எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, February 22, 2017

ராகினி…ராகினி – என்னவொரு இனிமையான பெயர்.  ராகத்திலிருந்து பிறந்தது ராகினி….. ஹிந்தி மொழி பேசும் பகுதிகளில் பல பெண்களுக்கு ராகினி என்ற பெயர் வைப்பதுண்டு.  ராகினி என்ற பெயருக்கு அன்பானவள் என்ற அர்த்தமும் உண்டு. நாம் இன்று பார்க்கப் போகும் ராகினி ஒரு பெண் அல்ல! சில மாதங்களுக்கு முன்னர் ஹிந்தி மொழியில் வந்த ராகினி எம்.எம்.எஸ். படம் பற்றிய பதிவும் அல்ல!  இது வேறு விஷயம். 

ராகினி என்பது ஹரியானா மாநிலத்தின் பாரம்பரியமான இசை.  முன்பெல்லாம் ராகினி என்றழைக்கப்படும் பாடல்கள் மூலம் பாரம்பரியக் கதைகள், புராணங்கள் ஆகியவற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வழியாக வைத்திருந்தார்கள்.  நமது ஊரில் நடக்கும் கதாகாலட்சேபம் மாதிரி, கதையும், நடுநடுவே பாடல்களும் என அருமையான வழியாக வைத்திருந்தார்கள். 

சமீபத்தில் அப்படி ஒரு காணொளி காண நேர்ந்தது.  பள்ளி மாணவிகள் சேர்ந்து பாடிய ஒரு ராகினி அது – கிருஷ்ண பகவான் சுதாமாவிடம், ”நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்திருக்கிறாயே எப்படி இருக்கிறாய்?” என்று கேள்வி கேட்பது போல ஒரு பாடல்.  நீங்களும் கேளுங்களேன்…. ஹரியான்வி மொழியில் இருந்தாலும், உங்களுக்குப் புரியவில்லை என்றாலும் கேட்பதற்கு நன்றாகவே இருக்கும்.


ஆனால் சில காலமாக நமது தமிழகத்தில் அழிந்து வரும் நாட்டுப் புறக் கலைகளைப் போலவே ராகினியும் அழிந்து போனது – அதன் பாரம்பரியத்திலிருந்து வேறு பாதைக்கு மாறி விட்டது.  இப்போது ராகினி வேறு வடிவம் கொண்டுவிட்டது! இப்போது பாடப்படும் ராகினி பெரும்பாலும் ஆபாசத்தினை நோக்கி நகர்ந்து விட்டது.  ராகினி என்ற பெயரில் பாடலுடன் ஆடலும் சேர்ந்து கொண்டுவிட, ஆபாச அசைவுகளே அதிகமாக இருக்கும்படி செய்துவிட்டார்கள். 

அலுவலகத்தில் இருக்கும் நண்பர் ஒருவர் இப்படி ராகினி பாடி ஆடும் ஒரு பெண்ணின் நிகழ்ச்சிக்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்கிறார். சமீபத்தில் அப்படி ஒரு நிகழ்வில் பார்த்த ஒரு விஷயத்தினை ரொம்பவும் பெருமையுடன் சொல்லிக் கொண்டிருந்தார் – இப்போது மிகவும் பிரபலமாக இருக்கும் ராகினி பாடல்/ஆடல் நிகழ்ச்சி நடத்தும் பெண் சப்னா – அவருடைய நிகழ்ச்சிக்கு சென்றபோது ஒருவர் அந்தப் பெண்ணிடம் ”நான் உன்னை விரும்புகிறேன், ஆனால் வேறு பெண்ணுடன் திருமணம் ஆகிவிட்டது…. நான் உன்னை விரும்பியதற்காக, இதோ ஒரு லட்சம் உனக்குத் தருகிறேன்…..” என்று ஒரு லட்ச ரூபாய் கொடுத்தாராம். கூட்டத்தில் ஆரவாரம்…. அடுத்த நிமிடம், இன்னுமொரு ரூபாய் கட்டு எடுத்து, இப்போதும் உன்னை விரும்புகிறேன், இந்தா இன்னுமொரு லட்சம்!” என்று கொடுத்திருக்கிறார்!

பொதுவாகவே வட இந்தியாவில் நடனமாடும்போது, ரூபாய் நோட்டுகளை நடனமாடுபவர் மீது அபிஷேகம் செய்வது பரவலான ஒன்று. அதுவும் பெண் ஆடினால் போதும் ரூபாய் நோட்டுகளை அள்ளி விடுவார்கள் – அதற்காகவே புதிய ரூபாய் நோட்டுகள் வங்கியிலிருந்து மாற்றுபவர்கள் உண்டு. திருமண ஊர்வலமான bபராத் சமயத்தில் சாலையில் நடனமாடுபவர்கள் மீது இப்படி வீசும் நோட்டுகளை எடுத்துக் கொள்ள பெரும் போட்டியே நடக்கும்! திருமண நிகழ்விலேயே இப்படி என்றால் விரச/ஆபாச நடனமென்றால் சும்மா இருப்பார்களா?

மேலே சொன்ன அலுவலக நண்பர், நடனமாடிய சப்னா மீது ஆறாயிரம் ரூபாய் அள்ளி வீசிவிட்டு வந்ததை ரொம்பவும் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தார். நிகழ்ச்சிக்கான நுழைவுக் கட்டணம் தனி! இத்தனைக்கும் அவருக்குத் திருமணம் ஆகி மூன்று குழந்தைகளும் உண்டு. அதில் இரண்டு பெண்கள்!

இணையத்திலும் ஹர்யான்வி ராகினி எனத் தேடினாலே சப்னாவின் காணொளிகள் தான் வருகிறது.  பாரம்பரிய கலைகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவது சோகம் தான்…… அது தமிழகக் கலைகளாக இருந்தாலும் சரி, இந்தியாவின் எந்தப் பகுதி கலையாக இருந்தாலும் சரி….  இதை எல்லாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்…..

நாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

28 comments:

 1. அறியாத தகவல்கள். ராகினி என்றொரு பழைய நடிகை உண்டு. 'ராகினி என் வசமாக' என்ற தலைப்பில் சுஜாதா ஒரு கதை எழுதியிருக்கிறார். ராகினி என்று படித்ததும் மனதில் சட்டென்று தோன்றியது இவையிரண்டும்!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. அலுவலக நண்பரை செருப்பால் அடித்தால் செருப்புக்கு கேவலம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 3. அருமையான ஒரு நாட்டுப் புறக் கலையை பாடலை இங்கு நீங்கள் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி வெங்க்ட்ஜி! ராகினி ஆம் அழகான பெயர்தான்...

  கீதா: இந்த ராகினி பற்றி கொஞ்சம் தெரியும். என் கணவரின் தம்பியின் பெண் இந்தியக் கலைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்துவருகிறாள். பாடல் மிக மிக அருமையாக இருக்கிறது ஜி!

  ரூபாய் நோட்டுகளை மாலையாகப் போடுவதும், எறிவதும் உண்டு ஆனால் ஆயிரம் எல்லாம் இல்லை சும்மா காசுகள், 10, 20 ரூபாய் மிஞ்சிப் போனால் ரூ 100 அவ்வளவே! லட்சம், 6000 யப்பா...இவர்களை என்னவென்று சொல்ல..

  கேரளத்திலும் நிறைய உண்டு.

  நல்ல பதிவு ஜி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 4. ராகினி ஹரியானாவின் பாரம்பரிய இசை என்று இன்று தான் தெரிந்து கொண்டேன். காணொளி அருமை. மொழி புரியாவிட்டாலும் கேட்பதற்கு இனிமையாக இருந்தது. ராகினி ஆபாச வழிக்குச் சென்று விட்டதறிந்து வருத்தமடைந்தேன். பாரம்பரிய கலைகளின் அவசியத்தை மக்கள் என்று தான் உணர்வார்களோ தெரியவில்லை. பகிர்வுக்கு மிகவும் நன்றி வெங்கட்ஜி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஞா. கலையரசி ஜி!

   Delete
 5. புதிய ராகம்....தற்போது ஆபாசத்திற்கே முக்கியத்துவம் தரப்படுவது...வேதனையான ஓன்று..சகோ.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 6. தங்களால் புதிய விஷயம் அறிந்து கொண்டேன்.. பள்ளி மாணவிகளின் ராகினி இனிமை..

  இருந்தாலும் -

  நம்மூர் கரகாட்டத்தைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கியதைப் போல பற்பல கிராமியக் கலைகளையும் செய்து விட்டார்கள் போலிருக்கின்றது..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 7. இந்த ராகினி நான் அறியாத ஒன்று. பகிர்ந்தமைக்கு நன்றி. ஆனால் ஒரு பாரம்பரிய நடனம் விரசமானது வருத்தப்பட வைக்கிறது.
  சுதா த்வாரகாநாதன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!

   Delete
 8. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   Delete
 9. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்டு @நொரண்டு ஜி!

   Delete
 10. லலிதா- பத்மினி- ராகினி என்ற மூவர் இருந்தார்கள். லலிதா, பார்ப்பதற்கு ஆண்பிள்ளை மாதிரியே இருப்பார். ராகினி, அவரில் 75 சதம் இருப்பார். பத்மினி மட்டும்தான் அழகு. இப்போது மூவரும் இல்லை. உங்கள் ராகினி கொஞ்சம் அழகானவர் என்று தெரிகிறது. கலையை ரசிப்பதற்குப் பணம் கொடுக்கும் வழக்கம் நல்லது தானே! ஆனால் குடும்பத்தைக் கவனிக்காமல் வெறும் காம உணர்ச்சிக்கு அடிமைப்பட்டு காசுகளை வீசுவது சரியில்லை தான்.
  -இராய செல்லப்பா நியூஜெர்சி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய செல்லப்பா ஐயா.

   Delete
 11. பலர் இவ்வாறு திசை மாறுகிறார்கள். வேதனையே.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 12. ராகினி பற்றி அறியத் தந்தீர்கள்...
  அருமை... அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 13. கலைஞர்களுக்கு பணமாலை போடும் வழக்கம் எங்கும் இருக்கிறது ஆனால் நோக்கம்தான் தெரிவதில்லை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 14. ‘ராகினி’ பற்றிய தகவல் புதியது. பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....