திங்கள், 18 ஜூன், 2018

கதம்பம் – ஆயாம்மா – குட்டி தேவதை – ஓவியம் – புளியோதரை



மார்க்கரெட் ஆயாம்மா:

கோவையின் அவினாசி சாலையில் உள்ள YWCA மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம். சிரித்த முகத்துடன் எப்போதும் காணப்படும் இந்த ஆயாம்மாவிடம் எல்லா குழந்தைகளுமே அன்போடு வளைய வருவார்கள். சாப்பிட மறுப்பவர்களுக்கு அன்போடு ஊட்டி விட்டு, கைகளை சுத்தம் செய்து வகுப்புக்கு அனுப்பி வைப்பார். எங்களை சைக்கிளில் காலையில் கொண்டு விடும் அப்பா பணம் தந்து மதியம் எதிர் சாலையில் கொட்டி கிடக்கும் தர்பூசணி பழக்கடைக்காரரிடம் எனக்கும் தம்பிக்கும் வாங்கி தரும்படி சொல்லிவிட்டு செல்வார். மதியம் எங்களை ஒரு இடத்தில் அமர வைத்துவிட்டு ஆயாம்மா வாங்கி வந்து தருவார். நாங்களும் அதை சாப்பிட்டு விட்டு வகுப்புக்கு செல்வோம்.

ஞாயிறு, 17 ஜூன், 2018

இந்த வாரத்தின் புகைப்பட உலா – கவிதை தாருங்கள்!

Photo of the Day Series - 2

சென்ற வாரத்தில் #Photo_of_the_day எனும் Tag Line-உடன் முகநூலில் பகிர்ந்து கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு இந்த ஞாயிறில் இங்கே….