[மத்தியப்பிரதேசம் அழைக்கிறது…. பகுதி – 3]
சென்ற பதிவில் அக்பரின் நவரத்தினங்களில் ஒன்றாகக் கருதப்படும் தான்சேன் பற்றிச் சொல்கிறேன் எனக்கூறி பதிவினை முடித்திருந்தேன். உங்களை இப்போது அங்கே அழைத்துச் செல்ல நான் ரெடி. நீங்க ரெடியா?
ராம்தனு பாண்டே என்ற இயற்பெயரைக் கொண்ட தான்சேன் சிறு வயதிலேயே இசையில் வல்லமை பெற்றவராக இருந்தார் என வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. அவர் தமது இசையினை மதுராவின் அருகே இருக்கும் பிருந்தாவனத்தில் இருந்த ஸ்வாமி ஹரிதாஸ் என்பவரிடம் கற்றதாகவும், அவரது இசையில் மயங்கிய அப்போதைய குவாலியர் மஹாராஜா மான்சிங் தோமர் அவருக்கு தான்சேன் என்ற பட்டத்தை வழங்கியதாகவும் சொன்னார் எங்களுடன் வந்த கைடு.
தான்சேன் தனது பாடலினாலேயே விளக்குகளை எரிய வைக்கும் திறமைப் பெற்றவராக இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. அவரது மகள் தன்னுடைய இசையின் மூலம் மழையை வரவைத்ததாகவும் சொல்கிறார்கள்.
பின்னாளில் இவரது இசையைப் பற்றிக் கேள்விப்பட்ட முகலாயப் பேரரசர் அக்பர் தான்சேன் அவர்களை தனது அரசவையிலேயே இருக்கச் சொல்லி அவரது இசையிலே மயங்கியதாகவும் தான்சேன் அக்பரது மகள் மெஹருன்னிசாவை மணந்ததாகவும் சொல்லிக் கொண்டு வந்தார் எங்களது கைடு.
சூஃபி பாடல்களை மற்றுமொரு குருவிடம் கற்றுக் கொண்டு இருக்கிறார். அந்த குருவின் பெயர் முகம்மது கவுஸ். தற்போது தான்சேன் சமாதி கூட முகம்மது கவுஸ் அவர்களுடைய சமாதி இருக்கும் இடத்தின் பின் பக்கமே இருக்கிறது.
முகம்மது கவுஸின் சமாதி இருக்கும் கட்டிடம் மிகச் சிறப்பாக, சதுர வடிவத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதன் பக்கங்களில் அறுகோண வடிவில் ஒரு மூன்றடுக்கு கட்டிடமும் பார்ப்பதற்கு அழகாய் இருக்கிறது.
பின் புறத்தில் இருக்கும் தான்சேன் சமாதி கவுஸ் சமாதி அளவுக்குப் பெரியதாக இல்லாமல் சற்றே சிறிய சதுரமாக, தூண்கள் அமைக்கப்பட்டு அழகாய் இருக்கும் ஒரு கட்டிடத்தின் நடுவே அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த இடம் முழுவதும் நிறைய பூச்செடிகள் இருக்கின்றன. ரோஜாக்கள் பூத்துக் குலுங்குகிறது. மல்லிகைச் செடிகளில் இப்போது தான் மொட்டுகள் வந்திருக்கின்றன. இன்னும் பெயர் தெரியாத பூக்களும் நிறைய இருந்தன.
இப்போதும் ஒவ்வொரு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் ஒரு சங்கீத சம்மேளனம் நடத்தப்படுகிறது. அதில் உலகிலிருந்து பலர் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள் எனச் சொன்னார் கூட வந்த ஒருவர்.
அவரது சமாதி இருக்கும் இடத்திலேயே ஒரு பெரிய புளிய மரம் இருந்ததாகவும் அதன் இலையை அவ்வப்போது சாப்பிட்டதால் தான் அவருக்கு இனிய குரல் வந்ததாகவும் சொல்கிறார்கள். இப்போது அந்த மரம் பட்டுப்போய் விழுந்து விட்டதால், மத்தியப் பிரதேச அரசாங்கம் அங்கே ஒரு புளியஞ்செடியை நட்டு வளர்த்து வருகிறார்கள். ஆனால் அது பெரிய மரமாக வளர்வது சந்தேகமே. காரணம் …
வருவோர் போவோரெல்லாம் தானும் தான்சேனாக ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் செடியைச் சுற்றிப் போடப்பட்டிருக்கும் கம்பி வலையினுள் கையை விட்டு இலைகளைப் பறித்துச் சாப்பிடுகின்றனர். தடுப்பதற்கோ, பாதுகாப்பதற்கோ யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. கட்டிடத்தின் நிழலில் சிலர் தூங்கிக் கொண்டு இருந்தனர். ஒருவேளை அவர்கள்தான் பாதுகாவலர்களோ?
இதில் இன்னுமொரு கொடுமை என்னவெனில், கையை விட்டு இலைகளைப் பறித்து வாயில் போட்டு மென்றபடியே பாடி வேறு பார்க்கிறார்கள். தான்சேன் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் பாவம் அந்த இடத்தினை விட்டு ஓடியே போயிருப்பார். ”’நீங்க நல்லா பாடணுமா?’ன்னு கேட்டுட்டு இப்படி சொன்னா எப்படி?” என்று கேட்பவர்களுக்கு, நல்ல குருவாகப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்களேன்.
அடுத்த பகுதியில் உங்களை அரண்மணைக்கு அழைத்துச் செல்கிறேன். அரண்மனையில் இருக்கும் உணர்வு உங்களுக்கு வர ராஜா – ராணி உடையெல்லாம் போட்டுக்கிட்டு தயாரா இருங்க.
நட்புடன்
வெங்கட்.
அங்கேயே பாடிப்பார்க்கிறார்களா? அதனால் தான் வளரலையோ செடி..?:)
பதிலளிநீக்குதான்சேனைப் பாராட்டுவதா! இல்லை, அவரைப் போற்றிப் பாதுகாத்து வளர்த்த அக்பரைப் பாராட்டுவதா!
பதிலளிநீக்குஎவ்வளவு பெரிய கலைஞராக இருந்தாலும் தக்க புரவலர் ஒருவர் இல்லையேல் பாதுகாப்பில்லாத அந்த புளியமரத்தைப் போல தன்னை தக்க வைத்துக் கொள்ள மிகுந்த சிரமப்பட வேண்டியதிருக்கும்.
(தான்சேன் இப்போது இருந்திருந்தால் ஜட்ஜ் ஆகியிருந்திருப்பாரோ? ஜெயாவிலா! கலைஞரிலா! இல்லை! இல்லை! ஸோனி அல்லது ஸ்டார் ப்ளஸ்)
மரத்திற்கு மாக்களுக்கு போட்ட வேலி போல் மக்களுக்கும் போட வேண்டுமோ?
பதிலளிநீக்குதமிழ்மணம் 2 ed vote
பதிலளிநீக்குஓ.கே. ரெடி. ராஜா ட்ரெஸ் போட்டுக்கிட்டேன். :-))
பதிலளிநீக்குநல்ல பகிர்வு!! :-)
இன்னும் வேலியையாவது விட்டு வைச்சிருக்காங்களே வெங்கட்ஜி.? :-))
பதிலளிநீக்குதான்சேன்- என்றதும் சிவாஜி-கே.ஆர்.விஜயா நடித்த "தவப்புதல்வன்" படத்தை அண்மையில் வசந்த் டிவியில் பார்த்தது ஞாபகத்துக்கு வருகிறது. அதில் "இசை கேட்டால் புவி அசைந்தாடும்," என்ற பாடலில் சிவாஜி தான்சேனாக வருவார்.
//கட்டிடத்தின் நிழலில் சிலர் தூங்கிக் கொண்டு இருந்தனர். ஒருவேளை அவர்கள்தான் பாதுகாவலர்களோ?//
பதிலளிநீக்குநல்ல நகைச்சுவை! அருமையான பதிவு.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
4 to 5 vgk
@ முத்துலெட்சுமி: அட ஆமாங்க... பாடிப் பார்ப்பதால் கூட செடி வளராமல் போயிருக்கலாம்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
சின்ன வயசுல படிச்ச இடத்துக்கெல்லாம் கூட்டிட்டு போறீங்க...அருமையான பதிவு...
பதிலளிநீக்கு# ஈஸ்வரன்: நிச்சயமா சோனி, ஸ்டார் பிளஸ் ரெண்டும் போட்டி போட்டு இருப்பாங்க முதலில்....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணாச்சி....
@ வேங்கட ஸ்ரீனிவாசன்: மாக்களுக்கு போட்ட வேலி மக்களுக்கு.... :) நல்லதாகச் சொன்னாய் நண்பனே...
பதிலளிநீக்குஉனது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
# என் ராஜபாட்டை ராஜா: இரண்டாவது தமிழ்மண ஓட்டிற்கு நன்றி நண்பரே..
பதிலளிநீக்கு@ RVS: அட ராஜா டிரெஸ்-ல ஷோக்கா இருக்கீங்களே மைனரே... :)))
பதிலளிநீக்குசெவ்வாய் கிழமை வரை காத்திருங்கள்... அன்று வெளியிடுகிறேன் அடுத்த பகுதி....
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
# சேட்டைக்காரன்: ஆமாம் இன்னும் சில நாட்களில் வேலியைக் கூட எடுத்துக்கொண்டு போனாலும் போவார்கள்... :(
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேட்டை...
@ வை. கோபாலகிருஷ்ணன்: தாங்கள் பிசியாக இருக்கும் சமயத்திலும் என்னுடைய பதிவுக்கு வந்து, அதைப் படித்து, ரசித்தமைக்கு மிக்க நன்றி சார்.
பதிலளிநீக்கு# Reverie: அட பள்ளியில் படித்ததெல்லாம் நினைவு இருக்கா உங்களுக்கு....
பதிலளிநீக்குதங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....
தான்சென் பற்றி அழகான பகிர்வு ... நேரில் கண்டதையும் .. கேட்டதையும் வைத்து படிப்பவர்களுக்கும் சுற்றுலா உணர்வு ஏற்படுத்தி விட்டீர்கள் ..படங்களும் மிக அருமை . நன்றிகள் ...
பதிலளிநீக்குதான்சேன் பற்றி அபூர்வமான தகவல்கள்.அவர் அக்க்பரின் மகளை மணந்த விவரம் இபொழுதுதான் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குசேட்டைக்காரன் சொன்ன அதே பாட்டுதான் எனக்கும் நினைவுக்கு வந்தது.
பதிலளிநீக்குபுதிய தகவல்களுக்கு நன்றி!
பதிலளிநீக்குதான்சேனைப் பற்றிய பல அரிய தகவல்களும்
பதிலளிநீக்குஅவரது அடக்கம் செய்யப்பட்ட இடம் குறித்த
படங்களும் மிக மிக அருமை
ஒருவேளை இலை பறிக்கப் பட்டதால் இல்லாமல்
பாடிய பாட்டைக் கேட்டே பயத்தில் அந்த மரம்
வளராது போயிருக்குமோ?பயனுள்ள பயணப் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
@ பத்மநாபன்: தங்களது பாராட்டிற்கு மிக்க நன்றி பத்துஜி! நிறைய புகைப்படங்கள் எடுத்தோம். தெரிவு செய்து பிகாசாவில் தரவேற்றம் செய்யவேண்டும்... நேரம் ஒதுக்க வேண்டும்... :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி.
# ராம்வி: நிறைய விஷயங்கள் அங்கே பேசப்பட்டது. அவற்றில் பல எனக்கும் புதியது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
@ சென்னை பித்தன்: அட... சேட்டைக்கு நினைவு வந்த அதே பாடல் உங்களுக்கும் நினைவுக்கு வந்ததா... தற்செயலாக இருந்தாலும் நல்ல விஷயம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் இனிய கருத்துகளுக்கும் மிக்க நன்றி.
# ரமணி: காரணம் இலைகளைப் பறித்ததோ, பாடல் பாடியதோ எதுவாக இருந்தாலும், சோகம்தான்... இல்லையா சார். அங்கே சற்றேறக்குறைய 15 நிமிடங்கள் இருந்தேன். அதில் 10-15 பேர் இலைகளைப் பறித்து சாப்பிட்டனர். அதில் 5-10 பேர் பாடிப் பார்த்தார்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
தான்சேனைப் பற்றி நீங்கள் எழுதியதை படித்தவுடன் எனக்கும் சேட்டைக்காரன் அவர்கள் போல் தவபுதல்வன் படமும்” இசைகேட்டால் புவி அசைந்தாடும்” என்ற பாடலும் நினைவுக்கு வந்து விட்டது.
பதிலளிநீக்குதான்சேன் பாட்டால் தீபங்களை ஒளி பெறசெய்வார்.
படங்களும் சென்ற இடங்களின் விவரிப்பும் நன்றாக இருக்கிறது வெங்கட்.
@ கோமதி அரசு: தவப்புதல்வன் பாடல் எல்லோர் நினைவிலும் வந்து விட்டது போல....
பதிலளிநீக்குதங்களது பாராட்டிற்கு மிக்க நன்றிம்மா.
தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றிம்மா... வரும் நாட்களில் இன்னும் பல இடங்களைப் பற்றி எழுதுகிறேன். தொடர்ந்து வந்து ஆதரவு தாருங்கள்...
மிக சுவாரஸ்யமான பதிவு! தான்சேனைப்பற்றிய அரிதான விபரங்கள் பதிவிற்கு மேலும் அழகைக் கூட்டியுள்ளன. புகைப்படங்கள் எல்லாம் அருமை!
பதிலளிநீக்கு# மனோ சாமிநாதன்: தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி. புகைப்படங்கள் இன்னும் நிறைய இருக்கிறது. பிறகு பிகாசாவில் பகிர்கிறேன்...
பதிலளிநீக்குநல்ல பகிர்வு.
பதிலளிநீக்குபுளியிலைப் பேராசை! நம் கண்மூடித்தனங்களுக்கு அளவே இல்லை. புளியஞ்செடியை வளர்க்கும் அரசாங்கத்தையும் சேர்த்து.
பதிலளிநீக்குசுவாரசியமான பதிவு.
@ மாதேவி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.
பதிலளிநீக்கு# அப்பாதுரை: புளியிலைப் பேராசை.... :)
பதிலளிநீக்குநம் கண்மூடித்தனங்களுக்கு அளவே இல்லை.... சரியான கருத்து...
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்
பதிலளிநீக்குதான்சென் பற்றி அருமையான பதிவு.படிச்சதை தூசி தட்டியதற்கு நன்றி.
பதிலளிநீக்கு@ புதுகைத் தென்றல்: அடுத்த பகுதி நாளை வெளியிடுகிறேன் சகோ. தொடர்ந்து வருகை தந்து கருத்துரைக்கும் உங்களுக்கு எனது நன்றி...
பதிலளிநீக்கு# அமுதா கிருஷ்ணா: தூசி.... பார்த்து தட்டுங்க சகோ... நான் தூசி தட்டிய போது ஒரே தும்மல்... :))
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
ஆஹா.....புளிய இலை விஷயம் நல்லா இருக்கே! நல்லவேளை இதைச் சட்னி செஞ்சு சாப்பிட்டார் தான்ஸேன்னு சொல்லி இருந்தால் செடியே இந்நேரம் காணாமப் போயிருக்கும்!
பதிலளிநீக்குபடங்கள் அருமையா இருக்கு.
@ துளசி கோபால்: வாங்க... சட்னி செய்து சாப்பிட்டார் நல்ல வேளை சொல்லாம விட்டாங்க... அப்படி சொல்லியிருந்தா நிச்சயமா நீங்க சொன்ன மாதிரி செடியும் இருந்திருக்காது, வேலியும் அவசியம் இல்லாமல் போய் இருக்கும்.
பதிலளிநீக்குபடங்கள் பற்றி பாராட்டியமைக்கு நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
வருவோர் போவோரெல்லாம் தானும் தான்சேனாக ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் செடியைச் சுற்றிப் போடப்பட்டிருக்கும் கம்பி வலையினுள் கையை விட்டு இலைகளைப் பறித்துச் சாப்பிடுகின்றனர்.
பதிலளிநீக்குவயித்துல புளியைக் கரைக்குது.. அந்த செடி எப்ப வளரப் போவுதோ..
# ரிஷபன்: அட உங்க வயித்துல புளியைக் கரைத்து விட்டார்களே.... செடி வளர வாய்ப்பில்லாத மாதிரிதான் தோன்றுகிறது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
தான்சேன் தனது பாடலினாலேயே விளக்குகளை எரிய வைக்கும் திறமைப் பெற்றவராக இருந்தார்//
பதிலளிநீக்குதீபக் ராகம்னு கேள்விப் பட்டிருக்கேன்.
சங்கீத சம்மேளனத்தில் ஒருமுறை நம்ம எம்.எஸ். அம்மாவுக்கும் விருது வழங்கப் பட்டது. மிகப் பெரிய அளவில் நடக்கும் சம்மேளனம் அது.
தீபக் ராகம்.... - எனக்கு புதிய தகவல்....
நீக்குசங்கீத சம்மேளனம் மிகச் சிறப்பாக நடக்கும் இங்கே. எம்.எஸ். அம்மாவிற்கும் விருது வழங்கப்பட்டது பொருத்தமானது தான்.
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கீதாம்மா..