கடந்த வியாழன் அன்று தில்லியில்
நடந்த சுற்றுலா பருவம் நிகழ்ச்சி பற்றி எழுதும்போது, அங்கே பார்த்த விஷயங்கள்,
எடுத்த படங்கள் ஆகியவற்றை ஞாயிறில் வெளியிடுகிறேன் என்று சொல்லி இருந்தேன்.
இன்றைக்கு அந்தப் பதிவு அல்ல என்றாலும், இன்றைக்கு இங்கே விதம் விதமாய் இனிப்பு
தான் தரப் போகிறேன் – இதில் சில இனிப்பு வகைகளை நீங்கள் கேட்டிருக்க/
சுவைத்திருக்க வாய்ப்பில்லை என்ற எண்ணம் எனக்குள் இருந்ததால் தான் இப்படி. எதற்காக
இத்தனை வகை இனிப்பு என்ற கேள்வி பிறந்தால் உங்களுக்கு ஒரு சபாஷ்! காரணம்
இருக்கிறது – கடைசியில் சொல்கிறேன்! முதல் இனிப்பாக உத்திராகண்ட்
மாநிலத்திலிருந்து ஒரு இனிப்பு!
சிங்கோரி...


