திங்கள், 29 ஆகஸ்ட், 2011

மே அன்னா ஹு[ன்]:



                                                                                                                                                                                                                                         
திரு அன்னா ஹசாரே அவர்களின் உண்ணாவிரதம், 28 ஆகஸ்ட் 2011 அன்றோடு முடிந்திருக்கிறது. இந்த கட்டுரை அவரது “ஜன் லோக் பால்” பற்றியோ, அரசாங்கத்தின் தடுமாற்றங்கள் பற்றியோ, இந்த விஷயத்தினை நல்லது-கெட்டது என்ற கோணத்தில் விவாதிக்கும் இருவேறு தரப்பினர்களைப் பற்றியோ அல்ல.  ஒரு சாதாரண பொது ஜனமாக இந்த நாட்களில் தலைநகர் தில்லியில் நடந்த சில விஷயங்களைப் பற்றியது மட்டுமே.

கடந்த பதிமூன்று நாட்களில் பாதிக்கும் மேல், உண்ணாவிரதம் இருந்த ராம்லீலா மைதான் வழியாகத் தான் என்னுடைய காலை மாலை பயணங்கள் அமைந்தன.  மக்கள் கூட்டம் அலைமோதியது என்பதைக் காண முடிந்தது.  வரலாறு காணாத கூட்டம், எண்ணிக்கையில் பல சாதனைகள் என ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அங்கிருந்து செய்திகளைப் பரப்பிக் கொண்டு இருந்தது நம் அனைவருக்கும் தெரிந்ததே.

எப்போதுமே ஒரு மனிதன் தனியனாய் இருக்கும் போது நடந்து கொள்ளும் முறைக்கும் ஒரு கூட்டத்தில் இருக்கும் போது நடந்து கொள்ளும் முறைக்கும் நிச்சயம் வித்தியாசம் உண்டு என்பதை கண்கூடாக இந்த நாட்களில் என்னால் காண முடிந்தது

  • கடற்கரை போன்ற பொழுதுபோக்கிற்கு வழியில்லாத பெரும்பாலான தில்லி மக்கள் இந்த நாட்களை நல்ல விதமாய்   பயன்படுத்திக் கொண்டனர்.

  • லோக் பால்பாலா அது எருமைப் பாலா, பசும்பாலா என்று கேட்கும் அளவுக்கே விஷயம் தெரிந்த மக்கள் கூடமே அன்னா ஹு[ன்]” எழுதிய தொப்பிகளையும், சட்டைகளையும் அணிந்து கொண்டு பல விதமான கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.

  • நிறைய இளைஞர்கள் தத்தமது மோட்டார் பைக்குகளில் இரண்டு மூன்று பேர்களாய், தலைக்கு பாதுகாப்பு கவசம் [ஹெல்மெட்] இல்லாமல் வெறும் ஐந்து ரூபாய் அன்னா தொப்பியை அணிந்து கொண்டு மணிக்கு 80-100 கிலோ மீட்டர் வேகத்தில் தங்களுக்கும், சக சாலை உபயோகிப்பவர்களுக்கும் விபத்து நடக்க ஏதுவாய் ஆர்பாட்டங்கள் செய்து கொண்டு இருந்தனர்.
  • பாதையில் போகும் எல்லா பயணிகளையும் இவர்கள் தொந்தரவு செய்ததையும் யாராலும் மறுக்க இயலாது.
  • தில்லி மெட்ரோவில் பயணம் செய்யும் அன்னா ஆதரவாளர்கள் மெட்ரோவினுள்ளேயே கோஷங்கள் எழுப்பியபடி பயணம் செய்தனர்.  கோஷம் எழுப்பாத மற்ற பயணிகளை துவேஷித்து, ”கோஷம் செய்யப் போகிறாயா இல்லையா?” என்று மிரட்டி கூட கோஷம் போட வைத்துள்ளனர்அப்படி மிரட்டப்பட்ட, வெளியூரிலிருந்து வந்திருந்த எனது நண்பர் ஒருவர், எதற்கு வம்பு என தன் பங்குக்கு கோஷமிட்டிருக்கிறார்.
  • ஒரு பெரிய கூட்டத்தினைச் சமாளிப்பது எந்த ஒரு காவல்துறைக்கும் கஷ்டமே.  நீங்கள் எல்லோரும் இரண்டு காவலர்கள் வாங்கிய அடிகளை ஊடகங்களில் பார்த்திருக்கலாம்
  • எந்த நேரமும் வன்முறை வெடிக்கக் காத்திருந்தது.  உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹசாரே அவர்களுக்கு ஏதாவது ஆகியிருந்தால் இந்தக் கூட்டத்தினையும் அவர்களது செயல்களையும் நிச்சயம் கட்டுப்படுத்தியிருக்க முடியாது.
  • சதர் பஜார் பகுதி வியாபாரிகளுக்கு நல்ல லாபம்.   உண்ணாவிரதம் ஆரம்பித்த நாளிலிருந்தே நமது மூவர்ண கொடிகளும், அன்னா தொப்பிகளும், சட்டைகளும் நல்ல விற்பனை.
  • ஒவ்வொரு சாலை சந்திப்புகளிலும், அதுவும் ராம்லீலா மைதானம் செல்லும் வழியில் இருந்த அனைத்து சாலை சந்திப்புகளிலும் இவைகளை விற்கும் நிறைய நபர்களைப்  பார்க்க முடிந்தது
  • தொப்பி 5-10 ரூபாய்க்கும், கொடிகள், அளவினைப் பொருத்து 1000 ரூபாய் வரை கூட விற்கப்பட்டது.
  • பஞ்சாபிலிருந்து வந்திருந்த ஒரு சர்தார்ஜி ஒரு லாரி முழுவதும் வாழைப்பழங்களும், உணவுப் பொட்டலங்களும் கொண்டு வந்து விநியோகம் செய்து கொண்டிருந்தார்
  • அன்னா தவிர மற்ற எல்லோரும் நன்றாக உண்டு, பொழுது போக்கினர்.     


பாராளுமன்றத்தில் நடந்த விவாதங்களுக்குப் பிறகு தன்னுடைய உண்ணாவிரதத்தினைக் கைவிட்டார் அன்னா. பலருக்கு இந்த ஜன் லோக் பால் சட்டத்தினால் என்ன பயன் வரப்போகிறது என்பது இன்னும் புரியாத நிலை தான்.  இறப்புச் சான்றிதழ் பெறுவதற்குக் கூட லஞ்சம் கொடுக்கும்/வாங்கும் நிலை இப்போதிலிருந்து மாறிவிடுமாஎன்பது போகப்போகத்தான் தெரியும்.  பொறுத்திருந்து பார்ப்போம்.

மீண்டும் சந்திப்போம்…..

வெங்கட்


45 கருத்துகள்:

  1. வெங்கட்ஜீ! ராம்லீலா மைதானத்தில் கூடிய கூட்டம் குறித்து பல செய்திகளை பெரும்பாலான ஊடகங்கள் இருட்டடிப்பு செய்திருந்தாலும், எனது அலுவலக நண்பர்கள் மூலம் இத்தகைய தகவல்கள் வந்துகொண்டுதான் இருந்தன.

    அவற்றை ஊர்ஜிதப்படுத்துவது போல், நடுநிலையாளரான நீங்கள் எழுதியிருப்பதைப் பாராட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. ”இறப்புச் சான்றிதழ் பெறுவதற்குக் கூட லஞ்சம் கொடுக்கும்/வாங்கும் நிலை இப்போதிலிருந்து மாறிவிடுமா” என்பது போகப்போகத்தான் தெரியும். பொறுத்திருந்து பார்ப்போம்.

    நடுநிலையான ப்கிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. இதையே நான் அதீதத்தில் எழுதியிருந்த போது ஒருவர் அப்படியெல்லாம் இல்லை என்று மறுத்திருந்தார் தல.

    சரி ஓ.கே..

    பகிர்வுக்கு நன்றி. :-)

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் எழுதியது நூற்றுக்கு நூறு உண்மை. அன்னாவின் உண்ணாவிரதத்திற்கு எதிர் விமர்சனம் வைப்பவர்கள் கிட்டத் தட்ட தேசத் துரோகிகளாகவே கருதப்பட்டார்கள். (நான் ‘தம்பி’ என்று கூடச் சொல்லவில்லையே!)

    அதிலும் பள்ளி மாணவர்கள் பள்ளிகளைக் கட் அடித்து விட்டு அடித்த லூட்டி! கொஞ்சம் ஓவர்தான்.

    இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்த 24 மணி நேர தொலைக்காட்சி சானல்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

    பதிலளிநீக்கு
  5. ஒரு கோவில் அல்லது ஒரு ஆன்மீக கூட்டத்திலே கூட (குறிப்பாக பிரசாதம் வாங்கும் போது), நம்மிடயே தனி மனித ஒழுங்கு காணக்கிடைப்பது கடினம். இதை எத்தனையோ தடவை நேரிலேயேப் பார்த்துள்ளோம். ஒரு கூட்டமாய் இருக்கும் போது எப்படியோ நமக்குள் உள்ள மிருகம் வெளிவந்து விடுகிறது.

    பதிலளிநீக்கு
  6. வேகமான பைக் ம் தொப்பியும் .. ரோட்டில் கவனமின்மையும் சிறுபிள்ளைத்தனமுமா பசங்களைப் பார்த்து இவங்க சும்மா விளையாட்டா செய்யறாங்களே தவிர உள்ளூர புரிந்து செய்யராங்களான்னு குழப்பம் தான்.

    பதிலளிநீக்கு
  7. நீங்க பார்த்து அனுபவித்ததை எங்களுக்கு தெரியபடுத்தியதால் உண்மை நிலைமை புரிந்தது.

    //அன்னா தவிர மற்ற எல்லோரும் நன்றாக உண்டு, பொழுது போக்கினர்.//
    இது ரொம்ப கொடுமை.

    நாட்டு மக்களுக்காக ஒருவர் நல்லது செய்ய முயற்சித்து வரும் பொழுது அவருக்கு ஆதரவு அளிப்பதை விட்டு, அந்த இடத்தை ஒரு சுற்றுலா பகுதியாக மாற்றி கொண்டாட்டம் நடத்தாமலாவது இருந்திருக்கலாம்.
    அந்த அளவுக்கு கூட கட்டுபாடு இல்லாத மக்கள் இருக்காங்களே!
    நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள், வெங்கட்.

    பதிலளிநீக்கு
  8. அண்ணா அசாரே: உண்ணாவிரதத் திடலை குப்பை மேடாக்கிய கூட்டம் நாட்டை சுத்தப்படுத்தப் போகிறதாம்

    http://arulgreen.blogspot.com/2011/08/blog-post_28.html

    பதிலளிநீக்கு
  9. நேர்முக படபிடிப்புக்கு நன்றி....

    தலைநகரில் இப்படி ஒரு பகிரும் பதிவர் இருப்பது எங்களுக்கெல்லாம் முதல் கை தகவல்கள் கிடைக்கின்றது...மீண்டும் நன்றி ..வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  10. @ சேட்டைக்காரன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேட்டை. நான் பார்த்த சில விஷய்ங்களைப் பகிர நினைத்தேன் சேட்டை. அதன் விளைவே இப் பகிர்வு....

    பதிலளிநீக்கு
  11. # இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  12. @ RVS: மன்னை மைனரே நான் பார்த்ததை எழுதியிருந்தேன். அதீதத்தில் எழுதியதைப் பார்த்தேன்....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மைனரே...

    பதிலளிநீக்கு
  13. # பித்தனின் வாக்கு: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.. நான் பார்த்தவற்றை எழுதத் தோன்றியதன் விளைவே இப்பகிர்வு...

    பதிலளிநீக்கு
  14. @ ஈஸ்வரன்: //இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்த 24 மணி நேர தொலைக்காட்சி சானல்கள் என்ன செய்யப் போகிறார்கள்?//

    இவர்களுக்கென இன்னோர் விஷயம் மாட்டாமலா போகப் போகிறது.....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணாச்சி...

    பதிலளிநீக்கு
  15. # வேங்கட ஸ்ரீனிவாசன்: “நமக்குள் இருக்கும் மிருகம்....” :)

    உனது வருகைக்கும் கருத்திற்கும் நன்றிடா...

    பதிலளிநீக்கு
  16. @ முத்துலெட்சுமி: புரிந்து செய்வது போல தெரியவில்லை... அப்படி ஓர் ஆர்ப்பாட்டம் வழியெங்கும்...... ஒரு தெரிந்த இளைஞனிடம் கேட்டபோது அவன் சொன்ன பதில்... “கொஞ்ச நேரம் ஜாலியா இருந்துட்டு போறோமே.... அதில் உங்களுக்கென்ன போயிற்று....”

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  17. # ராம்வி: தங்களது வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ...

    மேலும் அங்கே பார்த்த விஷயங்கள் அனைத்தினையும் இங்கே எழுத முடியாது...

    பதிலளிநீக்கு
  18. @ அருள்: எனது பக்கத்தில் தங்களது முதல் வருகை நண்பரே...

    உங்கள் பக்கமும் வருகிறேன்....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  19. # பத்மநாபன்: “நேர்முகப் படப்பிடிப்பு”.... :) அதற்குத் தான் நிறைய ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு காத்திருக்கிறதே.... என் பார்வையில், நான் சந்தித்த விஷயங்கள் இவை. அவை உங்களுக்கும் பிடித்திருப்பது குறித்து என் நன்றி....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்துஜி!

    பதிலளிநீக்கு
  20. @ சென்னை பித்தன்: தமிழ்மணம் 6 :)

    தங்களது வருகைக்கும், இனிய கருத்திற்கும், வாக்கிற்கும் மிக்க நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  21. # அமுதா கிருஷ்ணா: தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  22. நாங்கள் தலைநகரில் இல்லை நல்ல வேளை!

    பதிலளிநீக்கு
  23. @ ரிஷபன்: “நாங்கள் தலைநகரில் இல்லை நல்லவேளை...”

    :)) எங்களுக்கு வேறு வழியும் இல்லை... :))))

    தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  24. நோக்கம் நல்லதாயிருந்தால் வெற்றி நிச்சயம்...தாமதமாயிருந்தாலும்...
    நல்ல நடுநிலைப்பதிவு நண்பரே...

    பதிலளிநீக்கு
  25. ஹ்ம்ம் இதைதான் நாங்கள் சொன்னோம் யார் கேட்கிறார்கள். இதை நான் கூகிள் பஸ்ஸில் பகிர்கிறேன்

    பதிலளிநீக்கு
  26. # ரெவெரி: ”நோக்கம் நல்லதாயிருந்தால்....” உண்மை தான் நண்பரே...

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  27. @ எல்.கே.: நிறைய விஷயங்கள் இப்படித்தான் கார்த்திக்....

    என்னுடைய இப்பகிர்வினை உங்கள் பஸ்-இல் பகிர்ந்தமைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  28. இயல்பு நிலை விவரம் தந்தமைக்கு நன்றி...

    //இறப்புச் சான்றிதழ் பெறுவதற்குக் கூட லஞ்சம் கொடுக்கும்/வாங்கும் நிலை இப்போதிலிருந்து மாறிவிடுமா” என்பது போகப்போகத்தான் தெரியும். பொறுத்திருந்து பார்ப்போம்//
    நிறைய பேரின் கேள்வியும் இது தான்... பார்ப்போம்...

    பதிலளிநீக்கு
  29. # அப்பாவி தங்கமணி: எல்லாவற்றுக்கும் லஞ்சம் கேட்கும்/கொடுக்கும் நிலை மாறுமா.... ஒரு பெரிய கேள்விக்குறி தான்... எல்லோருடைய நிலையும் அதுதான்...

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  30. வெங்கட், ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டீங்க இது அந்த 13 நாட்களில் கூட்டத்தின் நடவடிக்கைகளில் நீங்கள் கண்டவற்றை கூறியிருக்கிறீர்கள் என்று. ஆனால் முதல் முறையாக ஒரு blogல் மிகப்பெரும்பன்மையான கருத்துக்கள் இந்த உண்ணா விரத போராட்டத்திற்கு எதிராக (போராட்டத்தின் எதிர் மறை நிகழ்வுகளை) அமைந்து இருக்கின்றன. கூட்டத்தில் பெரும்பன்மையானவர்கள் நிச்சயம் நல்ல மனிதர்களாக இருந்திருப்பார்கள். நிச்சயம் சாராய நெடியுடன் கூடிய கூட்டமாக அது இருந்திருக்காது. நிச்சயம் ஆட்சியாளர்கள் போராட்டத்தை நிறுத்த, குலைக்க முனைவார்கள் என்று நினைத்தேன். மக்கள் அங்கே அமர்ந்து சாப்பிட்டு இருப்பார்களா என்பது எனக்கு தெரிய வில்லை. ஆனால் வீட்டில் சாப்பிட்டுகொண்டுதான் இருந்திருப்பார்கள் ஆனால் நிச்சயம் ஒருவித மன இறுக்கத்துடன் என்னைப்போல. வயதானவர்களும் தங்களின் பெண் பிள்ளைகளின் அறிவுரையுடன் கலந்து கொண்டதை கேள்விப்பட்டேன். என்னைப்போல கோடி கணக்கானவர்கள் பணியின் காரணமாக இதுபோன்ற எந்த ஒரு ஊரின் கூட்டத்திலும் கலந்துகொள்ளமுடியவில்லையே என்று வருந்தியிருப்பார்கள். இதற்கெல்லாம் காரணம் நம் நாட்டில் லஞ்சம் கொடுப்பவர்கள் லஞ்சம் வாங்குபவர்களை விட அதிகம். லஞ்சம் வாங்காத (வாங்க முடியாத என்று சொல்ல மாட்டேன்) ஆயிரக் கணக்கான அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் வங்கி ஊழியர்கள் பொது மக்கள் என எண்ணிக்கை அதிகம். லஞ்சம் கொடுப்பவர்கள் எல்லாம் சட்டத்தை வளைக்க கொடுக்கவில்லை. லோக் ஆயுக்தா ஒரு எடியூரப்பாவை அகற்ற முடியுமென்றால் லோக் பால் நிச்சயம் நிறையபேரை தட்டி கேட்க முடியும்.

    பதிலளிநீக்கு
  31. @ C. குமார்: உனது வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் நன்றி. அந்த கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் எல்லோரையும் பற்றி குறை சொன்னதாக எனக்குத் தெரியவில்லை குமார். பொதுவாக தில்லியில் நடந்த விஷயங்கள் பற்றிய பகிர்வு தான் இது. தரமான சட்டத்தினால் தப்பு செய்பவர்களைத் தண்டிக்க முடிந்தால் அதை வரவேற்க வேண்டும் தான். அதை நான் மறுக்கவில்லை... அதே சமயம் இப்படி ஒரு சட்டத்தினை கொண்டு வர அரசாங்கம் முயலுமா என்பதே சந்தேகம் தான்.... பொறுத்திருந்து பார்ப்போம் இன்னும் என்ன நடக்கிறது என்று தான் நான் எழுதி இருக்கிறேன்....

    லஞ்சம் என்ற ஒரு பெரிய கொடுங்கோலனிடம் அவதிப்படாத நபர்களை எண்ணி விடலாம் என்பதும் உண்மை....

    உனது வருகைக்கும் கருத்துரைக்கும், மீண்டும் எனது நன்றிடா..

    பதிலளிநீக்கு
  32. ஆனால் எனக்கு தெரியும் அரசியல்வாதிகள் எவ்வளவு தந்திரமானவர்கள் என்று. அதுவும் கபில் சிபல், மனிஷ் திவாரி, சிதம்பரம் போன்றவர்கள் இருக்கும் போது. தங்களின் வாழ்வாதாரத்திற்கு கேடு வரும் என்று தெரிந்தால் அதனை எப்படி தடுக்க முடியும் என்பதில் அவர்கள் கில்லாடிகள்.

    பதிலளிநீக்கு
  33. // அன்னா தவிர மற்ற எல்லோரும் நன்றாக உண்டு, பொழுது போக்கினர். //


    இதுதான் சத்தியம். நாலுபேர் கூடும் இடங்களில் தீனி விற்பனைக்கு என்ன குறைவு? தின்னு முடிச்சு வீசி எறியும் குப்பை மலைகளே சாட்சி. இல்லையா?


    ரவுண்ட் அப் நல்லா இருக்கு. நன்றி

    பதிலளிநீக்கு
  34. //பலருக்கு இந்த ஜன் லோக் பால் சட்டத்தினால் என்ன பயன் வரப்போகிறது என்பது இன்னும் புரியாத நிலை தான்.//

    நானும் அந்த நிலைதான். நீங்கள் தலைநகரில் இருப்பதால் உங்களுக்குத்தான் முதலில் இந்த விவரங்கள் தெரியவரும். தெரிந்தவுடன் உடனே ஒரு பதிவில் விவரங்களை எழுதிவிடுங்கள்.

    இது தெரியாமல் நான் வெட்கப்பட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியில் போவதில்லை.

    பதிலளிநீக்கு
  35. அன்னாவின் போராட்டத்தை மிக நெருக்கமாக
    பார்த்த உணர்வு தங்கள் பதிவைப் படிக்கக் கிடைத்தது
    எதையும் திருவிழாவாகவும் வியாபாரத் தலமாகவும்
    மாற்றிவிடும் நம் மக்களின் மனோ பாவம்
    எரிச்சலூட்டித்தான் போகிறது
    உண்மை நிலையை பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
    த.ம.10

    பதிலளிநீக்கு
  36. # C. குமார்: பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று. உன்னுடைய இரண்டாம் முறை வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிடா.

    பதிலளிநீக்கு
  37. @ துளசி கோபால்: உங்கள் பாராட்டிற்கு நன்றி டீச்சர்... நிறைய பேர் சாப்பிட்டு அந்த மைதானம் முழுக்க குப்பைகள்.... உங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி டீச்சர்..

    பதிலளிநீக்கு
  38. # DrPKandaswamyPhD: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  39. @ ரமணி: தங்களது தொடர் வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்திற்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  40. # அமைதிச்சாரல்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....