வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

ஃப்ரூட் சாலட் – 125 – பள்ளி பைகளில் விளக்கு – தௌஸ் - தில்ருபா - நிதானம்



இந்த வார செய்தி:


தலைநகர் தில்லியில் இருக்கும் குழந்தைகளில் 15 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் குடிசைகளில் வாழ்கிறார்கள்.  அங்கே மின்சார இணைப்புகள் இல்லாதது குழந்தைகள் படிப்பறிவு பெறுவதில் ஒரு முக்கிய தடையாக இருக்கிறது. பள்ளிகளில் படித்தாலும், இரவு நேரத்தில் வீட்டில் படிக்க முடியாததாலேயே வகுப்பில் தேர்ச்சி பெற முடியாது பள்ளிப்படிப்பை பல குழந்தைகள் விட்டு விடுகின்றனர். 

இதற்கு என்ன செய்யலாம் என்று “மாத்தி யோசித்திருக்கிறார் அனுஷீலா சாஹா. குழந்தைகள் பள்ளிக்கு எடுத்துச் செல்லும் பைகளையே இரவு நேரங்களில் வெளிச்சம் தரப் பயன்படுத்தினால்... அவர்களும் படிப்பறிவு பெறுவார்களே என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது.  அந்த எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்க உருவாகியிருக்கிறது – LIGHT BAG.

குழந்தைகள் பள்ளிக்கு எடுத்துச் செல்லும் பைகளில் SOLAR PANEL-களைப் பொருத்திவிட்டார்கள்.  பள்ளிக்கு பைகளை எடுத்துச் செல்லும் போது அவை முழுவதும் CHARGE-ஆகிவிடும்.  பெரும்பாலும் பள்ளிகளும் திறந்தவெளி பள்ளிகள் என்பதால் சுலபமாக முழுவதும் CHARGE–ஆகிவிடும். பின்னர் இரவு நேரத்தில் வீட்டுக்குச் சென்ற பின் பைகளில் இணைத்திருக்கும் LED LIGHTS மூலம் குழந்தைகள் நிம்மதியாக வீட்டுப் பாடம் படிப்பதும், எழுதுவதும் சுலபமானது. 

இந்த LIGHT BAG தயாரிக்க Salaam Balak Trust எனும் தொண்டு நிறுவனமும் உதவி செய்ய இப்போது முதல் கட்டமாக 30 குழந்தைகளுக்கு இந்த பைகள் வழங்கப்பட்டுள்ளன.  மேலும் பலரின் உதவியோடு பைகள் தொடர்ந்து விநியோகிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.  இந்த பைகள் கொடுத்த பிறகு அக்குழந்தைகள் வீட்டுப் பாடம் செய்வதிலும் அதிக ஈடுபாடு காட்டுவதை உணர முடிகிறது என்கிறார் அனுஷீலா. 

குடிசைகளில் வாழும் ஏழைக் குழந்தைகளுக்கும் கல்விக் கண்களை திறந்து அவர்கள் மேலும் படிக்க ஏதுவாய் இப்படி ஒரு உதவியைச் செய்யும் அனுஷீலா மற்றும் அவரது குழுவினருக்கு இந்த வாரப் பூங்கொத்து!

முழு செய்தியும் படிக்க: http://www.thebetterindia.com/19142/school-bag-also-serves-study-lamp-delhis-slum-kids/



இந்த வார முகப்புத்தக இற்றை:

உன் புன்னகையால் உலகை மாற்று. ஆனால், உலகம் உன் புன்னகையை மாற்ற அனுமதிக்காதே – புத்தர்.



இந்த வார குறுஞ்செய்தி:

தேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால் பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும் – கண்ணதாசன்.



இந்த வார இசை:


வீணை மற்றும் சாரங்கி இணைந்த மயில் வடிவ இசைக்கருவி – குரு கோவிந்த் சிங் காலத்தியது – அந்த இசைக்கருவியிலிருந்து ஒரு அருமையான இசை – மனதை வருடும் என்பது நிச்சயம்.  கேளுங்களேன்.  காணொளி எடுக்கும்போது வாசித்தவரையும் முழுமையாக எடுத்திருக்கலாம்!



இந்த இசைக்கருவிகள் கொண்டு உஸ்தாத் ரன்பீர் சிங் வாசித்த இசைக்கோர்வைகளும் youtube-ல் இருக்கிறது.  ரசிக்கலாமே!



இந்த வார புகைப்படம்:

மணல் சிற்பங்கள் – அவற்றின் வாழ்வு மிகவும் குறைந்தது என்றாலும் பார்ப்பவர்கள் மனதில் நீங்காத இடம் பெற்று விடுகிறது அல்லவா..... அப்படி ஒரு மணல் சிற்பம் இங்கே – செதுக்கியவர் யாரோ...




ராஜா காது கழுதை காது:

தில்லியில் ஆம் ஆத்மியின் ஆட்சி மலர்ந்திருக்கிறது. தேர்தல் முடிவுகள் தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வத்துடன் காத்திருந்த காலைப் பொழுது. அலுவலகம் செல்ல பேருந்திற்காக காத்திருந்தேன் – குளித்துப் பல காலம் ஆன – உடம்பு, உடைகள் என அனைத்தும் அழுக்காக உள்ள ஒரு மனிதர் – தலையில் ஆம் ஆத்மி குல்லாய் – அப்போது அங்கே நின்று கொண்டிருந்த எங்களைக் கடந்தார்.  கடக்கும் போது அவர் சொன்னது – “தில்லியில் கேஜரிவால் ஆட்சி - தண்ணீர் இலவசம் – பல வருடம் கழித்து இன்று நான் சந்தோஷமாகக் குளிக்கப் போகிறேன்!



படித்ததில் பிடித்தது:

நிதானம்!
========


புத்தரிடம் சீடனாகச் சேர்ந்த ஒருவன் எதிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்காமல், அவசரத்தையும் தீவிரத்தையும் கடைப்பிடித்தான். அவனுக்கு அறிவு புகட்ட நினைத்த புத்தர் ஒருநாள் அவனைக் கூப்பிட்டு, அவனுடைய அறையிலிருந்த வீணையை எடுத்து வரச் சொல்லி, அதை மீட்டச் சொன்னார். அவனும் வீணையை மீட்டத் தயாரானான்.

அப்போது, புத்தர் வீணையின் நரம்புகளை முறுக்கேற்றினார். அவனோ, "ஐயனே, இப்படி முறுக்கேற்றினால் நரம்புகள் அறுந்துவிடுமே?'' என்றான்.

உடனே புத்தர், நரம்புகளைத் தளர்த்தத் தொடங்கினார்... அவனோ, "ஐயனே, இப்படிச் செய்தால் வீணையை இசைக்க முடியாதே?'' என்று கேட்டான்.

இப்போது புத்தர் சொன்னார், "நாம் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களிலுமே வாழ்வின் தத்துவம் உள்ளது. வீணையின் நரம்புகளை அதிகம் இறுக்கினால் அறுந்து போகும். அதிகம் தளர்த்தினாலோ ஒலி எழாது. இத போலத்தான் முறையற்ற அதிகப் பயிற்சியினால் உடல் தளர்ந்து விடும். குறைவான உழைப்போ சோம்பலைத் தரும். எனவே எதையும் நிதானமாகச் செய்யப் பழகு. வாழ்வில் சாதிப்பாய்!''



மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

48 கருத்துகள்:

  1. மழையை விட, திறந்த வெளி வெயிலை எப்படி சமாளிக்கிறார்களோ...? அனுஷீலா அவர்களுக்கு பாராட்டுக்கள்...

    குறுஞ்செய்தி மிகப்பெரிய உண்மை...

    மணல் சிற்பம் : அட...! புத்தகம்...!

    நிதானம் என்றும் சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  2. முதல் செய்தி நானும் பாஸிட்டிவ் பதிவில் சேர்த்திருக்கிறேன்.

    இற்றை அருமை. எனக்கு சம்பந்தமில்லாமல் நினைவுக்கு வந்த ஒரு பாடல் வரி.. "புன்னகையாலே எனை மாற்று... பொன்னழகே நீ பூங்காற்று..."

    கண்ணதாசன் சொன்னா சரியாத்தான் இருக்கும். நமக்குத்தான் ரெண்டுமே இதுவரை கிடைக்கவில்லையே! ஹிஹிஹி...

    காணொளி பின்னர்தான் ரசிக்க வேண்டும்!

    மணல் சிற்பங்கள் என்றுமே ஆச்சர்யம்தான். இதுவும் அருமை.

    ரா.க.க.கா : ஹா..ஹா...ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாசிட்டிவ் செய்திகளில் சேர்த்திருப்பீர்கள் என எனக்கும் தோன்றியது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

      நீக்கு
  5. அனைத்தும் அருமை!..

    இருந்தாலும் -

    //..தில்லியில் கேஜரிவால் ஆட்சி - தண்ணீர் இலவசம் – பல வருடம் கழித்து இன்று நான் சந்தோஷமாகக் குளிக்கப் போகிறேன்!..//

    நல்லவேளை.. கேஜரிவால் ஜெயித்தார்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

      நீக்கு
  6. அருமை அருமை அனைத்து செய்திகளும் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  7. நல்லதொரு தொகுப்பு. முதலாம் செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது. /அனுஷீலா மற்றும் அவரது குழுவினர்/ பாராட்டுக்குரியவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  8. Super nalla visayam light bag.valthukal..mika nandra ullathu pathivukal anaithum .valthukal

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  9. light bag top sweet....

    இனிய பழக்கலவை.
    நன்கு ருசித்தேன்
    நன்றி சகோதரா.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் அவர்களே.

      நீக்கு
  10. அனைத்துமே அருமை.
    அந்த பை அதிக விலையாகுமா?

    குறுஞ்செய்திகள், மணல் சிற்பம் ஆகியவை மிக அற்புதம்

    புத்தர் கதை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

      நீக்கு
  11. வழக்கம்போல் பல் சுவையுடன் கூடிய பழக்கலவையை தந்தமைக்கு நன்றி! Light Bag மூலம் குடிசைகளில் வாழும் ஏழைக் குழந்தைகளுக்கு உதவிய அனுஷீலா மற்றும் அவரது குழுவினருக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  12. வணக்கம்
    ஐயா.
    தகவல் அனைத்தும் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம 5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  14. இன்றைய வலைச்சரத்தில் உங்களின் தளம் சிறப்பிக்கப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கும்போது வருகை தந்தால் மகிழ்வேன்.
    http://blogintamil.blogspot.in/2015/02/blog-post_14.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மூலம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டதில் எனக்கும் மகிழ்ச்சி... என் துணைவியின் வலைப்பூவையும் இன்று அறிமுகம் செய்தமைக்கு நன்றி ரஞ்சனிம்மா.

      நீக்கு
  15. மயில் வடிவில் இசைக் கருவி, மணல் சிற்பம் அபாரம் அனைத்தும் சுவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  16. முதல் செய்தி ஸ்ரீராம் அண்ணா தளத்தில் பாஸிட்டிவ் செய்திகளில் பார்த்தேன்...
    மயில் வீணை முகநூலில் பார்த்தேன்...
    மற்றவை அனைத்தும் குறிப்பா கெஜ்ரிவால் தண்ணீர் இலவசம் கலக்கல்...
    ப்ரூட் சாலட் சுவையாய்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  17. பிரமாதம்... தேர்ந்தெடுத்த பல்சுவை அரங்கம்! பாராட்டுகள் வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

      நீக்கு
  18. ஏழைக்குழந்தைகளின் கல்விக்கண்ணைத் திறக்க உதவிசெய்யும் அனுஷீலா குழுவினர்க்குப் பாராட்டுக்கள்! மணல் சிற்பம் உயிர் பெற்று எழுகிறது! மயில்வடிவ இசைக்கருவியை இன்று தான் பார்க்கிறேன்! அதற்கென்று தனிப்பெயர் எதுவும் உள்ளதா? என அறிய ஆவல்! பல்சுவை விருந்துக்குப் பாராட்டும் நன்றியும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழில் இதை மயூரி வீணை என்று சொல்கிறார்கள்.

      காணொளியில் முதலில் சொல்லப்பட்ட வீணையின் பெயர் தௌஸ்.... இரண்டாவது தில்ருபா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கலையரசி ஜி!

      நீக்கு
  19. மணல் சிற்பம் அசத்தல்! புத்தரின் இரண்டு அறிவுரைகளும் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  20. ஆஹா.. அருமையான யோசனை.. அதுவே இலவசமாகவோ குறைந்த விலையிலோ பிள்ளைகளுக்குக் கிடைத்தால் அவர்களின் படிப்பு தடைப் படாது !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  21. எல்லாம் நல்லா இருக்கு. இதுக்குல்லாம் உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறதோ. (நிறைய படித்தால்தானே அதில் பொறுக்கி எடுத்து இப்படி வழங்க முடியும்).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிடைக்கும் நேரத்தில் சேமித்துக் கொள்வது வழக்கம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  22. உண்மையிலேயே மிக அருமையான பணி விளக்குப்பை தண்ணீருக்கு எப்படி கஷ்டப்படறாங்கன்னும் போதுதான் நாம் எப்படி வீணாக்குகிறோம் எனப் புரிகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

      நீக்கு
  23. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  24. அருமையான யோசனையாக இருக்கிறதே! அனுஷீலா குழுவினருக்கு ஒரு பொக்கே!

    இற்றையும், குறுஞ்செய்தியும் அருமை!

    புத்தர் கதை நல்ல தத்துவம்...மணல் ஓவியம் சொல்ல வார்த்தைகள் இல்லை...

    துளசி, கீதா
    இசை அருமை....பொதுவாக யாராவது தலைவர் இறந்தால் தூர்தர்ஷனில் இதுதான் இசைக்கப்படும்...சோகம்...இழையோடும்...ஒருவேளை இந்தக் கருவியின் மீட்டல் சோகம்தானோ.....சுபபந்துவராளியும், சஹானாவும்....மனதைக் கவ்வியது...

    டவுஸ், தில்ருபா, சாரங்கி , எஸ்ராஜ், சரோட் எல்லாமே கிட்டத்தட்ட ஒரேபோல உள்ளது போல் தோன்றுகின்றது....வீணையும், வயலினும் இணைந்த ஒன்று போல்...வடிவங்களில் சிறு சிறு வித்தியாசம்....நிறைய கேட்டதுண்டு....தென்னகத்தில் நடனக் கலைஞர் சித்ராவிஸ்வேஸ்வரனின் (மறைந்த) கணவர் விஸ்வேஸ்வரன் சரோட் மிக அருமையாக வாசிப்பார் ...இந்தக் கருவிகளை மீட்டத் தெரிந்தவர் என்று கேட்டிருக்கின்றேன்.
    - கீதா

    பதிலளிநீக்கு
  25. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....