இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே WWW.PUSTAKA.CO.IN மூலம் வெளியான தனது முன்று
மின்புத்தகங்களை அன்பளிப்பாக மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்திருந்தார் G.M.B. ஐயா.
சில பல காரணங்களால், மின்புத்தகங்களை வாசிக்க முடியாமல் தட்டிக்கொண்டே போனது. மேலும்,
புஸ்தகாவில் மின்புத்தகங்களை கணினியில்/அலைபேசியில் படிப்பதில் சில சிக்கல்கள்! குறிப்பாக
அன்பளிப்பாக வந்த புத்தகங்கள் அலைபேசியில் காணமுடிவதில்லை. கணினியில் படிக்கும்போதும்
சற்று கஷ்டப்பட்டே படிக்க வேண்டியிருக்கிறது. என்றாலும் இந்த வாரத்தின் ஞாயிறில் அவர்
அனுப்பிய மின்புத்தகங்களில் ஒன்றாவது படித்து முடிக்க வேண்டும் என நினைத்திருந்தேன்.
இதோ படித்து, அந்த வாசிப்பனுபவத்துடன் உங்களோடு!
திங்கள், 7 ஆகஸ்ட், 2017
ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017
முதலையின் வாயில் – ஜெய்ப்பூர் புகைப்படங்கள்
தலைநகர் வாசத்தில் சில முறை ஜெய்ப்பூர் சென்றிருந்தாலும்,
நண்பர் குடும்பத்தினரும், என் குடும்பத்தினரும் 2009-ஆம் ஆண்டு சென்று வந்த ஜெய்ப்பூர்
பயணத்தினை மறக்க முடிவதில்லை. இரண்டு நாட்கள் மிக உல்லாசமாக இருந்த பயணம் அது. நேற்று
புகைப்படங்களைத் தேடிக்கொண்டிருந்தபோது ஜெய்ப்பூர் பயணப் புகைப்படங்களைப் பார்க்க நேர்ந்தது.
இதுவரை வலைப்பூவில் இந்தப் படங்களைப் பகிர்ந்து கொண்டதில்லை என்ற நினைவு….. சரி இந்த ஞாயிறில் சில படங்கள் மட்டும் இங்கே!
முதலையின் வாயில் அகப்பட்டுக்கொண்டபோது!
காப்பாற்றுவது நண்பரும், அவரது மகளும்!
சனி, 5 ஆகஸ்ட், 2017
போரா குஹாலு – போரா குகைகள் – அரக்கு பள்ளத்தாக்கு
அரக்கு
பள்ளத்தாக்கு – பகுதி 15
அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்
“அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop
Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!
Bபோரா குஹாலு....
நுழைவாயில்....
Bபோரா குஹாலு....
கலிகொண்டா
வியூ பாயிண்ட்-ல் நின்று இயற்கைக் காட்சிகளை ரசித்து சில பல புகைப்படங்களை எடுத்துக்
கொண்ட பிறகு அங்கே இருந்து மனமே இல்லாமல் நகர்ந்தோம். இரண்டு மாதங்கள் விடுமுறை எடுத்துக்
கொண்டு, அலுவலகம், பதிவுலகம், முகநூல், தொலைக்காட்சி என அனைத்தையும் விடுத்து, இது
போன்ற ஏதாவது ஒரு மலைப்பிரதேச கிராமத்தில், குடிசை வீட்டில் தங்கிக் கொண்டு, நதியிலோ,
மலையருவியிலோ குளித்து, கிடைக்கும் காய்கனிகளை உண்டு, காலாற நடக்க வேண்டும், நிறைய
படிக்க வேண்டும் போன்ற ஆசைகள் உண்டு. ஆனால் அப்படி நடக்க வேண்டும் என்றால் இன்னும்
உழைக்க வேண்டும். இன்னும் சேமிக்க வேண்டும்! வேறு வழியில்லை!
Labels:
அனுபவம்,
ஆந்திரப் பிரதேசம்,
இந்தியா,
பயணம்,
புகைப்படங்கள்,
Andhra Pradesh,
Araku Valley,
India
வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017
ஃப்ரூட் சாலட் 203 – ஒண்டிக்கு ஒண்டி! – சோம்நாத் – முடிவெட்டிப் பேய்
பெண்களின் தலைமுடி
வெட்டி எடுக்கும் பேய்:
சில நாட்களாக, வட இந்தியாவின் சில மாநிலங்களில்
புரளி! பேய்/ஏதோ ஒன்று பெண்களின் தலைமுடியை வெட்டி எடுத்துக் கொண்டு போய்விடுவதாக செய்திகள் பரவி வருகின்றன.
கிராமத்துப் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர பயந்து போய் இருக்கிறார்கள். தலைநகரை
அடுத்த சிறு இடங்களில் கூட இந்தப் பேய் உலவுவதாக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நடுவே
அவர்களாகவே வெட்டிக்கொண்டு இப்படி வதந்தி பரவ விடுவதாகவும் காவல் துறை செய்தி சொல்கிறது!
எப்படி இருந்தாலும் இந்த விஷயம் பயங்கரமாக பரவி வருகிறது! இதை வைத்து சிலர் பாடலும்,
காணொளிகளும் தயாரித்து வெளியிடும் அளவிற்கு இந்த விஷயம் பரவி இருக்கிறது. செய்தி இங்கே. ஒரு மாதிரி காணொளி கீழே!
Labels:
ஃப்ரூட் சாலட்
வியாழன், 3 ஆகஸ்ட், 2017
கண் எதிரே அரக்கு பள்ளத்தாக்கு – கலிகொண்டா வியூ பாயிண்ட்…
அரக்கு
பள்ளத்தாக்கு – பகுதி 14
அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்
“அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop
Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!
வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மேகக் கூந்தலோ!
அரக்கு பள்ளத்தாக்கு....
மதிய
உணவு சாப்பிட்ட பிறகு அரை மணி நேரத்திற்கும் மேலாக பழங்குடி மக்களின் திம்சா நடனம்
கண்டு களித்து, நடனத்தில் மூழ்கி இருந்த எங்களை மீண்டும் நிகழ்வுக்குக் கொண்டு வந்தார்
எங்கள் வழிகாட்டி. இன்னும் இரண்டு மூன்று இடங்கள் பார்ப்பதற்கு உண்டு, என்பதால் விரைவில்
இங்கிருந்து புறப்பட வேண்டும் – அப்போது தான் நமக்கு அடுத்த இடங்களிலும் போதிய அளவு
நேரம் கிடைக்கும் என்பது அவர் வாதம். ஒரு நாள் பயணம் என்பதால், மீதி இடங்களை அடுத்த
நாள் பார்க்கலாம் என்று ஒத்தி வைக்க முடியாது! புறப்பட்டுத்தான் ஆக வேண்டும்! நாங்களும்
புறப்பட்டோம். அனைத்து சுற்றுலாப் பயணிகளையும் ஏற்றிக்கொண்டு பேருந்து மீண்டும் புறப்பட்டது.
வளைந்து நெளிந்து செல்லும் சாலையில் எங்கள் பேருந்து செல்ல, நாங்களும் சாலை வழி பயணத்தினை
மகிழ்வுடன் கடந்து கொண்டிருந்தோம்.
Labels:
அனுபவம்,
ஆந்திரப் பிரதேசம்,
இந்தியா,
பயணம்,
புகைப்படங்கள்,
Andhra Pradesh,
Araku Valley,
India


