வியாழன், 24 ஜூன், 2010

மல்லிகை வாசம்




காலையில் கண் விழித்ததும் அறையை விட்டு வெளியே வந்து பால்கனியில் நின்று பார்வையை சுழற்றினால் எங்கெங்கும் தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தாற் போல வீடுகள், வீடுகள், மேலும் மேலும் வீடுகள். கான்க்ரீட் காடுகளில் இருந்து கொண்டு பழைய நினைவுகளைப் பற்றிய கனவுலகில் சஞ்சரிக்கத்தான் முடிகிறது.

காலையில் கண்ணுக்குக் குளிர்ச்சியாய் மரம் செடி கொடிகளைப் பார்க்கலாம் என்றால் இந்த நகர வாழ்க்கையில் முடிவதில்லை. பால்கனியில் வைத்துள்ள பூந்தொட்டிகளில் உள்ள சின்னஞ்சிறு செடிகளை பார்த்தே மனதை தேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

பெரும்பாலான தினங்களில் நெய்வேலியில் வாழ்ந்த இனிய வாழ்க்கை நினைவில் வராமல் இருப்பதில்லை. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பணியாளர்களுக்கான தனித்தனி குடியிருப்புகள் – ஒவ்வொரு வீட்டிற்கும் தனியாக தோட்டம். காலையில் வெளியே வந்தால் சில்லென்று முகத்தில் படும் வேப்ப மரக்காற்று, காதுக்கு இனிமை தரும் குயில்,மைனா,மற்றும் சிட்டுக் குருவிகளின் இனிய சத்தங்கள் என ரம்மியமான விடியல் ஒவ்வொரு நாளும்.

தோட்டத்தில் பங்கனபள்ளி, ஜலால், ஒட்டு மாம்பழம் என ஆறு விதமான மாமரங்கள், பலா, எலுமிச்சை, அறிநெல்லிக்காய், வாழை, முருங்கை, புளிய மரம், வேப்ப மரம், கல்யாண முருங்கை ,சீதாப் பழம்,மாதுளை என விதவிதமான மரங்கள் செடிகள். வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட்டது போக மீதி எல்லா பழங்களும் தெரிந்தவர்களுக்கும், உறவினர்களுக்கும் வினியோகம். விலைக்கு விற்பதில்லை.

வீட்டின் வராந்தாவிலிருந்து வாசல் வரை ஒற்றை மல்லி, அடுக்கு மல்லி, முல்லை, கனகாம்பரம், டிசம்பர் பூ என விதவிதமாக பூத்துக் குலுங்கும் மலர்களின் வாசம்.

வீட்டில் இருக்கும் பெண்கள் சூடிக்கொண்டது போக மீதமிருக்கும் மல்லிகைப் பூவினை என் அம்மா அழகாகத் தொடுத்து வைத்து பக்கத்திலிருக்கும் என்.எல்.சி. பெண்கள் மேல் நிலைப் பள்ளிக்குச் செல்லும் சிறுமிகளின் கூந்தலைப் பார்த்தவாறு காத்திருப்பார். எந்தச் சிறுமி தலையில் பூ வைக்காமல் செல்கிறதோ அதை அழைத்து பூவைக் கொடுத்து கூடவே கூந்தலில் சூடிக்கொள்ள ஹேர்பின் வேறு தருவார்.

இப்போது தில்லியில் மல்லிகை என்ற பெயரில் வெள்ளை நிறத்தில் வாசமில்லா ஒரு மலர் தருகிறார்கள். கைவிரல் அளவுள்ள ஒரு துண்டு பூவின் விலை 10 ரூபாய்.

”பசுமை நிறைந்த நினைவுகளே!..” என்று பாடி மனதைத் தேற்றிக் கொள்ளதான் வேண்டும். வேறு ஒன்றும் செய்வதிற்கில்லை!

21 கருத்துகள்:

  1. அப்படித்தான் தேத்திக்கணும்.. வேற என்ன செய்ய????

    பதிலளிநீக்கு
  2. வடக்கே நல்ல மல்லிப்பூ கிடைக்கிறதில்லை.ஜூயின்னு ஒரு பூ.. அது மட்டும்தான் வாசனையாயிருக்கும். அதைத்தவிர மல்லிப்பூ மாதிரி தெரியுதுங்கிறதுக்காக ஒற்றையடுக்கு நந்தியாவட்டையை முழம்போட்டு வித்துக்கிட்டிருக்காங்க. நீங்க சொன்ன மாதிரி பழசை நினைச்சு ஆத்திக்கிடவேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  3. \\எந்தச் சிறுமி தலையில் பூ வைக்காமல் செல்கிறதோ அதை அழைத்து பூவைக் கொடுத்து கூடவே கூந்தலில் சூடிக்கொள்ள ஹேர்பின் வேறு தருவார்//

    நல்ல உள்ளம்.

    பதிலளிநீக்கு
  4. உங்கள்பதிவு பூப்போல வாசமாய் இருக்கிறது. பாராடுக்கள். சகோதரி நிலாமதி

    பதிலளிநீக்கு
  5. //எந்தச் சிறுமி தலையில் பூ வைக்காமல் செல்கிறதோ அதை அழைத்து பூவைக் கொடுத்து கூடவே கூந்தலில் சூடிக்கொள்ள ஹேர்பின் வேறு தருவார்//

    வணங்கப்பட வேண்டியவர் உங்கள் தாயார்.

    எங்கள் வீட்டிலும் மல்லிகை செடி உண்டு. சின்ன ரோஜாப்பூ சைசில் பூக்கும். ஆனா இப்போதெல்லாம் மணப்பதில்லை. என்ன காரணமென்று தெரியலை.

    பதிலளிநீக்கு
  6. எங்கள் மதுரைக்கு வந்து பாருங்கள் வெங்கட் !
    மல்லிகை எப்படி மணக்குமென்று அப்போதுதான் முழுமையாகப்புரியும்.

    பதிலளிநீக்கு
  7. பதிவை வாசித்த போது மல்லிகை வாசம் மனதுள் வீசியது ..

    பதிலளிநீக்கு
  8. • வாங்க “கவிதை காதலன்”. உண்மைதான்.
    • வாங்க “அமைதிச்சாரல்” – வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
    • வாங்க “முத்துலெட்சுமி” – நன்றி.
    • வாங்க “நிலாமதி” – நீண்ட நாட்களுக்குப் பிறகு எனது வலைப்பூவிற்கு உங்களது வருகை – மகிழ்ந்தேன்.
    • வாங்க ”லாவண்யா” – வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
    • வாங்க “சுசீலா அம்மா” - மதுரை மல்லியின் புகழ் எல்லாரும் அறிந்த ஒன்று. பலமுறை அதை உணர்ந்திருக்கிறேன். நன்றிம்மா.
    • வாங்க ”ரிஷபன் சார்” - வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
    • வாங்க ”விட்டலன்” – மல்லிகையின் வாசம் உங்களையும் கவர்ந்ததில் மகிழ்ச்சி.

    • தமிலிஷ்-இல் வாக்கு அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வெங்கட் அவர்களே,
    உங்கள் மன வேதனையை அளவுகோல் கொண்டு அளந்திட முடியாது. மனிதனின் பேராசையால் இயற்கையை அழித்து நாமும் அழிவுப்பாதை நோக்கி சென்று கொண்டிருப்பது என்னவோ மறுக்கமுடியாத உண்மை.

    தாங்கள் தாயாரின் நல்ல உள்ளத்தை உலகோருக்கு, இந்த இடத்தில் வெளிச்சம் போட்டு காட்டிய மாட்சிமை, வெகு சிலருக்கே உடம்போடு ஊறிய ஒன்றாகும். ."மனசிருக்கணும்,மனசிருக்கணும் , மல்லிகை பூவாட்டம்,-----" என்ற பாட்டிற்கு ஓர் உதாரணம் உங்கள் தாய். இந்தமாதிரி, மற்றவர்களின் நலனில் நாட்டம் கொண்ட நல்ல மனிதர்களின் எண்ணிக்கை இந்த பூவுலகில் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவது வேதனை அளிக்கும் விஷயமாகும்.

    மந்தவெளி நடராஜன்.

    பதிலளிநீக்கு
  10. //////இப்போது தில்லியில் மல்லிகை என்ற பெயரில் வெள்ளை நிறத்தில் வாசமில்லா ஒரு மலர் தருகிறார்கள். கைவிரல் அளவுள்ள ஒரு துண்டு பூவின் விலை 10 ரூபாய். /////////

    காலப்போக்கில் மல்லிகை என்ற பெயரில் காகிதத்தில் பூக்கள் செய்து விற்க நேர்ந்தாலும் சொல்வதற்கில்லை . இயற்கை இன்று இயந்திரமாக மாறிக்கொண்டிருக்கிறதே அதுதான் .

    பதிலளிநீக்கு
  11. வெங்கட் அவர்களுக்கு,

    தங்கள் பதிவிற்கு நான் அளித்த பதிலை கீழ் கண்டவாறு திருத்தி வாசிக்கவும். தவறுக்கு வருந்துகிறேன்.
    "மனசிருக்கணும், மனசிருக்கணும் பச்ச புள்ளையாட்டம் , அது வெளுத்திருக்கணும், வெளுத்திருக்கணும், மல்லிகைப்பூவாட்டம் ."

    மந்தவெளி நடராஜன்.

    பதிலளிநீக்கு
  12. நல்லா சொன்னீங்க வெங்கட்.... பசுமை நிறைந்த நினைவுகள் தான்... இருக்கறப்ப அதோட அருமை தெரியலைங்கறது இன்னொரு விசயம்...
    (உங்களுக்கு பத்து ரூபாய்காச்சும் மல்லி மாதிரி ஏதோ ஒண்ணு கெடைக்குது... நான் கண்ணுல பாத்தே வருஷம் ரெண்டுக்கு மேல ஆச்சு... கொடுமை தான்... பழைய நினைவுகளை கிளறி விட்டுடீங்க...)

    பதிலளிநீக்கு
  13. படித்து முடித்தவுடன் ஒரு ஏக்கம்...ஏனொ தெரியவில்லை!!

    பதிலளிநீக்கு
  14. @nagaraj
    inga chennaila kooda ippa veedugalil totaam illai boss

    //\\எந்தச் சிறுமி தலையில் பூ வைக்காமல் செல்கிறதோ அதை அழைத்து பூவைக் கொடுத்து கூடவே கூந்தலில் சூடிக்கொள்ள ஹேர்பின் வேறு தருவார்////
    my namaskar to ur mom

    பதிலளிநீக்கு
  15. வாங்க VKN! தங்களது அழகான கருத்துரைக்கும் பாடல் வரிகளுக்கும் நன்றி.

    வாங்க பனித்துளி சங்கர்: உண்மைதான்.

    வாங்க அப்பாவி தங்கமணி! எப்பவுமே ஒரு பொருள் நம்மகிட்ட இருக்கிறப்ப, அதோட அருமை புரியாது. சரியா சொன்னீங்க!

    வாங்க ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி சார், என்னுடைய ஏக்கம் என்னை எழுதத்தூண்டியது. உங்களுக்கும் அது ஏக்கத்தை உண்டு பண்ணிவிட்டது போலும். வரவுக்கு நன்றி சார்.

    வாங்க LK! கருத்துக்கு நன்றி. உங்க நமஸ்காரத்தை அம்மாகிட்ட சொல்லிடறேன். சரியா!

    பதிலளிநீக்கு
  16. அடுக்கு மாடி குடியிருப்பில்
    முதல் இழப்பு தோட்டம் தான்.

    பதிலளிநீக்கு
  17. //மல்லிகைப் பூவினை என் அம்மா அழகாகத் தொடுத்து வைத்து பக்கத்திலிருக்கும் என்.எல்.சி. பெண்கள் மேல் நிலைப் பள்ளிக்குச் செல்லும் சிறுமிகளின் கூந்தலைப் பார்த்தவாறு காத்திருப்பார். எந்தச் சிறுமி தலையில் பூ வைக்காமல் செல்கிறதோ அதை அழைத்து பூவைக் கொடுத்து கூடவே கூந்தலில் சூடிக்கொள்ள ஹேர்பின் வேறு தருவார்//

    நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!

    அதுசரி. அடுத்த கேட்-இல் அம்மாவிற்குத் தெரியாமல் ஒரு பையன் ஒற்றை ரோஜாவுடன் நின்று கொண்டு இருப்பானாமே? அப்படியா?

    பதிலளிநீக்கு
  18. என்ன இருந்தாலும் சொந்த மண்ணின் பெருமையே தனி தான்! அதுவும் தொலை தூரத்தில் வாழ நேரும்போது அதன் மேன்மைகள் மிகப்பெரியதாய் தெரியும்!!
    மண்ணே நினைவுகளில் மணக்கும்போது அந்த மண்ணில் பிறந்த உங்களின் தாயாரும் மணக்கத்தானே செய்வார்?

    பதிலளிநீக்கு
  19. வாங்க முனைவர் குணசீலன் :) வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க சந்தானகிருஷ்னன் :) உங்களது முதல் வருகைக்கு நன்றி. அடுக்கு மாடி குடியிருப்பில் பெரிய இழப்பே இது தான்.

    வாங்க பத்மநாபன் [ஈஸ்வரன்] - வரவுக்கு நன்றி. அந்த பையன் நீங்களா? :)

    வாங்க மனோ சாமிநாதன் :) எனது வலைப்பூவில் உங்களது முதல் வருகை. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....