எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, August 16, 2011

வெளிச்சம் பிறக்கட்டும்…


[மத்தியப்பிரதேசம் அழைக்கிறது…. பகுதி – 2]

"மத்தியப்பிரதேசம் அழைக்கிறது.....” பகிர்வில் ஓய்வு எடுத்துக்கொண்டு வருகிறேன் என எழுதி இருந்தேன்.  நீங்களும் ஓய்வு எடுத்துக்கிட்டீங்களா?

குவாலியர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட இன்னோவா கார்கள், நேராகதான்சேன் ரெசிடென்சிசென்று தான் நின்றது.  மத்தியப் பிரதேச சுற்றுலா நிறுவனம் நடத்தும் ஒரு தங்கும் விடுதி அது.  நகரின் மத்தியில் நல்ல வசதிகளுடன் நன்றாக இருக்கிறது இந்த விடுதி


எங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் சென்று கொஞ்சம் ஓய்வு எடுத்து, எல்லோரும் கிளம்பினோம்.  நாங்கள் சென்ற இடம் ராமகிருஷ்ணா ஆஷ்ரமத்தின் ஒரு பகுதியில் நடக்கும்ரோஷ்ணிஎன்கிற ஒரு தனியார் தொண்டு நிறுவனத்திற்கு. ஆங்கிலத்தில் “REHABILITATION OPPORTUNITIES SERVICE & HEALTH FOR THE NEUROLOGICAL IMPAIRED” என்பதைச் சுருக்கி ROSHNI என்று அழைக்கிறார்கள்.  ஹிந்தியில் ரோஷ்ணி என்றால் வெளிச்சம் என்று அர்த்தம்


இவர்கள் மனவளர்ச்சி குறைந்தவர்கள், Autism, Cerebral Palcy போன்ற குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பயிற்சி அளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.   

நடைமுறையில் அவர்களுக்கு உதவும் பயிற்சிகள் தவிர இக் குழந்தைகளுக்கு பேப்பர் பைகள் செய்யவும், துணிகளில் எம்பிராய்டரி செய்வது, அழகிய கலர் டிசைன்கள் செய்வது, ராக்கி செய்வது, சிறிய மணி மாலைகள் செய்வது என்று நிறைய கைவேலைகள் செய்ய கற்றுக் கொடுக்கிறார்கள்


அந்த நிறுவனத்தின் இயக்குனர் திருமதி மஞ்சுளா பட்டன்கர் எங்களை ஒவ்வொரு இடமாகச் சுற்றிக் காண்பித்து அவர்கள் செய்து வரும் பயிற்சிகளைப் பற்றிய விளக்கங்களை  அளித்தார்.  ஒவ்வொரு வகுப்பறையாகச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தோம்.  அப்படிப் பார்த்த ஒரு அறையில் அதுல் என்ற சிறுவன் பேப்பர் கவர்கள் செய்து கொண்டு இருந்தான்.   அவனுடனும், மற்ற சிறுவர்களுடனும் பேசிவிட்டு வெளியே வந்தவுடன், சேதன் என்கிற சிறுவன்நீங்க எல்லாம் அதுல் வகுப்புக்கு மட்டும் போயிட்டு வந்தீங்க, என்னோட வகுப்புக்கும் வாங்க என்று பாசமாக அவன் மொழியில் அழைக்க, அவனை வருத்தப்பட வைக்க வேண்டாமென அச்சிறுவனுடன் நாங்கள் செல்ல, அவனது கூட பயிலும் எல்லோரையும் அறிமுகம் செய்து வைத்தான்

ஒவ்வொரு குழந்தைகளுக்குள்ளும்தான் எத்தனை எத்தனை திறமைகள்? சில குழந்தைகள் தையல் கற்றுக் கொள்கிறார்கள், சிலர் பேப்பர் கவர்கள் செய்கிறார்கள்.  வேறு சிலர் ஒரு பெரிய புடவையில் கைவேலைகள் செய்து வருகிறார்கள்.  இவர்கள் செய்யும் எல்லாப் பொருட்களும் அரசின் அங்காடியான “Mrignaini” யில் விற்கப்படுகின்றன

இந்த இடத்திற்குச் சென்ற பிறகு மனதிலே ஒரு அழுத்தம்.   வாழ்வில் நாம் சந்திக்கும் சிறிய பிரச்சனைகளுக்கே துவண்டு போகும் நமக்கு, இவர்களைப் பார்க்கும்போது நமது பிரச்சனையெல்லாம் ஒன்றுமே இல்லை என்ற எண்ணம் நிச்சயம் தோன்றும்எனக்குத் தோன்றியது.

மேலும் பொறுமை இல்லாத என்னைப் போன்ற சிலருக்கு இந்த இடத்தில் பணிபுரியும் நண்பர்களைப் பார்த்தால் நிச்சயம் நல்ல மாற்றம் ஏற்படும்.  ஏற்பட்டது


அவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை  செய்து விட்டு மனதில் திருப்தியுடன் வெளியே வந்தோம்அவர்களுக்கு உதவ நினைப்பவர்கள் அவர்களது இணையதளத்தினைச் சென்று பார்க்கலாம்

அடுத்து அக்பரின் நவரத்தினங்களில் ஒருவரான தான்சேன் பற்றிய பதிவில் மீண்டும் சந்திப்போம்

நட்புடன்

வெங்கட்.

52 comments:

 1. ஆமாங்க. நாம் பூர்வ ஜென்மத்தில் ஏதோ நல்லது செஞ்சுருக்கோமுன்ன்னு நினைச்சுக்குவேன். இந்தக் குழந்தைகள் எல்லாம் படு சமர்த்து. எங்க லைப்ரெரியில் இந்த மாதிரி மாணவர்களுக்குப் புத்தகம் அடுக்கப் பயிற்சி கொடுத்த நாட்கள் நினைவுக்கு வருது. சட்னு கோபம் வந்துரும் இவுங்களுக்கு. அதனால் கவனமாக சொற்களைத் தெரிஞ்செடுத்துப் பேசணும்.

  ReplyDelete
 2. //வாழ்வில் நாம் சந்திக்கும் சிறிய பிரச்சனைகளுக்கே துவண்டு போகும் நமக்கு, இவர்களைப் பார்க்கும்போது நமது பிரச்சனையெல்லாம் ஒன்றுமே இல்லை என்ற எண்ணம் நிச்சயம் தோன்றும்…//

  ஆம். இது உண்மை தான். நல்ல பதிவு. நன்றி.
  [2 to 3 vgk]

  ReplyDelete
 3. பயிற்சி பயணத்தில் இந்த மாதிரி சிறப்பான உதவிகளும் செய்து வந்துள்ளீர்கள்... இப்பதிவினால் அவர்கள் மேல் இன்னமும் வெளிச்சம் பரவட்டும்..

  ReplyDelete
 4. ”நம்பிக்கையென்னும் நந்தாவிளக்கு - உள்ளவரையில் உலகம் நமக்கு! - கவிஞர் கண்ணதாசன்.

  நம்பிக்கை வெளிச்சம் தரும் நந்தாவிளக்குகள் இவர்கள்.

  ReplyDelete
 5. கடவுளர்களின் குழந்தகளைக் கண்டு விட்டு வந்திருக்கிறீர்கள்!! நன்று!! :-)

  ReplyDelete
 6. சும்மா சுற்றுலா மட்டும் போயிட்டு வராம, நல்ல காரியமும் செஞ்சுட்டு வந்திருக்கீங்க.. வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. நல்ல பகிர்வு. வாய்ப்பு கிடைத்தால் மாதம் ஒரு
  முறையாவது இதுபோல இடங்களுக்கு போய் வர வேண்டும்.

  ReplyDelete
 8. வாழ்வில் நாம் சந்திக்கும் சிறிய பிரச்சனைகளுக்கே துவண்டு போகும் நமக்கு, இவர்களைப் பார்க்கும்போது நமது பிரச்சனையெல்லாம் ஒன்றுமே இல்லை என்ற எண்ணம் நிச்சயம் தோன்றும்… எனக்குத் தோன்றியது.

  மேலும் பொறுமை இல்லாத என்னைப் போன்ற சிலருக்கு இந்த இடத்தில் பணிபுரியும் நண்பர்களைப் பார்த்தால் நிச்சயம் நல்ல மாற்றம் ஏற்படும். ஏற்பட்டது.

  அப்படியே ஒப்புக் கொள்கிறேன் வெங்கட். சில இடங்களூக்கு நாம் போய் வந்தால் அதன் பாதிப்பில் நம்மிடம் விரும்பத்தக்க மாற்றங்கள் வருவது நிச்சயம்.

  ReplyDelete
 9. பயணம் ஒரு போதி மரம் தானே...நல்ல பகிர்தல் வெங்கட்...

  ReplyDelete
 10. பயனுள்ள பயணமாகவும்
  பயனுள்ள பதிவாகவும்
  அமைந்து குறித்து மிக்க மகிழ்ச்சி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. @ துளசி கோபால்: நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. ஒரு குழந்தையிடம் பேசி விட்டு அடுத்த குழந்தையிடம் பேசவில்லை எனில் கூட அவர்களுக்கு வருத்தமாகிவிடும். அதனால் பதில் கிடைத்ததோ இல்லையோ எல்லோருடனும் பேசினோம். தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி டீச்சர்.

  ReplyDelete
 12. # வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது முக்கிய வேலைகளுக்கு நடுவிலும் எனது வலைப்பக்கம் வந்து தங்களது இனிய கருத்தினைச் சொன்னதற்கு மிக்க நன்றி சார். சுட்டிப் பையர் என்ன சொல்கிறார் தாத்தாவிடம்... :)

  ReplyDelete
 13. @ பத்மநாபன்: எங்களது பயணத்தின் முக்கியமான அங்கம் என்னைப் பொறுத்த வரை இந்த ஒன்று தான். ஆனாலும் மற்றவையும் முக்கியமானவை. மனதில் திருப்தி தந்தது இது ஒன்றே.

  தங்களது தொடர்ந்த வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 14. # ஈஸ்வரன்: நம்பிக்கை வெளிச்சம் தரும் நந்தா விளக்குகள் இவர்கள்.... எத்தனை உண்மையான வார்த்தைகள் அண்ணாச்சி.

  தங்களது தொடர்ந்த வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 15. @ RVS: வாருங்கள் மைனரே. வேலை எல்லாம் எப்படிப் போய்க் கொண்டு இருக்கிறது.

  கடவுளர்களின் குழந்தைகள்.... உண்மை.

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மன்னை மைனரே....

  ReplyDelete
 16. # அமைதிச் சாரல்: அங்கு சென்றதில் மனதிற்கு அமைதி. எங்களால் முடிந்த உதவி செய்ததில் அதிக நிம்மதியும்.

  தங்களது தொடர்ந்த வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 17. @ முத்துலெட்சுமி: “வெளிச்சம் பரவட்டும்...” அதானே... பரவும் வெளிச்சம் எவ்வளவு அழகு...

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 18. # லக்ஷ்மி: நிச்சயம் அம்மா. வாய்ப்பு கிடைக்கும் என எதிர் பார்க்காமல், நாமாகவே வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. பார்ப்போம்.

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா.

  ReplyDelete
 19. @ ரிஷபன்: நாம் பார்க்கும் பல இடங்களில்/மனிதர்களில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக் கொண்டால் வாழ்வு என்றும் இனிக்கும் என நினைக்கிறேன் நான் தங்களது இனிய கருத்தும் அதை ஒத்துப் போகிறது சார்.

  தங்களது இனிய கருத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

  ReplyDelete
 20. # Reverie: பயணம் ஒரு போதி மரம்.... உண்மை நண்பரே.

  தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 21. @ ரமணி: வாழ்த்திய தங்களுக்கு எனது நன்றி.

  ReplyDelete
 22. # அன்புடன் அருணா: பூங்கொத்து... அட அழகாய் இருக்கே, பலப்பல மலர்களுடன்... :) மிக்க நன்றி சகோ..

  ReplyDelete
 23. Thanks for your valuable information. I can also plan to visit the place.

  ReplyDelete
 24. // இந்த இடத்திற்குச் சென்ற பிறகு மனதிலே ஒரு அழுத்தம். வாழ்வில் நாம் சந்திக்கும் சிறிய பிரச்சனைகளுக்கே துவண்டு போகும் நமக்கு, இவர்களைப் பார்க்கும்போது நமது பிரச்சனையெல்லாம் ஒன்றுமே இல்லை என்ற எண்ணம் நிச்சயம் தோன்றும்… எனக்குத் தோன்றியது. //

  100 % True..

  Thanks for sharing..

  ReplyDelete
 25. @ Chandru: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 26. @ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: உங்களது தொடர்ந்த ஆதரவிற்கு மிக்க நன்றி நண்பரே....

  ReplyDelete
 27. //வாழ்வில் நாம் சந்திக்கும் சிறிய பிரச்சனைகளுக்கே துவண்டு போகும் நமக்கு, இவர்களைப் பார்க்கும்போது நமது பிரச்சனையெல்லாம் ஒன்றுமே இல்லை என்ற எண்ணம் நிச்சயம் தோன்றும்//

  உள்வேளிச்சம்...

  ReplyDelete
 28. //ஒவ்வொரு குழந்தைகளுக்குள்ளும்தான் எத்தனை எத்தனை திறமைகள்?//
  ஆம்! வியக்க வைக்கின்றனர்!

  ReplyDelete
 29. மனிதம் எங்கே வெளிப்படும் என்பதைச் சொல்லவே முடியாது. roshni நல்ல இயக்கம் போலிருக்கிறது.

  ReplyDelete
 30. # கலாநேசன்: உள் வெளிச்சம்... நல்ல கருத்து நண்பரே. தங்களது தொடர் வருகைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சரவணன்.

  ReplyDelete
 31. @ கே.பி. ஜனா: நிச்சயமாய் எங்களை வியக்க வைத்தனர் அச்சிறுவர்கள். அதிலும் அதுல் என்கிற அச்சிறுவன் எங்களைப் பார்த்து புன்னகைத்தபடியே தனது வேலையில் கவனமாய் இருந்தது வியப்பாய் இருந்தது. பொதுவாய் யாராவது கதவைத் திறந்தாலே வேலையை விட்டு யார் வருகிறார் என பார்க்கும் அலுவலகத்தினரை பார்த்துவிட்டு இச்சிறுவனைப் பார்க்கும்போது.....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 32. # அப்பாதுரை: நல்ல இயக்கமாகத்தான் தெரிந்தது. ராமகிருஷ்ணா மிஷன் நடத்துகிறது.

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 33. ஒரு நல்ல இடம் பற்றிய நல்ல பதிவுக்கு நன்றி!

  ReplyDelete
 34. வாழ்வில் நாம் சந்திக்கும் சிறிய பிரச்சனைகளுக்கே துவண்டு போகும் நமக்கு, இவர்களைப் பார்க்கும்போது நமது பிரச்சனையெல்லாம் ஒன்றுமே இல்லை என்ற எண்ணம் நிச்சயம் தோன்றும்… எனக்குத் தோன்றியது./

  நெகிழ வைத்த வரிகள்.

  ReplyDelete
 35. ட்ரிங்.... ட்ரிங்.....ராங் நம்பரா...?

  ReplyDelete
 36. @ வேங்கட ஸ்ரீனிவாசன்: கருத்தும் நன்று :)

  ReplyDelete
 37. # சென்னை பித்தன்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 38. @ இராஜராஜேஸ்வரி: வரிகள் உங்களை நெகிழ வைத்தது. மொத்தத்தில் அந்த வளாகத்தில் சென்றதே என்னை மிகவும் நெகிழ்த்தியது....

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 39. # Reverie: பிளாக்கர் அவ்வப்போது இப்படித்தான் ராங் நம்பர் டயல் செய்து விடுகிறது நண்பரே. எப்படி சரி செய்வது என்பது தான் விளங்கவில்லை... :)

  ReplyDelete
 40. அருமை. அவசியம் தொடருங்கள். அனைவரும் ரசிக்கவும், பயன் பெறவும் இத்தகைய பயண கட்டுரைகள் உதவும்

  ReplyDelete
 41. பயணம் நமக்கு வாழ்க்கையில் நிறைய விஷயம் கற்று தருகிறது,
  /// மேலும் பொறுமை இல்லாத என்னைப் போன்ற சிலருக்கு இந்த இடத்தில் பணிபுரியும் நண்பர்களைப் பார்த்தால் நிச்சயம் நல்ல மாற்றம் ஏற்படும். ஏற்பட்டது.///
  வாழ்த்துக்கள் வெங்கட்.

  ReplyDelete
 42. @ மோகன் குமார்: நன்றி மோகன். நிச்சயம் தொடருகிறேன். நிறைய பகுதிகள் வரும் என நினைக்கிறேன். பார்க்கலாம்....

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 43. # ராம்வி: பயணம் நமக்கு வாழ்க்கையில் நிறைய விஷயம் கற்றுத் தருகிறது... நூற்றுக்கு நூறு உண்மை..

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 44. //இந்த இடத்திற்குச் சென்ற பிறகு மனதிலே ஒரு அழுத்தம். வாழ்வில் நாம் சந்திக்கும் சிறிய பிரச்சனைகளுக்கே துவண்டு போகும் நமக்கு, இவர்களைப் பார்க்கும்போது நமது பிரச்சனையெல்லாம் ஒன்றுமே இல்லை என்ற எண்ணம் நிச்சயம் தோன்றும்… எனக்குத் தோன்றியது.//

  கடவுளின் குழந்தைகள் என்று அழைக்கபடும் இந்த குழந்தைகளைப் பார்க்கும் போது நீங்கள் சொல்வது நிச்சியம் மனதில் தோன்றும் வெங்கட்.

  அவர்களின் வாழ்க்கையில் வெளிச்சம் பரவி வாழ்வில் எல்லா நலங்களும் வளங்களும் பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 45. @ கோமதி அரசு: கடவுளின் குழந்தைகள் நிச்சயம் அவர்கள்தான்..

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா...

  ReplyDelete
 46. ரோஷ்னி பற்றிய தகவல்கள் அருமை. குழந்தைகள் பாவம். என்றாலும் அவர்களுக்கும் உலகம் விரிந்து பரந்து வரவேற்புக் கொடுப்பது சந்தோஷமாகவே இருக்கிறது. எல்லாம் நன்றாக இருக்கும் நாமெல்லாம் இதைப் பார்க்கையில் ஒண்ணுமே இல்லை. வெட்கமாக இருக்கிறது.

  Mrignaini”ம்ருகநயனி பெயரைப் பார்த்ததும் ம்ருக நயனி சீரியல் நினைப்பு வந்ததைத் தவிர்க்க முடியலை. பல்லவி ஜோஷி தான் ம்ருகநயனியாக நடித்திருப்பார். தியேட்டர் ஆர்டிஸ்ட். தூர்தர்ஷனில் மெகாதொடராக வந்தது.

  ReplyDelete
 47. Replies
  1. தொடர்ந்து வருவதற்கு மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 48. // குழந்தைகள் பாவம். என்றாலும் அவர்களுக்கும் உலகம் விரிந்து பரந்து வரவேற்புக் கொடுப்பது சந்தோஷமாகவே இருக்கிறது. எல்லாம் நன்றாக இருக்கும் நாமெல்லாம் இதைப் பார்க்கையில் ஒண்ணுமே இல்லை. வெட்கமாக இருக்கிறது.//

  நமக்கிருக்கும் பிரச்சனைகள் எதுவுமே பெரிதல்ல என்பது இங்கே சென்றபோது உணரமுடிந்தது....

  மிருக்நயனி தொடர் நானும் பார்த்ததுண்டு. நல்ல தொடர்....

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....