எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, December 31, 2009

என்றும் இருபத்தி எட்டுதில்லி வந்த முதல் நாள் என்னை அலுவலகத்திலிருந்து கரோல் பாக் அழைத்துச் சென்றவர் பத்மா. பத்தொன்பது வருடங்கள் கழிந்திருந்தாலும், அன்று எப்படி இருந்தாரோ அப்படியே இன்றளவும் இருக்கிறார். என் மேல் அபரிமிதமான அன்பை பொழிந்து பாசத்தைக் கொட்டும் ஒரு நல்ல உள்ளம்.

பக்த பிரகலாதனுக்கு வயது எப்படி என்றும் பதினாறோ, அது போலவே பத்மாவிற்கு இடுப்பளவு என்றும் இருபத்தி எட்டு. அவரது உடலில் எந்த மாற்றமும் இல்லை. அவர் கல்லூரியில் படித்த காலத்தில் தைத்த உடைகள் இன்றும் அவருக்கு கச்சிதமாக பொருந்துகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! எங்கள் அலுவலகத்தில் அவரைப் பார்த்தால் பொறாமைப் படாதவர்களே கிடையாது!.

நான் அவரை விட சிறியவனாக இருந்தும், அன்று பென்சில் போல இருந்தவன், இன்று தொப்பையும் தொந்தியுமாக காணப்படுகிறேன். அவரோ "அன்று பார்த்த கண்ணுக்கு அழிவில்லாமல் அப்படியே இருக்கிறார்". இத்தனைக்கும் இந்த கால கட்டத்தில் பத்மாவிற்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் பிறந்து, அக்குழந்தையே இன்று எட்டாம் வகுப்பில் படிக்கிறது! . பொதுவாக கல்யாணம் ஆனவர்கள் சந்தோஷத்தில் குண்டாகி விடுவார்கள் என்று சொல்வது போல் இல்லாமல், இப்போதும் அப்படியே இருக்கிறார்.

மற்றவர்கள் பொறாமைப்படும்படியாக இருப்பவர் "உடம்பெல்லாம் அப்படியே இருந்து என்ன பண்றது? தலயிலே இருந்த முடியெல்லாம் கொட்டி 'சொட்டையாகி' விட்டதே!" என்று ஒரேயடியாக கவலைப்படும் பத்மா என்று எங்களால் செல்லமாக அழைக்கப்படும் பத்மநாபன் அண்ணாச்சியை என்னத்தைச் சொல்லி தேற்றுவது?

அதனால் தான் என்னுடைய முந்தைய பதிவான மஞ்சள் மகிமை-க்கு அவர் பின்னூட்டம் இப்படி போட்டுள்ளார்!

"அண்ணாச்சி! இந்த Fevicol - ஐ தலையில் தேய்க்க முடியுமான்னு ஒண்ணு கேட்டு சொல்லுதேளா! நமக்கும் தலையில முடி முளைச்ச மாதிரி ஆச்சுல்லா!"

5 comments:

 1. பத்மான்னதும் நான் கூட பெண்ணைப் பத்தி என்ன சொல்லறாருன்னு ஆசை ஆசையா படிச்சுட்டே வந்தேனா கடைசியில்தான் தெரிந்தது அது பத்மநாபன் அண்ணாச்சின்னு. நல்லாவே எமாத்திபுட்டீறு நீரு.

  ரேகா ராகவன்.

  ReplyDelete
 2. கடொசில ஒரு க்விஸ் வப்பனு தெரியும் மச்சி.. அதான் உஷாலா படிச்சேன்.. ஸும்மா ஸொல்லக் கூடாது.. தெறமயா ஏமாத்தறப்பா.. (ஸ்லாங் பிரயோகத்தை ஜாலியா எடுத்துப்பீங்கதான?!)

  ReplyDelete
 3. Ennaimadhiri "Jollu", Mamakkalaiyellam Nanraaga Ematri, Pudhu Varudamum adhuvamaa, vaitrerichalai kottik kondadharku Nanri.

  Mandaveli Natarajan.

  ReplyDelete
 4. நம்மளப் பத்தி நல்லதாத்தான் எழுதி இருக்காரு போல! எதுக்கும் ஒரு தேங்க்ஸ்- ஐ போட்டு வைப்போம்!

  ஆமா! எதுக்கு அந்த பொம்பளப்புள்ள தொப்புளப் போட்டோ புடிச்சு போட்டுருக்காருன்னு தெரியல்லியே? ஒருவேளை நம்ம பேருலயே தொப்புள் இருக்கிறதாலேயோ! ஒண்ணும் புரியலையே?

  ஒருவேளை இது வஞ்சப்புகழ்ச்சி மாதிரி கஞ்சா (இது ஹிந்தி கஞ்சாப்பா) புகழ்ச்சியோ!

  நடக்கட்டும்! நடக்கட்டும்!

  ஏதோ நம்மள ரொம்ப நல்லவன்னு வேற சொல்லிப் போட்டாரு! Maintain வேற பண்ணியாகணும்? பார்ப்போம்!

  ஆனாலும் அந்த பொம்பளப்புள்ள தொப்புள் நல்லாத்தான் இருக்கு! நாளைக்கு கேப்டன்-ஐ பார்த்து பம்பரம் கடன் வாங்கிட்டு வரணும்.

  ReplyDelete
 5. வெங்கட் ஏமாத்திட்டீங்களே

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....