எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, August 5, 2011

சிபாய்…. [CHIBAI]

[மீண்டும் வகுப்பறையில் நான்….]
முதலிலேயே சொல்லிவிடுகிறேன், இது சிப்பாய்க் கலவரத்தைப் பற்றிய பதிவல்ல. சற்றேறக்குறைய 14 வருடங்களுக்குப்  பிறகு இப்போது  மீண்டும் வகுப்பறையில் நான். ஆம் திங்கள் கிழமையிலிருந்து [18.07.2011] தில்லி பழைய ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருக்கும் ஒரு அரசு நிறுவனத்தில் இருமாத பயிற்சிக்கு அலுவலகத்திலிருந்து அனுப்பி இருக்கிறார்கள்.  இரு வார கால பயிற்சி தற்போது முடிந்திருக்கிறது.  இது வெற்றிகரமான மூன்றாவது வாரம். இன்னும் ஐந்து வாரம் இருக்கிறது.  ம்… 

கல்லூரி படிப்பு முடிந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு வகுப்பறையில் அமர்ந்து ஹிந்தி எழுத, படிக்கக் கற்றுக்கொண்டேன்.  பிறகு 14 வருடங்கள் இடைவெளிஇப்போது மீண்டும் வகுப்பறையில்  அமர்ந்து பாடங்கள் படிப்பது சற்றே கடினமாகத்தான் இருக்கிறது

காலையில் மூன்று வகுப்புகளும், மதியத்தில் இரண்டு வகுப்புகளும், ஆக மொத்தம் ஐந்து வகுப்புகள் ஒரு நாளைக்கு.  காலை வகுப்புகளையாவது    சற்று கவனிக்க முடிகிறது. மதிய வகுப்புகளில் தூக்கம்னா அப்படி ஒரு தூக்கம் வருகிறது.  அதைத்  துரத்த அடிக்கடி கேள்விகள் கேட்டு எங்களை விழிப்புடன் வைத்திருக்கின்றனர் எங்களுக்கு பாடங்கள் எடுக்கும் ஆசிரியர்கள்அவர்களுக்குத் தெரியாமல் தூங்குவது எப்படி என்பதை யாராவது கற்றுத்தர இயலுமா?  :)

இந்த பயிற்சி வகுப்பில் என்னையும் சேர்த்து  மொத்தமே 11 பேர்கள் தான்மீதியிருக்கும் 10 பேர்களில் ஐந்து பேர் மிசோரம் மாநிலத்தவர்கள், ஒருவர் கேரளாவிலிருந்து வந்திருக்கிறார்.  மற்ற நான்கு பேரும் தில்லியிலேயே பணி புரிபவர்கள்.

கல்லூரி காலத்தில் கூட இத்தனை படித்திருப்போமா என்பது தெரியவில்லை.  தினமும் பாடங்கள், பிறகு Practical Examinations, Presentations, பரீட்சைகள் என நடக்கிறது.  என் பெண்ணை விட எனக்கு ஹோம் ஒர்க் அதிகம் இருப்பதால் சில சமயங்களில் அவள் என்னை கிண்டல் செய்யும் அளவிற்கும் கூட  சென்றிருக்கிறது.  புதிய விஷயங்களும் கற்றுக் கொண்டிருக்கிறோம். அது என்றுமே நல்ல விஷயம்தானே!

அது சரி இந்த பதிவின் தலைப்பு ஏதோ புரியாத வார்த்தையாக இருக்கிறதே, அது ஏன்?” என்று இந்நேரம் உங்கள் மனதில் கேள்விகள் எழுந்திருக்குமே

இந்த வகுப்பிலும் எனக்கு ஒரு ஆதாயம் இருக்கிறது என்றால் அது மிகையாகாதுஅது என்ன என்று கேட்கிறீர்களாநாங்கள் தினமும் மிசோ பாஷையிலிருந்து இரண்டு மூன்று  வார்த்தைகள் கற்றுக் கொள்கிறோம்.  இதுவரை பத்துப் பன்னிரெண்டு வார்த்தைகள் பேசக் கற்றுக் கொண்டு விட்டோம்.   அதில் ஒன்று தான் இந்த பதிவின் தலைப்பு [சிபாய்].  அதன் அர்த்தம்வணக்கம்

அடுத்த முறை நீங்கள் என்னை சந்திக்கும்போது நான் உங்களுடன் மிசோ பாஷையில் பேசினாலும் பேசக்கூடும்அது உங்களுக்குப்  புரிய வேண்டுமென்றால் நீங்களும் கற்றுக் கொள்ளுங்களேன்.  நான் வேண்டுமெனில் கற்றுத் தருகிறேன்.  அதற்கு நன்றி செலுத்த நீங்கள் சொல்ல வேண்டியது இது தான் – ”கலோ மே” [Kalaw Me].

மேலும் சில வார்த்தைகளை அவ்வப்போது சொல்கிறேன்

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திக்கிறேன்.

நட்புடன்

வெங்கட்.

டிஸ்கி-1:  ஏற்கனவே என் வீட்டு அம்மணி பின்னாடி நின்னுக்கிட்டு  சொல்லிட்டு இருக்காங்க, “இதை வைச்சு ஒரு பதிவு தேத்திட்டீங்களா!” ம்…  


டிஸ்கி-2: அட, இது இந்த வருடத்தின் ஐம்பதாவது இடுகை....  :)  61 comments:

 1. ரசனையான பதிவு நண்பரே
  கற்றலில் இனிமை , உபயோகமாகும் போது
  உணரும் அதன் பெருமை.
  இந்த வருடத்தின் ஐம்பதாவது பதிவிற்கும் வாழ்த்துக்கள்
  சிபாய்

  ReplyDelete
 2. புதிது புதிதாக கற்பது நல்லவிஷயம்தானே. வயது
  காரணமாக சிறிது சோர்வு ஏற்படுவது தன்னால சரி ஆயிடும்.

  ReplyDelete
 3. சிபாய். புது மொழி கற்று கொடுப்பதற்கு, ”கலோ மே” [Kalaw Me].
  :-)

  ReplyDelete
 4. இப்போதே சொல்லி விடுகிறேன்”கலோ மே”

  ReplyDelete
 5. இருந்தாலும் இத்தனை வருடங்களுக்குப்பிறகு பயிற்சி அனுபவமும் வகுப்பறை அனுபவமும் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்காது. புதிய மொழி கற்பது வேறு உபரி நன்மை!

  இந்த வருடத்து ஐம்பதாவது பதிவிற்கு இனிய வாழ்த்துக்கள்!!‌

  ReplyDelete
 6. உங்களுக்கு என் “சிபாய்”.

  ReplyDelete
 7. சிபாய் கத்துக்கொடுத்ததுக்கு கலோ மே :-))

  ReplyDelete
 8. நமது பிள்ளைகளின் கஷ்டத்தை அறிய ஒரு வாய்ப்பு. என்ன, நான் சொல்றது சரியா?

  ReplyDelete
 9. 50க்கு வாழ்த்து சகோ.

  படிப்பது ரொம்ப கஷ்டம்தான். பீ.காம் ஆரம்பிச்சு ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்.

  ReplyDelete
 10. மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. கற்றல் சுகம்.... நீங்க புது மொழியும் சேர்த்து கத்துக்கிறிங்க கலக்குங்க... இரண்டு மாசம் முடிஞ்சு ஒரே பாய் பாய் சிபாய் தான்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 12. இன்றைய வலைச் சரத்தில் தங்களை
  அறிமுகப் படுத்தக் கிடைத்த
  வாய்ப்புக்கு பெரிதும் மகிழ்கிறேன்

  ReplyDelete
 13. // வருடத்தின் ஐம்பதாவது இடுகை.... //

  மிசோ பாஷையில் வாழ்த்துக்களுக்கு என்ன சொல்வாங்க:)?

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள் மக்கா ஐம்பதாவது இடுகைக்கு....!!!

  ReplyDelete
 15. கலோ மே..

  துளசி மேடத்தை வழியனுப்பும் மீட்டிங்க் ல்.. நீங்க சொல்லிக்கொண்டிருந்தமாதிரி பதிவு போட்டுட்டீங்க >..
  அன்னிக்கே எங்களிடம் நீங்க இந்த மொழியில் தானே பேசிட்டிருந்தீங்க :)))

  ReplyDelete
 16. @ A.R. ராஜகோபாலன்: கற்றலும் இனிமை என்பது உண்மை நண்பரே. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 17. # லக்ஷ்மி: “வயது காரணமாக சோர்வு ஏற்பட்டாலும்...” :))))

  இனிமையாகத்தான் இப்போது போய்க்கொண்டு இருக்கிறது வகுப்புகள். முதல் வாரத்தில் கொஞ்சம் கஷ்டமாய் இருந்தது.

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா.

  ReplyDelete
 18. @ சித்ரா: புதிய பாஷை எல்லோரும் கத்துக்கிட்டா நல்லதுதானே.... தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சித்ரா.

  ReplyDelete
 19. # சென்னை பித்தன்: உங்களுக்கும் கலோமேலுத்துக்... அதாவது Thank You Very Much என்று அர்த்தம்.....

  எனது இந்த இடுகைக்கு வந்து கருத்திட்ட உங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 20. @ மனோ சாமிநாதன்: உண்மை தான். இத்தனை வருடங்களுக்குப் பிறகு வகுப்பறையில் இருப்பது சற்று சுகமாகவும் தான் இருக்கிறது.

  உங்களது வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி தரும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 21. # வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  @ அமைதிச் சாரல்: அட மிசோ பாஷைய உடனே பிடிச்சுக்கிட்டீங்களே... நன்றி சொன்ன தங்களுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 22. @ அமைதி அப்பா: நிஜமாகவே சில சமயங்களில் கஷ்டமாகத் தான் இருக்கிறது நண்பரே..

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 23. # புதுகைத்தென்றல்: அட நீங்க கூட பி.காம் படிச்சீங்கல்ல.... அப்ப உங்களுக்கு என்னோட நிலை நல்லாவே புரியும். இதுவும் நல்லாத்தான் இருக்கு சகோ....

  தங்களது வருகைக்கும், கருத்திற்கும், இனியதோர் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 24. @ ரத்னவேல்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 25. # பத்மநாபன்: // இரண்டு மாசம் முடிஞ்சு ஒரே பாய் பாய் சிபாய் தான்... வாழ்த்துக்கள்...// அட இது கூட நல்லா இருக்கே... பாய் பாய் சிபாய்.... :))

  தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

  ReplyDelete
 26. @ கலாநேசன்: நன்றி கலாநேசன். புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்று வந்தீர்களா... நல்ல விஷயம். என்னால் தான் செல்ல முடியாமல் போய்விட்டது.

  ReplyDelete
 27. # ரமணி: தங்களைப் போன்றவர்கள் மூலம் எனக்கும் வலைச்சரத்தில் அறிமுகம் கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்த தங்களது ஆதரவு என்னை மேலும் மேலும் நல்ல விஷயங்களைப் பகிர்வதில் ஊக்குவிக்கும்.

  ReplyDelete
 28. @ ராமலக்ஷ்மி: அடடா இந்த வார்த்தைக்கு மிசோவில் என்ன என்று தெரியவில்லையே. அடுத்த வகுப்பில் கேட்டு உங்களுக்குச் சொல்கிறேன் சகோ.

  தங்களது தொடர்வருகைக்கும் கருத்திற்கும், வாழ்த்திற்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 29. # மனோ நாஞ்சில் மனோ: வாழ்த்தியமைக்கு நன்றி மக்கா! இப்படி இல்ல இருக்கணும்.... :)

  ReplyDelete
 30. @ முத்துலெட்சுமி: அடடா ரொம்ப போரடிச்சுட்டேனோ அன்னிக்கு :(

  அந்த பதிவர் சந்திப்பு பற்றி எதாவது எழுதப் போறீங்களா நீங்க!

  தங்களது தொடர்ந்த வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 31. ”கலோ மே” [Kalaw Me].

  வாழ்த்துக்கள் ஐம்பதாவது இடுகைக்கு....!!
  சிபாய் சிபாய் சிபாய்

  ReplyDelete
 32. # இராஜராஜேச்வரி: வாழ்த்திய உங்களுக்கும் ”கலோ மே”... தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 33. ஆமா நல்லா படியுங்க...
  தூக்கம் வந்தால் பக்கத்தில் இருக்கும் ஆளை நுள்ளச்சொல்லுங்கோ...hahaha;...
  நல்ல பதிவு...
  உங்கள் சிபாய் கற்பித்தலுக்கு கலோ மே...
  அன்புடன் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 34. ”விழிநிலை உறக்கம்” என்றொரு கண்கட்டு வித்தை இருக்கிறது. கொஞ்சம் செலவாகும். பரவாயில்லையா? :-))

  ReplyDelete
 35. @ விடிவெள்ளி: தங்களது முதல் வருகை நண்பரே. மிக்க மகிழ்ச்சி.

  நுள்ளச் சொல்லணுமா? எங்கள் பக்கங்களில் கிள்ளச் சொல்வாங்கோ... நுள்ளலும் நன்றாக இருக்கிறது நண்பரே. இன்னுமொரு புதிய வார்த்தை.

  தொடர்ந்து வாருங்கள்... தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 36. # RVS: வாங்க மைனரே... செலவென்ன பெரிசா ஆயிடப்போகுது... ஆனா இப்பல்லாம் தூக்கம் வருவதில்லை... ஃபார்ம்-க்கு வந்துட்டேன்ல... :) தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தல...

  ReplyDelete
 37. வெங்கட் ! சுவையான பதிவு! ஆர்.வீ.எஸ் சொன்னாப்புல கண்திறந்து கொண்டே தூங்குவது ஒரு கலை. தூக்கம் வரும் போது தூங்காதே தம்பி தூங்காதே பாடலை நினைத்துக் கொள்ளுங்கள்.

  ReplyDelete
 38. போன மாதம் எனக்கும் இதே அனுபவம் தான். ஒரு 10 நாள் கோர்ஸ் iso வுக்காக . தூக்கம் தூக்கமாக வந்து தொலைத்தது. ஹோம் வொர்க், இன்டர்னல் டெஸ்ட். செமினார், எக்ஸாம் என்று துளைத்து எடுத்து விட்டார்கள்.
  ஆனாலும்
  கற்கை நன்றே கற்கை நன்றே
  காலம் கடந்தும் கற்கை நன்றே

  ReplyDelete
 39. மசால் வடைக்கு என்ன மிசோ?

  ReplyDelete
 40. @ மோகன்ஜி: //தூங்காதே தம்பி தூங்காதே பாடலை நினைத்துக் கொள்ளுங்கள்// அட இது கூட நல்ல வழியா இருக்கே ஜி! இப்பக் கொஞ்சம் பரவாயில்ல. மீண்டும் தூக்கம் வந்தால் இதை நினைவில் கொள்கிறேன்.

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 41. # சிவகுமாரன்: அட நீங்களும் என் இடத்திலேயே இருந்திருக்கீர்களா சமீபத்தில். நல்லது. இருந்தாலும் நீங்கள் சொல்லியது போல,

  கற்கை நன்றே கற்கை நன்றே
  காலம் கடந்தும் கற்கை நன்றே....

  தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 42. @ அப்பாதுரை: அட மசால் வடைக்கு மிசோ! அவங்க ஊர்ல மசால் வடை கிடையாதாம்... :)

  தங்களது வருகைக்கும் இனிய கேள்விக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 43. 50 வது பதிவுக்கு வாழ்த்துகள்.
  புது இடங்களுக்கு போவது.. மனிதர்களை பார்ப்பது உற்சாகமாய்த்தானே இருக்கும்

  ReplyDelete
 44. படிப்பது கஷ்டம் என்றாலும் அதில் ஒரு சுகம் இருக்கத்தானே செய்கிறது.
  அடுத்த பதிவு மிசோரம் பாஷையில் வராமல் இருந்தால் நல்லதே...
  நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.


  சே.குமார்
  மனசு (http://vayalaan.blogspot.com)

  ReplyDelete
 45. வெங்கட் முத்லில் உங்களுக்கு சிபாய்.

  இந்த வருட 50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

  புதிய பாஷை கற்றுக் கொடுப்பதற்கு கலோ மே.

  ReplyDelete
 46. @ ரிஷபன்: வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி. நிச்சயமாக உற்சாகமான ஒன்றாகத் தான் இருக்கிறது எங்கள் இந்த பயிற்சி.

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 47. # சே. குமார் [90bc5e8c-b1c5-11e0-8e97-000bcdca4d7a]:

  அடுத்த பகிர்வு நிச்சயம் மிசோவில் இருக்காது நண்பரே.. பயப்படவேண்டாம் நண்பரே :))

  நிச்சயம் படிப்பதில் சுகம் இருக்கத்தான் செய்கிறது.

  உங்களுக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்.

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 48. @ கோமதி அரசு: தங்களது வருகைக்கு மிக்க நன்றிம்மா. பதிவு போட்ட பிறகு பார்த்தால் இந்த வருடத்தின் ஐம்பதாவது பதிவு எனத் தெரிந்தது. அதனால் தான் பகிர்ந்தேன் அதையும்.

  உங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும், கருத்திற்கும் மிக்க நன்றிம்மா....

  ReplyDelete
 49. 50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 50. வெங்கட்,

  நடத்து, என்னால் தான் கலந்து கொள்ள (கொல்ல!!) முடியவில்லை. பார்ப்போம், அடுத்த batch-லாவது முடிகிறதா என்று.

  btw, ஏற்கனவே உனக்கு மிசோ அதிகாரி ஒருவர் இருந்தார் அல்லவா?

  ReplyDelete
 51. Dear Student! அலுவலகம் உங்களை management கற்றுக் கொள்ள அனுப்பி வைத்தால் நீங்கள் மிசோ கற்கிறீர்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? ஐந்து பேரில் நான்கு பேர் மிசோலினிகள் என்று தெரிகிறது. வீட்டில் சொல்லி ‘மிசா’ வில் உள்ளே தள்ளச் சொல்ல வேண்டியதுதான்.

  (Class Room படத்தைப் போட்டு மலரும் நினைவுகளை தூண்டிவிட்டீர்கள். கலோ மே. அந்த screen-ல் தான் எங்கள் batch World Cup பார்த்தோம். மேடத்திடம் சொல்லிடாதீங்க. ப்ளீஸ். அடிப்பாங்க.)

  ReplyDelete
 52. @ சிவகுமாரன்: தங்களது வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பரே.

  ReplyDelete
 53. # வேங்கட ஸ்ரீனிவாசன்: அடுத்த பயிற்சி டிசம்பர் மாதம் இருக்கலாம். எனக்கு ஏற்கனவே ஒரு மிசோ டாக்டர் அதிகாரியாய் இருந்தது உண்மை. அப்போது அவரிடம் மிசோ கற்றுக்கொள்ளவில்லை... :)))

  உனது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிடா....

  ReplyDelete
 54. @ ஈஸ்வரன்: அட உங்களை மேனேஜ்மெண்ட் படிக்க அனுப்பினா நீங்க கிரிக்கெட் மேட்ச் பாத்தீங்களா? நாளைக்கு போய் மேடம் கிட்ட சொல்லிடறேன்... :))

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....

  ReplyDelete
 55. இன்றுதான் உங்க வலைப்பூவிற்கு வருகிறேன் அருமையான இயல்பான எழுத்து.மேலும் வாசித்து பிறகுவிவரமாக எழுதுகிறேன்
  அன்புடன்
  ஷைலஜா

  ReplyDelete
 56. # ஷைலஜா: உங்களது முதல் வருகைக்கும், மகிழ்ச்சியூட்டும் வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி சகோ... தொடர்ந்து படித்து உங்கள் கருத்தினை எழுதுங்கள்... அது எனது எழுத்தினை மேலும் மெருகேற்றிக்கொள்ள உதவும்.

  மீண்டும் நன்றி....

  ReplyDelete
 57. மாணவருக்கு வாழ்த்துக்கள். உங்க கூட சேர்ந்து நாங்களும் மிசோ பாஷை கத்துக்கிறோம், இதே மாதிரி வார்த்தைகள் சொல்லித்தாங்க சார் .ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு.

  ReplyDelete
 58. @ ஜிஜி: //மாணவருக்கு வாழ்த்துகள்// ரொம்ப நன்றி சகோ. நிறைய வார்த்தைகள் கற்றுக் கொண்டு இருக்கிறேன். எல்லோருக்கும் பிடிக்குமா தெரியவில்லை. அதனால் தான் மிசோ வார்த்தைகளைத் தொடரவில்லை.

  தங்களது தொடர்ந்த வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 59. # மாதேவி: வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி சகோ.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....