பவே வருத்தியது. இத்தனை வருடங்களாக எல்லா சுகதுக்கங்களையும் அதன் போக்கில் விட்டு வாழ்க்கையை வாழ்ந்த அவர் ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தார் என்று இன்னமும் புரியவில்லை. அவர் எடுத்த முடிவு......

உணவு சாப்பிட்டு மொட்டை மாடிக்குப் போனவர் அங்கிருந்து கீழே குதித்து விட்டார்!

கேட்டதிலிருந்தே மனதில் அவரது நினைவுகள் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. இத்தனை வயதில் இந்த முடிவு எடுக்க வேண்டிய அவசியம் என்ன?  ஒன்றும் புரியவில்லை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

50 comments:

 1. வணக்கம்
  தகவலை படித்தவுடன் மனதில் சோக உணர்வு எழுந்தது.. நல்லமனிதர்களுக்கு சோதனை அதிகம்...ஐயா. த.ம 2

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 2. மனம் கணத்து விட்டது நண்பரே இதை தவறு என்று ஒற்றை வரியில் நாம் சொல்லிவிட முடியாது காரணம் அவரின் சூழ்நிலை தனிமை படுத்தப்பட்டு விட்டோம் என்ற ஏக்க உணர்வுகூட இருக்கலாம் அவரின் நிலையிலிருந்து பார்க்க வேண்டும் இறைவன் அவரது ஆன்மாவுக்கு அமைதியை கொடுக்கட்டும்.
  தமிழ் மணம் 2

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 3. அடடா!! ஏன் இப்படி பண்ணிட்டார்?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

   Delete
 4. அதுவும் ஒரு முடிவுதானே..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   Delete
 5. சுந்தரம் மாமா விற்காகவும் ,அவர் நிலையில் உள்ள மற்றவர்களுக்காகவும் உள்ளம் நிகிழ

  prayer செய்வது மட்டுமே,நம்மால் ஆனது. "கிருஷ்ணா.அமைதி கொடு".

  மாலி.

  ReplyDelete
  Replies
  1. கிருஷ்ணா அமைதி கொடு..... அதே தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாலி ஜி!

   Delete
 6. ஐயோ:( வாசிக்கும்போதே மனசு கனத்துபோச்சு.

  இந்தக் காலத்தில் பெத்ததுகளுக்குக்கூட பணத்து மேலேதான் அன்பு:(

  ReplyDelete
  Replies
  1. கேட்டதிலிருந்தே அவர் தான் நிறைந்திருந்தார் மனதில்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 7. சுந்தரம் மாமாவின் முடிவு இயற்கையாக இருந்திருக்கலாம். பாவம்.

  அவருக்கு என்ன மன வருத்தமோ அவரை இப்படி ஒரு முடிவு எடுக்க வைத்துள்ளது.

  படித்ததும் மிகவும் வருத்தமாக உள்ளது.

  ஆங்காங்கே இதுபோல எவ்வளவோ வயதானவர்கள் கஷ்டப்பட்டுக்கொண்டே உள்ளனர்.

  சிலருக்கு இதுபோல அடுத்தடுத்து கஷ்டங்களே வாழ்க்கையாக அமைந்துவிடுகிறது. :(

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 8. மனைவியின் பிரிவு. சொந்தங்களின் துரோகம்.. தன் உடல் நிலை... தொடர்ந்து அவரை மனச் சோர்வினில் தள்ளியிருக்க வேண்டும். அது தான் இப்படி ஒரு விடுதலையை தேடிச் செல்லத் தூண்டியிருக்கவேண்டும். மிகப் பரிதாபம்.. இவரை போன்ற மனிதர்களின் வாழ்கையைப் பார்த்தால்.. life is not fair!

  ReplyDelete
  Replies
  1. life is not fair..... exactly.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி bandhu ஜி!

   Delete
 9. நல்லவேளை, இறைவன் அழைத்துக்கொண்டாரே என நிம்மதி பெருமூச்சு விடுமுன், அவரின் சோகமான முடிவு கலங்க வைத்துவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 10. பகிர்ந்து கொள்வதற்கு இருந்திருக்க மாட்டார்கள். ஐம்பது வயதிலும்,எழுபது வயதிலும் கூட சமாளித்துக் கொள்ள முடிந்திருக்கும் அவர்களால் என்பது வயதில் உண்மையாக, மனம் விட்டு கலந்து பேச ஆள் இல்லாததாலேயே இந்த முடிவு எடுத்திருக்கக் கூடும். மகளும் மருமகனும் பாசத்தால் சேர்த்துக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. ஆனாலும் தவறான முடிவுதான். ம்ம்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 11. மனம் கனத்து போனது . அந்திம வேளை எல்லோரும் அமைதியானதாக இருப்பது இல்லை போலும்!
  வயதானவர்கள் அக்கம் பக்கம், நண்பர்கள், உறவினர்கள் என்று கலந்துரையாடிக் கொண்டே இருக்க வேண்டும், தனிமை கொடுமை. அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவன் அருள வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 12. வாழ்க்கையில் சிலருக்கு அளவு கடந்த சோதனைகள் ஏற்பட்டு விடுகின்றன. சுந்தரம் மாமாவின் கதை கண்கலங்க வைக்கிறது. பொதுவாக ஆண்களைவிட பெண்பிள்ளைகள் பெற்றோரை பாசத்துடன் கவனித்து வருவதை பார்த்திருக்கிறேன். அனால் அவர் பெண்ணும் சரியாக தந்தையை கவனிக்காதது கொடுமை பென்ஷன் ,சொத்து இல்லையெனில் இந்த நிலை அவருக்கு எப்போதோ ஏற்பட்டிருக்கும்.
  பாசமும் நேசமும் பெயரளவில்தான் .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 13. பாசத்துக்காக ஏங்குவோரும், தனிமையில் தவிப்போரும் வாழ்வில் படும் துயரங்கள் எல்லையற்றன. படித்து முடித்தபோது ஏதோ நம்மோடு இருந்த ஒருவர் இறந்துவிட்டதுபோன்ற உணர்வு. தம+1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா...

   Delete
 14. தனிமை கொடுமை... நல்லதொரு நண்பர் கிடைத்திருந்தால்... ம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 15. திரு சுந்தரம் அவர்கள் பற்றிய தகவல் மனதை ஏதோ செய்தது. உறவு என்பதெல்லாம் வெறும் பணத்திற்குத் தானோ என எண்ணத் தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 16. அன்பிற்கும் பாசத்திற்கும் ஏங்கித் தவித்திருக்கின்றார்.
  என்ன விதமான மன அழுத்தத்திற்கு ஆளானாரோ..
  இனியேனும் - அவரது ஆத்மா சாந்தியடையட்டும்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 17. ஆத்மார்த்தமாக பேச ஒரு நண்பர் இருந்திருந்தால் இப்படி ஆகியிருக்காதோ, என்னமோ. பாவம் இப்படி ஒரு முடிவு வந்திருக்க வேணாம்.
  மனசு கலங்கித்தான் போயிற்று.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   Delete
 18. மேலும் மேலும் கஷ்டம்...தனிமை...பகிர்ந்து கொள்ள வழி இல்லை....பாவம் இம்முடிவு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

   Delete

 19. “Enjoy Life as it comes!” என்று சொன்னவர் சுந்தரம் மாமா இப்படி ஒரு துயரத்தை
  உயரத்தில் இருந்து கீழே விழுந்து முடிவை தேட்டிக் கொண்டார் என்றால் அந்த வலியின் வலிமையை வெல்ல வேறு வழி தெரியவில்லை அவருக்கு!
  பணம் என்பது பிணமாகி போகும் காலம் வரும் வரை குணம் என்பது குன்றாகாமல் சிலரது பார்வைக்கு குப்பையாகவேத்தான் தெரியும்.
  மனதை வேதனைத் தீ சூழ்ந்தது.
  நட்புடன்,
  புதுவை வேலு
  (வணக்கம்!
  இன்றைய எனது பதிவு ""மாங்கல்ய(ம்) மந்திரம் " (சிறுகதை)"
  படித்து கருத்துரை தருமாறு வேண்டுகிறேன்!
  நன்றி!)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுவை வேலு.

   Delete
 20. மனதைக் கனக்கச் செய்கிறது. ஸ்டெல்லா புரூஸ் பற்றிப் படித்ததும் நினைவுக்கு வந்தது. சிலருக்கு (பலருக்கு?) வாழ்க்கை வெறுமையாகிவிடுகிறது. எனக்குத் தெரிந்த நிறையப் பேர், ஆன்மீகத்தில் இறங்கி மனத் துன்பத்தைக் குறைத்துக்கொள்கின்றனர். சமயத்தில் சிறு சுடுசொல்கூட முதியவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்திவிடும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 21. பாசத்திற்கு ஏங்கிய மனம்,
  பேச்சுத் துணைக்கு ஆளில்லாத போது இது போன்ற முடிவுகளை எடுக்க மனம் தூண்டும்
  பாவம் அம் மனிதர்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 22. தற்கொலை ஒரு நொடியில் எழும் உணர்வு என்பது மட்டும் புரிகிறது இவரின் மரணத்தால்! ஆழ்ந்த இரங்கல்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 23. ஆண்கள் சிலர் குடும்பம், பிள்ளைகள் என்ற வட்டத்தைத் தாண்டி அவ்வளவாக பழகாததால் அனைவரையும் சூழ் நிலையால் பிரிந்து தனிமைப் படுத்தப்படும் போது உடைந்து போய்விடுகிறார்கள். வருத்தமான முடிவு....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 24. மனசு கனக்கிறது அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 25. Its paining a lot. He might have reached the saturation point of tolerating the problems. Negligence by their own children can not be tolerated for a long time. But these people will do kariyam thithi etc. etc. in a very grand manner. what is the use.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சரஸ்வதி ரங்கநாதன் ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....