ஆஸ்திரேலியாவின் தேசிய மலர் கொன்றை மலர்.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலின் தல விருட்சம் கொன்றை மரம்.
சிவ பெருமானுக்கு உகந்த மலர் கொன்றை மலர்.
தமிழ் இலக்கியத்தில் பல இடத்தில் வரும் ஒரு மலர் கொன்றை மலர்.
அப்படி இலக்கியத்தில்
வரும் கொன்றை மலர் பாடல் கீழே!
கொன்றை மலர் தரித்தான்
கோபாலன் கோலெடுத்து
நின்றுகுழல் ஊதினான்
நீள்சடையன் பொன்திகழும்
அக்கு அணிந்தான்
மாயன் அரவுஅணையில் கண்வளர்ந்தான்
சிக்கலிலே வாழும்
சிவன்
- காளமேகப்
புலவர்.
இது ஒரு கடைமொழி
மாற்றுப் பாடல். கடைசி அடியை முதலில் வைத்து
படித்தால், காளமேகப் புலவர் சொல்லவந்தது புரியும்.
”சிக்கலில் வாழும்
சிவபெருமான் கொன்றை மலர் மாலை தரித்தவர். கோபாலன்
ஆன கண்ணன் புல்லாங்குழல் ஊதினார். நீண்ட சடை
உடைய சிவபெருமான் ருத்திராட்சம் [அக்கு] அணிந்திருந்தார். மாயனான திருமால் பார்க்கடலில் ஆதிசேஷன் மீது துயில்
கொண்டு இருந்தார்” என்பது இப்பாடலின் பொருள்.
இந்த பாடலில் சொல்லப்பட்ட
கொன்றை மலருக்கு ஒரு சிறப்பு. இது ஆண்டுக்கு
ஒரு முறை மட்டும் மலரும் அற்புத மலர். அது
போலவே நம் எல்லோருக்கும் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் தானே பிறந்த நாள் வருகிறது [அதுக்குன்னு
29 ஃபிப்ரவரி பிறந்தவருக்கு நாலு வருஷத்துக்கு ஒரு முறை தான் பிறந்த நாள் வரும்னு சொல்லக்கூடாது!].
இந்த கொன்றை மரங்கள்
பூத்துக் குலுங்கி, பார்ப்பவர்கள் கண்ணுக்கு விருந்து படைக்கிறது. அது போலவே இன்றைய வலைச்சரத்தில் பிறந்த நாள் பதிவுகள்,
வாசிப்பவர்களுக்கு விருந்து படைக்கிறது.
அது என்ன இன்னிக்கு
பிறந்த நாள் பதிவுகள்? வலைச்சரத்துக்கு வாங்க,
இன்னிக்கு யாருடைய பிறந்த நாள் எனத் தெரியும் உங்களுக்கு!
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.


