எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, February 23, 2012

கண்கள் இருண்டால்…

”கண்கள் இருண்டால்” என எழுதியிருப்பதைப் பார்த்துவிட்டு, சுப்ரமணியபுரம் படத்தில் வந்த பாடலைத் தப்பாக எழுதி இருப்பதாக நினைக்க வேண்டாம் நண்பர்களே.  கண்கள் இருண்டால் நம்மால் எந்த காட்சிகளையும் பார்க்க முடியாது அல்லவா…  நல்ல கண் பார்வை கொண்ட நமக்கு எப்போதாவது கண்வலியோ அல்லது ”மெட்ராஸ் ஐ” எனும் Conjuctivities வந்தாலோ எவ்வளவு திண்டாடிவிடுகிறோம்.  எப்போதாவது என்றாலே இப்படியென்றால் நிரந்தரமாக கண் தெரியாதவர்களாய் இருந்தால் எவ்வளவு கடினம் என்பதை யோசித்துப் பாருங்கள்.

கடந்த 19.02.2012 அன்று அப்படி ஒரு சில குழந்தைகளைப் பார்க்க முடிந்தது.  புது தில்லி “கோல் மார்க்கெட்” பகுதியில் உள்ள ”ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்த்ஸங்க”த்தின் 24-ஆவது ஆண்டு விழா ஃபிப்ரவரி மாதம் 18-19 தேதிகளில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.  அதன் ஒரு பகுதியாக தில்லி பஞ்ச்குயான் சாலையில் உள்ள Institution for Blind என்ற இடத்தில் இருக்கும் கண் பார்வையற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்க ஸத்ஸங்கத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.  காலை 07.30 மணி அளவில் நானும் நண்பர் திரு விஜயராகவன் அவர்களும் அந்த இடத்திற்குச் சென்றோம்.

அப்போது காலை உணவாக ஆலு பராட்டா மற்றும் தேநீர் தயாராகிக் கொண்டு இருந்தது.  இரு பணியாளர்கள் இருந்தனர்.  ஒருவர் பராட்டா தேய்த்துக் கொடுத்தபடியே தேநீர் தயாரிக்க மற்றவர் பெரிய இரும்புக்கல்லில் ஒரு  குழந்தைக்கு இரண்டு பராட்டா வீதம் பராட்டாவினை தயாரித்துக் கொண்டிருந்தார்.  

சுமார் ஐம்பது குழந்தைகள் இங்கே தங்கி படிக்கின்றனர்.  நாங்கள் சென்றவுடன், “மணி அடிக்கலாமா?” என்று கேட்டார் பராட்டா தயாரித்தவர்.  மணி அடித்தவுடன் ஒவ்வொரு குழந்தையாக படியேறி உணவுக்கூடத்திற்கு வந்து வரிசையாக அமர்ந்தனர்.  வரும்போதே “[Cha]சாச்[Cha]சா பராட்டா தேதோ, [Cha]சாய் தேதோ” என்று கேட்டபடியே வந்தனர். 

ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தட்டில் போட்டு வைத்திருந்த பராட்டாக்களையும், ஒரு பிஸ்கெட் பாக்கெட்டினையும், தேநீரையும் நாங்களே கொடுத்தோம். மனது முழுக்க ஒரு வித அழுத்தம் அவர்கள் உணவு உட்கொள்ளும்போது.  தேவையோ இல்லையோ, தட்டில் வாங்கிக்கொண்டு வீணாக்கும் சிலரைப் போல இல்லாமல், சில குழந்தைகள் தாங்களாகவே சாப்பிடும் முன்னரே, ஒரு பராட்டா போதும், இன்னொன்றை எடுத்து விடுங்கள் எனச் சொன்னது அச்சிலரை சம்மட்டியால் அடிப்பது போல இருந்தது. 

அத்தனை குழந்தைகளும் காலை உணவு உட்கொள்ளும் வரை இருந்துவிட்டு பிறகு அந்த இடத்திலிருந்து கிளம்பினோம். அவ்வப்போது இங்கு வந்து குழந்தைகளுக்கு உணவோ, மற்ற உதவிகளோ செய்ய வேண்டும் என்ற எண்ணம் அப்போது மனதில் ஆழமாகப் பதிந்தது.  வீட்டில் வந்து சொன்னபோது அதையே எனது துணைவியும் சொன்னார் – மகளின் ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும் அவர்களுக்கு உணவு கொடுக்கலாம் என.

கண் இருந்தும் குருடர்களாய் நடமாடும் மக்கள் மத்தியில் இருந்திருந்து நாமும் பல விஷயங்களை உணர மறுக்கிறோம்.  கண் தானம் பற்றி முன்பொரு முறை பார்த்த காணொளியும் நினைவுக்கு வருகிறது. வார்த்தைகள் சொல்லாததை இந்த காணொளி மிக அழகாய் சொல்லிப் போகிறது.  நீங்களும் பாருங்களேன்…இந்த காணொளியைத் தேடும்போது இன்னும் சில காணொளிகளும் கிடைத்தது.  அவற்றையும் பாருங்களேன்.
இந்த காணொளி சற்றே மங்கலாக இருந்தாலும் பாருங்கள்.


மீண்டும் சந்திப்போம்….


நட்புடன்


வெங்கட்
புதுதில்லி.

53 comments:

 1. அவ்வப்போது இங்கு வந்து குழந்தைகளுக்கு உணவோ,மற்ற உதவிகளோ செய்ய வேண்டும் என்ற எண்ணம் அப்போது மனதில் ஆழமாகப் பதிந்தது.

  நாங்களும் பலமுறை செய்து நிறைவை உணர்ந்திருக்கிரோம்..

  ReplyDelete
 2. ஒரு பராட்டா போதும், இன்னொன்றை எடுத்து விடுங்கள் எனச் சொன்னது அச்சிலரை சம்மட்டியால் அடிப்பது போல இருந்தது.//

  கனமான உணர்வுப் பகிர்வுகள்..

  ReplyDelete
 3. இப்படி சேவை இல்லங்களுக்குச் செல்லும்போது உண்டாகும் மனநிறைவு அதிகம்தான். ஆனால்..... இவுங்க இந்த நிலையிலும் எவ்வளவு சந்தோஷமாக இருக்காங்கன்னு பார்த்தால்.... நம்மேல் நமக்கே கோவமா இருக்கும். நான் எத்தனையோ முறை என்னை வெகு அல்ப்பமா உணர்ந்திருக்கேன்:(

  தினம் தினம் ஆலு பைங்கன் சாப்பாடு போடும் ஒரு இல்லத்தில் பசங்க ஃபிர் ஸே ஆலூ பைங்கன் பாபா ஃபிர் ஸே ஆலூ பைங்கன்ன்னு பாடுவது நினைவுக்கு வருது.

  படத்தின் பெயர் 'ஸ்பர்ஷ்' ன்னு நினைக்கிறேன்.

  பதிவு அருமை. இருக்கும்போது நமக்கு இதன் அருனை தெரிவதில்லை:(

  ReplyDelete
 4. oops..... அருமைன்னு வாசிக்கணும்.

  கீ போர்டுலே எழுத்தெல்லாம் தேய்ஞ்சு போச்சு.ஒரு 'குன்ஸா' தட்டச்சு செய்றேன்:-)

  ReplyDelete
 5. @ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் அருமையான கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 6. @ துளசி கோபால்: // இவுங்க இந்த நிலையிலும் எவ்வளவு சந்தோஷமாக இருக்காங்கன்னு பார்த்தால்....// உண்மை....

  //பதிவு அருமை. இருக்கும்போது நமக்கு இதன் அருனை தெரிவதில்லை:(// இருப்பதன் அருமை எப்போதும் தெரிவதில்லை - மிக மிக நிதர்சனம்...

  //கீ போர்டுலே எழுத்தெல்லாம் தேய்ஞ்சு போச்சு.ஒரு 'குன்ஸா' தட்டச்சு செய்றேன்:-)//


  அருமை என்றே படித்தேன்.. :))

  ReplyDelete
 7. கண்ணான பதிவு வெங்கட்.

  முதல் காணொளியில் அந்த பையன் கண்ணைக்கொடுக்கறீங்களா? என்று கேட்கும் போது மனது கலங்கிவிட்டது.

  ReplyDelete
 8. //ஒரு பராட்டா போதும், இன்னொன்றை எடுத்து விடுங்கள் எனச் சொன்னது அச்சிலரை சம்மட்டியால் அடிப்பது போல இருந்தது.//

  படிக்கும் போதே மிகவும் மனதுக்கு வேதனையாக இருந்தது. நல்லதொரு விழிப்புணர்வு அளிக்கும் பதிவு.

  கண்ணிருந்தும் சிலர் அறியாதவற்றை, இவர்களைப்போய் பார்ப்பதன் மூலமே கற்க வேண்டியதாக உள்ளது.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 9. உதவும் மனப்பான்மை கொண்ட உஙகள் இருவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். நானும் ஒருநாள் கண்களை மூடிக் கொண்டு வீட்டில் நடந்து பார்த்தேன். (யாருமில்லாத போதுதான்) அப்போதுதான் பார்வையற்றவர்களின் அருமை புரிந்தது. நீங்கள் வைத்திருக்கும் காணொளிக்ள் இன்னும் நன்கு உணர்த்தின. நற்சிந்தனையை விதைத்த பதிவு நன்று நண்பரே...

  ReplyDelete
 10. மனதை துளைத்த பதிவு வாழ்த்துகள்

  ReplyDelete
 11. மனதை கனமாக்கி நெகிழ வைத்த பதிவு! ஒவ்வொரு முறையும் இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது, அது முதியோர் இல்லமாக இருந்தாலும் சரி, குழந்தைகள் இல்லமாக இருந்தாலும் சரி, மனதை கனமாக்கி விடுகிறது அவர்களுடன் சில மணித்துளிகள் மட்டுமே பழகினாலும்.

  ReplyDelete
 12. காணொளிகள் அதன் அர்த்தம் வலிமையாய் உணர்த்தின.

  ReplyDelete
 13. @ ராம்வி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமா ரவி....

  ReplyDelete
 14. @ வை. கோபாலகிருஷ்ணன்: //கண்ணிருந்தும் சிலர் அறியாதவற்றை, இவர்களைப்போய் பார்ப்பதன் மூலமே கற்க வேண்டியதாக உள்ளது.//

  ஆமாம்.... கற்க வேண்டிய விஷயம் எல்லா இடங்களிலும் இருக்கிறது....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி...

  ReplyDelete
 15. @ கணேஷ்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

  ReplyDelete
 16. @ தனசேகரன். எஸ்.: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனசேகரன்....

  ReplyDelete
 17. @ மனோ சாமிநாதன்: //முதியோர் இல்லமாக இருந்தாலும் சரி, குழந்தைகள் இல்லமாக இருந்தாலும் சரி, மனதை கனமாக்கி விடுகிறது அவர்களுடன் சில மணித்துளிகள் மட்டுமே பழகினாலும்.// நிதர்சனமான உண்மை... மனதை கனமாக்கினாலும் சில விஷயங்களையும் கற்றுக் கொள்ள முடிகிறது.....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 18. @ ரிஷபன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 19. Good point.. if we happend to read such.. eventually we will certainly do some help to this kind of people..
  --
  Motivating post.. thanks for sharing

  ReplyDelete
 20. அவ்வப்போது இங்கு வந்து குழந்தைகளுக்கு உணவோ,மற்ற உதவிகளோ செய்ய வேண்டும் என்ற எண்ணம் அப்போது மனதில் ஆழமாகப் பதிந்தது.

  நம்மால் அங்குபோய் சேவை செய்து உதவ முடியாவிட்டாலும் நம்மால் இயன்ற பொருள் உதவியோ பண உதவியோ செய்து வரலாம்னு தோனுது.

  ReplyDelete
 21. கண்கள் குளமானது என்பது கிளிஷே ஆனாலும் அது தான் உண்மை!

  ReplyDelete
 22. @ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: நிச்சயம் உதவி செய்ய வேண்டும்.... தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதவன்.

  ReplyDelete
 23. @ லக்ஷ்மி: உங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா....

  ReplyDelete
 24. @ பந்து: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே....

  ReplyDelete
 25. அவர்கள் உணவு உட்கொள்ளும்போது. தேவையோ இல்லையோ, தட்டில் வாங்கிக்கொண்டு வீணாக்கும் சிலரைப் போல இல்லாமல், சில குழந்தைகள் தாங்களாகவே சாப்பிடும் முன்னரே, ஒரு பராட்டா போதும், இன்னொன்றை எடுத்து விடுங்கள் எனச் சொன்னது அச்சிலரை சம்மட்டியால் அடிப்பது போல இருந்தது.

  -உண்மையான வரிகள்! உணர்வுபூர்வமான,
  மனதை நெகிழ வைத்த பதிவு!

  அகக்கண் திறப்பவர்கள்!
  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
 26. பதிவு ஒருபக்கம் துளசியின் கமெண்ட் ஒரு பக்கம்..ம்..
  அருமை..தொடருங்கள்

  ReplyDelete
 27. நல்ல சமூக சிந்தனையுடன் ஒரு பதிவு. வாழ்க! வாழ்க.

  ReplyDelete
 28. மகளின் ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும் அவர்களுக்கு உணவு கொடுக்கலாம் என.//

  நல்ல முடிவு, மனதுக்கு நிறைவு கிடைக்கும் வெங்கட்.

  சில குழந்தைகள் தாங்களாகவே சாப்பிடும் முன்னரே, ஒரு பராட்டா போதும், இன்னொன்றை எடுத்து விடுங்கள் எனச் சொன்னது அச்சிலரை சம்மட்டியால் அடிப்பது போல இருந்தது. //

  உணவை வீணக்காமல் உண்ணும் அவர்களின் நல்ல உள்ளம் பாராட்டப் படவேண்டியது தான்.

  கண் தானத்திற்கு நானும் என் கணவரும் பதிவு செய்து வைத்து இருக்கிறோம்.

  ReplyDelete
 29. @ சேஷாத்ரி.ஈ.எஸ்.: //அகக்கண் திறப்பவர்கள்///... அருமையான வார்த்தைப் பிரயோகம் நண்பரே...

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....

  ReplyDelete
 30. @ முத்துலெட்சுமி: //பதிவு ஒருபக்கம் துளசியின் கமெண்ட் ஒரு பக்கம்..ம்..// ம்ம்..... :)))

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி....

  ReplyDelete
 31. @ ஈஸ்வரன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணாச்சி....

  ReplyDelete
 32. @ கோமதி அரசு: //உணவை வீணக்காமல் உண்ணும் அவர்களின் நல்ல உள்ளம் பாராட்டப் படவேண்டியது தான்.// ஆமாம்.....

  நாங்களும் பதிவு செய்திருக்கிறோம் அம்மா....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிம்மா...

  ReplyDelete
 33. மனதைத் தொட்ட பதிவு.நெகிழ வைத்த காணொளி.

  ReplyDelete
 34. @ சென்னை பித்தன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா....

  ReplyDelete
 35. இருக்கும்போது நமக்கு இதன் அருமை தெரிவதில்லை...வாழ்த்துக்கள்

  ReplyDelete
 36. @ ரெவெரி: //இருக்கும்போது நமக்கு இதன் அருமை தெரிவதில்லை...// ஆமாம் நண்பரே....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 37. நல்ல பகிர்வு,வீடியோ கிளிப்பிங்கை பார்த்து மேலும் வருத்தப்பட விரும்பவில்லை.பிறகு பார்க்கிறேன்.

  ReplyDelete
 38. @ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆச்சி...

  ReplyDelete
 39. உன்னதமான இலக்குகளை மனதில் சுமக்கும் இடுகை.உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் வாழ்த்துக்கள்.

  வீடியோக்கள் ஒவ்வொன்றும் நெஞ்சில் தைத்த கவிதைகள். பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

  ReplyDelete
 40. @ சுந்தர்ஜி: //வீடியோக்கள் ஒவ்வொன்றும் நெஞ்சில் தைத்த கவிதைகள். // நெஞ்சில் தைத்த கவிதை... உண்மை ஜி.

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 41. மனம் வலிக்கிறது நண்பரே!
  சா இராமாநுசம்

  ReplyDelete
 42. @ புலவர் சா இராமாநுசம்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவரே....

  ReplyDelete
 43. வெங்கட்ஜி, விடியோ பதிவுகள் பார்த்து கண்களில் நீர் கசிந்தது. ஆம், நம்மிடம் இருக்கும் பொருளின் அருமை நமக்கு தெரிவதில்லை.

  ReplyDelete
 44. மனம் நிறைந்த பதிவு. இதயம் கனக்கிறது. இப்படி எத்தனையோ ஜீவன்கள் தேவையில் உள்ளபோது நாம் சீரியல்களில் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறோம். அருமையான பகிர்வுக்கு நன்றி சார்.

  ReplyDelete
 45. @ லதா விஜயராகவன்: உங்களது முதல் வருகைக்கு நன்றி லதாஜி! நிழலின் அருமை வெய்யிலில் தெரியும் என்பது எவ்வளவு பொருத்தம்.....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 46. @ துரைடேனியல்: //இப்படி எத்தனையோ ஜீவன்கள் தேவையில் உள்ளபோது நாம் சீரியல்களில் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறோம்.// உண்மை.. சீரியல்கள் நிறைய பேரின் நல்ல பொழுதினை விழுங்கிக் கொண்டு இருக்கிறது.....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

  ReplyDelete
 47. அவ்வப்போது இங்கு வந்து குழந்தைகளுக்கு உணவோ,மற்ற உதவிகளோ செய்ய வேண்டும் என்ற எண்ணம் அப்போது மனதில் ஆழமாகப் பதிந்தது.
  >>>
  கண்டிப்பாய் செய்ங்க சகோ. அதனால் வரும் இன்பம் கோடி குடுத்தாலும் வராது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவள் நான். அதை பற்றி சொன்னால் விளம்பரம் போல் ஆகிடும். இல்லாதவருக்கு உதவுவோம் என்பதே எங்கள் குடும்பத்தினருக்கு பிடித்தமான ஒன்று

  ReplyDelete
 48. @ ராஜி: //அதனால் வரும் இன்பம் கோடி குடுத்தாலும் வராது //

  உண்மை சகோ.. எனக்கும் இந்த அனுபவம் முன்னரே உண்டு.

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 49. மனம் நிறைந்த பணி.

  இல்லாதோருக்கு உதவுவது மனத்தை நிறைவடையச் செய்யும்.

  தொடரட்டும் உங்கள் பணி.

  ReplyDelete
 50. ஆயிரம் பக்கங்கள் தராத வலியை விட
  இந்தக் காணொளிகள் அதிகம் ஏற்படுத்திப் போகிறது
  மனம் கனக்கச் செய்து போகும் பதிவு
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 51. அன்பு நண்பருக்கு

  இரண்டு வருடங்கள் போனதே தெரியவில்லை. நேற்று நடந்தது போல உள்ளது. ஆனால் டில்லி நண்பர்கள் எவரும் படிக்கவில்லையா? யாருமே எந்த கருத்துமே தெரிவிக்க வில்லையே. பரவாயில்லை எல்லார் சார்பாகவும் உங்களுக்கு வாழ்த்துக்கள். அருமையான பகிர்வு

  Vijay / Delhi

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!.

   ஆமாம் இரண்டு வருடம் ஓடி விட்டது!.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....