வெள்ளி, 24 ஜூன், 2011

உதவும் கரம்



தில்லியில் உள்ள பாபா கரக் சிங் சாலையில் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களின் பேரங்காடிகள் அமைந்துள்ளன.  இந்த அங்காடிகளில் அந்தந்த மாநிலங்களின் சிறப்பு அம்சங்களாக, கலைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், துணிகள் ஆகியவை பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டு இருக்கும்தில்லியில் நிறைய மக்கள் சில அற்புதமான பரிசுப் பொருட்கள் வாங்க விரும்பி நாடுவது இந்த அங்காடிகளைத் தான்

அந்தந்த மாநிலங்களின் அங்காடிகள் தவிர பொதுவாக Rajiv Gandhi Handicrafts Bhavan என்ற ஒரு அரங்கமும் இரண்டாவது மாடியில் அமைந்துள்ளது.  வருடம் முழுவதும் ஏதாவது ஒரு மாநிலத்தினை மையக் கருவாய் வைத்து சில நாட்கள்ஷில்பி ஹாட்என்ற பெயரில் கண்காட்சியும் நடத்துவார்கள்
  
தற்போது அங்கே மேற்கு வங்காள மாநிலத்தினை மையமாய்க் கொண்ட "ஷில்பி ஹாட்" நடைபெறுகிறது.  வீட்டுக்கு அருகில் இருப்பதால் சென்ற ஞாயிறன்று இந்த கண்காட்சிக்கு சென்றோம்பெயர் மட்டும் தான் ஷில்பி என்று இருக்கிறதே தவிர, அங்கே சிற்பங்களை விட மற்ற கைவினைப் பொருட்கள் தான் அதிகம் இருந்தன.  







பெங்கால் காட்டன் புடைவைகள், அதே பருத்தியில் நெய்த சுடிதார் துணிகள், தைத்த சுடிதார்கள், பெண்களுக்கான தோல் கைப்பைகள், சிறு சிறு பொம்மைகள், சணலினால் செய்யப்பட்ட மாலை மற்றும் தோடுகள் என பலவித பொருட்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைத்திருந்தனர்.  

துணியில் வரையப்பட்ட அழகான, வண்ணமயமான காட்சிகள், காளி மாதாவின் உருவம், பல்வேறு வடிவங்கள் என்று இரண்டு மூன்று இடங்களில் விற்பனைக்கு வைத்திருந்தனர். பெங்காலியில்படோசித்ரஎன்று அழைக்கப்படும் அந்த சித்திரங்களைப் புகைப்படம் எடுக்கலாம் என கேமராவினை எடுத்தவுடன், அந்த புகைப்படங்களை வரைந்த அம்மணியோ, “போட்டோ துல்பே நா, போட்டோ துல்பே நாஎன்று அலற புரியாத நான் கேமராவினை ஆன் செய்ய, பிறகு அந்த பெண்மணி அபியயம் மூலமாய் எனக்கு விளக்க, ஒரு வழியாய் எனக்குப் புரிந்து அங்கிருந்து புகைப்படம் எடுக்காமல் நகர்ந்தேன்.   


இது போன்ற கண்காட்சிகள், நிச்சயமாய் மாநிலங்களில் இருக்கும் நலிந்த கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் நபர்களுக்கு உதவும் கரம் ஆக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  

உதவும் கரம் என்றவுடன் நினைவுக்கு வருகிறது.  இந்த கண்காட்சியில் நிறைய கடைகளில் உதவும் கரம் [Helping Hand] என்ற மரத்தினால் ஆன ஒரு பொருளையும் சத்தமாய் விற்றுக் கொண்டு இருந்தனர்.  அந்த பொருள் என்ன என்று ஆர்வத்துடன்  பார்த்தால் மரத்தினால் ஆன ஒரு குச்சியின் முனையில் பிளாஸ்டிக்-ஆல் ஆன ஒரு கை இருக்கிறது.  என்ன இது என்று கேட்டால், அதை வைத்து முதுகை சொறிந்து காட்டுகிறார் அந்த கடைக்காரர்.  


நிறைய பொருட்கள் இருந்தாலும் அங்கே உள்ள பொருட்கள் சற்றே விலை அதிகமாக இருப்பதாகச் சொல்லிக் கொண்டு வந்தார் சகதர்மிணி.   ஆனாலும், காதணியுடன் கூடிய ஒரு கழுத்தணி, வளையல்கள் போன்றவை வாங்கிக் கொடுத்தேன். [பின்னே  சும்மா வந்துட முடியுமா?] 




நாங்கள் ரசித்த அந்த கண்காட்சியில் எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் காட்சிக்காய் ஆங்காங்கே சேர்த்திருக்கிறேன்.  "படோசித்ர” படம் மட்டும் கூகிளாண்டவரிடம் இருந்து அபேஸ் செய்தது... 

மீண்டும் வேறு ஒரு பகிர்வில் சந்திக்கும் வரை...

நட்புடன்..

வெங்கட்.  


23 கருத்துகள்:

  1. ஆஹா! முதுகு சொறிந்து கொள்ள இப்படி ஒரு வசதியா? பேஷ் பேஷ்!

    பதிலளிநீக்கு
  2. இந்த பாபா கரக் சிங் அங்காடிக்கு முன்னால் இருக்கும் கட்டைசுவற்றில் உக்கார்ந்து பதிவர் சந்திப்பு நடத்துன ஆளாச்சே நான்:-)))))

    இங்கே சண்டிகரிலும் இதுபோல மாநிலம் மாநிலமா கண்காட்சி கடைகள் இப்படி நடக்குது. நாமும் அப்பப்ப உதவிக்கரம் நீட்டுகிறோம். மூணு மாசத்துக்கு முன்னே பாகிஸ்தானுக்கே இப்படி கையை நீட்டுனோமுன்னா நம்புங்க. கைவினைப் பொருட்கள் அட்டகாசம் போங்க.

    படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  3. @ கவிதை வீதி # சௌந்தர்: வருகைக்கு நன்றி நண்பரே...

    # கே.பி. ஜனா: என்னவெல்லாம் யோசிக்கிறாங்க! வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சார்.

    @ துளசி கோபால்: வாங்க டீச்சர்... நாலைந்து பதிவுகள்-ல உங்கள காணோமே.... அட அங்க பதிவர் சந்திப்பு கூட நடத்துனீங்களா... நல்ல விஷயம்.... படங்களை ரசித்தமைக்கு நன்றி....

    பதிலளிநீக்கு
  4. ரீடரில் போட்டு வச்சுருக்கேன் உங்களை.

    அவசர அவசரமா படிச்சுட்டு அப்புறம் பின்னூட்டம் போடணுமுன்னு மனசுலே நினைச்சுக்கறதுதான். அந்த அப்புறம்...... ஹிஹி....

    பதிலளிநீக்கு
  5. @ துளசி கோபால்: அட உடனே பதிலும் வந்தாச்சு... பரவாயில்லை... பொறுமையா படிங்க.. :))))

    பதிலளிநீக்கு
  6. /அந்த பொருள் என்ன என்று ஆர்வத்துடன் பார்த்தால் மரத்தினால் ஆன ஒரு குச்சியின் முனையில் பிளாஸ்டிக்-ஆல் ஆன ஒரு கை இருக்கிறது. /
    ஹை! எங்க வீட்டில் இருக்கே!!

    பதிலளிநீக்கு
  7. உங்கள் வலைக்கு வந்தாலே ஒரு தில்லிச் சுற்றுலாவைப் போலக் கலக்கிக் கொண்டிருக்கிறீர்கள்...
    குறிப்பிட்ட ஒரே இலக்கைத் தேர்ந்து கொண்டு அதில் சிறப்பாய்ப் பயணம் செய்யும் உங்களுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. புகைப்படங்களோடு கண்காட்சி அருமை ... பறவை கூடும் பறவைகளும் இயற்கையாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  9. வெங்கட்! பதிவும் படங்களும் நன்றாக இருக்கிறது.. கைவினை பொருள் தயாரிப்பவர்களை அவசியம் ஊக்குவிக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
  10. கைவினைப்பொருட்களும், கண்காட்சியும் அட்டகாசம்.

    நம்மாட்களுக்கு முதுகுசொறிஞ்சுக்கக்கூட சோம்பல்ன்னு நல்லாவே புரிஞ்சுவெச்சிருக்காங்க(Just kidding):-))))

    பதிலளிநீக்கு
  11. பெங்காலிச் சித்ரம், குருவிக்கூடு நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. தூக்கணாங் குருவிக்கூடு அழகோ அழகு

    பதிலளிநீக்கு
  13. இன்றுதான் முதன் முதலில் உங்கள் பதிவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்த்துக்கள்.நன்று. உங்கள்
    பணி மேலும் சிறக்கட்டும்.

    http://zenguna.blogspot.com/

    பதிலளிநீக்கு
  14. ரொம்ப லேட் நானு ?? உதவும் கரம் அப்படின்னு பார்த்து எதோ என் ஜி ஓ அப்படின்னு வந்தேன். இங்க வந்தா இப்படி .. நல்லா இருக்கே எல்லாம்

    பதிலளிநீக்கு
  15. Voted 13 to 14 in Indli.

    மிகவும் உபயோகமான அழகிய பதிவு.

    அந்தக்குருவிக்கூடு ரொம்ப ரொம்ப அழகாக உள்ளது.
    அதை வாங்கிவரவே உடனடியாக ப்ளேனில் டெல்லிக்கு ஒரு ரவுண்ட் அடிக்கணும் போல ஆசை ஏற்படுகிறது.

    பதிலளிநீக்கு
  16. இனிய‌ பிற‌ந்த‌நாள் ந‌ல்வாழ்த்துக‌ள் ச‌கோ... ம‌கிழ்வோடு வாழ‌ இறைய‌ருள் நிலைக்க‌ட்டும்!

    பதிலளிநீக்கு
  17. கூட்டிலேருந்து எட்டிப் பார்க்கும் பறவைகள் சூப்பர்.தகவல்களும் நன்று.பகிர்விற்கு நன்றி.

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்

    பதிலளிநீக்கு
  18. //இது போன்ற கண்காட்சிகள், நிச்சயமாய் மாநிலங்களில் இருக்கும் நலிந்த கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் நபர்களுக்கு உதவும் கரம் ஆக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை///

    எதார்த்தமான உண்மை சார்
    படங்களும் அருமை
    நான் எப்படி இந்த பதிவை மிஸ் பண்ணினேன்னு தெரியலையே
    என் டாஷ் போர்டிலும் வரவில்லையே , தாமதத்திற்கு மன்னிக்கவும் அன்பரே

    பதிலளிநீக்கு
  19. தில்லியிலேயே நீண்ட நாட்களாக இருக்கும் என் போன்றவர்களுக்கே உங்கள் வலைப்பூ நல்ல தகவல் மையமாக உள்ளது. வாழ்க! வளர்க!

    பதிலளிநீக்கு
  20. @ அன்புடன் அருணா: அட உங்க வீட்டிலும் இருக்கா இது! இப்பத்தான் இன்னுமொரு நண்பரின் வீட்டிலும் பார்த்தேன்.. அது சென்னையில் வாங்கியதாம். தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

    # எம்.ஏ.சுசீலா: எனது வலைப்பூவில் நீண்ட நாட்கள் கழித்து உங்கள் கருத்துரை. மிக்க மகிழ்ச்சி அம்மா. உங்கள் வருகையும் கருத்தும் என்னை மகிழ்வித்தன.

    @ பத்மநாபன்: அந்த பறவைகளும் பறவைக்கூடும் எனக்கும், என் பெண்ணுக்கும் மிகவும் பிடிக்கவே கேமராவில் சுட்டு விட்டேன்…. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே…

    # மோகன்ஜி: // கைவினை பொருள் தயாரிப்பவர்களை அவசியம் ஊக்குவிக்க வேண்டும்...// அதானே இந்த கண்காட்சியின் நோக்கமும். தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஜி!

    @ அமைதிச்சாரல்: சோம்பல்…. ம்… தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    # மாதேவி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும், படங்களை ரசித்தமைக்கும் நன்றி.

    @ சிவகுமாரன்: தங்களது முத்தான கருத்திற்கு நன்றி நண்பரே….

    # குணசேகரன்: தங்களது வருகைக்கு நன்றி. உங்கள் பக்கமும் வரவேண்டும்… வருகிறேன்…

    @ எல்.கே: லேட்டா வந்தால் என்ன… வரவேண்டும் அதுதானே முக்கியம். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கார்த்திக்..

    # வை. கோபாலகிருஷ்ணன்: வாங்களேன்.. ஒரு ரவுண்ட் அடிப்போம் தில்லிய…. என்ன கொஞ்சம் வெய்யில் தான் படுத்துது… தங்களது இனிய கருத்திற்கு நன்றி சார்…

    @ நிலாமகள்: பிறந்த நாள் வாழ்த்து கூறிய உங்களுக்கு மிக்க நன்றி சகோ….

    # ராஜி: வாழ்த்தியமைக்கும் தங்களது கருத்திற்கும் நன்றி சகோ.

    @ A.R. ராஜகோபாலன்: உங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே.. இந்த பதிவு டாஷ்போர்டில் அப்டேட் ஆகவில்லை. அதனால் தான் உங்களால் பார்க்க முடிந்திருக்காது.. பரவாயில்லை. அதான் இப்போது வந்து முத்தான கருத்திட்டு விட்டீர்களே…

    # ஈஸ்வரன்: வாங்க பத்மநாபன் அண்ணாச்சி… நீங்கள் தானே எனக்கு முன்னோடி தில்லியில்…. கருத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. இந்தப் பதிவை இப்போதுதான் காண்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....