எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, January 12, 2018

சாப்பிட வாங்க – கேரட் தோசை….
குளிர் காலம் வந்து விட்டாலே தலைநகர் மட்டுமல்ல, வட இந்தியா முழுவதுமே காய்கறிகள் ஃப்ரெஷ்-ஆக கிடைக்க ஆரம்பித்து விடும். குறிப்பாக, முள்ளங்கி, கேரட், பச்சைப் பட்டாணி போன்றவை குளிர்காலத்தில் விலை குறைவாகவும் கிடைக்கும் என்பதால் நிறைய பயன்படுத்துவார்கள். கேரட், முள்ளங்கி போன்றவற்றை சமைக்காமலேயே சாப்பிடுவதுண்டு. அதிலும் இங்கே கிடைக்கும் கேரட், நம் ஊரில் இருப்பது போல, சுவையே இல்லாது மண்ணாந்தையாக இருக்காது – நல்ல சுவையுடன் இருப்பதால் தான் இந்த நாட்களில் கேரட் ஹல்வா செய்து சாப்பிடுவார்கள்.  அந்த கேரட் வைத்து வேறு என்ன செய்யலாம்? கேரட் தோசை கூட செய்யலாம் என ஒருவர் சொல்ல, உடனே செய்து பார்த்து விட்டேன் – நன்றாகவே இருந்தது.  எப்படிச் செய்வது என பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்:

பச்சை அரிசி – 1 கப்
புழுங்கல் அரிசி – 1 கப் [அவர்கள் சொன்னது பச்சை அரிசி மட்டும்! நான் இதையும் சேர்த்துக் கொண்டேன். வேண்டுமெனில், அரை கப் அவல் கூட சேர்த்துக் கொள்ளலாம்!]
தக்காளி – 1
கேரட் துருவியது – இரண்டு கப்
மிளகு – 10 [எண்ணி 10 தான் இருக்கணுமா என கேள்வி வரக்கூடாது!]
சிவப்பு மிளகாய் தூள் – 8
பெருங்காயத் தூள் – சிறிது  
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
தனியா இலை – சிறிதளவு.

எப்படிச் செய்யணும் மாமு?

அரிசியை மூன்று மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

கேரட் துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.

ஊறிய அரிசியை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

கேரட், தக்காளி, மிளகாய், மிளகு, பெருங்காயம், உப்பு ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்தவற்றை நன்கு கலந்து கொண்டால் மாவு தயார். கொஞ்சம் கொத்தமல்லி தழைகளை சிறிது சிறிதாக நறுக்கி தூவிக் கொள்ளலாம். அதையும் கலந்து வைத்துக் கொண்டால் நாம் ரெடி! தோசை செய்வது எப்படின்னு எல்லாம் என்னால சொல்லித் தர முடியாது!

இந்த தோசையை வெறுமனே சாப்பிடலாம் என்றாலும், தொட்டுக்கொள்ள ஏதாவது சட்னியும் செய்து கொள்ளலாம் – அது உங்க இஷ்டம்!

என்ன நண்பர்களே இந்த தோசையை நீங்க செய்யப் போறீங்க தானே… செய்து பார்த்து, ருசித்து, உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.


டிஸ்கி:  நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி! திடீர் பயணம் என்பதால், இன்னும் ரெண்டு வாரத்துக்கு இந்தப் பக்கத்தில் புதிய பதிவுகள் ஏதும் வெளிவராது! எஞ்சாய்! See you soon! யாரங்கே…. கறுப்புக் கொடி எல்லாம் தயாரா? போஸ்டர் எல்லாம் அடிச்சாச்சா? தமிழகத்திற்கு வந்தால் கறுப்புக் கொடி காட்ட ஆள் ஏற்பாடு பண்ணியாச்சா மதுரைத் தமிழரே!

58 comments:

 1. சுவையான குறிப்புகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. என்னது அமெரிக்கா வருகிறீர்களா நான் சொன்னது நீங்கள் அமெரிக்கா வரும்போதுதான் உங்களுக்கு கருப்பு கொடி காட்டப்படும் என்று சொன்னேன்.. இந்தியாவில் கருப்பு கொடி காட்ட நான் ரெடி ஆனால் இந்திய அரசு நான் அங்கு வர தடை விதித்து விசாவை கேன்சல் பண்ணிவிட்டது தப்பித்துவிட்டீங்க ஜீ

  ReplyDelete
  Replies
  1. அமெரிகா வரவில்லை! எனக்கு பாஸ்போர்ட் கொடுக்க முடியாது என அரசு சொல்லி விட்டது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆதி.

   Delete
 3. ஜீ இதுக்கு நீங்க கேரட் தோசை என்று தலைப்பு வைப்பதற்கு பதிலாக ஆன்மிக தோசை என்று வைத்து இருக்கலாமே காரணம் அதில் காவி கலர் வருவதால்(கேரட்)

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா... சமீபத்தில் கருப்பு வண்ணத்தில் ராகி தோசையை, சிவப்பு வண்ணத்தில் தக்காளி சட்னியுடன் சாப்பிட்டேன்! அதற்கு என்ன பெயர் வைக்க?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete

 4. //இந்த தோசையை வெறுமனே சாப்பிடலாம் என்றாலும், தொட்டுக்கொள்ள ஏதாவது சட்னியும் செய்து கொள்ளலாம் – அது உங்க இஷ்டம்!///

  இது எல்லாம் நல்ல அட்வைஸ்தான் ஆனால் முக்கியமான ஒரு விஷ்யத்தை சொல்ல மறந்துட்டீங்களே தம்பதிகள் சேர்ந்து சாப்பிடலாமா ?

  ReplyDelete
  Replies
  1. அது உங்க இஷ்டம் - யார் கூட சாப்பிடப் போகிறீர்கள் என்பது உங்கள் சாய்ஸ்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete

 5. எங்க வீட்டும்மா இது போல கேரட்டை அரைத்து தோசை மாவில் கலந்து சுடுவாங்க அதுக்கு நாங்கள் வைத்த பேர் பார்பி தோசை அப்படி சொன்னாதான் சிறுவயதில் என் மகள் சாப்பிடுவாள்

  ReplyDelete
  Replies
  1. பார்பி தோசை - இது கூட நல்லா இருக்கே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 6. அப்படின்னா கேரட் தோசைக்கு மாவு எப்படி ரெடி பண்னுவது என்று அல்லவா பதிவு போட்டு இருக்கணும் இப்ப பாருங்க தோசை சுட தெரியாத எத்தனை பேரு இந்த பதிவை படித்து ஏமாந்து இருப்பாங்க...


  கறுப்பு கொடி காட்ட இன்னொரு காரணம் வந்திருச்சு ஆனால் இந்திய அரசு என்னை அனுமதித்தால் டெல்லியிலே கருப்பு கொடி காட்டப்படும் நான் கறுப்பு கொடி காட்டிய பிறகு என்னை டெல்லியை சுற்றிக் காண்பிக்கணும் அதுதான் டீல் ஹீஹீ

  ReplyDelete
  Replies
  1. இப்ப பாருங்க தோசை சுட தெரியாத எத்தனை பேரு இந்த பதிவை படித்து ஏமாந்து இருப்பாங்க...// ஹா ஹா ஹா மதுரை இது யாரைச் சொல்லறீங்க..ஏதோ உள்ள இருக்கறாப்புல இருக்கே!! ஹிஹிஹிஹி...அதிரா ஏஞ்சல் இன்னும் பார்க்கலை உப்ப உறக்கத்தில் இருப்பாங்க...வந்தா .இங்க வந்து கமென்ட் போட்டு.உங்களைச்சுடப் போறாங்க.ஹா ஹா ஹா

   கீதா

   Delete
  2. என்னது அவங்களுக்கு தோசை சுடத்தெரியாது என்பது நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரிகிறது...

   Delete
  3. டெல்லிக்கு முதல்ல வாங்க - சுத்திக் காண்பிப்பது என் பொறுப்பு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
  4. அதானே... தூக்கத்தில் இருந்தவர்களைச் சொல்வது சரியில்லை தானே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
  5. பலருக்கு தோசை சாப்பிட மட்டும் தான் தெரியும் மதுரை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete

 7. தம வோட்டு பட்டையை காக்கா தூக்கி போச்சா காணூமே

  ReplyDelete
  Replies
  1. தமிழ் மணம் - ஒரு புரியாத புதிர்!

   சில சமயம் இருக்கும்... பல சமயம் இருக்காது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
  2. தங்களது மீள் வருகைக்கும் தமிழ் மண வாக்கிற்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 8. கேரட் தோசை உங்களின் குறிப்புகளையும் குறித்துக் கொண்டேன் வெங்கட்ஜி! முன்பு பல வருடங்களுக்கு முன் மங்கையர்மலரில் வந்து என் மாமியார் காட்டி நான் குறுத்துக் கொண்டுள்ளேன் ஆனால் இது கொஞ்சம் வித்தியாசம்..

  ஆ!! இரு வாரம் லீவா!! ஓகே ஓகே எஞ்சாய் பொங்கல் ஜி.குடும்பத்துடன்!!..பொங்கல் வாழ்த்துகள்!

  சென்னை வழிதானே? நேரம் உண்டா ஜி?

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இரண்டு வாரம் மூன்றாக ஆனது - பொங்கல் மற்றும் விடுமுறை சிறப்பாகவே கழிந்தது.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 9. கேரட் தோசை….அருமை...


  பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   Delete
 10. பயணம் ஆரம்பிக்கவே இல்லை. அதுக்குள்ள இடைவெளியா, அல்லது already scheduledஆ? முள்ளங்கியை இதுவரை வெறும்ன சாப்பிட்டதில்லை. கேரட் தோசை, அப்போ அரைத்து அப்பவே காலிபண்ணணும்னு நினைக்கறேன். பொங்கல் கனுப்பொடி எல்லாம் வச்சிட்டு வாங்க.

  ReplyDelete
  Replies
  1. பயணம் ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ள இடைவெளியா? ம்ம்ம். என்ன செய்ய. Schedule செய்து வைக்க முடியவில்லை - திடீர் பயணம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 11. அருமை! செய்திடுவோம்!
  பயணம் சிறப்பாக இருக்கட்டும்!

  இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 12. தோசைக்கு மேலேதான் கரட் தூவுவார்கள்:) நீங்க தோசைக்குள்ளே கறுப்புப் பணம்போல:) மறைச்சு வச்சுச் சுட்டிட்டீங்க:).. இதுக்கு சங்கிலி வரப்போகுது கழுத்துக்கல்ல:) கையுக்கு:)).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:).. மொறு மொறு என அழகா இருக்குது ஓசை:)..

  ReplyDelete
  Replies
  1. கைக்கு சங்கிலி - :) எதையும் தாங்கும் இதயம் இருக்கிறதே நமக்கு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   Delete
 13. எப்படியும் தோசைக்கு அரைக்கப் போகிறோம் துருவிய காரட் தான் வேண்டுமா. நறுக்கியதும் போடலாமா

  ReplyDelete
  Replies
  1. பெரிய துண்டுகளாக இருந்தால் அரைபடுவதில் சிரமம் இருக்கும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   Delete
 14. நான் இம்மாதம் மூன்றாம்வாரத்தில் சென்னை வரலாம் உங்கள் தொடர்பு எண்ணும் முகவரியும் தாருங்கள் பார்க்க முடிகிறதா பார்க்கலாம்

  ReplyDelete
  Replies
  1. சென்னை வர வாய்ப்பு அமையாது - மேலும் மூன்று வாரமும் இணையம் பக்கம் வரவில்லை என்பதால், உங்கள் கருத்தும் பார்க்க இயலவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   Delete
 15. தோசைக்கு மேலேதான் கரட் தூவுவார்கள் இது புதிசா இருக்கு!

  ReplyDelete
  Replies
  1. தூவிய கேரட் - ஊத்தப்பத்தில் பார்த்ததுண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 16. வணக்கம் சகோதரரே

  கேரட் தோசை அருமை. அவசியம் செய்து பார்க்கிறேன். கேரட்டை சேர்ப்பதினால், தோசை மிருதுவாக இருக்க பருப்பு வகைகள் எதுவும் சிறிதளவு சேர்க்க வேண்டிய அவசியம் இல்லையோ? பகிர்வுக்கு நன்றி.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. பருப்பு வகைகள் எதுவும் தேவையில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 17. அருமையான குறிப்பு.

  பயணம் இனிதாகட்டும்.

  உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தைத்திருநாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 18. தேங்காய் சட்னி சேர்த்துக்கிட்டா நல்லா இருக்கும் அண்ணி

  ReplyDelete
  Replies
  1. பதிவு எழுதுனது அண்ணன் - பதில் அண்ணிக்கா?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
 19. இனித்தான் தோசை செய்து பார்க்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

   Delete
 20. வணக்கம் சகோதரரே!

  அன்பும் அருளும் அகத்துக்குள் பொங்கட்டும்!

  இன்பத் தமிழ்போல் இனித்து!

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர், சுற்றம், நண்பர்கள் அனைவருக்கும்
  இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 21. ஆகா
  இந்தமுறை இந்த செயல்முறையை குழந்தைகளோடு செய்து பார்துவிடுகிறேன்

  ReplyDelete
  Replies
  1. செய்து பாருங்கள் மது. நன்றாகவே இருக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 22. இனிய பொங்கல் வாழ்த்துகள். பயணம் ஶ்ரீரங்கமா? தேர் பார்க்க வந்திருக்கீங்களா? காரட் தோசை செய்தது இல்லை. ஒரு நாள் நம்ம ரங்க்ஸுக்குச் சொல்லாமல் செய்து பார்க்கணும்!

  ReplyDelete
  Replies
  1. உங்களைச் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 23. காரட் தோசை குறிப்பு அருமை! செய்து பார்க்கிறேன்!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 24. அருமை. செஞ்சு பாக்க நேரம் தான் இல்லை... 😥😥😥

  மேகராகம்
  https://www.sigaram.co/preview.php?n_id=263&code=XIsLcwYo
  பதிவர் : கி.பாலாஜி
  #sigaramco #tamil #poem #kbalaji #சிகரம் #சிகரம்CO #கவிதை #தமிழ் #பாலாஜி

  ReplyDelete
  Replies
  1. முடிந்த போது செய்து பாருங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிகரம் பாரதி.

   Delete
 25. சூப்பர் சூப்பர் சார் .தோசையின் சுவை எழுத்தில் தெரிகிறது!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விமலன்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....