புதன், 25 பிப்ரவரி, 2015

காதல் போயின் காதல்....





சில நாட்கள் முன்னர் வெளியான இக்குறும்படத்தின் டீசர் பார்க்கும்போதே முழு குறும்படத்தினைப் பார்க்கும் ஆவல் வந்தது! டீசர் பார்த்து அடடா என்ன ஆயிற்றோ என்ற பதட்டம் இருந்தது. ஒரு வாரத்தில் வந்து விடும் என நினைத்து கொஞ்சம் ஆறுதல் அடைந்தேன். 

திட்டமிட்டபடியே குறும்படத்தினை வெளியிட்டு, பதிவர் நண்பர்கள் பலரும் குறும்படம் பற்றிய தங்கள் கருத்துகளை வெளியிட்டாலும் படம் பார்க்குமுன்னர் படிக்க வேண்டாம் என்று இருந்தேன். நேற்று தான் படம் பார்க்க முடிந்தது. சிறப்பாக படத்தினை எடுத்திருக்கும் நண்பர் கோவை ஆவி, இரு வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நண்பர் திடம் கொண்டு போராடும் சீனு, நண்பர்கள் துளசிதரன், குடந்தை சரவணன், கார்த்திக் சரவணன், அரசன், ரூபக் என பதிவுலக நண்பர் பட்டாளமே இப்படத்தில் பார்க்கும்போது மனதில் அளவில்லா மகிழ்ச்சி.   

காதலி கதாபாத்திரத்தினை ஏற்றிருக்கும் மதுவந்தி, சிறப்பாக நடித்திருக்கிறார்.  ஷைனிங் ஸ்டார் சீனு – கதாபாத்திரமாகவே மாறி விட்டார் போலும்! – படத்திற்காக தனது மீசையை எடுத்து ஒரு தியாகம் செய்து இருக்கிறார்! – குறும்படத்தில் வரும் ஒரு வசனத்திற்காக!

கவிதை ஒன்று சொல்லுது நெஞ்சமே – ஆவி மற்றும் கீதா அவர்களின் குரலில் பாடல் நன்று.  பாடலை எழுதியதும் நண்பர் ஆவி தான்.  படத்தின் ஆரம்பத்தில் வரும் வற்றாநதிபடைத்த கார்த்திக் புகழேந்தியின் குரலும் ஒரு எதிர்பார்ப்பினைத் தோற்றுவித்தது.

காதல் போயின் காதல் – ஒரு நல்ல குறும்படம். படத்தில் அவ்வப்போது வரும் Do not litter” செய்தியைச் சொன்னதற்கு ஆவிக்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்து! நம்ம மக்களுக்கு அப்பப்ப இப்படி சொல்லிக்கிட்டே இருக்கணும்!

கதை: காதல் சுகமானது – அதுவும் நம்ம நாயகன் சீனுவின் காதல் இலக்கியக் காதல் – காதலிக்கு “ஒரு புளியமரத்தின் கதைநாவல் பரிசளிக்கிறாரே! காதல் என்று சொல்லும்போதே அதற்கு தடைகளும் உண்டே. ஒரு நாள் காதலி தனக்குத் திருமணம் என பத்திரிகை கொடுக்க, மனம் உடைகிறார் காதலன். அவளின் நினைவாகவே அவளுடன் இருந்த நினைவுகளையும், சேகரித்த பொருட்களையும் பையில் வைத்துக்கொண்டு சோகமே உருவாக தாடியோடு இருக்கிறார். இப்படி இருக்கையில் ஒரு நாள் காதலியை மீண்டும் பார்க்கிறார் – அதன் பின் நடந்தது என்ன என்பது தான் “காதல் போயின் காதல்கதை.  முழுவதும் சொல்லி விட்டால் எப்படி பார்க்கும் ஸ்வாரசியம் இருக்கும்? படம் பத்து நிமிடம் மட்டுமே! பாருங்களேன். 




படம் உருவாகக் காரணமாக இருந்த, படத்தில் பங்கு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

ஷைனிங் ஸ்டார் சீனு விரைவில் அடுத்த சூப்பர் ஸ்டாராக பரிமளிக்கட்டும்!

நண்பர் கோவை ஆவி மேலும் பல படங்களைத் தரவும், முன்னேற்றப் பாதையில் செல்லவும் எனது வாழ்த்துகள்..... 

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

38 கருத்துகள்:

  1. படம் - பார்த்தேன், ரசித்தேன்.

    உங்கள் பதிவு - படித்தேன், ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்....

      நீக்கு
  2. சீனுப்பயலோட இலக்கியக் காதல் ஜெயமோகனையும், சாருவையும் பரிசளிக்கற அளவுக்கு அதையும் தாண்டிய புனிதமான காதல் ஓய்... நல்லவேளையா ஆவி தலையிட்டதால புளியமரத்தோட நின்னுருச்சாக்கும். ஹி.... ஹி... ஹி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்கள் வருகை! :) மகிழ்ச்சி...

      நல்லவேளை புளியமரத்தோட நின்னுச்சே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

      நீக்கு
  3. எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. Do not Litter - நல்ல முயற்சி... இனி வரும் காலங்களில் எல்லா குறும்படங்களிலும் பயன்படுத்துவோம் என்று நம்புகிறேன்.....

    பதிலளிநீக்கு
  5. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கார்த்திக் சரவணன்.

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. தஙக்ளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. நானும் படம் பார்த்துவிட்டேன். சிறப்பாக இருந்தது.
    தங்களின் விமர்சனம் மிக அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

      நீக்கு
  8. தங்கள் விமர்சனம் வெகு அருமை. படமும் நன்றாக உள்ளது.அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

      நீக்கு
  9. படம் பார்த்தேன் அருமை
    தமிழ் மணம் 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  10. வணக்கம்
    ஐயா.

    தாங்கள் சொல்வது உண்மைதான்.. நானும் பார்த்தேன் த.ம 8
    முன்பு எழுதியதை வெளியிட வேண்டாம் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  11. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

    பதிலளிநீக்கு
  12. அருமை....காணொளியைக் கண்டு மகிழ்ந்தேன்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

      நீக்கு
  13. அண்ணா! சாரி ! லேட் கமெண்டுக்கு:)) நல்ல விமர்சனம், ஆனா இப்போதான் விமர்சனத்தை படித்தேன். படத்தை காலையில் பார்த்தேன்:))) நன்றி அண்ணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா கேட்டு வாங்கிட்டேன் போல! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.

      நீக்கு
  14. உங்களோட விமர்சனமும் படத்தபோலவே அருமை !
    // ஷைனிங் ஸ்டார் சீனு விரைவில் அடுத்த சூப்பர் ஸ்டாராக பரிமளிக்கட்டும்! //
    ஹா ஹா ! அடுத்த ஷைனிங்ஸ்டார் யார்னு பெரிய போராட்டமே நடக்குதுணே ! சூப்பர விட ஷைனிங்தான் மின்னுராராம் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மெக்னேஷ்.

      நீக்கு
  15. சிறப்பான குறும்படம் பார்த்து ரசித்தேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  16. சென்ற வாரம் தளம் வர முடியாததால் மிஸ் செய்த தங்கள் பதிவுகளை எல்லாம் பார்த்துக் கொண்டே வந்தால் அட ....எங்கள் குழுவின்/ ஆவியின் படமும்.....மிக்க நன்றி வெங்கட் ஜி விமர்சனத்திற்கும் பாராட்டிற்கும். அதை தாங்கள் இங்கு பகிர்ந்ததற்கும். - துளசிதரன், கீதா

    கீதா: பாடலைப் பாராட்டியதற்கு மிக்க நன்றி.....
    அதில் நடித்திருக்கும் மதுவந்தி என் கணவரின் தம்பி பெண். டான்ஸர். புகைப்படக் கலையும் படித்திருக்கின்றாள். அவளது அம்மா ஸ்ரீலதா, கர்நாடக இசைப் பாடகி. அவர்களது குடும்பமே கலைக் குடும்பம்..

    மிக்க நன்றி வெங்கட் ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தின் நாயகி பற்றிய குறிப்புகள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. அவருக்கும் எனது பாராட்டுகள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  17. விமர்சனம் அருமை வெங்கட் சகோ :) வாழ்த்துகள் ஆவி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.

      நீக்கு
  18. படத்தை இன்றுதான் பார்த்தேன். மிக நேர்த்தியான விமர்சனம். நன்றி வெங்கட். படத்தின் பின்னணியில் உழைத்த அனைத்து நண்பர்களுக்கும் இனிய பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

      நீக்கு
  19. படத்தை இரசித்தேன். திரு கோவை ஆவி அவர்களுக்கு திரு சீனு அவர்களுக்கும் வாழ்த்துக்கள்! பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  20. படம் பார்த்து நானும் எழுதியிருக்கிறேன் அண்ணா...
    தாங்கள் தளத்தில் பார்த்து அது குறித்து எழுதியதாக சகோதரி மைதிலி அவர்கள் சொல்லியிருந்ததை நேற்றுப் படித்தேன்.
    வேலை காரணமாக இரண்டு மூன்று நாட்களாக பதிவுகளை வாசிக்க முடியாத நிலை.
    இன்று விடுமுறை... இப்போதுதான் இங்கு வந்து வாசிக்கிறேன்...
    குறும்படம் பற்றிய விமர்சனம் அருமை அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      எனக்கும் அதே நிலை தான். பல சமயங்களில் பதிவுகள் படிக்க முடிவதில்லை. கிடைக்கும் சொல்ப நேரத்தில் எத்தனை படிக்க முடியுமோ அத்தனை படிக்கிறேன்.

      நீக்கு
  21. நானும் இந்த படம் பார்த்து விட்டேன். உங்கள் விமர்சனமும் நன்றாக இருக்கிறது.
    படத்தில் நடித்தவர்கள் எல்லாம் மிக இயல்பாய் நடித்து இருக்கிறார்கள். எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....