வெள்ளி, 7 ஜூலை, 2017

Toll Free Traveller – இப்படி பயணிக்க ஆசை!


We two – Me and my RE Thunderbird 500 – Toll Free Traveller

படம்: இணையத்திலிருந்து.....

பயணங்கள் எனக்குப் பிடித்தவை என்பது உங்கள் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். பயணங்கள் மட்டுமல்ல, பயணம் செய்பவர்களையும் எனக்குப் பிடிக்கும். பயணம் செய்வதை மிகவும் விரும்பும் ஒருவர் பற்றிய தகவல் தான் இன்றைய பகிர்வு.


வியாழன், 6 ஜூலை, 2017

விமானத்தில் விசாகா – அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 2



முதல் பகுதி இங்கே….


படம்: இணையத்திலிருந்து....

அரக்கு பள்ளத்தாக்கு சென்று வர வேண்டும் என முடிவு செய்தவுடனேயே நண்பர் தனது அலுவலகம் மூலமாக ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்திருந்தார். விமானத்திலும், அரக்கு பள்ளத்தாக்கு சென்று வர இரயில்/பேருந்து முன்பதிவு, அங்கே தங்க வேண்டிய இடங்கள், பார்க்க வேண்டிய இடங்கள் என எல்லாம் அவர் பொறுப்பில்! என் வேலை அவர்களுடன் சென்று சுற்றிப் பார்த்து வருவது மட்டுமே! எவ்வளவு சுலபமான வேலை இல்லையா! அதனால் பயணிக்க வேண்டிய நாள் வரை எந்தக் கவலையும் இல்லாமல் “எல்லாம் அவர் சித்தம்!” என்று சுகமாக இருந்தேன்.  பயணத்திற்குத் தேவையான ஏற்பாடுகளை அவர் பார்த்துக் கொள்ள, புறப்படும் நாளிற்கு முதல் நாள் தேவையான உடைகள் மற்றும் செல்லப்பெட்டி – நமக்குச் செல்லப்பெட்டி நமது கேனன் கேமரா தானே! எடுத்துக் கொண்டு நான் தயார்! வாங்க விமானத்தில் விசாகபட்டினம் நோக்கி பயணிக்கலாம்!

புதன், 5 ஜூலை, 2017

கேக் வாங்கலையோ கேக்….. – இணையத்தில் உங்கள் தகவல்கள்!



வலையுலகம் பக்கம் வராததால் இங்கே எனது பிறந்த நாளுக்கு முன் தினம் நடந்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. பிறந்த நாள் – அது வருடா வருடம் வரும் ஒரு நாள் என்பதாகத் தான் எனக்குத் தோன்றும். சிறு வயதிலிருந்தே பிறந்த நாள் கொண்டாட்டங்கள் என பெரிதாக ஒன்றும் இருந்ததில்லை. பிறந்த நாள் அன்று கோவிலுக்குச் சென்று வரச் சொல்வார்கள். அம்மா முடிந்தால் ஒரு பாயசம் வைத்துக் கொடுப்பார் அல்லது மைசூர்பாக் செய்து வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சாப்பிடுவோம்! வெளியே யாருக்கும் இனிப்பு கொடுத்ததாகவோ, கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடியதாகவோ நினைவில்லை.

செவ்வாய், 4 ஜூலை, 2017

போவோமா ஒரு பயணம் - Arakku Valley….


அடுத்த பயணம் போகலமா?
அரக்கு பள்ளத்தாக்கு நோக்கி ஒரு பயணம்....

ஹனிமூன் தேசம் பயணத் தொடர் முடித்து இரண்டு மாதம் ஆகிறது! அந்தப் பயணத் தொடர் எழுதி முடித்த இரண்டாம் நாளே இனிமேலும் பயணம் பற்றிய கட்டுரைகள் எழுத வேண்டுமா என்ற கேள்வி கேட்டு, ஒரு பதிவும் எழுதினேன். பெரும்பாலான நண்பர்கள் விரைவில் அடுத்த பயணத் தொடரை ஆரம்பிக்கச் சொல்லி ஆதரவு தந்தாலும், பயணத் தொடரை ஆரம்பிக்கவே இல்லை! நடுவே ஒரு மாதம் எந்தப் பதிவுகளும் எழுதாமல், மற்ற நண்பர்களின் பதிவுகளை படிக்காமல் நீண்ட இடைவெளி! இடைவெளிக்குப் பிறகு மூன்று பதிவுகள் எழுதிய போதும், அடுத்த பயணத் தொடர் எப்போது என்ற கேள்வி தான் நண்பர்களிடமிருந்து. இதோ அடுத்த பயணம் இனிதே துவங்குகிறது!

திங்கள், 3 ஜூலை, 2017

வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு! – பதிவர் சந்திப்பு – அடுத்த பயணத்தொடர்…

வந்துட்டேன்னு சொல்லு….  திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!



சற்றே இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பதிவுலகம் பக்கம் வருகிறேன். வருடத்தின் ஆரம்பத்திலும், மார்ச், ஏப்ரல் மாதங்களிலும் தினம் தினம் ஒரு பதிவு எழுதிக் கொண்டிருந்தேன். மே மாதம் ஏழே ஏழு பதிவுகள், ஜூன் மாதத்தில் மூன்று பதிவுகள் என கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை! நடுவில் ஒரு மாதம் குடும்பத்தினருடன் முழுக்க முழுக்க நேரம் செலவு செய்ய வேண்டும் என ஒதுங்கி இருக்க, தலைநகர் வந்த பிறகு அலுவலகப் பணி எழுத விடாது தடுத்தது! பிறகு இணையத்தொடர்பில் சில சிக்கல்கள் – அது பற்றி தனியாக பதிவே எழுதலாம்! பதிவுகள் எழுதுகிறேனோ இல்லையோ, மற்றவர்களின் பதிவுகளைக் கூட படிக்க இயலாத நிலை! இதோ இப்போது மீண்டும் வந்தாயிற்று!