வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

இவரும் அவரும்"என்னது, நம்ம கட்சி கொடிய ஒருத்தன் வெட்டி சாய்ச்சுட்டானா?, அவன சும்மாவா விட்டீங்க?" கோபமாக கேட்டார் ம.மு.க.மு கட்சியின் நகரத்தலைவர் பூபாளன்.

"இல்ல தலீவரே, ராத்திரி தூக்கம் வரல, சரி கட்சி போஸ்டர் ஊர் பூரா ஒட்டி இருக்கான்னு பார்க்க வெளிய வந்தா இவன் நம்ம கொடிய... அதான் ரெண்டு தட்டு தட்டி அவன உங்க கிட்ட கூட்டிட்டு வந்தேன்," என்றான் எடுபிடி ஏகாம்பரம்.

விட்டத்தை வெறித்தபடி உட்கார்ந்திருந்தவனை பார்த்தார் பூபாளன். சவரம் செய்யப்படாத முகம், தாடிக்குள் புதைந்திருந்த உதடு கிழிந்து ரத்தம் காய்ந்து இருந்தது. காதின் மேல் பாதியில் அணைத்த பீடித்துண்டு. முகத்தில் ஒரு வித சலனமும் இல்லை.

"யாரடா நீ, எங்க கட்சி கொடியை சாய்க்கச் சொல்லி உன்னை யார் அனுப்பினா சொல்லு, எதிர்க்கட்சி சுந்தரேசனா?" என்றார் பூபாளன். அவனிடம் இருந்து பதில் ஒன்றும் இல்லை. "தலைவர் கேட்கிறார் இல்ல சொல்லுடா" திரும்பவும் அடிக்க போனான் ஏகாம்பரம். அவனை தடுத்த பூபாளன், "விடுடா, நாளைக்கி காலையில் பார்த்துக்கலாம்" என்று உள்ளே போனார். ஏகாம்பரம் போகுமுன் அவன் தலையில் கட்டையால் நாலு அடி அடித்துப் போனான்.

அதிகாலையிலே தெருவோரத்தில் அசைவின்றி கிடந்தான் அவன். விஷயம் ஊருக்குள் தீ போல பரவியது. தேர்தல் பத்து நாட்கள் இருக்கின்ற நிலையிலே கட்சி தோத்துடுமோ என்ற கவலையில் இருந்த சுந்தரேசன் யோசித்தார்.

உடனே கூட்டம் போட்டு "பாருங்க, ராத்திரியில் கட்சி அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு போயிட்டு இருந்த எங்க கட்சி உறுப்பினரை அடிச்சு கொன்னு இப்படி அனாதைப் பிணமாக போட்டுடாங்களே!, தேர்தல்ல ஜெயிக்கறதுக்கு இப்படியா பண்ணுவாங்க, எங்களை கேட்டிருந்தா நாங்களே விட்டுக் கொடுத்து இருப்போமே?"

ஊரெங்கும் இதே பேச்சு. பூபாளன் கட்சி ஆளுங்க சுந்தரேசன் கட்சி ஆளை கொன்னுட்டான், இவனுக்கு ஓட்டு போட்டா அவ்வளவு தான், ஒரே ரவுடி ராஜ்ஜியம் தான்.

சுந்தரேசன் கட்சி பெரும்பான்மையான ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்து இருந்தது.

11 கருத்துகள்:

 1. ஒரு பக்கக் கதையில் தூள் கிளப்பறீங்க!

  ரேகா ராகவன்.

  பதிலளிநீக்கு
 2. தொண்டன் யானை மாதிரி போல. இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும்...

  பதிலளிநீக்கு
 3. இவரும் அவரும் .. சரி
  அவன் நிலைமை இப்படி ஆகிடுச்சே..

  பதிலளிநீக்கு
 4. உள்ளத சொல்லிட்டீங்க... வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 5. "பாதகங்களை தனக்கு சாதகமாக ஆக்கிக்கொள்ள ஒரு தனித்திறமையும், மேலும் ஒரு கற்பூர புத்தியும் வேண்டும் என்பதை மிகவும் நாசூக்காக சொல்லியிருக்கிறீர்கள். வாழ்க, வளர்க .


  மந்தவெளி நடராஜன்.

  பதிலளிநீக்கு
 6. இதுதான் அரசியல்வாதியின்
  மூல(ளை)தனம்!

  பதிலளிநீக்கு
 7. ஒண்ணுமே புரியலே அரசியல் உலகத்திலே! கதை நல்லாருக்குங்க. ஆமா, ஏதாவது பத்திரிகைல பிரசுரமானதுங்களா இது? ரொம்ப நல்லாருக்கே, அதுக்காகக் கேட்டேன்.

  பதிலளிநீக்கு
 8. இது தான் இன்றைய யதார்த்தம் போல
  இருக்கிறது! கதை நன்றாக வந்திருக்கிறது.. பாராட்டுக்கள்!!

  பதிலளிநீக்கு
 9. nalla kadhai. idhepola innum niraya eludhungal.

  Find my scribbling at:

  http://encounter-ekambaram-ips.blogspot.com/

  keep blogging

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....